தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! : தோழர் மருதையன்

tma

-பிரபாகரன்  இன்னும் உயிருடன் வாழ்கிறார் என்று  தமிழ்நாட்டின்  சந்த்தர்ப்பவாதக் கட்சிகள் தொடர் பிரச்சாரம் செய்துவரும் நிலையில் இந்த நேர்காணல் மீள் பதிவாதல் பொருத்தமானது என எண்ணுகிறோம்-

மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ் நாட்டின் வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கமாகும். ஈழப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களைத் திட்டமிட்டுச் சீகுலைத்தது. தமது அணிசேர்க்கையினூடாக சந்தர்ப்பவாதக் கட்சிகள் இப் பிரச்சனையைக் கைவிட்டு அரசியல் வியாபாரப் பேரம் பேசின. இந்த நிலையில் மக்களை நம்பியிருந்த வாக்கு அரசியலுக்கு உட்படாத இடதுசாரிக் குழுக்களின் போராட்டங்கள் மட்டுமே சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புகளையும் மீறி நடைபெற்றன. இவற்றுள் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பங்கு குறித்துக் காட்டத்தக்கது. இதன் மாநிலச் செயலாளர் மருதையனின் நீண்ட நேர்காணல் ..

இனியொரு: ஈழப் பிரச்சனை தொடர்பாக அண்மைக் காலங்களில் பல கட்சிகள் ஆர்வம் காட்டி வருவதுடன் மட்டுமல்லாது பல போராட்டங்களையும் முன்நின்று நடாத்தியுள்ளன. மக்கள் கலை இலக்கியக் கழகம் இப்போராட்டங்களின் எவ்வாறு பங்குவகித்தது?

கிளிநொச்சித் தாக்குதல் தீவிரமடையத் தொடங்கிய காலப்பகுதியில், தா. பாண்டியன், பழ.நெடுமாறன் போன்ற அரசியல் வாதிகள், இந்திய அரசே தலையிடு போன்ற சுலோகங்களுடன் போராட்டங்களை ஆரம்பித்தனர். கலைஞர் கருணாநிதி தலைமையில் பெரும்பாலான போராட்டங்களை நடத்தினர். அவர் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு பிரதான நோக்கங்களுக்காக,
1. போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவும்
2. இது இந்திய மேலாதிக்கம் முன்னின்று நடத்தும் போர் என்பதை அம்பலப் படுத்துவதற்காகவும்,

கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து தமிழகம் தழுவிய அளவில் பிரச்சாரங்களும் போராட்டங்களும் இலங்கைத் தமிழர்களுக்காக நடாத்தியுள்ளோம்.

சென்னையில் இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் முன்னால் முதலில் மறியல் போராட்டத்தை ஏற்பாடு செய்தோம். இப் போராட்டத்தில் நூற்றுக் கணக்கான தோழர்கள் கைது செய்யப்படார்கள். இந்திய மேலாதிக்கத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் நோக்கிலேயே இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் வாயிலில் இப் போராட்டத்தை நடத்தினோம். இதே வகையான போராட்டங்கள் ஏனைய மாவட்டப் பகுதிகளிலும், குறிப்பாக திருச்சி இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் முன்னதாகவும், ஏனைய நகரங்களில் அரச அலுவலக வாயிலிலும் மறியல், சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம். அனேகமாக எல்லா மாவட்டத் தலை நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

இனியொரு: முத்துக்குமார் தீக்குளித்த பின்னதான உணர்ச்சிகரமான அரசியல் சூழலில் உங்கள் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருந்தது?

முத்துக்குமார் தீக்குளிப்பிற்குப் பின்னர், ஓய்வடைந்த நிலையிலிருந்த போராட்டங்கள் புத்துயிர் பெறலாயின. போராட்டங்க ஓய்வடைந்த சூழலில் விரக்தி மனப்பான்மை mkumarநிலையிலிருந்தே அவர் தீக்குளிக்கிறார். இதன் பின்னர் உத்வேகமடைந்த போராட்டங்கள் பொதுவாக தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களாலும் வழக்குரைஞர்களாலும் முன்னெடுக்கப்படுகின்றன. இப்போராட்டங்களில் எமது அமைப்பு மிக முக்கிய பங்காற்றியது.
ஆறு மாவட்டங்களில் மாணவர்களைத் திரட்டி வேலைநிறுத்தம் செய்து போராட்டங்களை நடத்தினோம். சில இடங்களில் சிபி ஐ மாணவர்கள் சிலர் கலந்து கொண்டனர். மற்றைய இடங்களில் ஏனய மாணவர் அமைப்புக்கள் எதுவும் இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தவில்லை. கல்லூரி மாணவர்கள் அனைவரையும் அழைத்துவந்து சாலை மறியல் செய்வது, வேலை நிறுதம் செய்வது, ஊர்வலங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

இவற்றையெல்லம் மீறி, அக்டோபரில் ஆரம்பித்த போராட்டமானது, ஜனவரி 26ம் திகதி குடியரசு தினத்தன்று அண்ணாசாலையில் மிகப்பிரமாண்டமான போராட்டமாக நடத்தப்பட்டது. அதற்குப் பின்னரும் பல்வேறு வழிகளில் ஈழப் போராட்டம் தொடர்ந்தது.
உண்மையிலேயே முத்துக்குமார் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுத் தான் இந்த முடிவை எடுத்திருந்தார்.

போராட்ட வடிவம் என்ற முறையில் நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாதாயினும், ஈழத் தமிழ் ஆதரவு உணர்வு கொண்டவர்களை அணிதிரளச் செய்வதற்கு முத்துக்குமார் தீக்குளித்த பின்னதான உணர்ச்சிகரமான அரசியல் சூழல்ஒரு ஆரம்பமாக அமைந்தது.

தமிழ் நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், அவர் பல சந்தர்ப்பங்களில் எமக்கு ஆதரவளிப்பவர், அவரது மரணச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுகிறார். இந்த சந்தர்ப்பத்தில், நாம் இதனை ஒரு கிளர்ச்சியாக மாற்ற வேண்டும் என்று கருத்தை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தோம். திரு வெள்ளையனும் இந்தக் கருத்தில் மிகத் உறுதியுடனிருந்தார்.

மறுநாள் காலையில் அரசியற் கட்சித் தலைவர்கள் வருகிறார்கள். வை.கோ, தா.பாண்டியன், திருமாவளவன், நெடுமாறன் போன்ற புலி ஆதரவுத் தலைவர்கள் மரண ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் உடனடியாக அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

இந்த நிலையில் நாமும், வெள்ளையனும் இதனை மக்கள் எழுச்சியாக, மிகப்பெரிய ஊர்வலமாகத் தயார்படுத்தி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இதை இந்த அரசியள் கட்சித் தலைவர்கள் அனைவரும் நிராகரிக்கிறார்கள்.

இனியொரு : ஏன் இவர்கள் இவ்வாறான போக்கை எதிர்த்தார்கள்?

அங்கு மக்கள் கணிசமான அளவு கூடியிருந்தனர். அங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், நாடகங்கள், பாடல்கள் என்று கிளர்ச்சி மனோபாவம் கூடியிருந்தவர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது.

இவ்வாறான கிளர்ச்சிகரமான சூழ் நிலை சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகிவிடும் என்று அரசியற்கட்சித் தலைவர்கள் அஞ்சினர். மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும் என்று வெளிப்படையாகவே கூறினர்.
ஆக, புலி ஆதரவாளார்களான மேற்குறித்த தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சியை விரும்பவில்லை என்பதையே இது சுட்டி நின்றது.

இதன் பின்னர் அரங்கத்தினுள் இந்தத் தலைவகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படாமல், கூடியிருந்த மக்களிடம் அபிபிராயம் கேட்பதாக முடிவெடுக்கப்பட்டது.
வெள்ளையன் பின்னதாக வெளியே வந்து ஒலிவாங்கியின் முன்னால் கூடியிருந்த மக்களிடம் பேச ஆரம்பித்தார். இம்மரண ஊர்வலம் குறித்து இரண்டு கருத்துக்கள் இருப்பதாகவும், அதில் முதலாவது உடலை உடனே எடுக்கவேண்டாம், ஓரிரு நாட்கள் வைத்திருந்து மக்களைத் திரட்டிப் பின்னதாக பெரிய ஊர்வலமாக நடத்தலாம் என்று ஆரம்பித்து மற்றைய கருத்தைக் கூற ஆரம்பித்த போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், முதலாவது கூறியது தான் சரியான கருத்து எனச் சத்தமிட்டு மற்றக் கருத்தைச் சொல்வதற்கே இடம்வைக்கவில்லை.

அப்படியிருந்தும் இரண்டாவது கருத்தை நீங்களே கூறுங்கள் என்று திருமாவளவன் கையில் மைக்கைக் கொடுக்கிறார். அங்கு கூடியிருந்த மக்கள் திருமாவளவனைப் பேசவே அனுமதிக்கவில்லை. அதனால் தவிர்க்க முடியாமல் மக்கள் விருப்பப்படியே இறுதி ஊர்வலத்தை நடத்துவதற்கு ஒத்துக்கொண்டனர்.

இதன் பின்னர் திருமாவளவன், நெடுமாறன், பாண்டியன் உட்பட அனைத்துத் தலைவர்களும் அந்த இடத்திலிருந்து அகன்று விடுகிறார்கள்.

