திராவிட இயக்கம் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை- மதி.

மிகவும் ஆபத்தான சூழலுக்குள் பேசவும் எழுதவும் வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. சிகப்புத் தீவீரவாதம் என்று மக்கள் பிரச்சனைகளைப் பேசும் ஊடகவியளார்களை ஒடுக்கும் மத்திய அரசு. இப்போது நாடெங்கிலும் அறிவிக்கப்படாத மிசாவைக் கொண்டு வருகிறது. எதிர்ப்பியங்கள் கூட இந்துத்துவ சக்திகளிடம் மாட்டுப்பட்டுள்ள நிலையில் இடது சாரி அமைப்புகளின் போராட்டங்களும் தேசிய இன உணர்வு போராட்டங்களும் மிக பலவந்தமான முறையில் ஒடுக்கப்படுகின்றன. அதிகாரவர்க்கங்களின் மேல்கட்டுமானம் பெரு முதலாளிகளுக்கு ஏற்றவாரு திருத்தி அமைக்கப்பட்டு விட்டது. காஷ்மீர், தண்டகாரண்யா என விரிவு படுத்தப்பட்டும் ஆள்தூக்கிச் சட்டங்கள் இப்போது தமிழகத்திற்கும் தேவைப்படுகிறது. ஆமாம் திராவிட இயக்கத்தின் தொட்டில் என்றும் திராவிட இயக்க ஆட்சி என்றும் சொல்லப்படும் தமிழகத்தில் தமிழர்களின் உரிமைக்குக் கூட குரல் கொடுக்க முடியாத நிலை.இனி ஒரு மீனவனைத் தாக்கினால் இங்கிருக்கும் சிங்களர்களைக் கொல்வோம் என்கிற சீமானின் கூற்றின் நமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால் சீமானைக் கைது செய்வதற்கு முன்னால் குறைந்த பட்சம் தமிழகத்தில் இருக்கும் துணைத் தூதருக்கு எதிராகவும், தூதரகத்தை விலக்கிக் கொள்ளும் படியும் ஒரு சட்டமன்ற தீர்மானத்தையாவது நிறைவேற்றியிருக்கலாம். ஆக எதிர்வன்முறையை மட்டும் அடக்கி விட்டு பேரினவாத வன்முறைக்கு இடம் கொடுக்கும் விதமாக இந்திய மத்திய அரசும் கருணாநிதி தலைமையிலான திராவிட அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு திராவிட அரசான திமுகவிற்கும் ஆள்தூக்கி கருப்புச் சட்டங்கள் தேவைப்படுகின்றன.

மிசா, தடா, பொடா என எல்லா ஆள் தூக்கிக் கருப்புச் சட்டங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு அமைப்பு திமுக. மக்கள் விரோத காங்கிரஸ் கட்சியே இச்சட்டங்களின் உதவியுடன் பல முறை திமுக தலைவர்கள் மீது வேட்டை நாயைப் போல பாய்ந்துள்ளது. அது போல தமிழகத்தில் சிறிய அளவில் ஆனால் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும் புரட்சிகர அமைப்புகளும் இச்சட்டங்களால் பாதிக்கப்பட்டவைதான். மிக மோசமாக பாதிகப்பட்ட இன்னொருவர் வைகோ. இன்று அவர் கூட்டணி வைத்துள்ள ஜெயலிதாவே அவரை சிறையில் தள்ளினார். சீக்கியப் படுகொலைகளில் கை நனைத்த குற்றவாளியும், போபால் கொலைகாரன் வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் அனுப்பி வைத்தவரும், ஈழ மக்களை அநியாயமான முறையில் கொன்று குவித்தவருமான ராஜீவ்காந்தியின் கொலை நடந்த நாளில் இருந்து தமிழகத்தில் அறிவிக்கப்படாத மிசா தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜீவ்காந்தி இறந்து சுமார் 18 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும் கொடூரமான முறையில் தமிழகத்தில் போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மக்கள் விரோத ஜெயலலிதாவுக்கு இம்மாதிரியான கருப்புச் சட்டங்கள் தேவைப்படலாம். ஆனால் கருணாநிதிக்கு?

