தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட சிதம்பரம் விரைவு

மாவோயிஸ்டுகள் நேற்று நடத்திய தாக்குதல் குறித்து நிலைமையை நேரில் கண்டறிவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சட்டீஸ்கர் மாநிலத்திற்கு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம் தன்டே வாடா மாவட்டத்தில் உள்ள முக்ரானா காட்டில் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படை காவலர்கள் மீது மாவோயிஸ்டுகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் ரிசர்வ் படை காவலர்கள் 76 பேர் உயிர் இழந்தனர்; 8 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில்,இந்த தாக்குத குறித்து நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லியில் இருந்து இன்று காலையில் சட்டீஸ்கர் மாநிலத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

ராஞ்சி நகரில் மாநில முதலமைச்சர் ராமன்சிங் மற்றும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்திய அரசு  பன்னாட்டு நிறுவனங்களுக்காக  பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளை  அழிக்க முற்பட ஆரம்பித்த நாளிலிருந்து மாவோயிஸ்டுக்களுக்கான ஆதரவு பலமடங்காக அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

One thought on “தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட சிதம்பரம் விரைவு”

  1. நடராஜர் ஆட்டம் காணச் சென்றீருக்கும் சிதம்பரம் அய்யா சிலையாகாமல் இருக்க வேண்டும்.நமது பிரார்த்தனைகள் இதுதான்.

Comments are closed.