தர்ஷிகா : விசாரணை கோரி இன்று ஆர்ப்பாட்டம்

கடந்த சனிக்கிழமை ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் குடும்பநல மருத்துவ தாதியாகச் சேவை புரிந்து வேலணைப் பிரதேச வைத்தியசாலையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட தர்ஷிகா சரவணனின் கொலையை கண்டித்து சுகாதார திணைக்கள ஊழியர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சுகாதார பணிமனையின் முன்னாள் இந்த மறியல் இடம்பெற்றது. இதில் 300 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார ஊழியர்கள் மறியல் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.