இன்று கருணாநிக்கும் இப்படியான சட்டங்கள் தேவைப்படுகிறது. திராவிட எதிர்ப்பரசியலில் உருவானதாகச் சொல்லப்படும் கருணாநிதியின் இன்றைய இருத்தலைப் புரிந்து கொள்ளவும் அவரது இன்றைய தேவைகளைப் புரிந்து கொள்வதும் மிக எளிதான ஒன்று. இந்திய பெருமுதலாளிகள் செல்வாக்குச் செலுத்தும் கட்சிகளில் இன்று திமுகவும் ஒன்று. இன்னும் அழுத்தமாகச் சொல்லப் போனால் கருணாநிதியின் குடும்பமே இந்திய பெருமுதலாளித்துவக் குடும்பம்தான். கடந்த காலத்தில் பெயரளவில் பேசிய கொள்கைகளைக் கூட இன்று அது பேசத் தயாராக இல்லை. பேசுவது அவர்களின் வர்க்க நலனுக்கே ஆபத்தாகக் கூட போகலாம். இலங்கையில் ஈழ மக்கள் மீதான பேரினவாதிகளின் யுத்தம் என்பது பாதி பிராந்திய நலன் சார்ந்தது, மீது இந்திய பெருமுதலாளிகளின் வர்த்தக நலன் சார்ந்தது. முதலீட்டிற்கு உகந்த சூழல் நிலவும் இலங்கையை இந்தியா தனது சுரண்டல் நலனுக்கு பயன்படுத்தும் போது அதில் தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ பங்கில்லாமல் போனால் அதை கருணாநிதி எப்படி பொறுத்துக் கொள்வார்?

கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ராயல் பர்னிச்சர் என்றொரு பெரிய நிறுவனம் உண்டு. மேலும் தமிழகம் முழுக்க விவசாய நிலங்களை வளைப்பது அப்பாவி கிராம மக்களை மிரட்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தங்களுக்கும் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்வது என்று கருணாநிதி குடும்ப வாரிசுகள் செய்யாத தொழிலே இல்லை. முன்னர் ஜெயயலிதா, சசிகலா கும்பல் ஊரில் கண்ணில் நிலங்களை எல்லாம் எப்படி வழைத்துப் போட்டு தமிழகத்தையே தனது சொத்தாக மாற்ற முனைந்ததோ அதை விட மிக மோசமான முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள் கருணாநிதி குடும்பத்தினர். தஞ்சையில் டி.ஆர். பாலுவில் எரிசாராய ஆலைக்கு மக்கள் எதிர்ப்பிருந்தும் போலீசின் துணையோடு அந்த ஆலையை அமைத்தே தீருவது என்று முடிவோடு இருக்கிறார் டி.ஆர். பாலு எதிர்ப்புகள் இருக்கும் உள்ளூரிலிலேயே தனது தொழிலுக்காக மக்களை வதைக்கும் திமுகவின் குறுநில மன்னர்கள் இலங்கையில் கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்வார்கள். கனிமொழிக்கு கொழும்பில் ஒரு நட்சத்திர விடுதியும், டி.ஆர்.பாலுவுக்கு திருகோணமலைத் துறைமுகத்தில் பிரமாண்ட காண்டிராக்டும்., பொன்முடிக்கு தனியார் மருத்துவக்கல்லூரியும் கட்டிக் கொள்ளலாம் என்று சொன்னால் இன்றைய கருணாநிதியோ அவரது குறுநில மன்னர்களான தம்பிகளோ அய்யய்யோ இலங்கை ஒரு இனவெறி நாடு நாங்கள் அங்கு முதலிட மாட்டோம் என்று ஒதுங்கிவிடுவார்களா? என்ன?

