தமிழ்த் தேசிய முற்போக்கு வாதம்(3) – உரையாடலின் தேவை : விஜய்

இந்த நாட்டில் நான் சமூகம் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்த நாளிலிருந்து எனது பேச்சுரிமை மறுக்கப்பட்டதாகவே உணர்கிறேன். தவறுகளின் ஊற்று மூலத்தைத் இன்னும் ஆழமாக அறிந்துகொள்வதற்கும், அது குறித்த உரையாடல் வெளியை உருவாக்குவதும் மக்கள் பற்றுள்ள ஒவ்வொரு தனிமனிதனதும் கடமை. 80 களின் இறுதியில் எமது சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். எமது இன்றைய அவலத்திற்கு தம்மைத் தவிர யாரும் போராட்டக் கூடாது என புலிகள் மற்றவர்களை அழித்துப் போட்டதும் ஒரு காரணம் என்பதை எப்படி மறுப்பது? சிறிதாக இருந்த மக்கள் இயக்கங்களைக் கூட அவற்றிற்கான கட்டமைப்பைக் கூட புலிகள் சிதைத்து தம்மைக் கடந்து தான் போராட்டம் என்ற நிலைக்கு மாற்றைவிட்டிருந்தனர். இன்று போராடவோ, குரலெழுப்பவோ யாருமில்லை. எல்லாமும் வெற்றிடமாகக் காட்சிதருகிறது.

புலிகள், அவர்களை எதிர்த்தவர்கள், ஆதரித்தவர்கள், முற்போக்காளர்கள், இடதுசாரிகள், தேசியவாதிகள் என்று அனைவரும் குழுவாத வேறுபாடுகளுக்கு அப்பாலான விமர்சன வெளியில் இணைந்துகொள்ள வேண்டும்.

விமர்சனங்கள் பின்னூட்டங்களாக வெளிவருகின்ற வேளைகளில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களே மேலோங்கியிருக்கின்றன. அரசியல் கட்டுரைகளுக்குக் கூட கனல்பறக்கும் விமர்சனங்கள் பின்னூட்டங்களாக வெளியாகின்றன.

ஆனால் அவை நாம் பேராசைப்படுகின்ற ஒரு ஆரோக்கியமான விமர்சனச் சூழலைத் தோற்றுவிக்கக் கூடியன அல்ல என்பது கவலைக்குரியதே. இவ்வழவு இழப்புகளின் பின்பும், அழிவிகளின் பின்பும் …. இன்ன பிறவற்றின் பின்பும் “ஆயிரம் பூக்கள் மலரக் கூடிய ” ஒரு சூழலை இனியொரு வாசகர்களால் கூடத் தோற்றுவிக்க முடியவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதொரு விடயமே. ஆயினும் நம்பிக்கையுடன் தொடர வேண்டியிருக்கிறது.

நம்பிக்கைகள் அற்றவர்களாக எப்படி வாழ்ந்தோம் (நான் மட்டுல்ல, நாம் மட்டுமல்ல – பலரும்) என்பதை பின்னூட்டமாக்க முயல்கிறேன்.

1985 களின் பின், இயக்கங்கள் அராஜகத் தன்மையுடன் செயற்படுவது வெளிப்படையான பின், அவற்றில் நம்பிக்கை இழந்தோம். ஈரோஸ் ஒரு மூடுண்ட அமைப்பாக செயற்பட்டு வந்தது. இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களுடன் அது நண்பர்களாயிருந்த போதும் நெருக்கமான தொடர்புகளை அவர்கள் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. விமர்சனங்களையும் அவர்கள் கேட்கவும் தயாராக இருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் அரசியல் தேடலில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

தீப்பொறி குழு அப்போது தீவிரமான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அவர்களுடைய அரசியல் மற்றும் செயற்பாடுகளில் அன்றி அவர்களுடைய நடத்தையில் நம்பிக்கை ஏற்படவில்லை. நிலைமைகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. சிறிய குழுவாகிய தாங்கள் மட்டுமே புரட்சிகரச் சக்திகள் எனக்கருதிக் கொண்டு ஏனைய முற்போக்குச் சக்திகள் பற்றி கவனம் எடுத்துச் செயற்படவில்லை எனக்கருதினோம். பெரிய இயக்கங்கள் கொண்டிருந்த ‘நாம் மட்டுமே விடுதலைப் போராளிகள்” என்ற கருத்தியலுக்கு ஒப்பாக தாங்கள் மட்டுமே புரட்சிகரச் சக்திகள் எனக் கருதினார்கள். யாழ் அல்லது தமிழ் மத்தியதர வர்க்கச் சிந்தனையின் வெளிப்பாடு அது போலும்.

தொடர்ந்து பாதுகாப்புப் பேரவை, செவன் டெலா, (நீண்ட காலம் மற்றும் குறிப்புகள் எதனையும் பேண முடியாச் சூழலில் பெயர்களில் தவறுகள் ஏற்படலாம் ) போன்வற்றுடனான தொடர்புகளும் எற்பட்டன. சிறு இயக்கங்கள் வழியாக புலிகளின் அராஜகம் பற்றி அதிகம் தெரிய வந்ததது. அது வளர்ச்சி பெறும் எனக்கருதப்பட்டது. என்.எல்.எப்.டி. தொடர்புகளும் ஏற்பட்டன.

அக்காலத்தில் நெல்லியடியில் தாஸ் – பீற்றர் – கண்ணன் குழுவினருடன் கதைக்கவும் வாய்ப்பு எற்பட்டது. அக்குழு ரெலோவில் தனித்தன்மை கொண்டதாகவும் புலிகளிற்கு எதிராகச் செயற்பட்டும் வந்தது. சுத்த ஆயுதக் குழு அது. ஆனால் அவர்களுக்கு அப்பகுதி மாக்சிச வாதிகள் – முற்போக்கு நபர்கள், இயக்கங்கள் என்பவற்றுடன் தொடர்புகளும் காணப்பட்டன. அது அவர்கள் புலிகளை எதிர்க்கக் கூடிய குழு என்பதனால் ஏற்பட்டதாக இருக்கலாம்.

இதற்கு முன்பாக பனாகொடை மகேஸ்வரனின் குழுவினருடனும் தொடர்புகள் ஏற்பட்டன.

யாழ்ப்பாணத்தில் நண்பர்கள் சிலர் இணைந்து நடாத்திய அரசியல் விமர்சனக் கலந்துரையாடலிலும் பங்கு கொண்டோம். முடிவுகள் எதுவுமற்ற கலந்துரையாடலாக அது முடிவடைந்தது.

புளொட் அமைப்பில் இருந்து யாழ் நகரப் பாதுகப்புப் பணிகளில் ஈடுபட்ட குழுவும் மற்றும் நண்பர்களான சிலரும் நம்பிக்கை தருவார்கள் என உறவை ஏற்படுத்தினோம். அவர்களும் விரக்தியினால் செய்வதறியாது நிற்பதைனயே காணமுடிந்தது.

புலிகளிலிருந்து அதன் அராஜகச் செயற்பாடுகளுடன் உடன்பாடு கொள்ள முடியாது விலகி நின்றவர்களுடனும் தொடர்புகள் ஏற்பட்டது.

இந்தக் காலத்தில் விசுவானந்த தேவாவினைச் சந்திக்கிறோம். அவர் இயக்கத்தில் முரண்பாடுகள் வலுவடைந்து பிழவும் ஏற்பட்ட நிலையில் அதனை சனநாயக வழியில் தீர்வு கண்டதாக அறிந்தோம். அக்காலத்தில் அது முக்கிய செய்தி. அவர் தொடர்ந்தும் விடுதலைப் போரட்டத்தில் முனைப்புடன் ஈடுபடும் வழிவகைகள் பற்றி ஆரோக்கியமான கருத்துக்களைக் கொண்டிருந்தார். விசு பற்றி பின்னூட்டத்தில் குறிப்பிட்ட விடயங்களை நான் அறிந்திருக்கவில்லை. விடயம் தெரிந்தவர்கள் சரியான விடயங்களை பதிவு செய்வதினூடாக அதனை அறிந்து கொள்ள முடியும்.

மெல்ல மெல்ல அராஜக வாதிகள் வலுவடைந்து வருவதனை காணமுடிந்தது. முக்கியமாக புலிகள் சிறு குழுக்களையும் தனி நபர்களையும் வலுவிழக்கச் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கான கோட்பாட்டு எற்புடமை ஒன்றும் மக்கள் மத்தியில் காணப்பட்டது.

ரெலோ இயக்கத்தின் மீதான தாக்குதல் ஒரு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. எதனையும் செய்ய முடியவில்லை. எதிர்பதற்குப் பதிலாக மக்கள் ஆதரவும் புலிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலைமை ஆயுதப் போராட்டம் ஒரு அழிவு வழியில் செல்வதை உணர்த்தியது. அயினும் பலர் அதனை நியாயப்படுத்தினார்கள். பல நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் – அவர்களில் பலர் எல்லாவற்றையும் கைவிட்டு விடுதலைக்காக இணைந்து கொண்டவர்கள் – கொல்லப்பட்டார்கள்.

இயக்கமொன்றினால் இன்னொரு இயக்கத்தின் அரசியல் செயற்பாடு தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அதற்காக எந்த நியாயங்களையும் சொல்ல வேண்டிய அவசியமிருக்கவில்லை புலிகளுக்கு என்பதுவும் அதனை எவரும் எதிர்க்கமுடியாமல் போய்விட்டது என்பதுவும் பலரைக் கலக்கமடையச் செய்தது.

பல்கலைக்கழகத்தில் ராஜினியின் படுகொலையும் மற்றொரு பேரிடியாக அமைந்தது. புலிகளால் கொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய விமர்சனம் எதுவுமாக இருக்கலாம். ஆனால் புலிகள் எவரையும் எதற்காகவும் கொலை செய்யலாம் என்ற நிலைமை உறுதிப்படுத்தப்படுகிறதைக் கண்டோம். அதற்கான பரந்து பட்ட எதிர்ப்புத் தளம் ஒன்று மக்களிடமிருந்தும் புத்திசீவிகளிடமிருந்தும் உருவாகவில்லை. மாறாக ஆதரவுத் தளமொன்று அல்லது அதனை ஏற்கும் கருத்தியலொன்றும் வளர்ந்து வந்தது.

இதற்காக அதனை எவரும் எதிர்க்கவில்லை என்றோ அல்லது எல்லோருமே ஏற்றுக்கொண்டார்கள் என்றோ பொருளல்ல. எதிர்ப்பும், ஏற்காமையும் முக்கியத்துமானதாக அமையில்லை.

இராணுவ அடக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. புலிகளின் அராஜகமும் – பாசிசமும் அதிகரிக்கத் தொடங்கின. நாங்கள் ஒரு சிறிய ஒளிக்கீற்றுத் தென்படுமா என அலைந்தோம்.
அக்காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். உம் டக்ளஸ் தேவானந்தாவும் முக்கியமான ஒருவராக கருதப்படும் நிலை தோன்றியது.

இதனை நீங்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கலாம். ஆனால் யாழில் அதுதான் நிலைமை. அவர்கள் புலிகளுக்கு மாற்று இயக்கமாக இருந்தார்கள். அவ்வாறு சிந்திப்பதுதான எங்களுடைய அப்பேதைய ‘முற்போக்குத் தனம்” ஆகவும் இருந்தது.

நாயன்மார் கட்டுச் சந்தியில் டக்ளஸ் சென்ற வாகனத்தின் மீது கிட்டுக்குழுவினரின் தாக்குதல் நிகழ்கிறது. டக்ளஸ் குழு அத் தாக்குதலிற்குப் பதில் தாக்குதல் செய்து, பின்னர் பிரமுகர்களின் தலையீட்டால் சமரசம் காணப்பட்ட வேளையில் இறந்த புலிகளின் சடலத்தை “மரியாதையுடன்” ஒபப்டைத்ததார்கள். அதற்கு முன்பாக அல்லது பின்னர் யாழ். பாதுகாப்பு அரனில் புலிகளால் முக்கிய ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்படும் சம்பவம் நிகழ்நதது.

