தமிழ் நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர்?

refugeeஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் அனைவரும் அடுத்த இரு மாதங்களுக்கு இடையில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு சென்னையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

புலிகள் கடந்த மே மாதம் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு இலங்கையில் இயல்பு நிலையும், சுமுகமான சூழலும் தற்போது ஏற்பட்டுள்ளன.

கடந்தகால யுத்தத்தால் சுமார் ஒரு இலட்சத்து 23 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் அவர்களின் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தமிழ் நாட்டிலுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் எதிர்வரும் இரு மாதங்களுக்கு இடையில் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்