ஆக, ஈழப் படுகொலைகளின் போது மத்திய அரசுக்கு துணை போன துரோகத்தை பேசுவது மட்டுமல்ல இலங்கை அரசுக்கு எதிராகக் கூட இன்று தமிழகத்தில் பேச முடியாத நிலையை உருவாக்கியாக வேண்டிய தேவை பெருமுதலாளியக் கட்சியாக மாறிப் போன திமுகவிற்குத் தேவைப்படுகிறது. அதைத்தான் அவர் முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போல இலங்கைத் தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். என்று வஞ்சகமாகப் பேசினார். இலங்கை அரசிடம் சுமூக உறவு நிலவினால் மட்டுமே தன் குடும்ப, கட்சி நலன்களுக்கு அது உகந்ததாக இருக்கும் என நினைக்கிறார் கருணாநிதி. இந்தியத் தேசியத்தில் ஒன்று கலந்து மையநீரோட்ட அரசியலை பிரதிபலிக்கும் தமிழக அரசின் கொள்கையும் போர் வெறி பிடித்த இந்திய அரசின் கொள்கையும் இன்று வேறு வேறல்ல, இலங்கை விவாகரத்தில் மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான் என்று கருணாநிதியே தெளிவு படுத்தியிருக்கும் நிலையில் போருக்குப் பின்னரான மத்திய மாநில அரசுகளின் நோக்கம் என்பது முழுக்க முழுக்க முதலீடுகள் சார்ந்ததே. ஆக முதலீட்டிற்கு உகந்த சூழல் இலங்கையில் நிலவுகிறது. அங்கு நிலவும் மயான அமைதி, எதிர்ப்பற்ற நிலை, இந்தியாவின் காலடிகளின் விழுந்து கிடந்து கெஞ்சிக் கொண்டிருக்கும் தமிழ் தலைமைகள் என இந்திய பெரு முதலாளிகளின் வர்த்தக நலனுக்கு உகந்ததாய் இருக்கும் போது அந்த முதலீடுகளை இடையூறு செய்யும் ஒரு தளமாக தமிழகம் கொதிப்பதை அது விரும்புமா? இலங்கையில் நிலவும் அதே உகந்த சூழல் தமிழகத்தில் நிலவ வேண்டும். உகந்த சூழல் என்பது போருக்குத் துணை போன கருணாநிதியைப் பற்றி மட்டுமல்ல, சோனியா, மன்மோகன், சிதம்பரம், ப்ரணாப்முகர்ஜி, பற்றி மட்டுமல்ல இலங்கை அரசைப் பற்றியோ ராஜபட்சே பற்றிக் கூட பேசக் கூடாத சூழல்தான் இப்போதைய முதலீடுகளுக்கு உகந்தது.

முதலில் விளக்கமாக அறிக்கை விடுவது, நாடகமாக மாற்றுவது, அந்த நாடகங்களுக்கு மற்றவர்களை துணைக்கழைப்பது, ஆரத்தழுவி ஆதரவைப் பெறுக்குவது, எதிப்பவர்களின் கட்சிகளை உடைப்பது, அதையும் மீறி எதிர்ப்பில் உறுதியாக இருந்தால் போலீசை ஏவி மண்டையை உடைப்பது, வழக்கு மேல் வழக்குகளைப் போட்டு உள்ளே தள்ளுவது இதுதான் கருணாநிதி ஸ்டைல். கடந்த இரண்டுவருடமாக ஈழப் பிரச்சனையில் கருணாநிதியால் நினைத்த மாதிரி காய்களை நகர்த்த இயலவில்லை. பெரும்பாலானோர் சுயலாபங்களுக்காக கருணாநிதியிடம் அண்டி நடந்தாலும் ஜெயலலிதா, கருணாநிதி என்னும் இரண்டு மக்கள் விரோத சக்திகளுக்கு அப்பாற்பட்ட கருணாநிதி எதிர்ப்பு ஈழப் பிரச்சனையை மையமிட்டு உருவாவதை அவரால் தடுக்க முடியவில்லை.