இவ்வாறு இறுதி ஊர்வலத்தை எழுச்சி மிக்கதாக நடத்தவேண்டும் என்று எமது தோழர்கள் இவர்களுடன் போராடியது ஒருபுறமிருக்க,இதற்காகப் போராடிய செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள், போன்ற பல தரப்பினர் கூடியிருந்த மக்கள் மத்தியிலிருந்தபோதும், கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இவர்களெல்லாம் வெளியேறிய பின்னர் இரண்டு நாட்கள் உடல் வைக்கப்பட்டிருந்தது. பெருந்தொகையான மக்கள் திரண்ட பின்னர் எழுச்சிக் குரல்களோடு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தின் போது எமது தோழர்கள் ஈழ ஆதரவு வீதி நாடகத்தை நடத்திய வண்ணம் முன்னால் சென்றனர்.

 இனியொரு: மற்றைய பாராளுமன்ற வழிக் கட்சிகளும் நீங்களும் நடத்திய போராட்டங்களிடையேயான வேறுபாடு என்ன?

ம.க.இ.க மாணவர்களை அணிதிரட்டி நடத்திய போராட்டங்கள் தவிர தன்னிச்சையாகப் பல இடங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். பல இடங்களில், உதாரணமாக, திருச்சி போன்ற பகுதிகளில் இதற்குத் தலைமை தாங்கிய மாணவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அரச படைகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சென்னையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களை அணிதிரட்ட முயன்ற எமது தோழர்களை போலிசார் மூர்க்கத் தனமாகத் தாக்கி, குறிப்பாக ஐந்து தோழர்கள் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை வெளியே எடுப்பதற்காக வக்கீல்கள் போராட வேண்டியிருந்தது.

தவிர, வழக்குரைஞர்கள் போராட்டம் என்பது குறித்துக் lawersகாட்டத்தக்கது.ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என்று பல தரப்பு வர்க்கப்பிரிவுகளைச் சார்ந்தவர்களை எடுத்துக்கொண்டால் அதில் தொடர்ச்சியாக விட்டுக்கொடுப்பற்ற போராட்டத்தை நடத்தியவர்கள் வழக்குரைஞர்களே ஆவர். இவர்களின் போராட்டத்தில் நீதிமன்றப் புறக்கணிப்பு என்பது கோடிட்டுக் காட்டத்தக்கது. இது தவிர சோனியா காந்தியின் கொடும்பாவி எரிப்பு, காங்கிரஸ் கட்சிக் கொடி எரிப்பு போன்ற போராட்டங்கள் மதுரை போன்ற இடங்களில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் மத்தியிலும் சரி, மதுரையிலும் சரி, மற்றும் திருச்சி, கரூர் தஞ்சாவூர், தூத்துக்குடி, திருவெண்ணாமலை, போன்ற பல பகுதிகளில் எமது தோழர்களான வழக்குரைஞர்கள் முன்னணியிலிருந்து இப்போராட்டத்தை நடத்தினர்.

ஈழ ஆதரவுப்ப் போராட்டதை சென்னை உயர் நீதி மன்றத்தில் நடத்தியவர்கள் மீது போலிஸ் நடத்திய மூர்க்கமான தடியடிக்கும் ஒரு பின்புலம் உண்டு.

சிதம்பரம் கோவிலில் சமஸ்கிருதத்திற்கு எதிராகத் தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை எமது அமைப்பினூடாக நடத்தி வெற்றிகண்டிருந்தோம். இது ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளாக முடியாத ஒரு காரியமாக இருந்து வந்தது. இதற்கான சட்டரீதியான உரிமையை வழக்காடி வெற்றிபெற்றோம். இவ்வுரிமைக்கான நீதிமன்ற ஆணையை இரத்துச் செய்வதற்காக, சுப்பிரமணிய சுவாமிகள் தலையிடுகிறார். இவரை சிதம்பரம் கோவிலில் விசேட பூஜைகளை மேற்கொண்டு, தீட்சகர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.

இனியொரு: இடையில் ஒரு கேள்வி, சுப்பிரமணிய சுவாமிக்கும் ஈழப்பிரச்சனைக்கும் என்ன தொடர்பு?

சுப்பிரமணிய சுவாமி தீவிரமான புலி எதிர்ப்பாளர் என்பது ஒருபுறமிருக்க புலிகளைக் காரணம் காட்டியே மொத்த இலங்கைத் swamiதமிழர்களுக்கு எதிராகவும் செயற்படுபவர். பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு உறுதுணையாக இருப்பவர். சீ.ஐ.ஏ இன் இந்திய ஏஜன்ட். தொழில் முறை அரசியல் புரோக்கர். இவைதான் இவரின் அடிப்படைத் தகுதிகள்.

தமிழ் பாடுவதற்கான உரிமையை இரத்துச்செய்யக் கோரி சிதம்பரம் கோவில் தீட்சகர்கள் தாக்கல் செய்த மேன் முறையீட்டில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பிக்கவே அவர் அங்கு வந்திருந்தார். அங்குதான் அவரை வழக்குரைஞர்கள் முட்டையால் அடிக்கிறார்கள். இதனைச் செய்த வழக்குரைஞர்கள், எங்களது தோழர்கள் உள்பட, ஈழமக்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தவர்கள். இதற்கெதிராக நீதிபதிகள், இவ்வாறெல்லாம் நீதிமன்றத்துள் நடந்துகொள்ளக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்த போது, சுப்பிரமணிய சுவாமிகளை வெளியேறுமாறு முழக்கமிட்டார்கள் வழக்குரைஞர்கள்.
இதையொட்டிய சம்பவங்களுக்குப் பின்னரே போலிசார் தடியடிப்பிரயோகம் நடத்தி மூர்க்கமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் இச்சம்பவங்களை ஈழப் போராட்டத்தைத் திசை திருப்புவதற்கு அரசு பயன்படுத்திக் கொண்டது.

இவற்றையெல்லம் மீறி, அக்டோபரில் ஆரம்பித்த போராட்டமானது, ஜனவரி 26ம் திகதி குடியரசு தினத்தன்று அண்ணாசாலையில் மிகப்பிரமாண்டமான போராட்டமாக நடத்தப்பட்டது. அதற்குப் பின்னரும் பல்வேறு வழிகளில் ஈழப் போராட்டம் தொடர்ந்தது.

இனியொரு: அரசியல் சார்ந்த வேறுபாடு எவ்வாறு அமைந்திருந்தது?

போராட்ட வடிவங்கள் அவை எவ்வளவு போர்க்குணம் உடையதாக அமைந்திருந்தது என்பது ஒருபுறமிருக்க, போராட்டத்தின் நோக்கம், அது என்ன அரசியலை மையப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்பதில் எனையவர்களுக்கும் எங்களுக்கும் பாரிய வேறுபாடு இருந்தது.
முக்கியமாக இந்திய மேலாதிக்கத்தை அம்பலப்படுத்துவது, ஈழத் தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்பது, போரை நிறுத்துவது போன்றவற்றிற்கான அரசியலை மையப்படுத்தியே எமது போராட்டங்கள் நடந்தன. ஆனால் எனைய கட்சிகளின் கோரிக்கையானது படிப்படியாக மாற்றத்திற்கு உள்ளாவதாக அமைந்திருந்தது.
ஆரம்பத்தில் அவர்களின் கோரிக்கை மனிதாபிமான உதவி, இந்திய அரசின் தலையீடு, சோனியா கருணைகாட்ட வேண்டும், என்றவாறு காலத்திற்குக் காலம் மாற்றமடைவதாக அமைந்திருந்தது.
ஒருகட்டத்தில் கருணாநிதி காங்கிரசோடு கூட்டு என்ற அடிப்படையில் போராட்டத்திலிருந்து விலகிச்சென்ற சூழலில், பலர் இந்திய அரசிற்கு எதிராகவும் பேச ஆரம்பித்தார்கள்.

அவ்வாறு இந்திய அரசிற்கு எதிராகப் பேச ஆரம்பித்த போதும் கூட, தொப்புள் கொடி உறவு, நம்முடைய இனம், நமது இனம் அங்கே செத்துக்கொண்டிருக்கிறது, தமிழன் என்ற காரணத்தாலேயே இந்திய அரசு செவிமடுக்கவில்லை, இவைதான் அவர்கள் முவைத்த சுலோகங்கள்.

அதற்குப் பிறகு இவர்கள் ராஜபக்சேயினுடைய கையாட்கள், சீனாவோடு இலங்கை கூட்டுச் சேர்ந்துள்ளது, இந்தியாவின் கையைப் பலப்படுத்த தமிழர்களுக்கு உதவ வேண்டும், புலிகள் இந்தியாவின் ஆதரவாக மாறுவார்கள், என்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

 இனியொரு: ஈழத் தமிழர்கள் மீதான திட்டமிட்ட படுகொலை தமிழகத்தில் ஒரு அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியிருந்ததா?

இனப்படுகொலை குறித்து அன்றாடம் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள், தொலைக்காட்சிச் செய்திகள் மக்கள் மத்தியில் ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தியிருந்தது உண்மை. ஆனால் அது தமிழகம் தழுவிய ஒரு அரசிய எழுச்சியை ஏற்படுத்தியது என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று.

