தமிழ் மக்கள் மீதான யுத்தம் : இலங்கைப் பாதுகாப்புச் செலவினங்கள்

இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க மறுக்கும் இலங்கை அரசு மறுபடி பாதுகாப்புச் செலவினங்களுக்காக அதிக அளவிலான பணத்தை ஒதுக்கியுள்ளது.

எதிர்வரும் வருடம் பாதுகாப்புச் செலவுகளுக்காக இருபதாயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2010ம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்ட யோசனையில் பாதுகாப்பு அமைச்சிற்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பத்தொன்பதாயிரம் கோடி ரூபா நடைமுறைச் செலவாகும் எனவும் ஆயிரம் கோடி ரூபா முதலீட்டுச் செலவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

போர் இடம்பெற்ற காலப்பகுதிகளிலும் பாதுகாப்புச் செலவுகளுக்காக பெருமளவு பணம் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.