திருகோணமைலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்

இடம்பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்திய மருத்துவர்களால் திருகோணமலை புல்மோட்டையில் வைத்தியசாலை அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்தில் இராணுவத்தினரின் உதவியுடன் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த பிரதேசம் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான பிரதேசம் எனவும் திருகோணமலை முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடையில் மேற்கொள்ளும் திட்;டத்தின் ஒரு பகுதியாகவே இந்த சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துரைரட்ணசிங்கம் மேலும் கூறியுள்ளார்.