வழக்குரைஞர்களின் போராட்டம் கூட, உதாரணமாக, சென்னையில் ஒரு எண்ணாயிரம் வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள், அனைவருமே இப்போராட்டங்களில் பங்கெடுத்திருந்தாலும் இதில் முன்னின்று தொடர்ச்சி கொடுத்தவர்கள் ஒரு ஐம்பது பேரளவிலேயே இருக்கும். ஏனையவர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போன்றவற்றைச் செய்திருந்தார்கள். மாணவர்களையும் கூட ஒரு முறை இருமுறைக்கு மேல் அணிதிரட்டுவதென்பது மிக க்கடினமானதாகவே இருந்தது.

இதில் கருணாநிதி அரசின் துரோகமும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஊர்வலங்களில் பங்குகொள்ளக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள். குறிப்பாக கல்லூரித் தலைமையாசிரியர்களை மாணவர்களைப் போராட்டங்களில் பங்குகொள்ள அனுமதிக்கக் கூடாது என எச்சரித்திருந்தனர். அவர்களே சொந்தப் போறுப்பில் மாணவர்களைப் போராட்டங்களில் பங்குகொள்ளக் கூடாது என எச்சரித்திருந்தனர். இவ்வாறு கருணாநிதி அரசு போராட்டங்களை முடக்குவதில் தீவிரம்காட்டியது. ஆக, இவ்வாறான தடைகள் துரோகங்களுக்கு மத்தியில் இது மாபெரும் எழுச்சியாக உருவெடுத்ததாகக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்தே.

இனியொரு:ஈழ ஆதரவுப் போராட்டங்கள் மாபெரும் எழுச்சியாக உருவெடுக்காமைக்கான வேறு ஏதும் புறக்காரணங்கள் உள்ளனவா?

கிளிநொச்சித் தாக்குதல், அந்தத் தாக்குதல் தீவிரமடை ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து தான் போராட்டங்கள் ஆரம்பமாகின்றன. அதற்கு முன்பதாக, 2002 இலிருந்து 2006 வரை சமாதானம். அப்போது இப்பிரச்சனை குறித்து யாரும் பேசியதில்லை. போர் தொடங்கிய காலம் முதல், பத்திரிகைச் செய்திகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழப்பிரச்சனை பேசப்பட்டது. ஒரு சில ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

ஈழத் தமிழர்கள் மீதான ஒடுக்கு முறை, அதற்கெதிராக நாம் போராட வேண்டும் என்பது குறித்த ஒரு தொடர்ச்சியான பிரச்சாரம், மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகத் திரட்டப்படுவதற்கான பிரச்சாரமும் அதற்கான பின்புலமும் இங்கு அமைந்திருக்கவில்லை.
இங்கு இருக்கக் கூடிய பிரதான கட்சிகள் இப்பிரச்சனையை குறைந்தபட்சம் பேசக்கூட இல்லை.
83 இலிருந்தே, பற்றி எரியும் போது அதைக் குறுகிய காலத்திற்கு கையிலெடுத்துக் கொள்வதென்பதை ஒரு வழமையாகக் கொண்டிருந்தன.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது, அவர்கள் மீதான தொடர்ச்சியான அடக்கு முறையை எதிர்த்து சுயனிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்நிறுத்துவது. இவ்வாறான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பது என்பது எந்தக்கட்சியிடமும் கிடையாது.

வை.கோ தனி ஈழம் தான் தீர்வு என்று பேசும் போது அவர் கூட்டு வைத்துக்கொள்ளும் ஜெயலலிதா இப்படிப் பேசினால் காஷ்மீரை பிரித்துக்கொடுக்கத் தயாரா என்று கேட்பார். ப.ம.க ராமதாஸ் தனி ஈழம் தான் தீர்வு என்றும் பேசுவார் அது இல்லை என்றும் பேசுவார். ஒரு இனத்தின் தன்னுரிமை, பிரிந்து போகும் உரிமை என்பதை இவர்கள் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. காஷ்மீருலும் ஏனைய பகுதிகளிலும் நடைபெறும் போராட்டங்களின் போது செலுத்தப்படும் இராணுவத்தின் அடக்குமுறையை ஆதரிப்பவர்கள்.

அவர்களுடைய ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டங்கள், தீவிரவாதம், பயங்கரவாதம் என்பது தான் அவர்களுடைய கருத்து. அந்த அடிப்படையில், இவர்களால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை அரசியல் ரீதியாக ஆதரிக்கவோ அதற்கு நியாயமான பங்களிப்பை வழங்கவோ இவர்களால் முடியாது. அதிகபட்சம், தமிழர்கள் என்ற அடிப்படையில் உணர்ச்சி பூர்வமாகக் கிடைக்கக் கூடிய ஆதாயத்திற்காக அவர்கள் ஆதரவளிக்கிறார்கள்.

 இனியொரு: ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் தமிழக மத்தியில் உண்டா?

தன்னுரிமைக்கான, சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் இல்லை. இக்கருத்தானது ஈழத்தின் நிலைமைகளைப் புரிந்து கொள்வதிலிருந்து வந்த கருத்து அல்ல. இந்தியாவில், பிரிவினை வாதத்திற்கு எதிராக, பிரிந்து போவதற்கு எதிராக இங்கு செய்யப்பட்ட பிரச்சாரம் இருக்கிறது அல்லவா? அதிலிருந்து தான் இந்த மனநிலை உருவானது.

மக்களைப் பொறுத்தவரையில், ஈழப்பிரச்சனைக்கு அப்பால், தேர்தல் அரசியலின் வழியாக அரசியல் அற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அரசியல் அற்றவர்களாக ஆக்கப்பட்டிருப்பதில் பல காரணிகள் பங்காற்றுகின்றன. அதில் முக்கியமாக, தேர்தல் அரசியலில் இவர்கள் பேசும் முறையானது, மக்கள் வாழ்க்கைக்கும் பேசும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்ற சூழலை உருவாக்கி நிலை நாட்டிவிட்டார்கள். “நீ எஸ்டேட் வாங்கியிருக்கிறாய், நான் வாங்கவில்லை”, “நீ மகனுக்குச் சொத்துச் சேர்த்திருக்கிறாய், நான் அப்படியில்லை” போன்ற மோதல்களின், பட்டிமன்றங்களின் பார்வையாளர்களாகத் தான் மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அதனால் மக்களைப் பொறுத்த வரையில், பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும், சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும், நீங்கள் உங்கள் வேட்பாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்டால், வீதி சற்று நன்றாக அமைய வேண்டும், மின்சாரம் கிடைக்கவேண்டும், குழாயில் தண்ணி வரவேண்டும் என்பார்கள்.இதனால் மக்கள் அரசியல் விவகாரங்களிலிருந்து அன்னியப்பட்டுப் போயிருக்கிறார்கள்.

தவிர, தொலைக்காட்சி, நுகர்வியல் போன்ற கூடுதல் விடயங்கள்.
இவை எல்லாவற்றையும் தவிர, ஈழப்பிரச்சனையை முன்வைத்து, அவர்களுடைய சுயநிர்ணய உரிமை நியாயமானது என்ற அரசியற் திசை நோக்கி மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை.
நடைபெற்ற பல போராட்டங்களை எடுத்துக்கொண்டால் கூட, அவர்களும் தமிழர்கள், நாங்களும் தமிழர்கள் என்ற புரிதலை முன்வைத்தே போராட்டங்களும் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வகையில் இந்திய இராணுவத்தை அனுப்புதல் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போது கூட மக்கள் அதற்கு ஆதரிக்கும் போக்குகே காணப்பட்டது. இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களைக் காப்பாற்று என்ற முழக்கத்தின் பின்னாலான அபாயத்தைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு பலவீனமாக அரசியலே இங்கு காணப்பட்டது.

இந்திய இராணுவம் 87 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது தொடர்பாக தமிழ் நாட்டு மக்களின் மனோநிலை எவ்வாறு இருந்தது,?

எமது அமைப்பைப் பொறுத்தவரை இந்திய இராணுவம் (IPKF) அனுப்பப்படுவதற்கு முற்பகுதியிலிருந்தே புலிகளின் பாசிசப் போக்கை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறோம். ஆனால் IPKF இற்கு எதிராக அவர்கள் போராடத் தொடங்கியபோது அப்போராட்டத்தை ஆதரித்து எமது அமைப்பும் (ம.க.இ.க) அது சார்ந்த அமைப்புக்களும் தான் பிரச்சாரங்கள் மேற்கொண்டன.
மற்றவர்களெல்லாம், அதிகபட்சம், அனியாயமாக இந்திய இராணுவச் சிப்பாய்கள் உயிரிழக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தையே அறிக்கைகளாக முன்வைத்தனர். இது ஒரு படையெடுப்பு, இது ஒரு ஆக்கிரமிப்பு என்ற வகையில் யாரும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

இனியொரு: ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதன் பின்னான நிலைமைகள் எவ்வாறு அமைந்தன?

ராஜீவ் காந்தி யின் கொலை தமிழக மக்கள் மத்தியில் ஈழப்பிரச்சனை குறித்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறமுடியது. ஆனால் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, தினமணி, ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பார்ப்பன ஊடகங்கள், ஈழ எதிர்ப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்தன. ராஜீவ் காந்த்க் கொலை என்பது, தமிழ், தமிழினம், திராவிடம் என்பவற்றிற்கு எதிரான ஒரு மூர்க்கமான பிரச்சார நடவடிக்கையைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான ஒரு வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது.

பயங்கரவாதம் பிரிவினைவாதம் எனக் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அடக்குமுறை கடுமையாக ஏவிவிடப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணிசமான அளவிற்கு மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள்.

