தமிழ்நாட்டில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகத்திற்கு பாதுகாப்பு தீவிரம்.

31.08.2008.
தமிழ் நாட்டில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரகத்திற்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு தமிழ் நாட்டு காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து தூதரகத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை.