தலித் கொலை வழக்கு : 4 பேருக்கு தூக்கு

உத்தரபிரதேசத்தின் பரபங்கி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விரைவி நீதிமன்றம், தலித் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 15 ஆண்டுக்கு முன்பு தலித் இனத்தைச் சேர்ந்த செடு என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (விரைவு நீதிமன்றம்) அனுப் குமார் கோயல் இன்று தீர்ப்பளித்தார்.

நீதிபதியின் தீர்ப்புப்படி இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சாகர், நான்க்கு, ஹரிநாத், அசோக் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 பேருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

One thought on “தலித் கொலை வழக்கு : 4 பேருக்கு தூக்கு”

  1. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இது தீர்வு இல்லாவிட்டாலும் இனிவரும்
    காலங்களில்லாவது மனிதனுக்கு மேல் மனிதன் நுகத்தடிபூட்ட முடியாது
    என்பதற்கு ஒரு முன்உதாரணமாக இருக்கட்டும்.

Comments are closed.