நாங்கள் மட்டும்தான் ராஜீவ் காந்தியின் கொலைக்காக் கண்ணீர்வடிக்க வேண்டியதில்லை. அவரது ஆட்சியில் ஈழ மக்களுக்குத் துரோகமிழைக்கப் பட்டிருக்கிறது என்று பிரச்சாரம் மேற்கொண்டோம். போலிசாரின் கடுமையான அடக்குமுறை, அடிதடி, சிறைப்பிடிப்பு என்பவற்றிக்கு மத்தியில் நாம் இவ்வாறான ஈழ ஆதரவுப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போது, புலிகளின் தலைவர்களில் ஒருவரான கிட்டு இந்தக் கொலையை ம.க.இ.க கூடச் செய்திருக்கலாம் என எம்மைக் காட்டிக்கொடுக்கும் வகையில் அறிக்கை விடுத்திருந்தார்.

இனியொரு: எந்த அரசியல் கட்சிகள் இவ்வாறான ஈழத்தமிழ் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தன?

அதில் ஜெயலலிதாவின் பாத்திரம் மிக மிக முக்கியமானது. அவரின் நடவடிக்கைகள் காங்கிரசை விஞ்சியதாக இருந்தது. jeyaஅதற்குப் பின்னர் ஒரு நெடிய இடைவெளி இருந்தது. அதன் பின்னர் தமிழ் நாட்டிலிருந்து, இதன் பின்னர் ஈழப் போராட்டம் தொடர்பாகப் பேசுபவர்கள் எழுதுபவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஜெயலலிதாவின் அடக்கு முறை கருணாநிதியின் தி.மு.க கட்சிக்கு எதிராகவும் ஏவிவிடப்பட்டது. பல உறுப்பினர்கள் தாக்கப்பட்டார்கள். கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்கள். ஆனால் இந்த அடக்கு முறைகளுக்கு எதிரான எதிர் வினை போர்க்குணாம்சத்தோடு ம.க.இ.க வின் தரப்பிலிருந்து மட்டுமே முன்னெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் கிளினொச்சி வீழந்த பின்னரும் கூட இங்குள்ள தேர்தல் கட்சிகள், அங்கே எதுவுமே நடக்கவில்லை, இராணுவத்தினரை உள்ளே இழுத்து புலிகள் நசுக்கி விடுவார்கள் என்றே பேசிவந்தனர்.

இனியொரு: தமிழகம் குறித புலிகளின் அரசியல் தமிழ் நாட்டில் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்திற்று?

புலிகள் யாருடை அரசியலை, ஆதரவை தமிழ் நாட்டில் விரும்பினார்களோ, கோரினார்களோ அவர்களெல்லாம் ஆளும்வர்க்கக் கட்சிகளாக அல்லது முழு நிறைவான சந்தர்ப்பவாதிகளாகவோ தான் இருந்தார்கள். அவர்கள் தங்களது சந்தர்பவாத அரசியலுக்கு உட்பட்ட அளவில் தான் இதில் பாத்திரமாற்றியிருக்கிறார்கள், ஆற்ற முடியும்.
ஒரு நல்ல உதாரணம், யாழ் கோட்டை புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட போது, பாரதீய ஜனதா வின் ஆட்சி இருந்தது. அப்போது, பா.ம.க, தி.மு,க, ம.தி.மு.க ஆகிய அனைவருமே மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள்.
அப்போது அந்த முற்றுகையைப் புலிகள் கைவிட வேண்டும் என்றும், இந்திய அரசு தலையிட்டு அதைத் தடுக்கவேண்டும் என்று இலங்கை அரசு இந்திய அரசைக் கோருகிறது. புத்த பிக்குகள் உட்பட பல இலங்கை அரசு சார்ந்தவர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள்.

இங்கு வந்து இந்திய இராணுவத்தைப் புலிகளுக்கு எதிராக அனுப்புமாறு கோருகிறார்கள். அப்போது கருணாநிதி யூகோஸ்லாவியா போன்ற ஒரு தீர்வை முன்வைக்கலாம் எனக் கூறுகிறார். அதைப் வாஜ்பாய் கடுமையாகக் கண்டிக்கிறார். அப்போது மாறன் பின்வாங்கி அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்கிறார். கருணாநிதி மௌனம் சாதிக்கிறார். தனி நாடு ஒருபோதும் சாத்தியமில்லை என்றும் முற்றுகையை விலக்கிக் கொள்ளச் சொல்லியும் இந்திய அரசு புலிகளை மிரட்டுகிறது. அந்தத் தருணத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகச் சொல்லிக் கொண்டிருந்த நெடுமாறனின் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் இம்மிரட்டலை ஒரு மிகப்பெரிய வெற்றியாகச் சொல்லுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் சிங்களப் பேரினவாத அரசிற்கு ஆதரவாக, தமிழ் மக்களின் உரிமைக்கு எதிராக இந்திய அரசு தலையிடுகிறது என்ற அரசியல் ரீதியான விமர்சனத்தைக்கூட இவர்கள் முன்வைக்கவில்லை.

இப்படிப்பட்ட மண்குதிரைகள் மீது தான் புலிகள் சவாரி செய்தார்கள். இவ்வான முழுச் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை நம்பித்தான் தமிழ் நாட்டில் தமது ஆதரவுத் தளத்தை நெறிப்படுத்தினார்கள்.
இந்தமாதிரியான சக்திகள் அவர்களின் சொந்த நலன்களிற்கு ஏற்றவாறே தமது ஈழ அரசியலை நகர்த்திச் சென்றனர்.
pirabakaran83 இல் இனப்படுகொலை நடந்த போது தமிழ் நாடே ஸ்தம்பித்துப்போனது. ஆனால், இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்தே 2009 இல் கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது எதிர்ப்பார்த்தளவில் எதுவும் நடக்கவில்லை.

47 thoughts on “தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! : தோழர் மருதையன்”

 1. sithambaram only temple in india for whole saiva tamils.look at these thedsithars,whatever we called it bramins.has been owns years. it will come to end.none of the politicians have done nothing about this,that why there so many ramagopalans are there.I think we should find a ideal solution and focus on people.
  save the sithambaram temple,save the saivam.if we willing to put ourself in to it god will finds us a way out.dont wait something happen to us.
  mr ravi sundralingam and many others here in london will with us.

 2. இந்திய அரசியல் வாதிகளைக் குற்றம் கூறிப் பயனில்லை. புலிகளின் அரசியலே இதற்குக் காரணம். ம.க.இ.க போன்ற அமைப்புக்களோடு உறவு வைத்திருக்க புலிகளால் முடியாது. புலிகள் மார்க்சியத்திற்கும் தொழிலாளி வர்ர்க்கத்திற்கும் எதிரானவர்கள்.

  1. சும்மா வாய்கு வந்தமாதிரி கதைக்க கூடாது.

 3. we need new way of thinking,tigers no longer with us.we finad a alternative way to be move ourselfs other wise we are no body.can we think differntly than.

 4. தோழர் மருதையன் அவர்களின் கருத்துக்களை முன்வைத்திருக்கும் இனியொருவுக்கு என் பாராட்டுக்கள்.தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

  புலிகளுக்கு எதிராக தங்கள் விமர்சனங்களை முன்வைக்கும் அதேவேளையில் இலங்கைத்தமிழ்மக்களின் போராட்டங்களை உறுதியாக ஆதரித்து வந்தவர்கள் ம.க.இ.க வினர்.மேலும் தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் துன்புறுத்தப்படும் போது அதனை அம்பலப்படுத்தி எதிர்த்தவர்கள். அந்த அகதிகளுக்காக குரல் கொடுத்தவர்கள் இவர்கள். குறிப்பாக சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமில் நீதி விசாரணையின்றி பல வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டு நான் கொடுமைப்படுத்தப்பட்ட போது “புதிய ஜனநாயகம்” இதழில் அதனை வெளியிட்டு எனக்கு ஆதரவாக ம.க.இ.க குரல் கொடுத்ததை நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன்.அவர்களின் பங்கு ஆதரவு என்பன இலங்கைத் தமிழர்களுக்கு நிச்சயம் தெரியப்படுத்தப்பட வேண்டும். அப் பணியை செய்யும் இனியொருக்கு பாராட்டுக்கள்.

  1. தோழரே!
   சித்திரவதை முகாமில் வைத்துக் கொடுமைப்படுத்தப் பட்டதாகக் சூறியிருக்கிறீர்கள். அங்கு யார்? எந்த வகையான கொடுமைகளைச் செய்தனர் என்பதை தயவு செய்து விபரிக்க முடியுமா? தமிழ் நாட்டில்த் தமிழ்ப் பொலீசார் காவலில் உங்களை யார் கொடுமைப் படுத்தியது?

  2. அனேகமாக இவருக்கு ம.க.இ.க. வினரைப் பற்றி தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

  3. தெரியாதபடியால்த்தானே விளக்கம் கேட்டேன். உங்களுக்கு விளக்கத் தெரியவில்லையா?  விளக்க முடியாத கொடுமைகளா??

