தமிழ்ப் பேசும் மக்களுக்குத் தேர்தலில் நம்பிக்கையில்லை : சபேசன்

தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரசியலமைப்பிலும் பாராளுமன்ற ஜனநாயகத்திலும் நம்பிக்கையிழந்துள்ளனர். இவ்வாறு நம்பிக்கையிழந்துள்ள சூழலில் மறுபடி அவர்களுக்குப் பாராளுமன்ற வழிமுறையில் நம்பிக்கையளிக்கும் வகையில் தேர்தலில் பங்காற்றுவதும், அதற்கு ஆதரவு வழங்குவதும் தவறானது என புதிய திசைகள் ஒன்று கூடல் நிகழ்வில் கருத்துத் தெரிவித்தார். இந்த வகையில் புலம் பெயர் தமிழர்கள் இலங்கைத் தேர்தலில் பங்காற்றும் எந்தக் கட்சியையையும் ஆதரிபதென்பது தவறான முடிபாகும் என மேலும் தெரிவித்த அவர், நாம் பலமான நிலையிலிருந்தால் தேர்தலில் பங்குபற்றுவது குறித்துச் சிந்திக்கலாம் என்றும் இன்றைய சூழலில் இது தவறான நடவடிக்கையே என மேலும் தெரிவித்தார்.
இதனால் தான் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மாற்றாக இடது சாரிகள் மாற்று வடிவிலான ஜனநாயக வழிமுறைகளை முன்வைக்கிறார்கள் என்று மேலும் கருத்து வெளியிட்டார்.

சபேசன் பனிமலர் சஞ்சிகையின் ஆசிரியரும்,புலம் பெயர் அரசியல் செயற்பாட்டாளரும் பல இடது அமைப்புக்களோடும் தொடர்புச்டையவ்ர் என்பவை குறிப்பிடத்தக்கது.

8 thoughts on “தமிழ்ப் பேசும் மக்களுக்குத் தேர்தலில் நம்பிக்கையில்லை : சபேசன்”

 1. யாழ்ப்பாணத்தில் புதிய ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார விளக்க கூட்டத்திற்கு போயிருந்தேன் அங்கு கூடிய மக்கள் தேர்தலில் ஆர்வமாக இருக்கிறார்கள். பிரச்சாரத்திற்காக இளைஞர்கள் தெருநாடகம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இக்கூட்டத்தில் முதியவர்கள் இளைஞர்கள் பெண்கள் ஆசிரியர்கள் தொழிலாளர் வங்கி ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 2. புதிய திசைகள் பின்னால் அணீ திரளச் சம்மதம்.சபேசன் சிறந்த முன்னோடி அவரது பனிமல்ர் சிறப்பாக வந்த பத்திரிகை.வாழ்த்துக்கள்.

  1. பத்திரிகை சிறப்பானதுதான். யாரும் எழுதலாம் பேசலாம். வாசிக்க கேட்க நல்லாயிருக்கும். ஆனா நடைமுறைக்கு சாத்தியமாக வேண்டும். மேடைப்பேச்சு கேட்கவும் கைதட்டலுக்கும் நல்லாயிருக்கும். உணர்ச்சிகரமான, புரட்சிகரமான எழுத்துக்கள் வாசிக்கவும் நல்லாயிருக்கும். எங்கடை மக்களுக்கு அதாலே என்ன பிரயோஜனம் அதை விளங்கப்படுத்துங்கோ. நானும் அறிவிலா குறைவு. கொண்ஷம் நடைமுறைக்கு சாத்தியமா அதுண்டை ரகசியத்தை உங்களுக்கு விளங்கினால் விளங்கப்படுத்துங்கோ.

   அதோட இப்படி எத்தனை திசையில அணி திரல்றது. இப்ப நம்ம நாடிலளையும் நூறு அணி. வெளிநாட்டிலையும் இப்படிஎண்டா?

   இப்ப முன்னால் களம் கண்ட போராளி ஒருத்தர் மே 18 ஒரு முடிவில்ல எண்டு சொல்றார். அவரையும் பாப்போம். அங்கை மக்களோட மக்களா புதிய ஜனநாயக கட்சி நிக்கினம். அங்கை தினமும் எல்லாவற்றையும் சந்திச்சு கொண்டிருக்கிற மக்கள் அவைக்கு என்ன சொல்லினம் எண்டு பாப்போம். இங்கை எங்களை சிலருக்கு இது பொழுது போக்கு. அங்கை சனத்துக்கு உயிர்.

  2. பனிமலர் கேணல் கிட்டுவுக்கு வீர வணக்கம் தெரிவித்து விட்டு விரைவில் இறந்து போனது. (கனடா தாயகம் சாட்சி.)
   ஆனால் பனிமலரிற்கு யாரும் வீர வணக்கம் தெரிவிக்கவில்லை.

 3. பரதன், நன்றி
  புதிய ஜனநாயகக் கட்சி தேர்தலில் நிற்பது பாராளுமன்றத்தின் மூலம் பேரம் பேசவோ தேர்தல் அரசியலில் மக்களை மீண்டும் தள்ளி விடவோ அல்ல.
  அக் கட்சி அறிக்கை மிகவும் தெளிவாகவே உள்ளது.