செம்மொழி மாநாட்டின் மூலம் அதைச் சரி செய்யலாம் என நினைத்தார். ஆனால் நீதிமன்றத்திலேயே அதற்கு குட்டு கிடைத்தது. செம்மொழி மாநாட்டை புறக்கணித்த தமிழ் கூட்டம் ஒன்று வெளியில் ஆழமான விமர்சனங்களை முன் வைத்தது. இப்படி எவ்வளவோ சொல்லலாம். ஆக தனது ஜென்ம எதிரி ஜெயலலிதாவுக்கு அப்பாற்பட்டு தான் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை இன்று வரை பூசி மொழுக முடியவில்லை. தான் விடுகிற அரதப்பழசான எதுகை மோனை அறிக்கைகளுக்கு ஜெயலலிதாவைத் தாண்டி தமிழ் மக்களிடம் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. தனக்கு உலகம் முழுக்க எதிர்ப்பு இருப்பது கருணாநிதிக்கும் தெரியும் அதனால்தான் மீண்டும் மீண்டும் தன்னை தமிழினத்தின் தலைவனாக காட்டிக் கொள்ள தன் அல்லக்கைகளை விட்டே பாராட்டு விழா நடத்துவது தனது கட்சி எம்,பிக்களை விட்டே மலர் மாலை போட்டுக் கொள்வது. திமுகவின் டூபாக்கூர் விருதுகளை தானே எடுத்துக் கொள்வது என்று கீழ்த்தரமான எல்லா வேலைகளையும் தொடர்ந்து செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார். முதல்வர் பதவியில் ஒரு பொம்மையைப் போல அமர்ந்திருக்கும் இந்த கோமாளியின் நாடகங்கள் எல்லாமே மக்களிடம் அமபலப்பட மீண்டும் மீண்டும் தமிழால் ஒன்றிணைவோம். செம்மொழி மாநாடு எழுச்சியைக் கொண்டு வந்து விட்டது. என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார் இந்த கோமாளி. விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இப்போதே கருணாநிதியை வீழ்த்த ஒரு பெரும் கூட்டம் விம்மலில் இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல இம்முறையும் மக்களிடம் ஈழப் பிரச்சனையைக் கொண்டு செல்லும் உத்வேகத்தோடு அவர்கள் இருக்க இரண்டு நோக்கங்களுக்காக இப்போது கருணாநிதிக்கு கருப்புச் சட்டம் ஒன்று தேவைப்படுகிறது. ஒன்று இலங்கையுடனான தனது வர்த்தக நலன்களைப் பேணவும், இன்னொன்று வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக ஈழம் நிறுத்தப்படுவதை அடக்கி ஒடுக்கவும். இந்த இரண்டு நோக்கங்களுக்காகவே விரைவில் வரவிருக்கிறது அந்தச் சட்டம் வரவிருக்கும் மாதங்களை ஈழ ஆதரவாளர்கள்  எதிர்கொள்ள வேண்ட்யிருக்கும்.

22 thoughts on “திராவிட இயக்கம் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை- மதி.”

 1. திராவிட இயக்கத்தால் பலன் அடைந்தவர்கள் மலையாளிகளும் கன்னடர்களும்தான். தமிழகத்தில் தமிழ் மக்களின் நலன் பேணும் அரசு ஒன்று தமிழ் தேசிய அரசாகவோ, இடதுசாரி அரசாகவோ இருந்திருந்தால் ஈழப் படுகொலைகளை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று இவர்கள் கன்னடர்களையோ, மலையாளிகளையோ பார்த்துக் கேட்க முடியுமா? தமிழர் வரலாறு திராவிட இயக்கத்தால் முடித்து வைக்கப்பட்டு விட்டது.

