திமுக அமைச்சரின் எரிசாராய ஆலைக்காக மக்களை நொறுக்கிய தமிழக போலீஸ்.

தஞ்சாவூர்

 

மாவட்டம் ஓரத்தநாடு அருகே திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரரும் கருணாநிதியின் நெருங்கிய சகாவுமான டி.ஆர்.பாலுவின் எரிசாராய ஆலை அமைவதற்கு எதிராக வடசேரி கிராம மக்கள் போராடி வருகின்றனர். எரி சாராய ஆலை அமைந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மக்களை பல்வேறு வகைகளில் சமாளிக்க திமுக அரசு முயன்று வந்தது. மக்களின் எதிர்ப்பை அடுத்து இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு ஏராளமான வெளியூர் ரௌடிகளைக் கார்களில் கொண்டு வந்து திமுக அமைச்சர் டி.ஆர் பாலு இறக்கியதாகத் தெரிகிறது. மக்கள் அச்சமடைந்த நிலையில் அவர்களை வெளியேற்றக் கேட்க போலீசார் அதை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து அந்தக் கார்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் சரமாரியாக பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது. ஏராளமான பொது மக்கள் போலீஸ் தாக்குதலில் காயமடைந்தனர். மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான இத்தாக்குதலுக்கு காரணமான திமுக அரசின் மேல் மட்டத் தலைவர் மீது நடவடிக்கை வேண்டும் என்பதும். அப்பகுதியில் எரிசாராய ஆலை அமைக்கும் முயர்ச்சி கைவிடப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால் இந்த ஆலையில் கருணாநிதி குடும்பத்தினருக்கு நேரடிப் பங்கு இருப்பதால் ஆலை கொண்டு வருவதில் அவர்கள் தீவீரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

6 thoughts on “திமுக அமைச்சரின் எரிசாராய ஆலைக்காக மக்களை நொறுக்கிய தமிழக போலீஸ்.”

 1. பண்பாடில்லாத படித்த திமிங்கிலம் இந்தப் பாலு, தேவர் சாதித்திமிரைக் காட்டிக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டி.வரும் தேர்தல் இவனை வீட்டுக்கு அனுப்பும்.பொறூமையோடிருப்போம்.

  1. இது பாலு என்ன ஜாதி என்ற பிரச்சனையல்ல.
   தி.மு.கவில், அ.தி.மு.கவில், காங்கிரசில் உள்ள எல்லா மேட்டுக்குடிகளும் சாதி வேறுபாடில்லாமல் தங்கள் நலனுக்காக மக்களை அழிக்கிறார்கள்.
   தமிழ்நாட்டு அரசியலின் சீரழிவுக்குக் காரணமே இப்படியான கொச்சையான சாதிய விளக்கங்கள் தான். உண்மையான பிரச்சினையிலிருந்து கவனம் அடிபட்டுப் போக இப்படிப்பட்ட அணுகுமுறை ஒரு காரணம்.

  2. ஏன் நாவிதரான தெலுங்குக் கருனானிதி செய்தால் தவறில்லை, தேவர் செய்தால் தவரா?

  3. திரும்பத் திரும்ப சாதியும் முன்னோரின் ஊரும் பற்றிய விசாரணைகளிலும் அவற்றின் அடிப்படையில் மனிதரையும் இழிவுபடுத்துவதிலும் தொடர்ந்தும் ஈடுபடப் போகிறோமா?

   இவ்வாறான இடுகைகள் பற்றி இணையத்தளப் பொறுப்பாளர்கள் கண்டிப்பாக இராவிடின் அது இன்யொருவை மிக இழிவான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.

 2. people of vadaseri also same Devar caste, this is not the matter of caste, it related to their income(money)

  hello muththamizkkaavalan what ur trying to say

  1. they knew that they might be classed with idiots who scribbled obscene pencillings in public lavatories.

Comments are closed.