தீண்டாமையால் உலகம் முழுவதும் 26 கோடி பேர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்:நவநீதம்பிள்ளை.

thindamaiதீண்டாமையால் உலகம் முழுவதும் 26 கோடி பேர் மோசமாகப் பாதிக் கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பிரிவின் தலைவர் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: மனித உரிமையின் அடிப்படைப் பண்பான சமத்துவம், பாகுபாடின்மை ஆகிய அம்சங்களை நிராகரிக்கக் கூடிய விஷயமாக சாதி திகழ்கிறது. ஒரு தனி நபரையும் அவர் பிறந்த சமூகத்தையும் சுரண் டலுக்கும், வன்முறைக்கும், சமூக ஒடுக்குதலுக்கும், ஏற்றதாழ்விற்கும் பல தலைமுறையாக இந்த சாதி ஆட்படுத்தப்பட்டு வருகிறது.

 சாதி ரீதியான பாகு பாடு என்பது மனித உரிமை மீறல் மட்டுமன்று. பாதிக்கப் பட்ட நபரை சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமை மீறல்களுக்கும் ஆட்படுத்தப்படுகிறது.

தாழ்ந்த சாதி என்ற முத்திரை குத்தப்பட்ட நபர்கள் எப்பொழுதுமே அதிக வரு மானமில்லாத அவலமான நிலையில் செய்யப்படும் பணிகளில் பல தலைமுறை களாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு விவசாய நிலங்களோ, கடன் உதவித் திட்டங்களோ கிடைப்பதே இல்லை.

இவர்களில் பெரும்பாலானோர் மீள முடியாத கடன் சுமையிலும், கொத்தடிமை முறையிலும் வாழ்ந்து வருகின்றனர், இந்த நடைமுறை கண்டிப்பாக நவீன கால அடிமைத்தனமாகும். இம்மக்களிடம் தான் எழுத்தறிவின்மையும், குழந்தைத் தொழிலாளர் முறையும் மிக அதிக அளவில் உள்ளது என்று அவர் கூறினார்.