தமிழ் சொலிடாரிட்டி ஒன்றுகூடலுக்கான அழைப்பு : சனி 06/09/2014

தமிழ் சொலிடாரிட்டி ஒருங்கிணைப்பாளர் சேனன்
தமிழ் சொலிடாரிட்டி ஒருங்கிணைப்பாளர் சேனன்

பிரித்தானியாவில் தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு தோழமை நாள் என்ற நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளது. பல்வேறு போராட்ட அமைப்புக்கள் கலந்துகொள்வதாக தமிழ் சொலிடாரிட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையின் முழுமை:

ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களை இணைத்து அரசியல் போராட்டத்தைப் பலப்படுத்தல். போராட்டத்தை வளர்ப்பதற்கான உரையால்கள் திட்டமிடல்கள் -போரட்ட அமைபுகளுக்கிடையிலான உறவைப் பலப்படுத்தல். மற்றும்; இசை> இயல், நாடகம்> பல்வேறு வகை உணவு வகைள் ஆகியன இந்நாளை சிறப்பிக்க இருக்கின்றன.

புகழ்பெற்ற நாடக ஆசிரியரான ராணி மூர்த்தி> இங்கிலாந்தின் முதன்மை இடதுசாரிய சிந்தனையாளரான கானா செல்> புகழ்பெற்ற தொழிற்சங்க தலைவர்கள், போராட்ட சக்திகளுக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்> குர்திஸ் போராளிகள்> பாலஸ்தீனப் போராளிகள், மற்றும் பல்வேறு முன்னனிக் கலைஞர்கள், அரசியற் செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்வு. வேறு நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
வழங்கப்படும் உணவு மற்றும் நுழைவுக் கட்டணம் இலவசம்.

எமது போராட்டத்தைப் பல்வேறு போராட்டச் சக்திகளுடன் இணைத்து இங்கிலாந்தில் தமிழ் பேசுவோர் கலாச்சாரத்தை – விடுதலை அரசியலைப் பதிவதற்காக -இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. உங்களின் முழு ஆதரவையும் இந்நிகழ்வுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஓன்றுகூடல் இடம் காலம் மற்றும் ஏனைய விபரங்கள்.

6th September 2014
Registration starts at 12.00
Day-Mer center
22 Moorefield Road
Tottenham
N17 6PY