 5. சுப்பிரமணிய சுவாமி தீவிரமான புலி எதிர்ப்பாளராவதற்கு முன்னர், புலிகளுடனான றோ முகவராக, இணைப்பாளராக இயங்கியவர். “ராஜீவ் காந்தி கொலையை புலிகள் செய்யவில்லை” என அடித்துப் பேசியவர். அவருடைய நம்பகத்தன்மை கெட்டுப் போனபின் அதற்குக் காலாயிருந்த புலிகளின் பரம வைரியானார்.
  இவ்வாறு, தமிழகத்தின் தேர்தல் அரசியல் கூத்தாடிகள் எல்லாரும் முற்றிலும் சுயநல நோக்கங்களுக்காகவே இலங்கைத் தமிழர் விடயத்தில்நிலைப்பாடுகளை எடுத்துள்ளனர்.
  இந்திரா காந்தி முதல் கருணாநிதி, வை.கோ. வரை ஒரே கதை தான்.
  பணம் வாங்கிப் புலிகளை ஆதரித்தவர்கள் பட்டியலும் நீளமானது.

  அடிப்படைக் கொள்கை சார்ந்த ஒரு நிலைப்பாடு, சரியோ பிழையோ, நேர்மையான மார்க்சியவாதிகட்கே இயலுமானது.

 6. ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்டம் இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களின்
  நலன்களையும் உள்ளடக்கியிருக்கவில்லை. குறிப்பாக மலையகத்தமிழர்களினதோ தென்பகுதியில்
  வாழும் தமிழர்களினதோ பாதுகாப்பைப்பற்ரி எதுவித அக்கறையும் கொள்ளவில்லை.

  தற்குக் காரணம் ஈழ்த்தமிழரின் அரசியலில் குறிப்பிட்ட பிரதேச மக்களே ஆதிக்கம் செலுத்தினர்.

  குறிப்பாக யாழ்பாண மேலாதிகச்சமூகமே இவர்கள். இவர்கள் தங்கள் அரசியல் ஆதிகத்தை
  பாதுகாப்பதற்கே தனிநாட்டுக் கோரிக்கை வரை செல்லவேண்டியவர்களாக இருந்தார்கள்.

  இவர்களின் அரசியல் வாழ்க்கையில் குறுக்கிடுவோரை துரோகிகளாக இவர்கள் அழைத்தார்கள்

  இவர்களின் இந்த தந்திரத்தால் தவறாக வழிந்டத்தப்பட்ட இளையோரே ஆயுதமேந்தி

  சிங்கள அரசிற்கெதிராகப் போராடினர்கள்.

  ஆண்டாண்டு காலம் ஆங்கிலேயரின் ஆட்சியில் இலங்கையில் சகல துறைகளிலும்

  ஆங்கிலேயர்களிற்கு சேவை செய்த சமூகத்திற்கு திடீரெனெ தமிழ் மொழி மீது
  பற்று
  வரக்
  காரணமென்ன? இதுவரை இலங்கையில்நடந்தது அரசியல் சுனாமியேயாகும். விடுதலைப்போராட்டமல்ல. த்மிழர் கூட்டணியினரின் இன்றைய முகமே இதற்கு சான்று.

  துரை

  1. குறுகிய தமிழ் தேசியத் தலைமைகளின் வர்க்க நலன்கள், சந்தர்ப்பவாதம் என்பவற்றைத் தமிழர் மீதும் பிற தேசிய இனங்கள் மீதுமன ஒடுக்குமுறைக்கெதிரான போரட்ட நியாயத்தின் மறுப்பாக்கிக் கொள்வது பற்றி நாம் கவனமாக இருக்க வேன்டும்.

   1. தமிழர்கள் தமிழர்களாலேயே அடக்கப்பட்டும் உருமைகள் மறுக்கப்பட்டும்
    உள்ளது
    உலகம்றிந்த உண்மை. சிஙகள்வர் மட்டும் தான் தமிழர்களை ஒடுக்குகின்றார்களென்பது

    தவறான கருத்து. தமிழ் அரசியல் வாதிகள் தமிழரின் உருமை என கோசம்
    போட்டதின் எதிரொலியே இனக்கலவர்ங்கள்.

    லங்கை முழுவதும் வர்த்தகத்தில் ஆதிக்கம், கல்வியில் அரச உத்தியோகங்கள்

    பதவிகள் 70% மேல், 30% தமிழரின் வசம். இந்த நிலையில் இருந்த தமிழினத்திற்குத்தான் நாட்டைப்பிரித்து தாமே ஆழவும் வேண்டுமென்ற
    ஆசையும்
    வந்தது. (அரசியல் வாதிகளிற்கு)

    காரண்ம் தமிழர் மீதான் ஆழும் உருமை சிங்களவ்ர்களிடம் மாறிக்கொன்டு
    போனதேயாகும். இதுதவிர ச்மூக பொருளாதார வளர்ச்சி பாகுபாடின்றி தமிழரிடம்

    காணப்பட்டது..

    30 ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் விரல் விட்டு என்ணக் கூடிய

    சிஙகளவர்களின் வியாபாரமே இருந்த்து இன்று எங்கு பார்த்தாலும் சிஙக்ளவர்கள்.
    100 ஆண்டுகளிர்கு முன்பே சிஙகள தேசமெங்கும் தமிழரின் கடைகள்
    தொடங்கி விட்டன. அன்று தமிழர் செய்ததை இன்று சிஙகளவ்ர் செய்தால்
    அதற்குப்பெயர் ஒடுக்குமுறையா? அப்படியானால் சிங்களவ்ர் தமிழரை

    தென்பகுதியில் அடித்ததை ஏற்ரேயாகவேண்டும்.

    துரை

    1. வித்தியாசமாய் சிந்திப்பதாய் நினைத்துக் கொண்டு சத்தியத்திற்கு விரோதமாய் கதைக்க கூடாது.அய்ரோப்பாவில இருக்கிறவைக்கு மண்டைக்க களீமண் இருந்தாலும் அதையும் பயன் படுத்த் கற்றூத் தருகிறார்கள், அப்படி இருந்தும் இப்படியா?

     பிழைக்க வழி தேடியே தமிழர் வாய்ப்பைத் தேடிச்சென்றார்கள் ஆக்கிரமிப்பு நோக்கில் அல்ல.கால்நடைகள் போல் கால் போன போக்கில் போகாமல் பண்போடும் நட்போடும் நடந்தார்கள் அடாவடி செய்யவில்லை.

     போரால் பாதிக்கப்பட்டு, வீழ்ந்துள்ள தமிழரை தமிழ்ரே மிதிப்பது பண்பல்ல.

     பண்பையும்,பண்பாட்டையும் தமிழ்ரிடமும் காட்டுங்கள்.

    2. சூப்பர்

     இது நல்ல வரவேற்கத்தக்க வாதம். நாம் நம்மில்ப் பிழையை வைத்துக்கொண்டு மற்றவர்களைக் குறை கூறுவது எப்படி நியாயமாகும்!!

   2. thurai,
    சிங்களவர் தான் தமிழர்களை ஒடுக்குகிறார்கள் என்பது என் வாதமல்ல.
    தமிழர் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தவில்லை. தொழில் துறையிலும் அவர்களது பங்கு சிறிதே.
    சிங்களவர், முஸ்லிம்கள், இந்தியத் தமிழர் (மலையகத் தமிழர் அல்ல) நடுவிலேயே வணிக ஆதிக்கப் போட்டி நடந்தது. அதன் ஒருவிளைவே 1915 கலவரம்.

    1948இல் மலையகத் தமிழரின் வாக்குரிமை போனது.
    திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம் தமிழர் தம் பகுதிகளிலேயே சிறுபான்மையாக்கப் பட்டனர்.
    1958 முதலான திட்டமிட்ட வன்செயல்களைப் புறக்கணிப்பது நேர்மையான பார்வையாகாது.
    தமிழரின் அரசாங்க உத்தியோகத் துறை ‘ஆதிக்கம்’ என்பதன் வரலாற்றுப் பின்னணியை ஆராயாமல் அவசர முடிவுகட்கு வர இயலாது.

    தமிழ் மக்களுக்குள் உள்ள முரண்பாடுகளை தமிழ்த் தேசியவாதம் புறக்கணித்தது என்பது முக்கியமான ஒரு விடயம். ஆனால் இன்று அதிகம் பாதிக்கப் படுவோர் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தினரே.

    1. இன்று அதிகம் பாதிக்கப்படுவ்து ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்தினரே என்பதெ 100% உண்மை. இவர்களின்
     சமூக
     பொருளாதார விடுதலையே தமிழரின் விடுலை என்பதே
     எனது
     கருத்து.

     துரை

     1. தமிழ்மாறனிற்கு,

      சிங்களவ்ருடன் ந்டந்த போரை தொடக்கியவர்கள்
      , போரைந்டத்தியவர்கள்,
      போரினால் உயிர்களையும் உடமைகளையும்
      இழந்தவர்கள், போரினால் புலத்திலும்,இலங்கையிலும் சொத்துக்க்களைச் சேர்த்தவர்கள், இன்னமும் தொடர்ந்து இலங்கைத் தமிழரின் பெயரால் உலகமுழுவதும்

      ஏமாற்றி வாழ்பவர்கள், இப்படி பல பிரிவினர்.

      இவர்களில் பாதிக்கப்பட்ட ச்முதாயத்தின்
      அடிமட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே வாழ்ந்தவர்களே துயரம் அனுபவிக்கிறார்கள்.
      இவர்களை குறிப்பிடுவதும், இவர்களின்நன்னமை கருதி செய்ற்படுவதுமே இன்றைய தேவை.
      துரை

     2. துரை அவர்கலே, சமூக, பொருளாதார விடுதலை பற்றீ விளக்க முடியுமா?நீங்கள் அரசியல் படிக்க கிடக்கு.டி.எஸ். சேனானாயக்க கேள்விப் பட்டனீங்களே,? அவர்தானுங்கோ இலங்கையில் இன விரோதம் ஏற்படுத்தியவர் பிறகு அவரின்ர வழியில பண்டாரனாயக்க தமிழர் மீது சிங்களவருக்கு வெறூப்பை வளர விட்டவர்.இப்படியே தொடரும் இன விரோதத்தில் தமிழர் நாளாந்தம் நாய்ப்பாடு படுகிறார்கள்.வரலாற்ரை அறீந்து பேசுங்கோ துரை.