 2. திராவிடத்தால் திசை மாறீ தெருவில் விடப்பட்டுள்ளான் தமிழன் தான் வாழும் மண்ணீல் மட்டுமல்ல வாழப்போன இடத்திலும் திராவிடத்தால் தீண்டத்தகாதவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் தமிழன்.தமிழனாய் எழ முடியாது,தமிழனாய் வாழ முடியாது தமிழன் தவித்துக் கொண்டிருக்கிறான்.மூத்த மரபினன் உலகெங்கும் முடி சூடி ஆண்டவன் தன்னை ஆள முடியாத அவமாங்களூக்கெல்லாம் காரணமாய் திராவிடம் சதி செய்கிறது.

 3. தமிழ் மாறன் நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் திராவிட இயக்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் மக்களிடம் செல்லவில்லையே. மாபெரும் எழுச்சி ஒன்றை ஏற்படுத்துவற்கான காரணிகளும் வாய்ப்பும் இருந்தும் தமிழ் அமைப்புகள் கருணாநிதிக்கு பயந்து விட்டார்களே!

  1. மக்களீடம் சென்றாரகள். சி.பா.ஆதித்தனார் தொடக்கி வைத்தார் .ம.பொ.சி. போன்றோர் உழைத்தார்கள்.கண்ணதாசன் செயலாற்றீனார் அவரோடு நின்ற கன்னட்ர் ஈ.வி.கே.சம்ப்பத் தமிழ் என்ற் போர்வையில் தன் காசை எல்லாம் களவாடியதாக கவலைப்பட்டு எழுதினார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களூம் என் தமிழ் என் மக்கள் என உறூதியாய்த்தான் இருந்தார் ஆனால் விச நாகமாய்த் திராவிடமும் தமிழனை சிந்திக்க விட்டால் தன் இருப்புக்கு ஆபத்து என அறீந்துள்ள பிராமணீயமும் தமிழனை சிந்திக்க விடுவதாய் இல்லை.இப்போது அய்யா நெடுமாறன் அவர்களூம் அண்ணன் சீமானும் தமிழ் உணர்வை வளர்க்க நினைக்கிறார்கள்.கலைஜர் போராடுகிறார் ஆனால் அரசியலில் திராவிடம் கோலொச்சுவதால் அவரால் தெலுங்கர்கள (ஆற்காடு வீராசாமி,நேரு)மீறீ எதையும் செய்ய் முடிய்வில்லை.

  2. இன்னொன்ற நாம் எளீதில் மறக்கின்றோம் ஈழ்த்தமிழ்ர் பிரச்சனை என்பது தமிழக மையப்பிரச்சனை இல்லை,மையமாக இருந்திருப்பின் கலைஜர் அன்றீ வைகோ கூட்டணீ அல்லவா பதவி ஏற்றீருக்க வேண்டும்.அஜித்,அசின்,என மலையாளீகள் திமிராக நடந்திட திராவிட அரசியலே காரணம்,மறந்த சுதர்சனம் ஒரு தெலுங்கர்,ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கன்னடர் இவர்கள் தமிழரிற்கு விரோதமானவ்ர்கள்.திராவிட சிந்தனைக்கு எதிராக பாரதிதாசன் கிளர்ந்து எழுந்தார் ஆனால் புதுச்சேரித் தெலுங்கர் அவரயும் திராவிட அரசியலுக்கு இழுத்து விட்டனர்.விஜய ராஜெந்தர் முதல் சரத்குமார் வரை திராவிட அரசியலில் நிற்கின்றனர் ஏனென்றா தமிழ் அதிஸ்டமில்லயாம்.இதுதான் தமிழன் விதி.

   1. தமிழகத்தின் மையப்பிரச்சனை அல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் பிரச்சனை, அனால் தமிழகத்தின் மொழி உணர்வு??????