புலிகளின் அராஜகச் செயற்பாடுகளின் போது அல்லது ஏனைய இயக்கங்களின் அராஜகச் செயற்பாடுகளின் போது அதனை எதிர்த்தவர்களுக்கு வெளிப்படையான  ஆதரவினை டக்ளஸ் வழங்கினார். அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுப் புகலிடமாக அவர் விளங்கினார்.

தாஸ் குழுவினரின் படுகொலை அதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைக் கேட்கச் சென்ற உறவினர்கள் – நண்பர்கள் – ஆதரவாளர்கள் மீதான தாக்குதலின் போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு டக்ளஸ் பக்கபலமாக இருந்தார். சபாரெட்ணம் கைது செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற விபரத்தையும் புலிகளிடம் டக்ளஸே கேட்டுக் கூறியிருந்தார் என்றே அறிகிறேன்.

இதெல்லாம் டக்ளசின் இன்றைய அரசியலை நியாயப்படுத்துவதாக தவறாக அர்த்தப்படுத்திவிடக் கூடாது. 

ஈ.பி.ஆர்.எல்.எப். அன்பர்களுடன் பேசினோம். ஆனால் அங்கும் நிலைமைகள் கவலைக்கிடமானதே எனக்கூறப்பட்டது. உட்கட்சிப் பேராட்டம், ஆயுத பலமற்ற அராஜவாதிகளின் ஆதிக்கம் வலுவடைகிறது என்று சொலல்ப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப். அதிகாரக்குழு பல்லுப்பிடுங்கப்பட்ட பாம்பு என்றார்கள்.

பின்னால் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தலிருந்து டக்ளஸின் வெளியேற்றம் நிகழ்ந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை சார்ந்து இயங்கிய நிவாரணக்குழு மற்றும் கலாசாரக்குழு கவனத்தை ஈர்;ப்பதாக அமைந்தது. கலாசாரக்குழு மக்கள் மத்தியிலான கலாசாரப் பணிகளை – அரசியலை முதன்மைப்படுத்தியவாறு மேற்கொண்டிருந்தது. யாழில் பலபகுதிகளினுடாக நடாத்தப்பட்ட பெரும் கலாசார பேரணி பெரும் மக்கள் ஆதரவுத் தளத்தினைப் பெற்றிருந்தது. இயக்கங்களின் அராஜகச் செயற்பாடுகளைப் பற்றிப் பேசக்கூடிய ஆற்றலும் சிறியளவில் கிடைத்தது.

ஆனால் அதனையும் விடவில்லை. மாறாக ஒரு ‘மாற்று அரசியல் சக்தியாக” வளரும் எதிர்பார்ப்பும் – செயற்பாடும் குழுவினரிடம் இருக்கவில்லை.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டம் ஒரு பெரும் எதிர்பர்ப்பினை ஏற்படுத்துவதாக ஆரம்பித்தது. புலிகளின் அராஜக – பாசிசச் செயல்களின் பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்கான உரிமைகளை அதனூடாக வென்றெடுக்கலாமா என்ற யோசிக்க முற்பட்டோம். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் பாரிய ஆதரவினை வழங்கி நின்றது பலமும் பலவீனமுமாக அமைந்து. எல்லா ‘வல்லமைகளையும்” இழந்து விட்ட புளொட்டும் அதற்காதரவாக நின்றது. ஆனால் புலிகள் – அப்போது கிட்டு எல்லாவற்றையும் அழித்து துடைத்து முடித்தார்.

பின்னர் பல்லாண்டுகளாக புலிகளின் ஏக தலைமைத்துவத்தின் கீழ் நாமிருந்தோம்.

அன்றிலிருந்து இன்று வரை நாமறிந்த விடயம் அரசியல் கதைப்பதற்கான ஒரு சுதந்திரமான களம், மக்கள் உரிமைகளுக்காகப் போரடுவதற்கான நிலைமை இருக்கவில்லை என்பதுதான்.

புலிகள் ஈழத்தினைப் பெறுவதற்காகப் போராடினார்கள் என்பதற்காக ஏனைய இயக்கங்களைப் பாசிச வழியில் அழித்தனை – மாற்றுக் கருத்துடையோரை அழித்ததனை, ஏனைய மக்கள் விரோத மற்றும் அழிவு வேலைகளை ஏன் சகித்துக் கொண்டிருந்தோம்.

அந்த சக்தியற்ற நிலைமைதான் அல்லது புலிகளின் எல்லாச் செயற்பாடுகளுக்கும் விமர்சனமற்ற வகையில் வழங்கப்பட்ட ஆதரவுதான் பின்னாளில் புலிகள் பெரும் பலவீனமுறுவதற்குக் காரணமாக இருந்த பல அழிவுகைள செய்ய இடம் தந்தது. இறுதியாக பெரும் உட்படுகொலைகளையும் மக்கள் விரோதச் செயல்களையும் புரியும் நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றது.

தமிழர்களின் சனநாயக விடுதலைக்காகப் பேராடிக் கொண்டு சனநாயகத்தன்மையற்ற வகையில் கொடுர சித்திரவதை முகாம்களை புலிகள்தான் நடாத்தினார்கள். பெருமளவான தமிழர்களைக் கொன்றிருக்கிறார்கள். இறுதியில் நியாயமற்ற, கொடுரமான உட்படுகொலைகளையும் புலிகள் செய்திருக்கிறார்கள். இந்த பெரும் தவறுகள் நடந்தமைக்கான காரணத்தினை நாம் அறிய வேண்டும். அரசியல் உரிமைகளை புலிகளிடம் அடகு வைத்து விட்டு இருந்தமைதான் காரணம்.

இன்று அரசுதான் மீள்குடியேற்றத்தினையும் அபிவிருத்தினையும் செய்ய வேண்டுமென்பதற்காக, அரசுதான் வலுவுடைய சக்தியாக இருக்கிறது என்பதற்காக அதன் ஒடுக்குமுறைகளைச் சகித்துக் கொள்ளுங்கள் என வலியுறுத்தப்படுவதில் என்ன சமூக நியாயாம் இருக்கிறது. அபிவிருத்திக்காக அநியாயங்களை ஏற்கவேண்டும் எனக்கூறுவதில் என்ன நியாhயம் இருக்கிறது.

மாறாக எல்லா உரிமைகளையும் மக்கள் போராடித்ததான் பெறவேண்டியிருக்கிறது. சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களிடமிருந்து மட்டுமன்றி தமிழ் தேசிய போராட்டச் சக்திகளிடமிருந்தும் உரிமைகள் மறுக்கப்படுகிற போது போராடித்தான் அவற்றைப் பெறவேண்டியிருக்கிறது. முற்போகக்குச் சக்திகள் மக்கள் விரோதச் செயற்பாடுகளில் அல்லது தவறுகளில் ஈடுபடும் போதெல்லாம் நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது,  போராவேண்டியிருக்கிறது.

முதலில் அதற்கான அரசியல் உரையாடலில் ஈடுபடுவோம். அதற்கான அரசியல் உரிமையை நாம் பெறுவோம்.

நிலைமைகள் தூய்மையற்றவை ; புனிதமற்றவை. ஏனெனில் நாம் எதிர்கொள்ளும் சமூக நிகழ்வுகள் அத்கயைன !

41 thoughts on “தமிழ்த் தேசிய முற்போக்கு வாதம்(3) – உரையாடலின் தேவை : விஜய்”

 1. இங்கு புலிகளை அரக்கர்களாக காட்டும் புனித பணி ஒன்று நிகழ்ந்தேறுகிறது… இது இராமாயணம் தீபாவளி சூரன் வதம் என்ற பார்பனிய சிந்தனை ஊட்டத்துக்கு ஒப்பானது. உங்கள்பணி தொடர வாழ்த்துக்கள் எம் இனம் எதையும் உள்வாங்கிக்கொள்ளும் (இராமாயணம் போன்ற பெரிய புளுகு மூட்டைகளையே நம்பும்போது இதெல்லாம் யுயுயுபி…) ஆற்றல் கொண்டது யாரும் கவலை கொள்ளத்தேவையில்லை.

  1. நீங்கள் சொல்வதெல்லாம் பொய்யென்னும் சிறுபிள்ளைத்தனம் இல்லை என்வாதம்…. உங்களுடைய சிந்தனைகளும் ஆற்றுப் படுத்தைகளும் எம் இனத்தை ஓர் மகோன்னத நிலைக்கு அழைத்துச்செல்லும் எனும் நினைப்புடன் ஓர் இளையவன்.

  2. போராளீத் தலைவனாய் இருந்த பிரபாகரன் அரசியல்வாதி வேசத்துக்குப் பொருந்திப் போகவில்லை அதிலும் தன் வழியில்தான் அனைத்தும் நடக்க வேண்டுமென்ற அவரது சிந்தனைப் போக்கு அவரை செவிடராகவே வைத்திருந்தது.அவரது உலகம் குருடானது இருட்டில் வாழ்ந்த மனிதனால் வெளீச்சத்தில் வாழமுடியாது.காலம் காலமாய் இன்வெறீ செய்த கொடுமைகள் அவரது குடும்பத்தில் நிகழ்ந்தது அவரும் சிகரெட்டால் சுடப்பட்டு,முகத்தில் எச்சில் உமிழப்பட்டு அவரை முழங்காலில் இருக்கப்பண்ணீ கடைசி எல்லைவரை அவமானப்படுத்தப்பட்டு,சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

   1. 🙂 ” அவரும் சிகரெட்டால் சுடப்பட்டு, முகத்தில் எச்சில் உமிழப்பட்டு, அவெரை முழங்காலில் இருக்கப்பண்ணி, கடைசி எல்லைவரை அவமானப்படுத்தப்பட்டு , சித்திரவதை செய்யப்பட்டு ( பாவம், கோடாலியால் தலையில் கொத்தப்பட்டு, என்ற வசனத்தை மறந்து போனார் போல.. 🙂 அடுத்த தடவை எழுதும் போது , மனப் பாடம் பண்ணினதை சரியாகப் பாடமாக்கி எழுதவும் ) கொல்லப்பட்டார். இவை எல்லாவற்றையூம் நேரடியாகப்பார்த்த டமில்மாறன் அவெர்கள், அடுத்த வருடம் சர்வதேசநீதிமன்றில்நடக்கும் போர்க்குற்ற வழக்கில், மகிந்தவிற்கு எதிராக சாட்சிசொல்ல வருவார் எண்டு நாம் நம்புவோமாக. டமில்மாறன் ,விஜயபாகு படை அணியில் எந்த பிரிகேட்டில் நீர் இருந்தனீர். அவைதானாமே கேணல் பானு காட்டிக் கொடுக்க , சுத்தி வளைச்சு அடிச்சு பிடிச்சவையாம்……!

    1. கோடாலியால் அவர் தன்னைத் தானே கொத்திக் கொண்டார்.புலிகளின் கட்டுப்பாடுச் சட்டப்படி அதுவும்
     தற்கொலைத் தாக்குதலே! தமிழ் மண்ணுக்கு தனது உயிரை ஈகம் செய்தார்.காரணம் ஓடிய ஓட்டத்தில் கழுத்தில் கட்டியிருந்த சயினட் குப்பி எங்கோவோ அறுந்து விழுந்து விட்டது.
     நீங்கள் சொல்லுங்கோ வன்னியன் நாங்கள் கேட்டுக்
     கொண்டிருக்கிறோம்.

     1. காலம் எல்லா வெற்றிடங்களையும் நிரப்பியே தீரும்.நான் என்ன , வரலாறு சொல்லும்.. யார் வீரன் , யார் கோழை.. யார் தலைவன் .. யார் துரோகி , எவென் உண்மையானவன், எவென் பொய்யன் எண்டு. அப்போது ( சிங்களவனால் அழிக்கப்படாதுநீங்கள் உயிரோடு இருந்த்தால்) அறிந்து கொள்வீர்கள்: தப்பி ஓடநினைப்பவன் எல்லாரையும் விட முதலே ஓடி இருப்பான். தலைவர் ஓட வேணும் எண்டுநினைத்து இருந்தால், கிளினொச்சி விழும் என்று தெரிந்தவுடனேயே ஓடி இருப்பார்.

