தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு புலிகளே பொறுப்பு!:மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்!!

கடந்த 25 வருட கால வரலாற்றில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு புலிகளே பொறுப்புக் கூற வேண்டுமென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
நேற்று வெளியான சன்டே ஒப்சேவர் ஆங்கில பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே ஆயர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர். அவ்வாறு கூறி வருவது புலிகளின் சொந்தக் கருத்தாகும். புலிகளுக்கு ஆதரவாக நான் எந்த கருத்தையும் ஒருபோதும் வெளியிடவில்லை.
அப்பாவித் தமிழ் மக்கள், புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் அதிருப்தியடைந்துள்ளனர். அவர்களைப் போன்றே நானும் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியுடனேயே இருக்கிறேன் என்றும் ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 thoughts on “தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு புலிகளே பொறுப்பு!:மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்!!”

  1. எமது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கூற்றில் இருக்கும் உண்மையை சமாதான விரும்பிகள் எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்வர் என்பதில் ஐயமில்லை.
    இனிமேல் தான் எமது ஆயர் ஆண்டகை அவர்களது இல்வாழ்க்கையை முடிவில்லா மறுவாழ்வுக்குள் இடம்பெயரவைக்கும் அபாயம் உண்டு.
    ஏனென்றால் புனித மடு மாதாவையே இடம்பெயர வைத்தவர்கள், கடவுளுக்காக தம்வாழ்வையே அர்ப்பணித்த இரு தந்தையர்களை ஆழ ஊடுருவும் படையணி என்ற பெயரில் சுட்டுக் கொன்றவர்கள்,இன்னும் பல பேரை அதே பெயரில் கொன்று குவிப்பவர்கள்,சும்மா விட மாட்டார்கள்.
    எமது ஆயர் ஆண்டகை அவர்கள் தற்போதைக்கு வன்னியின் புலிக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வரவேண்டிய தேவை இல்லை என்பதால், ஆழ ஊடுருவும் படையணியின் தேவையும் இருக்காது. ஆயர் அவர்கள் தற்போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருப்பதால் வேறு படையணியின் பெயர் ஒன்று உதயமாகும்.
    எனவே, எமது ஆயர் அவர்கள் தனது பாதுகாப்பு விடயத்தில் கவனமாய் இருப்பது நல்லது.

  2. இதோ இன்னும் சிறிது நாட்களில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆழஊடுருவும் அணியினரின் சிறப்புக் கிளைமோர்த் தாக்குல். எங்கே பிள்ளைகளா கண்டு பிடியுங்கள் ஆழ ஊடுருவித் தாக்கப்போவது யாருருரு? “இலங்கை இராணுத்தினர்” கெட்டிக்காரப்பிள்ளைகள். இப்படி எல்லோரும் ஒருமித்த குரலில் சத்தம் போட்டு சொன்னால்தான் சர்வதேசமும் புலம் பெயர் தமிழினமும் என்ன செய்வினம்?… எங்களை நம்புவினம் என்னா? கெட்டிக்காரப்பிள்ளைகள்.

Comments are closed.