தி பியானிஸ்ட் திரைப்பட இயக்குநர் ரொமான் பொலன்ஸ்கி சுவிட்சர்லாந்தில் கைது!

romaanபிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ரொமான் பொலன்ஸ்கி சுவிட்சர்லாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பிறப்பிக்கப்பபட்டிருந்த ஒரு பிடி ஆணையின் கீழ் இவர் கைதானார்.

1977ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பொலான்ஸ்கி ஒரு 13 வயது சிறுமியுடன் சட்டவிரோதமாக பாலியல் உறவு கொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வழங்கப்ப்பட்டிருந்த பிடிஆணை இது.

சுவிட்சர்லாந்தில் இருந்து ஒரு கைதியை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான சட்ட நடைமுறைகள் பூர்த்தியடையாதவரை பொலான்ஸ்கி அமெரிக்காவுக்கு திருப்பியனுப்பப்பட மாட்டார் என சுவிஸ் நீதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ரோஸ்மேரிஸ் பேபி, சைனாடவுன், தி பியானிஸ்ட் போன்ற பிரபல போன்ற பிரபல படங்களை இயக்கிவரான போலன்ஸ்கி, ஸுரிக் திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்குவதற்காக பிரான்ஸிலுள்ள தனது வதிவிடத்திலிருந்து சுவிட்சர்லாந்து சென்றிருந்தார்.