    2. கேணல் பானு காட்டிக் கொடுத்தாரா? அவரும் கையைத் தூக்கிக் கொண்டு சரணடைந்தார்.வீரப்பரம்பரை தனக்காக ஆயிரம்,ஆயிரம் சிறூவர்கள பலிகொடுத்து தன்னைக் காப்பாற்றீக் கொள்ள சரணடைந்தது.பல அப்பாவித் தமிழர்கள துரோகியாக்கி தூக்கிலிட்ட கூட்டம் மறூபடியும் தன்னோடு தமிழரை தூக்குக் கயிறூக்கு அழைத்துச் சென்றது.நம்க்கு படம் காட்டி தமிழனை முடமாக்கிற்றூ.

    3. அது எப்படி காலத்திற்கு ஒரு துரோகி பெயரை உங்களால் உச்சரிக்க முடிகிறது . பானுவை துரோகியென்பது ஊகம்தானே அல்லது தாங்களும் விஜயபாகு படையணியில் தொலைதொடர்பில் இருந்தீர்களோ? இறந்த தலைவனுக்கு வீர வணக்கம் செலுத்தக்கூட திராணி கிடையாது.

  3. புலிகள் ஆதிகாலத்து மனிதரைப் போன்றோர் அவர்களீல் அனேகர் அரக்கர்.துப்பாக்கி ஏந்தி தெருவழி நடந்து போரை தமது மக்களூக்கு எதிராக நடாத்தியவர்கள்.உலகிற்கு சதி செய்து கொல்வது எப்படி எனும் பாடம் நடத்தியோர்.நம்பிக்கைத் துரோகிகள்.இதனால் அவர்கள் அறம் தவறீனர் இதனால் அறமற்ற வழியில் அரனை அடைந்தனர்.இன்றூ போர்க்கு நாள வா என்ற இராமர் எங்கே பேச்சு வார்த்தைக்கு நம்பிச் சென்ற மென்டிஸ கொன்ற புலிகள் எங் கே? தன்னிடம் சரணடைந்த வீபூசடண மன்னராக்கிய இராமர் எங் கே சபாரட்ணத்தை போட்டுத் தள்ளீய புலிகள் எங் கே?குகனை நண்பனாக்கிய இராமரின் நிலையிலா பாலகுமாரன் இருந்தார்?ஜோகி இருந்தார்?சொந்த மச்சானையே போட்டவர்தானே தலைவர்?அவரோ ராமர்?நீங்கள் அறீயாததோ?

   1. புலிகள் என்ன வானத்தில் இருந்தா குதித்தார்கள், கடலிற்குள் இருந்தா வந்தார்கள். அவெர்களும் ஈழத்தில் எம் தமிழ் இனத்தில் இருந்துதான் வந்தார்கள்: அவெர்களில் பிரதிபலித்தது எல்லாம் எம் இனத்தின் ஆசைகள், கனவுகள்,நிறம் , மணம் ,குணங்களே. ஏன் சும்மா அரைச்ச மாவையே அரைக்கிறியள். விடுதலை இயக்கங்களிற்குள் பிளவை உண்டுபண்ணினதே இந்திய றோ தான். டெலோ வை வச்சு புலிகளை அழிக்கநினைச்சவை . பாவம் , புலிகளிடம் மாட்டுப்பட்டுப் போட்டினம். புலிகள் முந்திவிடாட்டி,புலிகளை அழிச்சிருப்பினம்.இதுக்குதான் சுயமாய் சிந்திக்கிற புத்தி வேணும் என்
    கிறது. நீங்கள் எவ்வளவத்தான் எழுதிக் கிளிச்சாலும், இல்லாட்டி உமது தலைவர் கருணாநிதி போல் ஈழத்தமிழர் எங்களுக்கு ஒரு துண்டுக் காணியும், ஒரு கலர் ரீவி தந்தாலும் ,நாங்கள் ஈழத் தமிழர் ஒரு போதும் உங்கள் பின்னால் வர மாட்டோம். ஈழத் தமிழர்கள் அன்றும் , இன்றும் , என்றும் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் பக்கவும் , புலிகளின் பக்கவுமே.

    1. // டொலோ வைச்சு புலிகளை அழிக்க நினைச்சவை
     புலிகள் முந்தி விடாட்டி புலிகளை அழிச்சிருப்பினம்//
     இப்படியான கதைகள் எல்லாம் ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்த கதைகளா? சொல்லுங்கள் வன்னியான்.
     சுயமாக சிந்திக்கிற புத்தி வேணும் என்று சொல்லுகிறீர்களே! நீங்கள் யாரால் அழிக்கப் பட்டீர்கள்?
     உங்களுக்கு இதற்கு விடை தெரியாது.நான் சொல்லுகிறேன். மற்றவர்களையும் அழித்து நீங்களும்
     அழிந்து கொண்டீர்கள்.தயவு செய்து எழுத்து சுகந்திரத்தை பாவித்து இங்கு எழுதவராதீர்கள்.
     மக்கள் குடிக்கிற “குடிநீர்” ரில் நஞ்சு கலக்கக் கூடியவர்கள் தாங்கள்.

     1. சந்திரன் – றாஜா…… நீங்கள் சந்திரனுக்கு ராசாவாக இருக்கலாம், ஆனால் தமிழ் மக்களுக்கு உங்களைப் போன்றவர் வெறும் கூஜாவே. நீர் என்றவுடந்தான் எனக்கும் ஒரு ஜாபகம் வருகிறது..நீருக்கு வடிவமே கிடையாது, அது எந்தப்பாத்திரத்தில் கொள்கிறதோ, அந்தப்பாத்திரத்தின் வடிவமைப்பையே கொள்கிறது.தமிழ்மக்கள் , தாய் மண்ணை, தமிழ் ஈழத்தைநேசித்தார்கள். அதனால்தான் ஈழத்துக்காகக் கடைசிவரைப் போராடிய புலிகளோடு அந்தநீரைப் போல் மாறி ஜ்ய்க்கியமானார்கள்.ஒரு வேளை டெலோவோ , புளட்டோ புலிகளை விட சிறந்த முறையில் போராடி இருந்த்தால்,நிச்சியம்நாம் தமிழர் அவெர்கள் பின்னால்தான் போய் இருப்போம். ஆனால் ஏன் போராடவில்லை..தன்னம்பிக்கை, விடாமுயற்சி,கொள்கை தவறாமை , ஓர்மம், தூரனோக்கு ..இப்படி எத்தனையோ, எத்தனை வித்தியாசம் உங்களுக்கும் , புலிகளுக்கும்.இருட்டைக் கண்டு பயம் கொள்பவர்கள் தான் நீங்கள். தோற்றுவிட்டோம் என்பதற்க்காக,நாம் தமிழர் அடிமையாய் வாழ என்றுமே தயாராய் இல்லை…………………….

    2. புலிகள் மட்டுமா போராளீகள்? டெலொ ஆமியை அடித்து நொருக்கி போராட்ட களத்தில் புயலாக மாறீயது பொறூக்க முடியாமல் புலிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினரே அன்றீ இந்த இந்திய இராணூவக்கதை முருக்கங்கைக்காய் குழம்பு.புலிகள் பாசிச அமைப்பாகவே வளர்ந்தார்கள்.

     1. மிஸ்டர் டமில்மாறன், ஆமியை அடிச்சு ,நொருக்கி( பிரிச்சு, மேஞ்ச-வடிவேல் காமெடியை கூடுதலாகச் சேர்க்கவா..?) போராட்டக் களத்தில் புயலாக மாறிய டெலோவால்…..ஏன் புலிகளைக் களத்தில் , அடிச்சு,நொருக்கி , பிரிச்சு மேய முடியாமல் போனது…ஓ..சகோதர பாசமோ…புலிகளையேநேருக்கு நேர் எதிர்க்க முடியாதவை , சிங்கள ஆர்மியிடமிருந்து , தமிழரை எப்படி காப்பாற்றி இருப்பினம்..? இதத்தான் சொல்லுறது , கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவை, வானம் ஏற்றி வைகுண்டம் கூட்டி கொண்டு போறோம் எண்டு சொல்லிச்சினமாம்.

    3. மற்ற போராளி அமைப்புகள் எல்லாம் எங்கிருந்து வந்தன அந்த அமைப்புகள் எத்தனை சதவீதமான மக்களை பிரதிநிதித்துவபடுத்தியிருந்தனர். மற்ற அரசியல் அமைப்புகள் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் யாரால் கொல்லப்பட்டார்கள். அப்படியென்றால் தமிழ்மக்களில் பெரும்பன்மையோர் துரோகிகள். ஒரு சிறிய ஒப்பீடு கருணாவா- டக்ளசா போராட்டத்திற்கு அதிக சேதம் விளைவித்தவர்கள். ஏன் 13 தடவை டக்ளசை கொல்ல முயன்றவர்கள் கருணா மீது அந்த காட்டம் காட்டவில்லை. யார் துரோகிகள் என்டபதை விட யார் மக்கள் விரோதிகள் என்பது விரைவில் தெரிய வரும்.

  4. புலிகளின் உள்ளூர், வெளியூர்த் தலைவர்களின் புளுகு மூட்டைகளையும் நம்பித் தானே நமது இனம் இப்போது நட்டாற்றில் தவிக்கிறது.
   பார்ப்பனியத்தைப் பற்றிப் பேசிப் புலித் தலைமயின் பாவங்களை மூடிமறைக்க இயலாது.
   பொய்களையும் தவறுகளையும் சுட்டிக் காட்ட முடிந்தால் செய்யுங்கள். அது பயனுள்ள பணி.

 2. //இந்தக் காலத்தில் விசுவானந்த தேவாவினைச் சந்திக்கிறோம். அவர் இயக்கத்தில் முரண்பாடுகள் வலுவடைந்து பிழவும் ஏற்பட்ட நிலையில் அதனை சனநாயக வழியில் தீர்வு கண்டதாக அறிந்தோம். அக்காலத்தில் அது முக்கிய செய்தி. அவர் தொடர்ந்தும் விடுதலைப் போரட்டத்தில் முனைப்புடன் ஈடுபடும் வழிவகைகள் பற்றி ஆரோக்கியமான கருத்துக்களைக் கொண்டிருந்தார். விசு பற்றி பின்னூட்டத்தில் குறிப்பிட்ட விடயங்களை நான் அறிந்திருக்கவில்லை. விடயம் தெரிந்தவர்கள் சரியான விடயங்களை பதிவு செய்வதினூடாக அதனை அறிந்து கொள்ள முடியும்// அக்காலத்தில் விசுவினுடைய செய்தி முக்கிய செய்தி என்று குறிப்பிடும் நீங்கள் கட்டுரையைத் தொடருமுன்பே அவைபற்றித் தெட்டதெளிவாகத்  தெரிந்து கொண்டிருக்க வேண்டும். பின்னூட்டவிடயங்களை நீங்கள்அறிந்திருக்கவில்லை என்று பாதியில் கை விரிப்பது என்பது தப்பித்துக்கொள்ளுதலுகான ஒரு ஒழுங்கு முறை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.  அரைத்த மாவையே திருப்பி அரைப்பதற்கும்,துவைத்த துணியையே திருப்பித் துவைப்பதற்குமாக நீங்கள் வார்த்தைகளைக் கோர்க்கின்றீகள். எல்லாரும் ஏறி இளைத்த குதிரையில் நீங்களும் ஏறி இறங்குங்கள் தப்பில்லை.ஆனால் வாதப் பிரதிவாதங்களுகப்பாற்பட்டுஎவராலும்  தமிழ்மானிடத்திற்கான அடிப்படைப் பிரச்சனை கணக்குப் பண்ணாமலேயே இன்னமும் கிடப்பில் கிடக்கிறது.