      சும்மா வாயில வருகுது எண்டதுக்காக மட்டும் பேசக்கூடாது.

     3. உலகில் போரில் ஈடுபட்டவர்கள் இன்று உலகமெங்கும்
      ஒற்றுமையாக வாழவில்லயா?

      தமிழருக்குள் அடக்கப்பட்ட அடக்கப்படும் மக்கள் தமிழரை விட்டு பிரிந்தா செல்லப்போகின்றர்கள். புலிக்ளால் துரத்தப்பட்ட
      முஸ்லிம்கள் தமிழருடன் இணைந்து வாழமுடியாதா? கல்லவரஙளின் பின் வடக்கிலிருந்து தெற்குக்கு புகையிரதம் போய் வரவில்லையா? சிங்களவ்ர் அனைவரும் துவேசிகளா? தமிழர் எல்லோரும் எல்லோருடனும் தமிழர்களாகவா மதிப்புக் கொடுக்கின்றார்கள்? சிங்கள்வரை துவேசிகளாக
      காட்டுவதை மட்டுமே கொண்டு வள்ர்ந்த அர்சியலே தமிழர்களின் இன்றையநிலமைக்கு காரணம்.

      துரை

    2. துரை, நன்றி.

     தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை தமிழ் சமூக (சாதி, பால், வர்க்க) ஒடுக்குமுறைகட்கெதிரான போராட்டத்துடன் இணைப்பதைக் குறுகிய தமிழ் தேசியவாதம் விரும்பவில்லை.

     எதிர்காலம் வேறு விதமாக அமையாவிடின் ஏகப் பெரும்பாலான தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் விடுதலைநீன்ட காலத்துக்கு மறுக்கப்படும்.

     1. ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்றூ மக்களூக்கு பெயரிடலே முதற் கோணல் பின்னர் பால்,வர்க்கமாய் பிரிப்பது இரண்டாவது கோணல் அடுத்து மலையகம்,முஸ்லீம் என்றூ பேசுவது மூன்றாவது கோணல்.

      பிரித்து,பிரித்து பார்க்காது சிந்திக்க முதலில் பழகுங்கள்.

      மானுடத்தை நேசிக்க தெரிந்து கொள்ளூங்கள்.

      அன்பே சிவம் என உணருங்கள்.

     2. மேசன் வேலை,தச்சன் வேலை சாதிகுரிய வேலையாக பல பகுதிகளீல் இல்லை.எல்லாரும் அரசாங்க உத்தியோகம் பார்க்கவில்லை.எல்லாரும் ஏழையாகவே இருக்கும் நாட்டில் ஏழை வர்க்கம் மட்டுமே இருக்கிறது,பெண்கலை சமமாகவே கருதுவது தமிழ் மரபு சைவத்தில் அர்த்த நாரீஸ்வரர் இதைக்காட்டி நிற்கிறது.இலங்கையில் மலையகம் உயர்த்த்ப்பட வேண்டும் அவர்களது வாழ்க்கை மாற வேண்டும்.

     3. கோணல்கள் சமுதாயத்திலேயே உள்ள போது, ‘அன்பே சிவம்’ , ‘அர்த்த நாரீஸ்வரர்’ (அது
      தமிழ்க் கருத்தாக்கமல்ல, சமத்துவத்தின் அடிப்படையிலானதுமல்ல) என்று யாரையும் ஏய்க்க முடியாது.நம்மிடையேயுள்ள சைவம் ஒரு பார்ப்பனிய மதம்.

      கண் முன்னே உள்ள உண்மைகளை இல்லை என்று பாவனை செய்வதால் அவை இல்லாமல் போவதில்லை.

      ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பால்,வர்க்கம், மலையகம், முஸ்லீம் என்று பேசுவது எல்லாம் கோணல் என்றால் தமிழ்-சிங்களம் என்று பேசுவது எல்லாவற்றையும் வென்ற கோணலாகும்.

 7. தேசியத்தன்மையின் ஆன்ம எழுச்சிகள் முப்பது வருட அரசியல் போரிலும்,முப்பது வருட ஆயுதப் போரிலும் நிர்மூலமாக்கப்பட்ட பின்னும்,குறை பிடிக்கும் மலட்டு மாக்சிஷ்டுகளாக நீங்கள் மாற்றுக் கருத்தாடுங்கள்.

  வடமொழி சுலோகங்களால் மந்தைகளாக்கப்பட்டவர்கள்,மாக்சிச சுலோகங்களால் மந்திரிக்கப்பட்டுப் போகிறீரகள் என்பதை விட உங்களைப் பற்றி சொல்ல வேறேன்ன இருக்கிறது.

  1. உந்தத் தேசிய எழுச்சி 250,000 பேரைப் பலி வாங்கினதைப் பற்றிக் கொஞ்சம் கதைப்பமா?
   எல்லாரையும் படுகுழியிலை தள்ளிப் போட்டுத், தேசிய எழுச்சி என்ன தேசிய எழுச்சி?
   தமிழ்த் தேசியம் கதைக்கிற யாவாரக் கூட்டம், வடமொழி சுலோகம், மாக்சிச சுலோகம் எண்டு புதுசா வாய்ப்பாடு சொல்லுது.
   தங்கடை பிழையை ஏத்துக் கொள்ள, மனசிலை கொஞ்சம் மனிதத் தன்மையும் நேர்மையும் வேணும். அது இவையிட்டை மருந்துக்கும் கிடையாதே!

  2. எதிர்வு உங்கள் மொழியில் சற்று கவனமாக இருங்கள். மலட்டு போன்ற வக்கிர சொற்களை தவிர்க்கவும். உங்களுக்கு மார்க்சியவாதிகளை பிடிக்காது என்பது தெரிகின்றது. நீங்கள் இந்த போரட்டத்தில் மந்திரிக்கப்பட்ட எழுத்தராக தொடருங்கள் ………..

 8. எக்ஸ் அவர்களது சிந்தனையே நாம் வாழும் புலம் பெயர்ந்த மண்ணீலும் பிரதிபலிக்கிறது.நம்மிடையே உள்ள வன்முரைக்கும்,ஏனைய சமூகங்களோடு இனைந்து வாழாது தனித் தீவாக இருப்பதற்கும் இதுவே காரணமாய் இருக்கலாம்.நமது தமிழ்ச் சமூகத்திற்கு தீமை நிகழ்ந்தபோது கூட நாம் அவர்கலை அவர்களது பிரச்சனையாகவே பார்த்திருக்கிறோம்.ஆக நமது சிந்தனை அதிகாரம் செலுத்துவதிலேயெ இருக்கிறது.இதனால் நாம் அதிகம் இழக்கிறோம்.

  நாம் தமிழராக இனைந்து நமது சிதம்பரம் கோயிலை மீட்டாக வேண்டும்.நாம் சைவர் நம் நெறீ சைவம் நமது பண்பாட்டுச் சொத்து சிதம்பரம்.

  சைவத்தை முன்னேற்ற நமக்கு சங்கம் தேவையிலை நமது சொத்துக்கலை மீட்பதற்கே சங்கம் தேவை.
  சைவம் நம்மை முன்னேற்றூவது நம் வாழ்வாய் இருப்பது.

  நாளூம் நீறணீந்தால் நம்மை நாடாது தீவினை.

  1. புலத்தில் வாழும் தமிழர்கள் தமக்கு அருகே புலத்தில் வாழும் தமிழருடன் நன்கு ப்ழகி
   நாம்
   தமிழர் என்ற உணர்வை முதலில் ஊட்ட வேண்டும். அதன் பின்பே பிறந்த இடத்தின்
   பிரச்சினைகள்
   பற்ரி பேசுவது பொருத்தமாகும். பணத்திற்கு புலத்தைத் தேடுவதும், புலத்திலிருந்து கொண்டு

   பண்பாட்டைப் பற்ரியும் குலப் பெருமையும் பேசுவ்தும் நன்றல்ல.

   துரை

 9. மருதையன் மற்றும் அனைவரும் ஈழத் தமிழர்களுக்கு ஆற்றிய பங்குக்காக நாம் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். உங்கள் பணி தொடரட்டும். இனிமேல் நீங்கள் நடத்தும் போராட்டங்கள் பற்றி எமக்கு அறியத் தரவும். நாங்கள் எம்மாலான பங்களிப்புகளை செய்வோம்,.