  இந்த நிலையில் அதற்கும் பிற தேர்தல் அரசியல் கட்சிகதும் ஒப்பீடு கிடையாது.
  புதிய ஜனநாயக்க் கட்சியின் அறிக்கையை த.தே.கூ. அ றிக்கையுடனும் பிற அறிக்கைகளுடனும் கட்சியின் வராலாற்றைப் பிற கட்சிகளின் வராலாற்றுடன் அரசியல் நேர்மையுடன் ஒப்பிட்டும் பார்த்தால் உண்மை விளங்கும்.

  புதிய ஜனநாயகக் கட்சி மிகுந்த நிதி நெருக்கடியின் நடுவே கோடிக் கணக்கில் அன்னியப் பணத்துடன் அல்லது அரசாங்கப் பணத்துடன் களமிறங்கியுள்ள கட்சிகளுடன் போட்டியிடுகிறது. ஊடகங்களுக்கு எதிராகவும் எதிர்நீச்சல் போட வேண்டியுள்ளது.
  இந்த நிலையில் த.தே.கூ.வையோ அரசாங்கத்தையோ ஆதரிக்க நேரான வழிகளும் உண்டு, கோணல் வழிகளும் உன்டு.

  புதிய ஜனநாயகக் கட்சியின் வளர்ச்சி தேர்தல் வெற்றி தோல்விகளில் தங்கியிருக்கவில்லை.
  சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடாது.

 4. “புலம் பெயர் தமிழர்கள் இலங்கைத் தேர்தலில் பங்காற்றும் எந்தக் கட்சியையையும் ஆதரிபதென்பது தவறான முடிபாகும்”
  – முதல எத்தனை புலம் பெயர் தமிழர்கள் வாக்களிக்க போயினம்? அங்கை சனம் ஒரு உரிமையும் இல்லாமல் இருக்கு.இந்த புலம் பெயர் தமிலராலதானை இந்த நிலைமை. அந்த சனம் தான் எல்லா இடிபாட்டிக்கையும் இருக்கு. அதுகளை இனிஎன்டாலும் சுயமா சிந்திச்சு ஒரு முடிவு ஏட்டுக்க விடுங்கோ. இல்லாட்டி அங்கை போயிருந்து அந்த சனத்தோட சனமா இருந்து அரசியல் பேசுங்கோ. இங்கை வெளிநாடிடில முழு ஜனநாயக சுதந்திரத்தோட அதுவும் முதலாளித்துவ நாடுககில இருந்து தின்னுவிட்டு எவரை விட்டு கொண்டு.

  “முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மாற்றாக இடது சாரிகள் மாற்று வடிவிலான ஜனநாயக வழிமுறைகளை முன்வைக்கிறார்கள்.”
  – இடது சாரிகள் என்ன மாற்று வடிவிலான ஜனநாயக வழிமுறைகளை முன்வைக்கிறார்கள் எண்டும், அவை எந்த இடதுசாரிகள் எண்டும் கொஞ்சம் விளக்கமா விலாவாரியா சொல்ல முடியுமோ? ஏனென்டா எங்கட ஜனாதிபதியும் சொல்றார் இடதுசாரிகள் தம்முடன் நிக்கிரதாக. வடக்கு தமிழ் தேவானதாவும் தன்னை இடதுசாரிஎண்டும் இடது சாரிகள் ஒரே அணியில் நிக்கிறோம் எண்டும் சொல்றார். இடது வலது எல்லாம் குழப்பமாகவே உள்ளது. இப்ப சனத்துக்கு இடக்கையாலையோ வளக்கையாலையோ சாப்பிடிரதேண்டு பிரச்சனையில்லை. வாய்க்கு சாப்பிட சாப்பாடு வேணும். அதோட சாப்பிடுறதுக்கு கை வேணும். கை கழுவ தண்ணி வேணும். இதுதான் பிரச்சனை. வலதும் இடத்தும் கதைச்சு என்னத்தை கண்டது?. இடது கதைத்த இப்ப எங்கே நிக்கினம்? எங்கை நிக்கினம்? நடைமுறைக்கு சாத்தியமானதை, சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்றத்தை, மக்களுக்கு தேவையானதை கதையுங்கோ. செயற்படுங்கோ. இந்த சித்தாந்தங்களால ஒண்டும் நடக்கப்போவதில்லை. இந்தியாவில திராவிடர் தனிநாடு இப்போ இங்கே? கருணாநிதி எங்கே நிக்கிறார்?