 3. புலி ரசிகர்களாகவே மக்கள் இருந்ததால் எம்.ஜி.ஆர் படத்தைப் பார்த்த மாதிரி ஒவ்வொரு தாக்குதல்களூக்கும் கை தட்டப்பட்டு சிந்திப்போர் செயலிழக்கப்பட்டனர்.இதனால் பக்கவாத்தியங்களாகவே புரட்சிவாதிகளூம் மாறீப் போயினர்.ஒரு பாலசிங்கத்தை விட்டால் புலிகளீல் அரசியல் தெரிந்தோரில்லை தமிழ்ச் செல்வன் ஒரு தற்செயலான விபத்து இது புலிகள பல விபத்தில் சிக்க வைத்தது.சண்டயிட மட்டுமே தெரிந்த புலிகள் சண்டையிட்டுக் கொண்டே இருந்திருந்தால் இன்றூம் எங்காவது இருந்திருக்கலாம் ஆனால் சமாதான வேடம் போட வெளீக்கிட்டதால் அழிந்தார்கள்.கிட்டுக்காக செத்த குட்டி சிறீ திறந்த மனதுள்ளவன், தலைவருக்காக செத்த தீபன் மதி சிறந்தவன் ஆனால் ஒரு ஒத்த ரோட்டுக்காரரை நம்பிப் வண்டியில் ஏறீய மக்களே பரிதாபமாய் பாதிப் பயணத்தில் பலியாகிப் போயினர்.

  1. பிட்போகு சிந்தனைல் இருந்து வெலிய வரூங்கள்.னடைமுறை பற்றி பெசுங்கள். 

 4. முன்பு ஒருவர்  தனது அனுபவத்தை மூலமாக வைத்து கதை எழுதினார். இவர் தான் கேட்டதை வைத்து கதை விடுகிறாரா? என்னே முயற்சி என்னே முயற்சி, ஆனால் ஒன்றுமே ஒத்து வரவில்லை. மற்றவர்களின் வியாதிதான். புலிகளின் சில தலைமைகள் விட்ட பிழைகளை கண்டிக்கிறோம் என்றுசொல்லி மொத்த விடுதலைப் போராளிகளையே நிந்திக்கின்றீர்கள்.

  1. விடுதலைப் புலிப் போராளிகள் மட்டுமல்ல எந்த இயக்கப் போராளியுமே நிந்திக்கப்படக் கூடாதவர்.
   எல்லா இயக்கத் தலைமைகளினதும் தவறுகள் சிலவல்ல பல. அவை அடிப்படையான தவறுகள்.
   அவற்றை அடையாளம் காண்பதானால் எல்லா விதமான குற்றச்சாட்டுக்கள் பற்றியும் பேசித்தான் ஆக வேண்டும்.

   கீழ் மட்டப் போராளிகள் மக்களிடம்நடந்து கொண்ட விதங்களில் தவறுகள் இருந்தன. அவை பற்றிப் பேசாமலிருக்க இயலாது. அவற்றுக்கான காரணங்கள் விசாரித்தறியப்பட வேண்டும். அவற்றை விமர்சிப்பது அவர்களை நிராகரிப்பதாகாது.
   நாம் கேட்க விருப்பமில்லாதவற்றை ஏதாவது சாட்டில் நிராகரிப்பதால் நன்மை இல்லை.

   குற்றச் சாட்டுக்கள் குறிப்பானவையாய் இருப்பதும் அவற்றுக்குக் குறிப்பான பதில்கள் வழங்கப் படுவதுமே ஆரோக்கியமான விமர்சன முறையாகும்.

 5. ரூபன், பிடுங்கி நீங்கள் இருவரும் கோக்கு மாக்காக சிந்திக்க முற் படுகிறீர்கள் கதை சொல்கிறீர்கள். உண்மையில் அஜித்இன் கட்டுரை அக்காலத்தில் நிகழ்ந்த (1984 , 1985 , 1986 ) மிகக் கொடிய அல்லது சமூக அபாயம் நிறைந்த அல்லது அடக்கு முறைமைகளை எதிர்க்கும் மனவலிமை இழந்த அல்லது சமூகம் பற்றிய பிரங்சைகளற்ற அல்லது தாமுண்டு தம் வாழ்வுண்டு என்று வாழும் நடைப்பிணங்களாக தமிழ் சமுகம் வாழ, சகல ஆயுதம் தாங்கிய அமைப்புகளாலும் நிர்ப்பந்திக்கப்பட்டது. இறுதியில் புலிகள் இதனை எப்படி மொத்த குத்தகைக்கு பெற்று கொண்டனர் என்பதை வடிவாகச் சொல்லி இருக்கின்றார். அக்காலத்தில் நடந்தவற்றை அஜித் சரியாக சொல்லியிருக்கின்றார் இருப்பினும் புலிகளை பெருமெடுப்பில் இங்கு சித்தரித்து இருப்பது நெருடலாக இருப்பினும் தமிழ் மக்களை விடுதலையின் பேரால் இருண்ட யுகத்தினில் இழுத்துச் செல்வதில் புலிகளின் பங்கு பெரியதே. 1980 களின் நடுக்கூற்றில் நிகழ்ந்த இந்த சதிராட்டத்தை, கட்டு மீறிய நிலைமையை தமிழ் சமூகம் கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியை சந்தித்தித்து இருந்ததே இன்றைய அவலங்களுக்கு காரணம். விசுவானந்த தேவர் பற்றி நான் அறிந்து இருக்கவில்லை இருப்பினும் NLFTE இன் ஆரம்ப காலங்கள் குறித்து பிரச்சாரங்கள் மூலமாகவே அறிந்து இருக்கிறேன்

 6. விவாதங்கள் தொடர்பாக இரண்டு விடயங்கள்.

  முதலாவது விடயம்.

  பொதுக் கலந்துரையாடல்களை நடாத்தி, விவாதங்களில் ஈடுபட்டு, முழுமையான தகவல்களைப் பெற்று எந்தப்பிழைகளும் – தவறுகளும் இல்லாமல் கருத்துக்களை வெளியிடும் ஒரு நிலைமை இன்னமும் வாய்க்கவில்லை. ! ஒரு பத்திரிகையை வெளியிடும் சுதந்திரம் கூட இன்னம் கிடைக்கவில்லை.

  வழமையான ஒன்று கூடல்களுக்கான – கருத்துப் பரிமாறல்களுக்கான சனநாயகச் சூழல் இன்னமும் இலங்கையில் நிலவவில்லை. ‘இனியொரு” வே அதற்கான வாய்ப்பினை வழங்கிவருகிறது. சுதந்திரமான கருத்து வெளியீட்டிற்கு ‘இனியொரு” வழங்கியிருக்கிற ஆதரவு தொடர்ந்தும் சுதந்திரமான கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்ள இடம் தரும் என்றே கருதுகின்றேன்.
  இதனால் எனது கருத்துக்களையும் இனியொருவில் பதிவு செய்து – தொடர்ந்து கலந்துஇயாடல்களில் ஈடுபடும் வழிமுறையினூடாக முன்னேறிச் செல்லலாம் என்கிற நினைப்புடன் பதிவுகளை மேற்கொள்ள முனைந்தேன்.

  எமது தனிப்பட்ட அரசியல் தேடலில் விசுவானந்த தேவா முக்கியமான கருத்துப் பகிர்வுகளை மேற்கொண்டவர் என்ற வகையில் அவரைப்பற்றியும் குறிப்பிட விரும்பினேன். மேலதிகமாக அவரது அரசியல் செயற்பாடுகள் பற்றி – அவரது அரசியல் சிந்தனைகள் பற்றி அறிந்து கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கிறேன் என்பதே உண்மை. எனது கட்டுரையில் அவரது அரசியல் பற்றி விரிவான ஒரு விவாதத்தினை நான் முன்னெடுக்கவில்லை என்பதனால் இக்குறிப்பு போதும் என்றே நினைத்தேன்.

  நிச்சயமாக விசு பற்றி மட்டுமல்ல அக்காலத்தில் வட, கிழக்கில் பணியாற்றிய மாக்சிய அரசியல் சிந்தனை கொண்டவர்களின் கருத்துக்களையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இப்போதுதான் அந்தவகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிற நிலையில் அவர்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் இனித்தான் கிடைக்கும் எனக்கருதுகின்றேன்.
  முக்கியமாக “பாசறை” பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது குறித்து உரியவர்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள் என்று கருதியே நான் அதிகம் குறிப்பிடவில்லை. அதுவே பொருத்தமாக இருக்கும்.

  மாற்று அரசியலுக்கான தேடல் ஒரு பெரும் கூட்டு முயற்சியாக அமைய வேண்டும் என்ற கருத்துடன் இருக்கும் அதே வேளை அதனைப் பலரிடம் கூறியும் வந்திருக்கிறேன்.

  இவ்விடயம் தொடர்பாக ராகவன் அவர்களின் கருத்துக்கள் நமக்கு வழிகாட்டல்களை வழங்குவனவாக அமைகின்றன.

  கருத்துக்களால் மோதுங்கள் வழி பிறக்கும். ஆனால் மோதலின் போது அடம் பிடித்தலி வக்கிரம் கொள்ளலி உதாசீனம் கொள்ளலி பகைமை உணர்வை வெளிப்படுத்தல் என்பவற்றை கை விடுவோம;

  ராகவன் அவர்கள் மாக்சிச – லெனினிசம் பற்றிக் கூறியிருப்பவையும் முக்கியமானவை

  மாக்சிச லெனினிசம் பேசிய பலர் சிங்கள பெருந்தேசிய வாதத்திர்த்க்கு சோரம் போனதுண்டு. ஆனால் மாக்சிச லெனினிச கருத்துக்களை உள்வாங்கி சமூக விடுதலையும் இன விடுதலையும் பெற்று கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் வேலைத் திட்டங்களில் தீவிரமாக இறங்கி பல்வேறு அக புற காரணிகளால் முனை மழுங்கி போனவர்களும் உண்டு.

  இலங்கையில் இடதுசாரிகள் இனவாதி ரீதியாகப் பிளவுண்டு கிடக்கிறார்கள்: சிங்கள இடதுசாரி இயக்கங்கள் பல சிங்கள பெருந்தேசிய அடக்குமுறை – மக்கள் விரோத அரசை ஆதரித்து நிற்கிறார்கள். தமிழ் இடதுசாரி இயக்கம் தமிழ் பிற்போக்கு வாதம் குறித்து விமர்சனங்களை முன்வைக்காமல் இருந்து வந்துள்ளார்கள்.

  மாக்சிய – லெனினிய வாதிகள் கூறியது போல சிங்கள – தமிழ் இனவாத முரண்பாடுகள் முடிவுக்கு வராமல் தொடர்ந்தும் தீவிரப்பட்டுக் கொண்டு செல்கிறது. இலங்கையில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஆரம்ப மூலங்களை காணமுடியாமல் இருக்கிறோம்.

  இரண்டாவது விடயம்.

