தீண்டாமைக் கொடுமையால் கிராமத்தை விட்டு வெளியேறிய தலித் மக்கள்.

Comyunistதீண்டாமைக் கொடுமை காரணமாக தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறிய கொடுமை நடந்துள்ளது.  .

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது டி.வேப்பங்குளம் கிராமம். இங்கு 40 தலித் குடும்பங்களும் , சுமார் 150 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பங்களும் உள்ளன. அக் டோபர் 3ம் தேதியன்று இக்கிராமத்திலுள்ள அரசுப்பள்ளியில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்காக பதிவு செய்யும் பணி நடைபெற்றுள்ளது.

அப்போது இத்திட்டத்திற்கு தொடர்பில்லாத கண்ணன் என்பவர் பதிவு செய்யும் பணியை செய்திருக்கிறார். அரசு தரப்பில் யாரும் அங்கு இல்லாமலேயே இப்பணி நடைபெற்றுள்ளது. தலித் மக்கள் தனி வரிசையில் நிற்கவைக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் ஆதிக்க சமூகத்தினரை மட்டும் பதிவு செய்து விட்டு  தலித் மக்களை நீண்ட நேரம் நிற்கவைத்துள்ளனர். இது நியாயமா? என தலித் பகுதியை சேர்ந்த முத்துமணி என்பவர் கேட்டுள்ளார். உடனே சாதியை சொல்லி இழிவாகப் பேசி முத்துமணியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும் முத்துவேல் , முத்து ராஜா , வெண்ணிமுத்து ஆகிய தலித் இளைஞர்களையும் கடு மையாகத் தாக்கியுள்ளனர்.

அப்போது தலித் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் வயல்பக்கம் உடல் உபாதைக்காகச் சென்றுள்ளார். அவர் காவல் நிலையம் செல்கிறார் என ஒருவர் கூற , ஆத்திரமுற்ற சாதி ஆதிக்க சமூகத்தினர் சுமார் 40 பேர் கண்ணன் தலைமையில் முனியாண்டியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

பிற்பகல் 3 மணிக்கு தாக் கப்பட்ட முனியாண்டி மருத்துவம் செய்யக்கூட வெளியேறமுடியவில்லை. இரவு 9 மணிக்கு பெண்களோடு ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு தான் ஊரை விட்டு வெளியேற முடிந்துள்ளது.

தகவலறிந்து கிராமத்திற்கு வந்த முக்குளம் சார்பு ஆய்வாளரையும் சாதி ஆதிக்க சமூகத்தினர் தாக்கியுள்ளனர். தலித் மக்கள் அனைவரும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கிராமத்தை விட்டு வெளியேறி காரியாபட்டியில் விடுதலைச் சிறுத் தைகள் அமைத்துள்ள முகாமில் தங்கியுள்ளனர்.

வழக்கம்போல் பாதிக்கப்பட்டவர் மீதே காவல் துறை வழக்குப் பதிவு செய் துள்ளது. குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டும் இன்று வரை கைது செய்யவில்லை. கிராமத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்ட மக்களை அரசு அதிகாரி கள் மனிதாபிமானத்திற்காகக் கூட சந்திக்க வில்லை.

மேலும் அக்கிராமத்தில் தலித் குழந்தைகள் கூட செருப்பு அணியக்கூடாது. டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை , சாதி ஆதிக்க சக்திகளின் இல்ல நிகழ்ச்சிகளில் இலவச வேலை செய்திட வேண்டும். யாராவது இறந்தால் சென்று குலவையிட வேண்டும் போன்ற வன்கொடுமைகள் தொடர்கிறது.

One thought on “தீண்டாமைக் கொடுமையால் கிராமத்தை விட்டு வெளியேறிய தலித் மக்கள்.”

  1. தமிழ் நாட்டின் ஆழும் கட்சி. எதிர்கட்சி எனப் பல கட்சிகளும் சாதியத்திற்கு எதிராகப் போராடிய பெரியாரினது பாதையிலா செல்கின்றன. பேசாமல் அவர்கள் பெயரை மாற்றிக் கொள்ளலாம். தமிழ்நாடு எப்போது விழிக்கப்போகின்றது. தமிழ்நாட்டு மக்கள் சினிமாவினதும் போலி அரசியல் வாதிகளினதும் மாயைகளில் இருந்து விடுபட்டு எப்போது தமக்காய் வாழப்போகிறார்கள்? போராடாமல் சமூகமாற்றம் வராது.

Comments are closed.