  “பனிமலர் சஞ்சிகையின் ஆசிரியரும்,புலம் பெயர் அரசியல் செயற்பாட்டாளரும் பல இடது அமைப்புக்களோடும் தொடர்புச்டையவ்ர்”
  இவருக்கு ஒரு பெயர் ஒரு சஞ்சிகையின் ஆசிரியர் எண்டு. பல இடது அமைப்புக்களோடும் தொடர்பு வைச்சு மக்களுக்கு என்ன பிரயோசனம் எண்டு பாக்கவேண்டும். ஒண்டு குறுகிய தூரத்தில பாக்கவேண்டும் இல்லாட்டி நெடும்தூரத்தில பாக்க வேண்டும். இது என்னெண்டால் காலம் காலமாக கூட்டம் போட்டு கதைகிறது.

  ஒன்றை கதைத்தால் அமுல் படுத்த வேண்டும். கதைத்து கொண்டே இருந்தால்? ஒரு பக்கத்தில பாத்தால் இதுக்கு பிரபாகரன் தான் சரி போல இருக்கு.

  ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது எண்ட மாதிரி, நடந்து வந்த பாதையை பாத்து நடக்க போற பாதையை அமையுங்கோ. இல்லடி இந்த புதிய ஜனநாயக கட்சிக்கு வலு சேருங்கோ.

  இடதுசாரி அமைபிகியே நூறு அமைப்பு. அவைஎக்கேயே ஒற்றுமை இல்லை. இடத்தும் வேண்டாம், வலதும் வேண்டாம். இரண்டு கையாலையும் சேந்து எங்கடை சனத்துக்கு கை கொடுப்போம். வாருங்கோ.

  இவர் சொல்றது ஒண்டுக்கொண்டு முரண்படுதே?
  “தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரசியலமைப்பிலும் பாராளுமன்ற ஜனநாயகத்திலும் நம்பிக்கையிழந்துள்ளனர். இவ்வாறு நம்பிக்கையிழந்துள்ள சூழலில் மறுபடி அவர்களுக்குப் பாராளுமன்ற வழிமுறையில் நம்பிக்கையளிக்கும் வகையில் தேர்தலில் பங்காற்றுவதும், அதற்கு ஆதரவு வழங்குவதும் தவறானது என புதிய திசைகள் ஒன்று கூடல் நிகழ்வில் கருத்துத் தெரிவித்தார். இந்த வகையில் புலம் பெயர் தமிழர்கள் இலங்கைத் தேர்தலில் பங்காற்றும் எந்தக் கட்சியையையும் ஆதரிபதென்பது தவறான முடிபாகும் என மேலும் தெரிவித்த அவர், நாம் பலமான நிலையிலிருந்தால் தேர்தலில் பங்குபற்றுவது குறித்துச் சிந்திக்கலாம்”
  “இன்றைய சூழலில் இது தவறான நடவடிக்கையே” இப்படி சொல்லி போட்டு.

  பிறகு சொல்றார்.
  “இதனால் தான் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மாற்றாக இடது சாரிகள் மாற்று வடிவிலான ஜனநாயக வழிமுறைகளை முன்வைக்கிறார்கள்”

  இதுல எதை எடுக்கிறது. ஒண்டும் விளங்கேல. இவர் ஏதாவது சொல்லவேண்டும் எண்டு சொல்றாரோ?
  எல்லாரும் இடதுசாரி, இடதுசாரி எண்டு போட்டி போட தானும் தன்னை நிலை நிறுத்த ஏதாவது சொல்லவேண்டும் எண்டோ?
  என்னத்துக்கும் யாராவருக்கு விளக்கம் இருந்தால் இதில எழுதுங்கோ.

  இவையெல்லாம் வெளிநாட்டில இருந்து கொண்டு தான் இதை சொல்லுவினம். சனத்திட்டை போய் நேர்ல சொல்ல மாட்டினம்.

 5. இடது கதைத்த NLFT இப்ப எங்கே நிக்கினம்? EPRLF எங்கை நிக்கினம்?

 6. நூறல்ல, ஆயிரம் கருத்துக்களும் நிலைப்படுகளும் இருந்த்தாலும் பிழை இல்லை.
  நேர்மையாகவும் வெளிப்படையாகவும் விவாதிப்பதன் மூலம் தான் ஒரு பயனுள்ள பாதையைத் தெர்ந்தெடுக்க முடியும்.
  யார் என்ன சொல்லுகிறர்கள் என்பதை விட அவர்கள் சொல்வது உண்மைக்குப் பொருந்தி வருகிறதா என்றும் அவர்தளுடைய செயல்களுக்குப் பொருந்தி வருகிறதா என்றும் பார்ர்ப்பது தான் வழி.

  மக்களுடைய உடனடிப் பிரச்சனை என்று வரையறுத்துநீண்ட காலத்தை புறக்கணிக்கக் கூடாது.
  ஆனால் தமிழர் தேசியக் கூட்டமைப்பு பச்சைப் பொய் சொல்லுகிறது. பிற முன்னாள் போராளி அமைப்புக்களும் பல உண்மைகளை மூடி மறைக்கிறார்கள்.
  இடதுசாரி என்று யாரும் தன்னை அறிவித்துக் கொள்வதை யாரும் தடுக்க இயலாது.
  உண்மைகளை விசாரிப்போம். தெளிவு பிறக்கட்டும்.

Comments are closed.