  மக்களின் அவல வாழ்வு பற்றி நிறையவே எழுதவேண்டும். இலங்கையில் பத்திரிகைகள் தொடர்ந்தும் செய்திகளை வெளியட்டு வருகின்றன. பலர் அதனைப்பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். பலர் எழுதப்பேவாதாகக் கூறிவருகிறார்கள்.
  வட, கிழக்கில் மீள் குடியேற்றம், புணர்வாழ்வு, உளநலமீட்பு, அபிவிருத்தி எனப் பல பணிகளை அரசு கையகப்படுத்தி அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுடன் இணைந்து புலி எதிர்ப்பாளர்கள் மற்றும் முன்னாள் புலிகளும் அவற்றில் பங்கு கொண்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாண முதலமைச்சர், கருணா, டக்ளஸ் போன்றோர் இருக்கிறார்கள். அரசுடன் புலம் பெயர் குழுவினரும் இணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
  தனிப்பட்ட ரீதியில் உறவினர், நண்பர்கள், அயலவர் என்ற ரீதியில் உதவிகளைப் பலரும் புரிந்து வருகிறார்கள்.
  புலிகளின் அழிவின் பின் எல்லாம் சுபமாக முடியும் என்ற வாதம் பொய்யானது என்பது தெளிவாக நிருபிக்கப்பட்டு வருகிறது. இன ஒடுக்குமுறை மேலும் மேலும் தீவிரமயப்படுத்தப்படுகிறது என்ற கருத்தே வலிமையடைந்து வருகிறது. இணக்க அரசியல் மூலம் அவற்றினை தணிக்கக் கூட முடியவில்லை. கிழக்கில் அரச ஆதரவாளர்கள் கவலையுற்று வெளிப்படையாகவே இது பற்றிப் பேசி வருகிறார்கள்.
  எதிர்ப்பு அரசியலில் த.தே.கூட்டமைப்பு முடிந்தவரை அதன் அரசியல் வரையறைக்குட்பட்டவரை செயலாற்றி வருகிறது. சிங்கள அரசியல் வாதிகள் குறிப்பாக ஆளும் கட்சி தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக வருவதற்கு பெரும் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. ஐ.தே.க. வும் தனது அரசியலை விரிவாக்க முற்படுகிறது. ஜே.வி.பி. முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இணக்க அரசியல் பேசுகிற அரச ஆதரவு தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். தனிப்பட்ட நபர்களும் அமைப்புக்களும் பணியாற்றி வருகின்றன.
  இனப்பிரச்சின உட்பட சமூகப் பிரச்சினைகள் யாவும் மீள எழுகிற நிலையில், தென்னிலங்கையில் அபிவிருத்தி சனநாயகம் தொடர்பான அரசியல் எதிர்ப்பு இயக்கங்கள் (விரிவாக எழுதவில்லை) வலுவடையத் தொடங்கிய நிலையில் மக்கள் அரசியல் விடுதலைக்கான வழிமுறைகள் பற்றி ( இது எதுவாக இருக்கலாம் என்பது வேறு விடயம் ) விவாதிக்கும் ஒரு பொறுப்பு மிகு பணியில் ஈடுபடவேண்டியிருக்கிறது.
  தமிழ்ச் சமூகம் – எந்த வளர்சியுற்ற சமூகங்களும் – அரசியல் இன்றி இருக்கமுடியாது. தீவிரமான அரசியல் பணியாற்ற வேண்டிய காலத்தில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
  இப்போதுள்ள பிரச்சினையே ராகவன் குறிப்பிடுகிற இவ்விடயம் தொடர்பானதே.
  தமிழ் மக்களின் அரசியல் தொடர்ச்சியாக தவறான பக்கங்களின் ஊடாக நகரக் கூடாது என்பதே எல்லோரினதும் அவா.
  எனவே சுதந்திரமான கருத்துப் பரிமாற்றச் சூழலைப் பேணிக்கொண்டு, அதற்கான நியமங்களைப் – பெறுப்புக்களை சுயமாக கடைப்பிடித்துக் கொண்டு சுதந்திரமான விவாதங்களில் ஈடுபடுவோம்.
  புலிகள் போராட்டத்தில் முக்கியமான பங்காற்றலை வழங்கிருக்கிறார்கள் என்பதை தக்க ஆதாரங்களுடன் முன்வையுங்கள். புலிகளை விமர்சிக்கக் கூடாது என்றால் அதற்கான காரணங்களை முன்வையுங்கள். த.தே.கூ. விமர்சிக்கக் கூடாது என்றால் அதற்கான காரணங்களை முன்வையுங்கள். அல்லது அரசியல் பேசக்கூடாது என்றால் அதற்கான காரணங்களை முன்வையுங்கள்.
  நட்புடன்
  விஜய்

 7. விடுதலைபிபுலிகள் ரெலொ இயக்கப்போராளிகளை மனித நேயமே இன்றி வேட்டையாடிய வேளை அவா்களுக்கு குளிர்பானங்களை வழங்கி சிலா் ஊக்குவித்து மகிழ்ந்தனா் அதேவேளை யாருமே ஐயோ வேண்டாம் அவா்களும் நமது பிள்ளைகள்தான் கொல்லாதீா்கள் என்று கதறி அழவும் இல்லை அதை கண்டிக்கவும் இல்லை அந்த இடத்தில்தான் நாம் நமது பண்பையும் நாகரீகத்தையும் தொலைத்தோம் அதே வேளையில் புலிகளுக்கு முழு அனுமதியையும் வழங்கினோம் அதாவது நீங்கள் எதையும் செய்யலாம் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்பது.

  பளிவாங்கும் உணா்வு,வக்கிரபுத்தி,இறப்பவா்கள் நமது பிள்ளைகள் இல்லாதவரை யாரோ இறந்து போகட்டும் என்கின்ற உணா்வுகளே இன்று இந்த இனத்தை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது. தவறு செய்தவா்கள் அதன் பலனை அனுபவித்தே ஆகவேண்டும் என்பது நியதி அதை நாம் இப்போது அனுபவிக்கின்றோம் ஆனால் நமது சந்ததிக்கு என்ன பதிலை வைத்திருக்கின்றோம்???.

  மிக்க நன்றி விஐய்.

 8. “ஜெயபாலன்” (நீங்கள் வ.ச.ஐ ஜெஜபாலனா?) – “இத்தனை பெரிய தமிழ் மானிட அவலம் நடந்த பிறகு சர்வதேச நாடுகள் அனைத்தும் எம்மைக் கைவிட்ட பிறகு கிளிநொச்சியில் ஸ்ரீதரனும் கோப்பாயில் சுரேஷ்பிரேமச்சந்திரனும் இளைஞரைக் கூட்டி இராணுவத்திடம் கொடுக்கப் போகிறார்களா.? இதைத்தானே முன்பிருந்த வலியவர்களும்? செய்து எல்லாவற்றிற்கும் வாய்க்கரிசி போட்டுச் சென்றார்கள்.”

  ஜெயபாலன் நான் குறிப்பிடுவது எல்லாம் முடமாகிப் போயிருக்கும் மீதமுள்ள மக்களுக்கு நாம் வாய்கரிசிபோடாமல் பார்த்து கொள்வதைத்தான். இருப்பதை பாது காத்து கொள்ளல், மறுக்கப் பட்டதை எது என அறிந்து கொள்ளல், எவை எவை தமது உரிமைகள் என அறிந்து கொள்ளல், உரிமை மறுப்பை மனித உரிமை மீறல்களை எதிர் கொள்ளல் என்பன, இன்று வாகரை, வன்னி, மூதூர் மக்களுக்கு முதலில் தேவையானதே. புலிகளின் ஆட்சி வன்னியில் மேலோங்கி இருந்த காலத்தில் கூட வன்னியில் வாழ்ந்த பெரும்பாலான ஏழை விவசாயிகளுக்கு பல்வேறுபட்ட அடிபடைத்தேவைகள் குறித்த, தமது காணி இருப்பிட உரிமங்கள் குறித்த அறிவு கூட இருந்திருக்கவில்லை. புலிகளின் வால்பிடிகள், வலியோர், சில அரசாங்க அதிகாரிகள், ஏன் சில இடங்களில் புலிகளும் கூட, எவ்வாறு ஏய்த்து பிழைத்தார்கள் என்பதை நான் விலாவரியாகச் சொல்ல முடியும். புலிகளின் காலத்திலேயே அப்படி நடந்திருப்பின் தற்போது சொல்லவேண்டியதில்லை. இப்போது இப்பகுதிகளில் வசிப்போர் மிக வலுவிழந்தத மக்களே. இவர்களை வலிமையானவர்களாக மாற்ற வேண்டுமெனில் அவர்களை அணிதிரட்டி ஆற்றலும் ஆளுமையும் உள்ள மக்களாக உருவாக்கவேண்டும். அவர்களுக்கு மீண்டும் வாய்கரிசி போடாமல் நிலைமையை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஜெஜபாலனுக்கும் ராகவனுக்கும் இருக்க வேண்டும். செல்வநாயகத்தை ஓட விட்டு நாம் பறைமேளம் கொட்டினோம் செல்வா பின்னர் எல்லோருக்கும் பறை தட்டினார் உமா, ஸ்ரீ, நாபா என்று எல்லோருக்கும் மாறி மாறி பறை தட்டினோம் அவர்களும் நமக்கு பறை தட்டினார்கள் இறுதியில் பிரபாகரனுக்கு எல்லோரும் சேர்ந்து பறை தட்டினோம் (நானும் தான் மிக விருப்பத்துடன்) பின்னர் அவரும் அவரது பரிவாரங்களும் எங்கள் எல்லோருக்கும் சேர்த்து பறை தட்டி முள்ளிவாய்க்கால் வரை கூட்டிச்சென்றார்.
  இறுதியாக நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய விடயம் புலிகள் என்று ஒரு இனம் இல்லை மாற்று குழுக்கள் என்று ஒரு இனம் இல்லை எல்லோரும் நம்மவரே என்று சிந்திப்போம். நான் கொழும்பில் இருந்த சமயம் கிளிநொச்சி புலிகளிடம் வீழ முன்னர் எனது நண்பர் ஒருவரின் சிங்கள நண்பர் கூறிய விடயம் இப்பத்திக்கு பொருத்தம் இல்லாதுவிடினும் கூற விரும்புகிறேன். அவர் சொன்னார், புலிகள் தோற்று போவதை நான் விரும்பவில்லை புலிகளிடம் அரசியல் வியூகம் இல்லை என்பதை நான் அறிவேன் அவர்களிடம் ராணுவ வியுகமும் அற்று போவதை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது புலிகள் இப்போரில் வெல்லப் போவதில்லை அவர்கள் மகிந்தவின் ராணுவ அரசியல் வியூகத்தில் சிக்குண்டு விட்டார்கள் என்று. (அவர் புலிகள் தோற்று போவர் என்பதற்கு வேறு பல விடயங்களையும் ஆய்வு முறையில் சொன்னார்) . இருப்பினும் இறுதிவரை எங்களின் மனங்களில் குடிகொண்டிருந்த ஏதொ ஒரு நிலை அவர்கள் விடமாட்டார்கள் என்றே சொன்னது. 2009 ஏப்ரல் நான் லண்டன் இல் நிற்கும் போது நேரிலும் தொலைபேசியிலும் கதைக்கும் எனது நண்பர்களும் உறவினர்களும் என்ன புலிகளை சுற்றி வளைத்து விட்டார்களாம் எனக் கேட்டார்கள் நான் சொன்னேன் அது உண்மை ஆனால் புலிகளின் தலைமையும் அவர்களின் பெரிய அணியும் அதற்குள் மாட்டுப்பட சந்தர்ப்பம் இல்லை என்று எனது ராணுவ மூளையை கசக்கி பிழிந்து சொன்னேன். முத்தையன் கட்டு, ஒட்டு சுட்டான், மணலாறு காடுகளில் புலிகள் நிலை எடுத்து இருப்பார்கள் என்று சொன்னேன். (அக்காடுகளில் இலங்கை ஆழ ஊடுருவும் படை நிலை எடுத்து விட்டிருந்தது நான் இலங்கையில் இருக்கும் போதே அறிந்த விடயம்) மே 13 , 2009 டொரோண்டோவில் மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்ட மாபெரும் ஊர்வலத்தில் நானும் கலந்து கொண்டேன் (பிரமுகராக அல்ல) அங்கு என்னைச் சந்தித்த பலர் என்னை கேட்டார்கள் தலைவரை சுத்தி வளச்சிட்டாங்களாம் உண்மையோ? நான் சொன்னேன் கடற்கரையில் குந்தி கொண்டிருக்க அவர் என்ன முட்டாளோ எப்படியும் அவர் அந்த வளையத்திற்குள் இருக்க மாட்டார் அரசியல் துறையை சேர்ந்தோர் இருக்கக் கூடும் என்று. மே 19 எல்லாம் மெல்ல மெல்ல வெளிச்சமானது. ஐயகோ அப்போது தான் அந்த சிங்கள நண்பர் சொன்ன விடயம் உறைப்பாக நினைவில் வந்தது, ஒரு சிங்களவனிடம் இருந்த அரசியல் ராணுவ பட்டறிவு கூடவா போராடும் தமிழினத்தில் இருந்திருக்கவில்லை என்பதுதான் என்னை மேலும் வேதனையில் ஆழ்த்தியது.

