திருமாவளவன் பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந்திருப்பார்!:மஹிந்த ராஜபக்ஷ

Thiruma13நல்ல காலம் இவர் (திருமாவளவன்) பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந் திருப்பார்” என்று நேரடியாகக் கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

நேற்று மாலை கொழும்பில் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தசமயமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, அதில் பங்குபற்றிய கனி மொழி எம்.பியிடம் அருகிலிருந்த திருமாவளவனைக் காட்டியே ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கின்றார்.

“இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அருந்தப்பில் தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார்”  என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூற, அதை சிரித்தபடி செவிமடுத்துக்கொண்டிருந்தார் திருமாவளவன்.

9 thoughts on “திருமாவளவன் பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந்திருப்பார்!:மஹிந்த ராஜபக்ஷ”

 1. ஒரு தமிழனா இதை கேட்கவே வெக்கமா இருக்கு…….. 
  தி.மு.க,காங்கிரஷ் உடன் சேர்ந்த பிரகு திருமா க்கு வெட்கம்,மானம் எதுவும் 
  கிடையாது…….. சீசீசீசீ…………… இந்த பொழப்புக்கு _____ ______ போயிடலாம்….

 2. திருமா அவர்கலெ
  இனி ஒரு தரம் பிரபாகரனை பட்ரி பேசாதே செருப்படிதான் விழும்

 3. இதற்கு தானே ஆசைப்பட்டாய் இராஜ குமாரா

 4. Let us wait and see what Mr.TIRUMAVALAVAN submit his SEPARATE REPORT to his LORDS!!!! IT is UNFORTUNATE that he , a supporter of PRABAKARAN . accompanied the CONGRESS TRAITORS.

 5. தமிழகத்தில் ஆயுதம் ஏந்தாத புலிகளாய் போராடுவோம் என்ற திருமாவளவனின் குரல் இன்னும் ஈனசுவரத்தில் ஒலிக்கிறது. திருமாவளவனின் பதிலை எதிபார்க்கிறோம் வீர மறவர்கள் என்ற வார்த்தைக்கு இப்போ என்ன பதிலை எம்மால் விளங்கிக்கொள்வது

 6. சிறுத்தைகள் குள்ளநரிகளாகவும், ஓநாய்களாகவும் மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன.

 7. இது மாதிரி பச்சோந்தியை எல்லாம் தலைவர் கூட வச்சுக்க மாட்டார்……

 8. மே மாதம் பிரபாகரன் ராஜபக்சவிடம் சரணடைந்தார்.இந்த மாதம் திருமாவளவன் சரணடைந்துள்ளார்.நல்லவேளையாக இவர் மண்டை வெட்டில் இருந்து தப்பிவிட்டார்.ஆனால் ராஜபக்ச இந்த பகிடி மூலம் இவரின் கொமணத்தையும் உருவிட்டார்.

 9. Kumanan: Don’t spread rumours without proper verification. Sri Lankan government claimed that Prabhakaran was killed in gun battle. But so far they have not produced his death certificate or they have not confirmed DNA analysis. Prabhakaran may have been dead. But don’t spread false stories here that he surrendered.

Comments are closed.