திருகோணமலையில் சிறைக் கைதிகள் போராட்டம்

திருகோணமலை சிறைச்சாலையில் கைதிகள் எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

திருகோணமலை சிறைச்சாலையில் இன்று அதிகாலை 05.30 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் திடீர் சோதனையினை மேற்கொண்டனர். சிறைச்சாலையின் ‘டீ’ பிரிவில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் 109 கைதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த திடீர் சோதனையின்போது கைதிகளிடமிருந்து இரண்டு செல்லிடத் தொலைபேசிகள் மற்றும் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டன.

இந்த சோதனை நடவடிக்கையினால் ஆத்திரமுற்ற சிறைக் கைதிகள் சிலர் அங்குள்ள படுக்கை விரிப்புகளுக்கு தீவைத்துள்ளனர்.

போர்வைகள் மற்றும் தலையணைகள் போன்றவற்றை தீயிட்டு கொளுத்தி கைதிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை அரச அடக்குமுறையின் கோரத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தை மக்கள் எழுச்சியாக மாற்றும் தலைமையற்ற துயர்மிக்கதே.

சம்பவத்துடன் தொடர்புடைய 11 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.