  இலங்கையில் நடந்த கொடூரம் பற்றி நான் அறிந்த ஊகம் சிலர் அறிந்த ஊகம் அல்லது உண்மை அல்லது வதந்தி பற்றி கனடா டொராண்டோவில் நடந்த ஈழத் தமிழர் படுகொலை பற்றிய ஆர்பாட்ட ஊர்வலத்தில் (மே 13 , 2009) நான் பெற்ற அனுபவம் பலத்த சந்தேகம் ஒன்றை என்னில் கிளப்பியது அதனை இந்த வெளியில் நான் சொல்லியாகவேண்டும். (தயவு செய்து இதனை யாரும் தங்கள் சுத்து மாத்து விமர்சனங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்). விடயத்துக்கு வருகின்றேன் பேசாலையில் இலங்கை கடற்படையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன் தாய், பிள்ளைகள் இருவர் குருரமாக கொல்லப்பட்ட படம் எங்கள் எல்லோரையும் ரத்தம் கொதிக்க வைத்திருக்கும் ஆனால் மன்னார், நானாட்டான் பகுதியில் நான் தொழில் நிமித்தம் நின்றிருந்த போது சிலர் கூறினர், பேசாலைச்சம்பவம் அவர்களின் பிரச்சாரத்தின் ஒரு பகுதி என, இங்கே கனடாவில் துரதிட்டவசமாக நான் ஏந்தியிருந்த பதாகையில் பேசாலையில் கொல்லப் பட்டு தூக்கில் தொங்கும் நிலைமையில் காணப்பட்ட அக்குழந்தைகளின் புகைப்படம். நான் அதனை ஏந்தி சென்ற சில நிமிட நேரத்தில் ஊர்வல ஒழுங்கமைப்பாளர் ஒருவர் மிரட்டும் தொனியில் உந்த அட்டையை ஏந்த வேண்டாம் என்றார் ஏன் எனக் கேட்டேன் அவர்கள் சொன்னார்கள் சொல்லுறது விளங்கேலேயோ ஏந்த வேண்டாம் என்றால் ஏந்த வேண்டாம் என்றார்கள் நானும் ஆம் என்றேன் பின்னர் அவர்கள் சொன்னார்கள் உந்த அட்டை படம் இலங்கை புலனாய்வாளர்களால் ஊடுருவல் செய்யப் பட்ட படமாம் என்று. நான் சொன்னேன் உங்களது ஏற்பாட்டாளர்களே என்னிடம் தந்தார்கள் என்று. நான் கேட்பது இந்த வெளியில் அந்த ஊர்வலத்தின் ஏற்பாட்டாளர்களாக பங்கு கொண்ட எவரும் வரின் அந்த படத்தை ஏந்தாமல் தடுத்தவர்கள் புலிகளா? இலங்கை புலனாய்வுத்துறையா?

 9. உண்மையில் இனியொரு வைத்திருக்கிற மாற்று அரசியலுக்கான இவ் உரையாடல் வெளியின்அவசியத்தன்மை பற்றியும் , விஜய்யின் ஆய்வின் நம்பகத்தன்மையும் பற்றிய சந்தேகங்களால் நான் என்னுடைய பின்னூட்டத்தை இடவில்லை. ராகவன் சொலவதைபோல நான் கோக்கு மாக்காக சிந்திப்பவனும் அல்ல. சிந்தனைபடைத்த தலை என்பதைவிட வெறும் தலையாவது  மாற்றுப்பதிவர்களுக்கும் உண்டு என்பதை ராகவன் முதலில்புரிந்து கொள்ளவேண்டும். விஜய் உடைய //கருத்துக்களால் மோதுங்கள் வழி பிறக்கும். ஆனால் மோதலின் போது அடம் பிடித்தலையும் வக்கிரம் கொள்ளலையும் உதாசீனம் கொள்ளலையும் பகைமை உணர்வை வெளிப்படுத்தலையும்  கை விடுவோம;// என்கின்ற நியாயமான வேண்டுகோள் மதிப்பிற்குரியது.புலிகள் எந்த உரையாடல் வெளிகளையும் நம்பியவர்களல்ல.அவர்கள் இட்டகட்டளைகளை செய்து முடிப்பதற்கென்றே தயாரிக்கப்பட்டவர்கள் என்கின்ற விவகாரத்தை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.//.இயக்கப்போராளிகளை மனித நேயமே இன்றி வேட்டையாடிய வேளை அவா்களுக்கு குளிர்பானங்களை வழங்கி சிலா் ஊக்குவித்து மகிழ்ந்தனா் அதேவேளை யாருமே ஐயோ வேண்டாம் அவா்களும் நமது பிள்ளைகள்தான் கொல்லாதீா்கள் என்று கதறி அழவும் இல்லை அதை கண்டிக்கவும் இல்லை அந்த இடத்தில்தான் நாம் நமது பண்பையும் நாகரீகத்தையும் தொலைத்தோம் // என்கிற வாதம் சிறுபிள்ளைத்தனமானது. துப்பாகிகளின் வாயில் மனித மந்தைகள் கட்டப்பட்டிருந்த காலமது.இம் என்றால் சிறையும் ஏன் என்றால் முடிவுமாகஇருந்த வேளையது.இக்காலத்தில் தான் விசுவின் மாற்றுஅரசியலுக்கான உரையாடல் வெளி ஈழத்தில் திறந்து விடப்பட்டிருந்தது.அந்தமாற்றுஅரசியல் வெளியை யும் துப்பாக்கிகள் மௌனமாக்கிப் போட்டன.///புலிகள் போராட்டத்தில் முக்கியமான பங்காற்றலை வழங்கிருக்கிறார்கள் என்பதை தக்க ஆதாரங்களுடன் முன்வையுங்கள். புலிகளை விமர்சிக்கக் கூடாது என்றால் அதற்கான காரணங்களை முன்வையுங்கள். த.தே.கூ. விமர்சிக்கக் கூடாது என்றால் அதற்கான காரணங்களை முன்வையுங்கள். அல்லது அரசியல் பேசக்கூடாது என்றால் அதற்கான காரணங்களை முன்வையுங்கள்..///<முன் வைத்து…………………………………………….?????????????????

  1. தனிமனிதா்களை உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அழிப்பது சுலபமாகலாம் ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தை அழிப்பதென்பது சுலபமல்ல அப்படிப்பட்ட மக்கள் கூட்டம் நடந்த கொடுமைகளை எதிர்த்து வீதிக்குவர முடியாமல் இருந்த நிலையே நம் துா்ப்பாக்கியம் என்று கூறமுற்படுகிறேன்,மரணம் ஏற்படலாம் கொல்லப்படலாம் என்று ஒவ்வொருவரும் அஞ்சினால் போராட்டம் என்பது ஒரு இனத்திற்கு தேவையற்ற ஒன்றல்லவா சுதந்திரத்திற்காக பொது எதிரியுடன் மட்டுமல்ல குடும்பத்திற்குள்ளேயே சில வேளை போராட வேண்டிய நிலையுண்டு.

 10. பிடுங்கி நான் உங்களின் சிந்தனை திறனை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், முன் வைத்து ………………………………????????????????? என நீங்கள் குறிப்பிடும் இதனை தான் கோக்கு மாக்கு எனக் குறிப்பிடலாம். திரைப்படங்களில் விசமத்தனமாக அப்புறம்?……. எனக் கேட்பது போல் அல்லவா உள்ளது.

  இயக்கப்போராளிகளை மனித நேயமே இன்றி வேட்டையாடிய வேளை அவா்களுக்கு குளிர்பானங்களை வழங்கி சிலா் ஊக்குவித்து மகிழ்ந்தனா் அதேவேளை யாருமே ஐயோ வேண்டாம் அவா்களும் நமது பிள்ளைகள்தான் கொல்லாதீா்கள் என்று கதறி அழவும் இல்லை அதை கண்டிக்கவும் இல்லை அந்த இடத்தில்தான் நாம் நமது பண்பையும் நாகரீகத்தையும் தொலைத்தோம் என்கிற வாதம், சிறுபிள்ளைத்தனமானது + இல்லை சரியானதும் கூட = துப்பாகிகளின் வாயில் மனித மந்தைகள் கட்டப்பட்டிருந்த காலமது + அதனை வலிமையாக எதிர்க்க வக்கற்றுப் போனது எமது இனத்தின் சுஜநலமே.