 4. திராவிடம் தமிழர்களால் உருவாக்கப்பட்டதல்ல. தமிழர்கள் தீர்மானம் எடுக்கமுடியாத நிலமை ஏற்பட்டு பலநூற்றாண்டுகள் கடந்துவிட்டன. என்று ஆரியம் தமிழரிடையே குடிகொண்டு வர்ணாச்சிரம முறைகளை அமுலுக்கு கொண்டுவந்ததோ அன்றிலிருந்து தமிழன் அடிமையாகி அந்த வாழ்விலிருந்து மீளமுடியாது அடங்கி உறங்கிவிட்டான். இதுவரை தமிழர்களை ஆட்சிசெய்தவர்கள், செய்பவர்கள், செய்யப்போகிற அனைவரும் தமிழைப் பேசுகிற மனிதர்களே அன்றி தமிழர்களல்ல. திராவிட இயக்கம் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை என கூறுவது பாலுக்கு பூனை பாதுகாப்பு தரவில்லை என புலம்புவதை போன்றது.

 5. என்னதான் சொல்லுங்கள், கருணாநிதி தூக்கிவீசும் சில்லறைக்காசுக்கு அடிபணியாதவர்கள் யார் இருக்கிறார்கள்,தமிழ்நாட்டில் ???ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறத்தான் போகிறது, கருணாநிதியின் ஆட்சி மலை ஏறத்தான் போகிறது !!

  1. இப்படியாகநாம் இருந்தால் கருணா”நிதி”கள் எங்கள் தலைவர்கள்

 6. முதலில் சாதி ஒழியனும்.சாதி ஒலியனும் என்றால் மதம் ஒழியனும்.மதம் ஒழிய கடவுள் ஒழியனும்.சந்தெகம் உள்ள மதம் ஒழிந்தால்,உண்மையின் தமிழ் ,எம் வாழ்கையின் அங்கமாக எமக்கே தெரியாமல் இருக்கும் என் நல்லெண்ணம் தெரிய, அன்றே அழிந்தான் துரோகி கருணா.மலரும் தமிழ் தேசியம்.கிடைக்கும் பாதுகாப்பு தமிழனுக்கு

 7. தமிழ் தேசிய இயக்கங்கள் அரசியல் மயப்பட வேண்டும் வெறும் உணர்ச்சிமய அரசியலால் ஒரு பிரயோஜனமும் இல்லை.அரசியல்லாக்கு அரசியலாகு………

 8. அரசியல்வாதியானால் சந்தர்பவாதியாய்யிருக்கவேண்டும், எத்தனை விகிதமான தமிழர் எதிர்காலத்தில் தன் இனத்தின் நிலையை சிந்திக்கிறார்கள்? சிந்தித்தால் யார் இந்த கருணாநிதி

 9. திராவிடம் என்பது பார்ப்பன ஆதிக்கத்திற்கெதிராகப் பெரியார் பயன்படுத்திய ஒரு உபாயம். ஆந்திரப் பிரிவினையோடே பெரியார் திராவிட நாடாவது வெங்காயமாவது என்று அறிவித்து விட்டார்.
  மொழிவாரி அரசியல் சுதந்திரத்துகுப் பின் தான் சூடுபிடித்தது. திராவிட என்ற பேர் திராவிடர் கழகத்தின் வெகுஜனச் செல்வாக்கின் காரணமாக தி.மு.கவால் பயன்படுத்தப் பட்டதே ஒழியத் திராவிடநாடு என்பது 1960 வரை வெறும் வாய்ப்பேச்சாகவே இருந்தது. அதன் பின் அதுவும் போய் விட்டது.
  தி.மு.கவின் பார்ர்ப்பன ஆதிக்க விரோதம் தமிழ்த் தேசியவாதிகள் எனப்பட்டோர் சிலருக்கு உடன்பாடாக இருக்கவில்லை. ஆனால் 1960 அளவில், தி.மு.க.பார்ர்ப்பன ஆதிக்கவாதிகளுடன் சமரசம் செய்யத் தொடங்கி விட்டது.

  1947 தொட்டு, நடைமுறை அரசியல் தமிழ்த் தேசிய அரசியல் தான். இந்தி ஒழிப்புப் போராட்டம் வேறெந்த மாநிலத்திலும் தமிழகத்தின் உக்கிரத்தோடு முன்னெடுக்கப் படவில்லை. ஆனால் தி.மு.க. வேண்டியது ஆங்கிலத்தின் தொடர்ச்சியையே அன்றி அனைத்து இந்திய மொழிகளதும் தேசிய மொழி, நிருவாக மொழி அந்தஸ்தை அல்ல.

