திருப்பதி செல்லும் மகிந்த : பெருத்த செலவில் பாதுகாப்பு

MR1219

 

 

 

 

 

 

 

 

3 லட்சம் தமிழர்களை இலங்கை அரசு கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி கோவிலுக்கு நாளை வர திட்டமிட்டுள்ளார்.

இதன்படி அவர் சிறப்பு விமானம் மூலம் கொழும்பில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நாளை காலை 11 மணிக்கு வருகிறார். பின்னர் அவர் கார் மூலம் திருப்பதி மலைக்கு செல்கிறார்.

இதையடுத்து அவர் மதியம் 1.30 மணிக்கு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ராஜபக்ஷவின் வருகைக்கு இங்குள்ள தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் அவருக்கு வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ செல்லும் வழி நெடுகிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2 thoughts on “திருப்பதி செல்லும் மகிந்த : பெருத்த செலவில் பாதுகாப்பு”

  1. I AM SHAME TO BE INDIAN , TAMILANE, AND HUMAN BEING. WHERE I CAN GO TO COMPLAIN THIS KIND OF NONCENSE AND TO WELCOME TO INTERNATIONAL CRIMIANAL WELCOME!.

  2. RAJABAKSHY VISIT TO TIRUPATHI IS A SORROWFULL MATTER AMONG THE SOUTHERN TAMILIANS. THE LORD VENKATESA A WILL NOT GIVE HIS MIGHTY BLESSINGS TO RAHJABHAKSHEY WHO IS HAVING UNHUMANITERIAN DEEDS AND ACTIONS TILL HIS DEATH.. HE HAS TO CONFESS BEFORE THE TAMIL PEOPLE SUFFERED A LOT BEHIND THE BARBED WIRE FENCING,THEN ONLY LORD BALAJI WILL GIVE HIM PEACEFUL MIND.

Comments are closed.