 10. உடல் வலி என்றூ டொக்டர் சிவசம்புவிடம் போனால் அவர் உடனே மருந்து எழுத மாட்டார் எங்கே வலி என்றூதான் கேட்பார்.xxxx ஒடுக்கப்பட்டவர் யாரென்றூ காட்டுங்கள் என்றால் பயந்து நடுங்குகிறார்.பொதுவாக ஒடுக்கப்பட்டவர் என்றூ ஒன்றூம் தெரியாதவர் போல பாவனை பண்ணூகிறார்.யாரை யார் ஒடுக்குகிறார்கள்?கோயிலில் பூசை மட்டும் செய்கிற குருக்கலை பார்ப்பனியம் என பயமுறூத்துகிறார்.யாருக்கு XXXXX பயப்படுகிறார்? இங்கிலாந்தில் கறூப்பர்களது வியாதி xxxxx அவர்கலை தொற்றீ விட்டதோ?தெலிவாக சொல்லுங்கள் எந்தச் சாதி எந்தச் சாதியை ஒடுக்குகிறது.யாழ்ப்பாணத்தில் எங்கே நடக்கிறது.?எந்த் ஆதாரமும் இல்லாமல் ஒடுக்கப்படுவோர் என்றால் எப்படி ஏற்றூக் கொள்வது/

  1. தாழ்த்தப்பட்ட சாதியினர் பண்ம் இருந்தாலும் விரும்பிய இடத்தில் யாழ்ப்பாணத்தில்
   காணி வீடு
   வாங்க முடியாத நிலமை. சிங்களப்பகுதிகளில் தமிழனாகவே தமிழ் பேசுபவர்கள் அனைவரையும்
   கருதுகிறார்கள். அடி விழும் போதும் இதேநிலைதான். (அது வேறு விடயம்)

   திருமண விளம்பரங்களைப் பாருஙகள் தாழ்த்தப்படவர்கள் தங்கள் சாதிகளைப் போடத் தய்ங்குகின்றர்க்ள். ஆனால் உயர் சாதியெனப் படுவோர் தங்கள் சாதியை வெளிப்படுத்தியே
   விளம்பரம் போடுகின்றார்கள். சிங்களவர்களைத் திருமண்ம் செய்த தமிழர் யாவ்ரும் தமிழர்களாகவே கருதப்படுகின்றார்கள்.

   ஆண்டாண்டு காலமாக கல்வியில் தாழ்த்தப்பட்டவர்கள்
   பின் தள்ளப்பட்டதும் அவர்கள் சமுதாயம் புலம் பெயர்நாடுகளில் இப்போது திறமைமிக்கவர்களாக்
   திக்ழ்வத்ற்கும் கண்கூடாகக் காணும் காட்சி .சகல்ரிற்கும் சம உருமையுள்ள புலத்தில் கூட
   விரும்பிய ஆணோ, பெண்ணோ மண்ம் முடிக்கமுடியாது. தமிழர் என்று சொன்னதும் தலைநிமிர்ந்து
   நின்ற்தும் சிஙகளவர்களோடு போர் தொடுப்பத்றகு மட்டுமே. துரை

   1. சிங்களவர்களூம் மனிதர்க்லே, மொழியன்றீ நம்மிடையே எந்த வேறூபாடும் இல்லை இனத்தால் நாம் இலங்கையராக மாறூம் காலம் தூரமில்லை.அந்த நாள் மலரும் போது நம்மிடம் வேறூபாடு இருக்கப்போவதில்லை.ஆனால் அத்தனை எளீதாக அரசியல்வாதிகள் விடமாட்டார்கலே, என்ன செய்வது?

    1. தமிழ்மாறனிற்கு நன்றி,

     இலங்கையில் உள்ளது தமிழ்
     சிங்கள அரசியல் வாதிகளின் பிரச்சினை.. இதனை பூகம்பமாக்கி

     இலங்கை மக்களை அழித்தவர்கள் தமிழ் சிங்கள் அரசியல் வாதிகளேயாகும். இதனை இலங்கையில் வாழும் சகல மக்கழும் உண்ரத் தொடங்கி விட்டார்கள். ஆனால் புலத்தில்வாழும் தமிழர்கள் சிலர் சர்வதேச சிக்கலுக்குள்

     தமிழரையும் சிங்களவ்ர்களையும் கொண்டு போய் விடுகின்றார்கள். இதனால் மேலும் தமிழரின் நிலமையே

     மோசமாகும். துரை

 11. தயவு செய்து சம்பந்தர் ஐயா புராணம் பாடவும் சைவத்தின் இல்லாத மேன்மை பற்றி தெரியாததை எல்லாம் எழுதவும் முஸ்லிம்களையும் கறுப்பின மக்களையும் வாய்க்கு வந்தபடி நிந்திக்கவும் செலவிடும் நேரத்தைத் தகவல்களைப் படித்து உண்மைகளை அறியப் பயன்படுத்துங்கள்.
  யாழ் குடாநாட்டில் சாதியமும் சாதிய ஒடுக்குமுறையும் இன்னமும் முற்றாக ஒழியவில்லை.
  இந்த இணையத் தளத்திலேயே பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. புதிய பூமி போன்ற ஏடுகளைத் தேடி யாரும் மறுக்க இயலாத உண்மைகளை வாசித்துப் பாருங்கள்.
  தமிழ்ப் பெண்களின்நிலை பல வகைகளில் முஸ்லிம் பெண்களினதை விட மோசமானது என்பதை அறிய இங்கே வந்து விசாரித்துப் பாருங்கள்.
  உங்கள் வியாதிக்கு உண்மையாகவே என்னிடம் ஒரு மருந்தும் இல்லை. டொக்டர் சிவசம்புவிடமும் இல்லை.

  1. தங்கள் மேலான ஆலோசனைகளூக்கு நன்றீ xxxxx அவர்கலே, நான் கறூப்பர்கலை நிந்திக்கவில்லை அவர்களது சிந்தனையையே சொன்னேன்.தங்கலை மற்றவர்கள் புறக்கணீப்பதாகவே அவ்ர்கள் நினைக்கிறார்கள்.முஸ்லீம்கள் எனது நண்பர்கள்.இலங்கையில் படிக்கிற காலத்தில் நமது வீடுகளூக்கு வருவார்கள் சாப்பிடுவார்கள் நன் கு பழகுவார்கள் ஆனால் அவர்களது பகுதி தனியாகவே காணப்படும் என்றே சொன்னேன்.மற்றூம் புதிய வானம், புதிய பூமி, இங்கு பனி மழை பொழிகிறது என்றூ காஸ்மீரில் நின்றூ பாடுவார்.சைவம் மேன்மையானதே என்றூம் புனிதமானதே நாவலர் இல்லை என்றால் விபூதிக்கு பதிலாய் சிலுவைகள் சுமக்கும் நிலமை நிகழ்திருக்கலாம்.அன்னை,அப்பன், பிள்லை என்றூ எந்த நெறீயில் இருக்கிறது சொல்லுங்கள்.தேவாரங்களீல் இருக்கும் தமிழ் வேரெங்கும் காண்முடியாது.சிவனை முழுமுதற் கடவுளாய்க்கொண்டு தமிழர் சைவமாய் வாழ்ந்தபோது அவர்கள் வாழ்க்கை தவமாய் இருந்தது இந்துவாய் ஆகித்தான் பிரிவுகள் தோன்றீற்றூ.

   1. தமிழர்களின் மதம் இந்து அல்ல என்பதே என் கருத்து. தமிழரின் வ்ழிபாடுகழும்
    வாழ்க்கை முறைகழும் உலகில் மேலோங்கியவை. இவைகள் கால்ப் போக்கில்
    அழிந்தும், மக்கள் சாதி, சம்யமாகவும் பின்பு கட்சி, இயக்க வேறுபாடுக்ழும் தோன்றி
    தமிழரின் ஒற்றுமையை உடைத்து நொருக்கி விட்டன,

    தமிழ்மாறனின் கருத்து
    வரவேற்கத்தக்கது. துரை

   2. நாம் திராவிடர் “சைவர்”, பார்ப்பனர்களால் இந்துத்துவம் (இந்து) புகுத்தப்பட்டது.

    நிகழ்காலத்திலேயே உதாரணத்திற்கு… சாட்சிக்கு எடுத்துக்கொண்டால் தமிழர் (திராவிடர்) மதம் என்னும் மார்க்கத்தினூடான “மத வழிபாடு” செய்ய செல்லும் கட்டிடங்களிலோ (கோயில்களில்), கலாச்சார, மதச் சடங்குகளிலோ யார் தங்களைக் கட்டுப்படுத்தும் தலைமைத்துவம் கொண்ட இடைத் தரகராகவுளார்?

    இதுவும்… இந்த இந்துத்துவம் ஓர் அரசாளும் தந்திரோபாயமாகவே ( அடக்கியாளும்) கொண்டுவரப்பட்டது.

    இன்றும் காலத்திர்ற்கு காலம் நிகழ்கால அரசியலில் மக்கள் மத்தியில் எதைக் கொண்டுசென்றால் அவர்களின் தலைமைத்துவத்தை அடையலாம் என ஒவ்வொருவரும் மக்கள் எதில் பலவீனமாக உள்ளாரோ அதை ஆயுதமாக எடுக்கிறார்கள்,இதில் சிலர் வெற்றி பெறுகிறார்கள், சிலர் தோல்வியடைகிறார்கள்.

    என்னைபொறுத்த வரையில் இது ஒரு புதுச் செய்தியல்ல (NEW ‘S)கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பல முதலீடுகளில் புலிகளின் பணம் புரண்டோடுகிறது. அங்கு மட்டுமல்ல துபாயிலும் பல முதலீடுகள். இதை எனது கருத்துக்களில் ஈழத்து, இந்திய தளங்களில் தெரவித்திருந்தேன். (KP இப்போ சொல்லி, வருங்கால ஸ்ரீலங்கா மார்க்கோஸ் குடும்பத்தின் பெயர்களில் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கலாம்)

    அத்துடன் “கழுதை ஏற்றுவது” இனி புலம்பெயர் நாடுகளின் கோடைகாலங்களில் “நட்சத்திர விழா”, “இன்னிசைக் கச்சேரி” என்று தொடக்கி விடும். சென்னையில் கழுதை ஏற்றுவதற்கு பல ஏஜென்டுகளே உள்ளனர்.

    இவையெல்லாம் இந்திய மதிய, மாநில அரசாங்கங்களிர்க்குத் தெரியாமலில்லை. அந்நிய செலாவணிக்காக,உள்ளூர் வியாபாரத்திற்காக கண்டும் காணாத மாதிரி விட்டுள்ளார்கள். இதை பலமுறை சுட்டிக் காட்டி விட்டுவிட்டேன். தற்போதும் புனையில் நடந்த குண்டுவெடிப்பு இந்திய அரசாங்கத்தின், உளவுத்துறையின் அசமத்தப் போக்கினாலேயே நடந்தது. நாட்டிற்குள் உலவும் புலியைப்
    பிடிக்கமாட்டார்கள்,புற்றிர்க்குள் இருக்கும் சிற்றேரும்பை பிடிக்கத் தெரிவார்கள், வேண்டுமானால் அதை செய்தியாகவும் போடுவார்கள்.

    தமிழ் நாட்டு அரசியலின் “கோமாளி அரசியல்” தற்போது எம் ஈழத்திலையும் அரங்கேறுகிறது.

    1. தமிழரை ஒற்றுமைப் படுத்துவதே, தமிழர்களின் முதல் விடுதலையாக் அமையும். இதற்காக் மறைக்கப்பட்டுள்ள உண்மைகள்
     வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். வேறு இன்ங்கழுடன்
     பகைமையையும், துவேசங்களையும் வளர்ப்பதால் தமிழருக்குள்
     வாழும் சுயந்ல வாதிகளே பயனடைவார்கள்.

     துரை

 12. தெளிவான சிந்தனையற்ற எழுதுகோலும்,ஆயுதமும் பேரழிவுக்கே இட்டுச் செல்லும். மாக்சியவாதி என்பவன் இயங்கியலின் தொடர்ச்சியான போராளி.ஒரு வர்க்கப்போராட்டத்தின்,தேசியப் போராட்டத்தின் முற்போக்கான குணாம்சங்களை புரிந்து கொள்ளாதவன் மலட்டு மாக்சிஷ்டு மட்டுமல்ல,மாக்சிஷத்தையே கொச்சைப் படுத்துகிறான்.மாக்சிசத்தை எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆதரவாக்கி விடுகிறான்.கூக்குரலிடவும்,குறை பிடிக்கவும் மட்டும் தெரிந்த இவர்கள் ஆதிக்க சக்திகளின் அரவணைப்பைத் தேடுகிறார்கள்,அதற்காகவே எழுதிக் கிழிக்கிறார்கள்.

  1. எந்தப் போரட்டத்தைப் பற்றிப் பேசுகிறீர்களோ தெரியவில்லை.
   அண்மையில் தோற்கடிக்கப் பட்டது மக்களிடமிருந்து தன்னை அன்னியப் படுத்திக் கொண்ட ஒரு போராட்டமே.
   இயக்க வேறுபாடின்றி அனைத்துப் போரட்டத் தியாகிகளும் மதிப்பிற்குரியோரே.
   தமிழ் மக்களின் விடுதலை வேட்கையும் ஒரு இயக்கத்தின் இலக்கும் ஒன்றல்ல. அவ்வாறு திணிப்பது முற்போக்கான செயலுமல்ல.
   யார் மக்கள் பக்கத்தில்நிற்கிறார்கள் என்பதை வரலாற்றினிடம் விட்டு விடுகிறேன்.

 13. ..”புதிய வானம், புதிய பூமி, இங்கு பனி மழை பொழிகிறது என்றூ காஸ்மீரில் நின்றூ பாடுவார்.”

  நண்பர் தமிழ் மாறன் உங்கள் கருத்துக்களை வாசித்தேன் .சிரித்து என் குடல் அறுந்து விட்டது.சிரிப்பை அடக்க முடியவில்லை.
  கவுண்டமணி – செந்தில் , வடிவேல் தோற்றுபோய் விட்டார்கள்.
  தொடருங்கள் . சிரித்தாலே போதும். சிவசம்புவின் மருந்து தேவையில்லை.

 14. 1983 கலவரத்தில் தமிழகமே ஸ்தம்பித்து விட்டது என்றும் சொல்கிறார்இ ஆனால் தமிழகத்தில் தன்னுரிமைக்கான சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் இல்லை என்றும் சொல்கிறார்.

  உண்மையில் 83 ஆண்டெில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினால் தமிழகமே ஸ்தம்பித்தது உண்மைதான். ஈழத் தமிழ் மக்களுக்கு தனிநாடு ஒன்று வேண்டும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருந்தார்கள்.

  ஆனால் இராஜீவ்காந்தி படுகொலைஇ பத்மநாபாவின் படுகொலைஇ டெலொ இயக்க முன்னாள் போராளிகளின் திருட்டுத்தொழில் போன்றவை தமிழக மக்கள் மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது மிகத் தெளிவான மறுக்கமுடியாத உண்மை.

  என்னதான் அண்ணன் தம்பியாக இருந்தாலும்இ பக்கத்துவீட்டில் உள்ள ஒருவன் தனது வீட்டிற்குள் புகுந்து அடித்துவிட்டுப் போவதைவதை எந்தத் தமிழனும் அல்லது எந்த இந்தியனும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதுதான் உண்மை.

  மேலும் மேற்கண்ட சம்பவத்திலிருந்து புலிகள் ஒரு பயங்கரவாதிகள்தான் என்பதை தமிழக மக்கள் மனதில் இருத்திவைத்திருந்தார்கள் என்பதும் உண்மை.

  என்றாலும்இ இறுதிப் போரின் பாதிப்புகள் தமிழக மக்களை மிகவும் பாதித்திருந்தது. மிகப் பெரிய எழுச்சியை தமிழகத்தில் காணக்கூடியதாக இருந்திருக்கையில் புலி ஆதரவுக் கட்சிகளால் அந்த எழுச்சி நிறைவேறாமல் என்பது மட்டும் தோழர் சொன்னது போன்று நிதர்சனமாக உண்மை!

  1. நீங்கள் அறிந்தவையும் உணர்ந்தவையும் ஒருவித உண்மையும் இல்லை.டெலோ திருட்டு தொழில் செய்தார்கள் என்பதாக புலிகள் தான் பிரச்சாரத்தை நடத்தினார்கள்.யார் தான் இயக்கயளவில் திருட்டு தொழில் செய்யவில்லை? சிறிய தீவில் ஒரு குறுகிய மையில்தூரத்தில் பெரும் சனத்தொகையை கொண்டிருக்கிற இலங்கையில் கள்ளக்கடத்தல் மூலமாகத்தான் இனப்போராட்டம் முளைவிட்டது.
   83-இனக்கலவரத்திற்கு பிறகு இலங்கையை விட்டு வெளியேறிய தமிழரிடம் இருந்து கோடிக்கணக்கான பணம் வந்து குவிந்தது. இதுவே யந்திரதுப்பாக்கி கொண்டு போராளிகளையும் தாக்குவதற்கும் வெல்லுவதற்கும் காரணமாக இருந்தது ஆகவே வரும் காலத்தில் புலிபாணியில் கதை சொல்லாதீர்கள். நானும் ஒரு புலம்பெயர் தமிழனே!. பொருள் தேடத்தான் புலம்பெயர்ந்தேன். அதற்காக எல்லோரையும் அப்படி குற்றம் சாட்டவில்லை. எனது கணிப்ப 90 வீதமானவர்களும் இப்படி பட்டவர்களோ! மிக்கியமாக அன்றும் புலி.இன்றும்புலி என்பவர்களும் இவர்களே! சிங்கள இனவாதம் தமிழ்மக்களின் வாழ்வை எரித்தார்கள் என்றால் தமிழ்மக்களின் இனவாதிகள் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக எரித்துக் கொண்டிருந்தார்கள் மே 19-ம் திகதிவரை. இதில் அளப்பரிய குற்றத்தை புலம்பெயர்
   தமிழர்களே பொறுப்பேற்க வேண்டும்.இதில் இருந்து யாரும் தப்ப முடியாது. இதுவே நாம் அறியும் ஞானமாக கருதுகிறேன். தாங்கள்….முடிந்தால் உங்கள் பதிலை வழங்கவும்.

 15. ஏன் துரை திருமண விளம்பரங்களில் தாழ்த்தப் பட்டோர் தமது சாதியை போட தயங்குவதாக கூறி ஏதோ சாதிப் பெயர் போட வேண்டும் போல் நீங்கள் கூறுகிறீர்கள். எல்லோரும் சேர்ந்து அதி உயர் வேளாளர் என்று விளம்பரத்தை போட்டீர்கள் ஆனால் கிளிஞ்ச்சுதல்லோ இலம்பாட லுங்கி! ஈழத்தில் பத்திரிகை விளம்பரம் போடுவதர்க்கு சாதியச் சான்றிதள் கேட்பதாக நான் கேள்விப் படவில்லை.

 16. தோழன் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் நடந்த அசிங்கமான அரசியலை மிக நேர்மையாக பதிவு செய்திருக்கிறார் தோழர் ராம் (கற்றது தமிழ்) (http://kaattchi.blogspot.com)

Comments are closed.