தியத்தலாவவில் தமிழ் தம்பதியர் கைது

இராணுவ பிரிகேடியர் மற்றும் மேஜர் ஆகியோரின் புகைப்படங்களை வைத்திருந்த இளம் தமிழ் தம்பதியை கைதுசெய்துள்ளதாக தியத்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் தியத்தலாவ ரோஹெண்டாவ் வீதி சோதனை சாவடியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பண்ணிப்பிட்டியவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கவின் புகைப்படம் ஒன்றையும் தம்வசம் வைத்திருந்தனர் எனவும், கைதுசெய்யப்பட்டவர்கள் பண்டாரவளை எல்லேவல தோட்டத்தில் வசிப்பவர்கள் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.