  இன்று ஆங்கில ஆதிக்கம் மிக வலுவாக உள்ள மாநிலம் தமிழகமே. தமிழ்ப் பற்று என்பது அரசியல் மேடைகட்கு மட்டுமே.
  இன உணர்வு என்பதும் இன்று அவ்வாறே நெறிப்படுத்தப் படுகிறதா?

 10. அப்படி போடுங்கள் சிவா !
  “1947 தொட்டு, நடைமுறை அரசியல் தமிழ்த் தேசிய அரசியல் தான். இந்தி ஒழிப்புப் போராட்டம் வேறெந்த மாநிலத்திலும் தமிழகத்தின் உக்கிரத்தோடு முன்னெடுக்கப் படவில்லை. ஆனால் தி.மு.க. வேண்டியது ஆங்கிலத்தின் தொடர்ச்சியையே அன்றி அனைத்து இந்திய மொழிகளதும் தேசிய மொழி, நிருவாக மொழி அந்தஸ்தை அல்ல.”

  சரியான கணிப்பு .

 11. அண்ணன் சீமான் வைகோ ஐயா பழ நெடுமாறன் போன்றோர் இணைந்து ஜெயல லிதாவுடன் இணைந்து களம் கண்டால் மட்டுமே இந்த கிழட்டு நரிக்கு ஆப்பு வைக்க முடியும்.அதுதான் நமக்கு நல்ல விடிவாக இருக்கும் .ஜெ வந்தால் அதன் பிறகு நடக்கிற விஷயங்களை அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

  1. ஜெயலலிதா ஆண்டபோது தமிழ் வாழ்ந்தது தமிழர் வாழ்க்கை சிறந்து விளங்கியது என்றால் அது சரியாக இருக்கும் ஆனால் தமிழன் கோவணத்துடன் அல்லவா நின்றான்.ரஜனி என்ற திமிங்கிலம் தமிழனை தின்றூ ஏப்பம் விடுகிறதே யாராவது பேசுகிறீர்களா?தமிழ்நாட்டில் பிச்சை எடுத்துக் கொண்டு தமிழனுக்கு எதிராக நின்றானே அஜித் யாராவது பேசினீர்களா?வாயை மூடிக் கொண்டுதானே இருந்தீர்கள்.ஜெயல்லிதா ஆட்சியில் பேச்சு சுதந்திரமே இல்லை தெரியுமா?ஆக தமிழன் மீது கல்லெறீந்து பிராமணனுக்கு கொடி பிடிப்பீர்கள் தமிழனென்றால் திராவிடத்தை எடுத்து தமிழனை அழிப்பீர்கள்.இந்தி இருந்திருந்தால் தமிழ் வாழ்ந்திருக்கும் என்பதில்லை ஆனால் தமிழ் உணர்வை திராவிடம் அழித்தலாலேயே தமிழ் மொழி மீதான பற்றூம் விருப்பும் போய் அன்னிய மொழி உள் நுழ்ந்தது.

 12. பெரியாரும் இந்திக்கு எதிராக குரல் கொடுத்தார். ஆங்கிலத்தை ஆதரித்துள்ளார். பெரியார் ஒரு பொழுதும் தென்னிந்திய மொழிகள் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என கூறவில்லை/.

  1. உண்மை தான்.
   பெரியார் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆங்கிலம் படிக்க வேன்டும் என்று சொன்னார்.
   தமிழர்களைப் பார்ப்பன ஆதிக்கத்தினின்று விடுவிக்க ஆங்கிலக் கல்வி அவசியம் என்பது அவரது மதிப்பீடு.
   போக, நான் பெரியார் சொன்ன எலாமே சரி என்பவன் அல்லவே.
   சமஸ்கிருத எதிர்ப்பிற்கு அவர் வழங்கிய முக்கியத்துவமும் பார்ப்பனிய விரோதமும் வேறு முக்கிய முரண்பாடுகளில் அவரது கவனத்திற்குத் தடையகவே இருந்துள்ளன.
   தி.மு.க.வின் கொள்கைகள் எல்லாமே அவரைப் பின்பற்றியிருந்தால் இவ் விடயத்திலும் அவரைப் பழி சொல்லலாம்.

