தாண்டேவாடா தாக்குதல் விசாரணை தொடங்கியது பழங்குடி மக்கள் இடப்பெயர்ச்சி

கடந்த ஆறாம் தியதி சட்டீஸ்கர் மாநிலல் தாண்டேவாடா பகுதியில் சுற்றி வளைத்த மாவோயிஸ்ட் தாக்குதலில் சி.ஆர்.பி.எப்ஃ வீரர்கள் எண்பது பேர் வரை கொல்லப்பட்டனர். நாட்டையே அதிர்ச்சியிலாழ்த்திய இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ஏராளமான முகபாவனைகளோடு நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.இந்தக்

கோரப் படுகொலைகள் குறித்து விசாரிக்க முன்னாள் பி.எஸ்.எப் தலைவர் ராம் மோகன் தலைமையில் மத்திய அரசு கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.விசாரணை முடிவடைந்த்தும் ஏப்ரல் 24ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் இக்குழு சமர்ப்பிக்கும்.என்கிற நிலையில் இன்று இக்குழு தன் விசாரணையைத் துவங்கியது. ஆனால் இந்திய இராணுவம் பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் என்கிற அச்சம் காரணமாக ஆதிவாசிப் பெண்கள் குடும்பம் குடுமப்மாக தண்டேவாடா காடுகளை விட்டு இடம் பெயரத் துவங்கியுள்ளனராம். மிக மோசமான யுத்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க்த் துவங்கியிருக்கும் பழங்குடி மக்கள் பற்றி மிக மோசமான வன்முறையாளர்கள் என்ற பிம்பம் தட்டையான இந்து மனங்களில் ஏற்படுத்தப்படுகிறது.