 11. பிடுங்கிக்கு இயக்கப்போராளிகளை மனித நேயமே இன்றி வேட்டையாடிய வேளை அவா்களுக்கு குளிர்பானங்களை வழங்கி சிலா் ஊக்குவித்து மகிழ்ந்தனா் அதேவேளை யாருமே ஐயோ வேண்டாம் அவா்களும் நமது பிள்ளைகள்தான் கொல்லாதீா்கள் என்று கதறி அழவும் இல்லை அதை கண்டிக்கவும் இல்லை அந்த இடத்தில்தான் நாம் நமது பண்பையும் நாகரீகத்தையும் தொலைத்தோம் ஃஃ என்கிற வாதம் சிறுபிள்ளைத்தனமானது. இல்லை. அதுவே எனது மிகமுக்கியமான வாதம். ஏனெனில்இ இதற்காக சுதந்திரத்திற்காக போராடிய தமிழர்கள் மத்தியில் செய்யப்பட்டவை குறைவு என்பதனை சகலரும் ஏற்பீர்கள். முக்கிய கவனத்திற்குரிய விடயம் அராஜகம் மற்றும் கருத்துச் சுதந்திரப் பறிப்புக்களுக்கான மக்களிடமிருந்த ஆதரவுத் தளம் அல்லது அவற்றைக் கவனியாது விட்ட தன்மை. இன்னும் நம்மை அச்சுறுத்துகின்ற விடயமும் அதுதான். தமிழ் மக்கள் மத்தியிலான சுதந்திரத்திற்கான போரட்டம் அது என்ன வகையினதாக இருந்தாலும் இவ்வாறுதான் செல்லுமா என்ற ஒரு கனத்த வினாவினை கடந்த காலம் எங்களிடம் விட்டுச் சென்றிருக்கிறதல்லவா? இதற்கு நாமும் நம் மக்களும் பொறுப்பல்லவா? இன்னொரு விடயம்இ புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்கள் அராஜகச் செயற்பாடுகளை செய்த வேளைகளில்இ புலிகளாலும் மற்றவர்களாலும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட வேளையில் – அது பற்றி மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பணர்வு இல்லாவிட்டாலும் – தனிமனிதர்களாகஇ சிறு குழக்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏராளம். அவை பற்றிய பதிவுகளை எனக்குத் தெரிந்தவரை சுட்டிக்காட்டியிருக்கிறேன். இன்னும் பல விடயங்களை குறிப்பிடமுடியும். நீங்கள் குறிப்பிடுகிற “துப்பாகிகளின் வாயில் மனித மந்தைகள் கட்டப்பட்டிருந்த காலமது.இம் என்றால் சிறையும் ஏன் என்றால் முடிவுமாக இருந்த வேளையது” நிலைதான் காணப்பட்டதாயினும் சனநாயகத்திற்காகஇ மக்கள் விடுதலைக்காகஇ போரட்டம் சரியான திசை வழியில் செல்ல வேண்டுமென்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை வெற்றி பெற முடியாமல் போயிற்று. எதிர்காலத்திலும் இதுதான் நிலைமையா? இறுதியாக முன் வைத்து… என முடித்திருக்கிறீர்கள். புலிகள் மிகப் பெரும் சக்தியாக இருப்பினும்இ தமிழ் தேசிய முற்போக்குவாதிகள் சுயநலமற்று – மக்கள் விடுதலை மற்றும் போராட்டம் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் முயற்சித்து வந்திருக்கிறார்கள் என்ற கருத்தினை அப்பதிவினூடாக முன்வைத்திருக்கிறேன். அது பற்றிய விவதாங்களை தொடரப்பட வேண்டும். மக்கள் விடுதலைக்கான போரட்டத்தினை சரியான வழியில் முன்னெடுத்துச் செல்ல தமிழ்த் தேசிய முற்போக்கு வாதம் ஆற்றலுடையதா? அதுதான் நம்முன்னே உள்ள வினா? போரடி வாழவேண்டிய தேவையுள்ள மக்களுக்குஇ போராடித்தான தங்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் வாழ்கின்ற மக்களுக்குஇ அல்லது இணக்க அரசியல் மூலம்தான் இன்று எதையாவது செய்யலாமா ? என்ற வினாக்களுக்கு விடை காணத்தான் வேண்டும். இங்கே இலங்கையில் அதுதான் இன்றுள்ள மிகத்தீவிரமான வினா? மற்றப்படிஇ ஆளும் அரசுஇ கருணாஇ பிள்ளையான் போன்றவர்கள் அரசியல் வீண் பேச்சுக்கள் பேசாதீர்கள் என்ற திரும்பத் திரும்பக் கூறிவருகிறார்கள். பிடுங்கி அந்த வரிசை ஆள் இல்லை என்பது என் அபிப்பிராயம். எனது வகுப்பு மாணவர்களை கும்பிடக் கும்பிடக் கொலை செய்த நிலைமையே என்னை புலிகளில் இணைய வைத்தது எனப் பிள்ளையான் – கிழக்கு மாகாண முதலமைச்சர் (தவறான உதாரணமோ – அண்மையில் கேட்டு நினைவுக்கு வந்ததனால் குறிப்பிடுகிறேன்.) ஆணைக்குழுவிடம் கூறியது தான் நமது கடந்த கால நிலை. எதிர்காலம் எப்படியாகும் என நானோ நீங்களோ என்ன கூறமுடியும். நானோ அல்லது நீங்களோ அல்லது மக்களோ போராடித்தான வாழ வேண்டும் என்பதனைத் தீர்மானிப்பது காலம்தான். இத்தனை ஆயிரம் இளைஞர்களும் யுவதிகளும் போரடிச் சாவதற்கெனப் பிறந்தவர்களா? எத்தனை அனுபவங்கள்…. நாம் போரடுவதா இல்லயைா என்பதை தீர்மானிப்பது சமூக நிலைமைதான் – புலிகள் மொழியில் கூறுவதாயின் எதிரிதான் அதனைத் தீர்மானிக்கிறான். நமது கடந்த கால அனுபவம் இந்தப் பட்டறிவனை நமக்குத் தந்திருக்கிறது. அவ்வாறாயின் நாம் நமது மக்கள் அரசியல் பேசித்தானே ஆகவேண்டும். அதற்கான கருத்துச் சுதந்திரத்தினை மறுக்கும் இனியொரு நிலை வராமல் இருக்க முயல்வோம். ஆகக்குறைந்தது வாக்குளைக் கேட்டு வருகிறவர்களுக்கு எனது வாக்கினை அளிப்பதற்காகவாவது நான் அரசியல் பேசவேண்டியிருக்கிறது. விஜய்

 12. நீங்கள் வைக்கின்ற வாதங்களும், அதன் பேரில் நீங்கள் காட்டுகிற சொல்லாட்சிகளும்,தர்க்கிக்கும் விதமும்,பிரதிவாதங்களும் மிக அற்புதமாக இருக்கின்றன.ஆனால் நடைமுறை??? இப்படிச் சொன்னால் இதையும் கோக்குமாக்கென்று பட்டியல் போட்டு விடுவீர்கள். மக்கள் அரசியல் படுத்தப்படாமலேயே அங்கு இருந்தார்கள் என்பதற்கு நீங்களே ஆயிரம் கட்டுரைகளையும் காரணிகளையும் முன்பே வைத்துள்ளீர்கள். அதை நான் விரிவாக்கத் தேவையில்லை.ஒரு காணிப்பத்திரம் பற்றிய சாராசரி அறிவு கூட இல்லாத மக்களிடம் தான் உங்களது மிகப்பெரிய குற்றச்சட்டான மாற்றான் பிள்ளைகளைக் கொன்ற போது மௌனமயிருந்ததேன்? எனும் சாட்டையை வீசி எறிந்திருக்கிறீர்கள். மக்கள் மயப்படுத்தப்படாத அந்த சமூகத்தினுள் மக்கள் பார்வையாளராக இருந்தார்கள்.வலிந்து இயக்கம்  பிள்ளைகளை இழுக்கிற போது அழுவதும்பிறகு  அதன் வீரதீரம் கேட்டவுடன் புகழ்வதும், மரணித்துப் போகையில் நினைவிடங்களைக் கும்பிடுவதும் தான் அரசியலாகபோதிக்கப்பட்டு,அப்படியே எண்ணியிருந்த மக்களிடம் தான் நீங்கள் அந்த மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறீர்கள்.ராகவன் போல சண்டை தொடக்கத்தில் கொழும்பிலும், அரைஇறுதியில் இலண்டனிலும், இறுதியில் ரொறன்ரோவிலும் நிற்கக்கூடிய வசதி படைத்தவர்களாக, அந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட் டமக்கள் இருக்கவில்லை அவர்கள் நாளாந்த தேவைகட்குக்கூட இடம் விட்டு இடம் போவதே அவலமான காலகட்டம் அது. மட்டுமன்றி கண்மூடிக்கிடந்த மக்களே பாதகம் செய்தார்கள் என்று போட்டுத்தாக்குகிற ராகவனே புலியால் எல்லாம் முடியும் என்று தான் இறுதிவரை நம்பியதாக வாக்குமூலம் தந்துள்ளார்.தமிழ்த் தேசிய முற்போக்கு வாதம் பேசக்கூடிய ஒருவருக்கே இப்படியென்றால்  ஒரு சராசரி சாமன்யனுக்கு????? சிங்கள அரசாங்கத்தின் அரிசியைச்சாப்பிட்டு அவற்றைப்பங்கிடவும் அவர்கள் கொடுக்கின்ற சம்பளத்தை பங்கிடவுமாக நாம் வைத்திருந்த கருவூலத்தான் தமிழீழமாயிருந்தது……நீங்கள் மறுத்தபோதும் பயபக்தியேதமிழீழ அரசினுடைய அரசியல் மையமாயிருந்தது.{பாம்பிற்கும்,யானைக்கும் பயத்தினால் கோவில் அமைப்பதைப்போல}.///////மக்கள் விடுதலைக்கான போரட்டத்தினை சரியான வழியில் முன்னெடுத்துச் செல்ல தமிழ்த் தேசிய முற்போக்கு வாதம் ஆற்றலுடையதா? அதுதான் நம்முன்னே உள்ள வினா? போரடி வாழவேண்டிய தேவையுள்ள மக்களுக்கு போராடித்தான தங்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் வாழ்கின்ற மக்களுக்கு அல்லது இணக்க அரசியல் மூலம்தான் இன்று எதையாவது செய்யலாமா ????///கேள்வி உண்மையில் வலுவுள்ளது..தப்பியுள்ளவர்களில் 80 வீதத்திற்குமதிகமானோர் ஊனமுற்றவர்கள் என்றே உங்கள் கணிப்பீடும் சொல்கிறது.அதைவிடப் பலர் மனோஅழுத்ததால் பீடிப்புற்று ஜடமாக இருக்கிறார்கள்.அவ்வாறான மக்களைத்தான் நீங்கள் அயல் நாட்டுக் குடியுரிமையில் குந்தி இருந்து கொண்டு போராட அழைக்கின்றீர்கள். அங்குல அங்குலமாக நீளுகிற இரும்புக்காலடிக்கீழ் சிக்கியுள்ள அந்த மானிடருக்கு நீங்கள் கற்பனா சோசலிசம் கற்றுக்கொடுக்க நினைக்கின்றீர்கள். உருத்திரகுமாரின் பாராளுமன்றமும் இதனைத்தானே செய்கின்றது. அதைத்தான் ஜெயபாலன் இனியும் இளைஞரைக்கூட்டி என்ன கொலைக்குக் கொடுக்கப் போகிறீர்களா?? என்று கேட்கத் துடித்தார் போலும்…?வீட்டுக்கூரை இடிந்து விழுந்தாலே மரித்துப் போகிற நாம் உச்சிமீது வானிடிந்து போயினும் அச்சமில்லை என்று பாடிப்பழக்கப்பட்டவர்கள் .ஆனாலும் ஒரு இணக்கமான அரசியல் தீர்விற்காக புலம் பெயர் நாட்டுமக்கள் ஒற்றுமைப்படலாம் என்கின்ற உங்களின் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன். 

 13. மிக்க மகிழ்ச்சி பிடுங்கி மிக யதார்த்தமாக பல விடயங்களை சுட்டி காட்டியிருக்கிறீர்கள். சகோதரப் படுகொலைகளில் மக்களின் மவுனம் குறித்த தங்களின் மதிப்பீடு மிகச் சரியானதே. புலிகளின் சகோதர படுகொலைகளில் எனது உறவினர்களையும் நான் இழந்திருக்கிறேன். எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் புலிகளால் டெலோ அமைப்பு அளிக்கப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டு கொள்ளப் பட்டனர். கொல்லப்பட்டவர்களின் சொந்த சகோதர்கள் புலிகளின் ஆதரவாளர்களாகவே இன்று வரையும் இருந்தார்கள். ஏன்? தமது சகோதரர்கள் கொல்லப் படாது சரிஎன்பதால் அல்ல. தமிழ் ஈழம் கிடைக்கும் என்பதால் தான். அப்படித்தான் நானும். புலிகள் தனிநாட்டை பெற்றால் பின்னர் மாக்களின் தன எழுச்சியின் மூலம் சமத்துவமான சமுக கட்டுமானம் ஓன்று தான உருவாகும் என்ற நப்பாசைதான். நான் கொழும்பிலும் லண்டன்லும் கனடாவிலும் நின்றேன் என்பது குறித்த தங்களின் பார்வை எனக்கு வருத்தமாகவே உள்ளது. எனது ஆதங்கம் அக்கால நிகழ்வு போக்கு என்பவற்றை விளங்கப் படுத்தவே அதனை கையாண்டேன்.

  “மக்கள் மயப்படுத்தப்படாத அந்த சமூகத்தினுள் மக்கள் பார்வையாளராக இருந்தார்கள்.வலிந்து இயக்கம் பிள்ளைகளை இழுக்கிற போது அழுவதும்பிறகு அதன் வீரதீரம் கேட்டவுடன் புகழ்வதும், மரணித்துப் போகையில் நினைவிடங்களைக் கும்பிடுவதும் தான் அரசியலாகபோதிக்கப்பட்டு,அப்படியே எண்ணியிருந்த மக்களிடம் தான் நீங்கள் அந்த மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறீர்கள்.
  மிகச் சரி பிடுங்கி, ஆனால் என்னைபொருத்தவரை தமிழீழ தேசத்துடன் சம்பத்தப்பட்ட அனைவரையுமே நொந்து கொள்கிறேன் என்னையும் சேர்த்தே.

  நான் மனம் நொந்து அனைவரிடமும் மன்றாட்டமாக கேட்பது எல்லாம், நாம் ஆற அமர்ந்து எல்லோரும் சரி பிழைகளை பேசி கதைத்து, மனம் திறந்து பேசி ஒரு பொது கருத்தியலில் ஒன்றிணைந்து எம்மக்களின் அரசியல் பொருளாதார சமூக விடுதலைக்கு இயன்றதை செய்வோம் என்பதுதான்.

 14. முடிந்தது முடிந்துவிட்டது இனிமேல் நடக்கவேண்டியதை மிகவும் சிந்தித்து ஒற்றுமையாக முன்னெடுக்க முயற்சிப்போம் சகோதரா்களே.

