தலிபான் தலைவர் பைத்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டார்?

பாகிஸ்தானால் தேடப்பட்டுவந்த மிக முக்கிய நபர்களில் ஒருவரான தலிபான் தலைவர் பைத்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டுள்ளமைக்கான தீவிர அறிகுறிகள் தென்படுகின்றன.

பைத்துல்லா மெஹ்சுதின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள புலனாய்வுத் துறையினர் அதற்கான நேரடி ஆதாரங்களை திரட்டிவருவதாக பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஷாஹ் மெஹ்மூட் தெரிவித்தார்.

தலிபான் குழுவின் தளபதி ஒருவரும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் மெஹ்சுத் வலுவாக நிலைகொண்டுள்ள பகுதியொன்றில் கடந்த புதன்கிழமை அமெரிக்க விமானம் ஒன்றினால் அவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் அவரது மனைவிமாரில் ஒருவரும் சகோதரர்களும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் படுகொலை உட்பட பல தாக்குதல்களுக்கு பொறுப்பானவர் என தலிபான் தலைவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

One thought on “தலிபான் தலைவர் பைத்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டார்?”

  1. Its great news for a international community,these terrorist very danger for human being am delighted by this news.very soon coming these bastards will disappeard on our lovely earth.cheers.

Comments are closed.