 13. தமிழ் முண்டங்கள் பெரியார் என்கிற அயோகயனின் திராவிட வெங்காய அலவாவை வாங்கி ஏமாந்த அயோகயர்கள்.அதனால் தான் மலையளிகளும்,கன்னடவர்களும்,தெலுங்கர்களும் தமிழனைக் கண்டாலே காறி உமிழ்கிறார்கள்.வேண்டும் இந்த இழி நிலை திராவிடம் பேசிய அயோகயர்களுக்கு.

 14. அண்மையில் அ,மார்க்ஸ் பெரியார் பின்னுக்குத் தள்ளப்படுகிறார். திராவிட இயக்கம் மீண்டும் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்று அதன் பழியை தமிழ் தேசிய இயக்கங்கள் மீது போட்டிருந்தார். உண்மையிலேயே பெரியாரையும் திரவிட இயக்கங்களையும் பின்னுக்குத் தள்ளிய கருணாநிதி குறித்தும், கி.வீர்மணி குறித்தும் அவர் மௌனம் காத்தார்.

 15. கருணாநிதியின் அடுத்த stunt, காமராஜரை வைத்து பிழைப்பு!

  Constantly-burning lamp to be installed at Kamaraj memorial:

  A constantly-burning lamp will be installed this month at the Kamaraj memorial [in Guindy], Chief Minister M. Karunanidhi said on Thursday.

  This will be on the lines of lamps at the memorials of former Chief Ministers C.N. Annadurai and M.G. Ramachandran.

  The non-installation of such a lamp has been a grouse among members of the Congress, Mr. Karunanidhi said, addressing a function organised to mark the 107{+t}{+h} birth anniversary of former Chief Minister Kamaraj.

  The Chief Minister and School Education Minister Thangam Thennarasu gave an account of steps taken by Mr. Karunanidhi to perpetuate the memory of Kamaraj. Mr. Karunanidhi said the birth anniversary of the former Chief Minister had been declared School Development Day and law enacted for the purpose.

  Ministers K. Anbazhagan, Parithi Ellamvazhuthi and Poongothai paid floral tributes to the statue of Kamaraj in front of Pallavan House on Anna Salai. (The Hindu)

  Photo: Chief minister M. Karunanidhi paying floral tribute to K. Kamarajar on his birth anniversary at a function organised to launch ‘Middle School Education For All ‘ scheme in Chennai on Thursday. TNCC president K V Thankgabalu and Minister for School Education Thangam Thennarasu are in the picture. (Photo: R. Ravindran)

  நன்றி: http://www.athirady.info/category/athirady-on-english

 16. எந்த தி மு க தலவர் கருணாநிதி காம்ராஜரப்பார்த்து “”ஆப்பிரிக்க கருங்குரங்கு”” என்று சொன்னாரோ,கைதராபாத் வங்கியில் கள்ளப்பணம் வைத்து இருக்கிறார்,என்று சொன்னாரோ, அந்த கருணாநிதியிடம் தற்போதய காங்கிரஸ் காரர்கள் மண்டியிட்டு,ஸலாம்போட்டு ஈனப்பிழைப்பு நடத்துகிறார்களே !!! அந்தோ,காமராஜர் ஆட்சி!!! கருநாகநிதியின் சூழ்ச்சி,””காமராஜர் மண்டபத்தில் அணையா விளக்கு”””ஏற்றுவதும் அட்டுமல்ல, அந்த விளக்கில் காங்கிரஸ் விட்டில் பூச்சிகளை விழச்செய்வதும் தான்!!!

Comments are closed.