  1. முடிந்தது முடிந்து விட்டது என்று சொல்லிக் கடந்த காலத்திலிருந்து கற்க மறுப்பது சரியாகாது.
   தனிப்பட்ட பழிகூறல்களை விடுத்துத் தவறுகள் எங்கே எப்படி நேர்ந்தன என்பதை நேர்மையாக விசாரித்தாக வேண்டும்.
   இலக்குக்கள் முடிந்த முடிவ்க இருக்கலாகாது. ஒற்றுமை என்பது நோக்கத் தெளிவுடனேயே இயலும்

   1. Shiva,
    நீங்கள் கூறமுற்படுவது என்னவென்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. முடிந்தது முடிந்துவிட்டது என்றால் தவறுகளை மறப்பதாக யார் சொன்னது? பிடுங்கி.ராகவன் போன்றோர்கள் தங்கள் அழகான வார்த்தைகளால் எப்படி நம்மை சிந்திக்கவைக்கிறார்கள் அதன் ஒத்தூதலே எனது மேலேயுள்ள பிற்குறிப்பு.

    ஒரு தடைவை இந்த இணையத்தளத்தில் ஒரு நண்பா் “No Comment” என்று தனது பிற்குறிப்பை எதுவுமே எழுதாது விட்டிருந்தார் அவரை சிலா் நையாண்டி பண்ணி எழுதியிருந்தார்கள் ஆனால் நான் மிகவும் கவலைப்பட்டேன் ஏன் தெரியுமா அங்கே பிற்குறிப்பு எழுதியவா்களைவிட அவா் நிறயவே எனக்கு உணா்த்தியிருந்தார்.
    அதாவது நான் சொல்லவருவது என்னவென்றால் மெளனம் பல விடயங்களை சுமந்துவரும் அதை அறிந்து கொள்ளும் ஆற்றல் நமக்கு இல்லையென்றால் யாவுமே கடினமாகிவிடும். சில வேளைகளில் இரண்டு வரிகளுக்குள் இருக்கின்ற அா்த்தங்கள் ஒரு புத்தகம் பூராகவும் இல்லாது போகலாம். 

   2. புடரிந்து கொள்ள இயலாதளவுக்குச் சிக்கலாக நான் எதையுமே சொல்லவில்லை.
    தனிப்பட்ட, பகைமையான பழிகூறல்களை ஒதுக்கிக் கடந்த காலத் தவறுகளை அறிந்து அவற்றினின்று கற்கும் தேவையைச் சொன்னேன்.

    ஒரு குறிப்பிட முடிவை மனதில் வைத்துக் கொண்டு அதை மாற்ற மறுப்பவர்களால் திறந்த மனதுடன் விசாரிக்க இயலாது.

    ஒற்றுமை என்பது பல்வேறு நிலைப்பாடுகளை வெளிவெளியாகக் கலந்து பேசி வந்தடையப் படுவதே ஒழிய, ஒரு முடிவை —முற் காலங்களிற் போல்— எல்லார் மீதும் திணிப்பதால் கிட்டுவதல்ல.
    இது விளங்கக் கடினமானதல்ல என்றே நினைக்கிறேன்

 15. முடிந்தது முடிந்து விட்டதுதான் அதனால் தவறுகளை மறந்து விடுங்கள் என்பது தவறானது, தவறுகளை இட்டு வன்மம் கொள்ளாது இருப்பதே நன்மைபயக்கும். குமார் நீங்கள் ஒத்துஊதுதல் எனக் குறிப்பிட்டது தவறானது. பிற்போக்கு தனங்களை ஆதரித்துக்கொண்டு முற்போக்கு சிந்தனைகளை உள்ளத்துள் வைத்துக்கொண்டு முரண்பாடாக வாழ்ந்த மக்கள் கூடத்துள் வாழ்ந்த மனிதர்களில் நானும் ஒருவன் என்பதில் நான் வெட்கப் படவில்லை. ஏனெனில் அவ்வாறுதானே நாம் வாழ பழகிகொண்டோம் வாழ பழக்கிவிக்கப்பட்டோம். எதனை பேசினும் நாம் ஒரு இணையத்தில் பொறுப்புடன் எதிரும் புதிருமாகவும், தர்க்க நியாயமாகவும் பேச அணிதிரண்டு உள்ளோமே அதுவே இன்றைய தேவையும் முன்னோக்கி பயணிப்பதற்கான ஆரம்ப அறிகுறியுமாகும். ஈரோஸ் பாலகுமார் ஒருதடவை சொன்ன ஒருவிடயம் எனக்கு யாபகத்தில் வருகின்றது எதனையும் சகித்து கொண்டு வாழும் இனமாக எமது இனம் பழக்கப் படக்கூடாது, யார் தவறு விடினும் அதனை கேள்வி கேட்கும் பக்குவம் எம்மிடையே வளரவேண்டும், இல்லையேல் பேரினவாத அடக்குமுறைகளையே சகித்து வாழும் இனமாக நாம் இருக்க நேரிடும் என எச்சரித்து இருந்தார் ( அவர்குறிப்பிட்டது பெரும்பாலும் புலிகள் உள்ளிட்ட அனைவரையும்தான் என்பது சகலருக்கும் விளங்கும்) அவரே பின்னாளில் பலவற்றை? சகித்தபடியே இருந்தார்……….. நாம் தவறுகளை சுட்டிகாட்டுவோராகவும் சகல அடக்கு முறைகளையும் எதிர்போராகவும் இருக்கவேண்டும், அடக்குமுறைகளை சகித்து வாழுதல் என்பது வேறு இணக்க வாழ்வு என்பது வேறு. சுயத்தை இழக்காத இணக்க அரசியலும் தேவையானதே.

 16. உண்மையில் மானிட நேயத்திற்காகப் பயணிக்கத்துடிக்கிற உங்களின் குரல்களில் இருக்கிற மிகுந்த உன்னதத்தையும்,அரவணைப்பையும் பார்க்கிற போது இனி முடிந்துவிட்டது என்று வாழ்வை நொந்து கொள்வோரும் இன்னமும் வாழ்ந்து பார்ப்போமே என்று எண்ணத் தோன்றுவர்.மனிதரை மனிதரோடு நெருங்கிவரச் செய்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒருவருக்காக மற்றவரும் உதவத்துடிக்கிற சகஜத் தன்மை பிறந்து விட்டால் மானிட வாழ்வில் வில்லங்கம் ஏது?? கவினுறுகலைகளாலும், நம் கைவசம் உள்ள பண்பாட்டாலும் மனுக்குலத்தையும் எம்மினத்தையும் அரவணைத்துப்போனால்அனர்த்தங்களும், அழிவுகளும் ஏது??ஆணவமும்,அடாவடித்தனமும், திமிர்வாதமும்,மட்டுமே இன்றைக்கு எங்கும் கோலோச்சுகிற வேளையில்////நான் மனம் நொந்து அனைவரிடமும் மன்றாட்டமாக கேட்பது எல்லாம், நாம் ஆற அமர்ந்து எல்லோரும் சரி பிழைகளை பேசி கதைத்து, மனம் திறந்து பேசி ஒரு பொது கருத்தியலில் ஒன்றிணைந்து எம்மக்களின் அரசியல் பொருளாதார சமூக விடுதலைக்கு இயன்றதை செய்வோம் என்பதுதான்./////// என்று உளத்தூய்மையோடு மனம் விட்டுப் பேசுகிற ராகவன் உள்ளிட்ட இனியொருவின் இனிய தோழர்கட்கு! யாருடைய போர்ப்பாசறைகுள்ளோ நிராயுதபாணியாக நுழைந்து விட்டோமோ என்று எண்ணிய எனக்குச் சரியான பாதையில் தான் நிற்கின்றேன் எனும் ஒரு புத்தூக்கம் உங்களால் ஏற்படுகிறது.உலகமெங்கிலும் மனிதனை, மனித ஆற்றலை, மானிட முன்னேற்றத்தைத் தடுத்துப் பிணைத்துள்ள விலங்குகளை உடைத்தெறியவென்று ஆவேசத்தோடு புறப்பட்டிருக்கிற உங்களுக்கு என் வாழ்த்து. 

  1. நீங்கள் பெரிய வார்த்தைகளை கூறிப்பயமுறுத்துகிறீர்கள். மானிட முன்னேற்றத்திற்கான தெளிவான பாதையை கண்டறிய முயற்சிப்போம். ஒன்றிணைவோம். ஓரடியாவது முன்னேறுவோம்.

 17. பிடுங்கி உங்கள் ஆ………..வேசம் முடிந்ததா?

 18. பிடுங்கி, தமிழ்மாறன் எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! இருவருமே புலிகளை விமர்சிக்கின்றீர்கள் பின்னர் பிடுன்கியை பார்த்து, பிடுங்கி உங்கள் ஆ………..வேசம் முடிந்ததா? எனக் கேட்பதன் அர்த்தம் தான் என்ன? இந்த உரையாடல் வெளியில் சற்று வெளிபடைத்தனம் இருந்தால் நல்லது அல்லவா? நக்கலும் நையாண்டியும் நளினமும் கூட எங்கள் இனத்தின் பெரும் சாபக்கேடு இயக்கங்கள் தங்களிற்குள் மாறி மாறி நக்கலும் நையாண்டியாகப் பேசியும் எழுதியும் வந்தன (1980 களில்) கிட்டுவை டெலோ வினர் நையாண்டியாக பேசியதால் பின்னாளில் டெலோ மீது புலிகள் தாக்குதல் நடத்தும் போது நக்கல் நையாண்டி பேசாத டெலோ போராளிகளையும் கிட்டு போட்டு போட்டு எண்டு போட்டாராம் எண்ட கதையுண்டு.
  வன்னியான் …. என்ன …..டெலோவால்…..ஏன் புலிகளைக் களத்தில் , அடிச்சு,நொருக்கி , பிரிச்சு மேய முடியாமல் போனது…ஓ..சகோதர பாசமோ…புலிகளையேநேருக்கு நேர் எதிர்க்க முடியாதவை , சிங்கள ஆர்மியிடமிருந்து , தமிழரை எப்படி காப்பாற்றி இருப்பினம்..?

  அப்ப வன்னியான் சொல்வதை பார்த்தால் நாங்கள் சிங்கள ஆமியை அடிக்க வேண்டும் என்றால் முதலில் தமிழர்களை அடித்து பழகவேண்டும் அதில் வெல்பவர்கள் பின்னர் சிங்கள ஆமியை அடிக்கவேண்டும். நல்லது மீளவும் பல இயக்கங்களை தொடங்குவோம், இதற்குள் மோதி பார்த்து பின்னர் எமக்குள் ஒருவர் தலைவரை தெரிவு செய்வோம் நடுவராக 23 ஆம் புலிகேசியை கூப்பிடுவோம் அவர் எம்மை கில்லிவாய்க்கால் வரை கூட்டிப் போய் கில்லி விளையாடுவார். நக்கல் இல்லையப்பா இதுதானே எமக்குள் நடந்தது. பிறகு எதற்கு ……………… ?

  1. நிகழ்தகவு மாதிரி வன்னியன் பேசுவது வருந்தக் தக்கது.எத்தனை இரவுகள் புலிகளால் புரட்சியைத் தாங்கியோர் நித்திரை இல்லாமல் இருந்திருப்பர்.புலிகளால் அவமானப் படுத்தப்பட்ட அந்த இளஞரின் இரவுகள நினைத்திப் பாருங்கள்.வேதனையும்,வலியும் நிறந்தவை அவை.அமைதி.இடை,இடையே துப்பாக்கிச் சத்தம், வேதனையின் குரல்கள்.புலிகளீன் துப்பாக்கிகள் ஓய்ந்த போது மெளனித்த போராளீகள் தமிழ் ஈழ மண்ண நேசித்தோர்………….கள்ள விசாவோடு லண்டன் வந்து தமிழ் மண்ண விற்றோரில்லை.

Comments are closed.