தமிழ்த் தேசிய முற்போக்கு வாதம்(2) – ஆற்றலின் வரையறை : விஜய்

முதலில் ‘தமிழ்த் தேசிய முற்போக்குவாதம் – ஆற்றலும் ஆற்றலின்மையும்” தொடர்பாக மேலும் இரு விடயங்களைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

ஒன்று முற்போக்குவாதச் சிந்தனைகளை முன்வைத்த குழுக்கள், தனிநபர்கள் பற்றி மேலும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

தமிழ்த் தேசிய முற்போக்குவாதச் சிந்தனைகளை முன்வைத்த குழுக்களில் ‘புதிய பாதை” குழு பற்றி குறிப்பிட்டாக வேண்டும். அவர்களுடைய தோற்றம், வளர்ச்சி, தோல்வி குறித்து ஐயர் விரிவாக எழுதியிருக்கிறார்.

புதிய பாதைக்குழுவுக்கு முன்பாக ஈரோஸ் இயக்கம் முற்போக்குவாதச் சிந்தனைகளைப் பரவச் செய்ததில் முக்கிய பங்கினை வகித்திருக்கிறது. “லங்காராணி” நூல் மூலமாக இனவிடுதலையும் சமூக விடுதலையும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை அவர்கள் முன்வைத்தது மட்டுமன்றி வட-கிழக்குப் பகுதிகளில் இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரத்தினையும் மேற்கொண்டும் வந்தார்கள்.

இதற்கப்பால் ஒரு அரசியல் சக்தியாக அமையாதபோதும், சனநாயக மறுப்பிற்கெதிராக காத்திரமான போரட்டங்களை நடத்திய யாழ் பல்கலைக்கழக மாணவர் பேரவையினையும் பல்கலைக்கழக மாணவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசினதும், இயக்கங்களினதும், புலிகளினதும் அராஜகங்களை எதிர்த்து நின்ற ஒரு சனநாயக சக்தியாக விளங்கிய பாத்திரம் 1985களில் யாழ் பல்கலைக்கழக மாணவர் பேரவைக்குண்டு.

அத்துடன் பல்கலைக்கழகத்தினை மையமாகக் கொண்டு இயங்கிய கலாச்சாரக் குழுவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது. இயங்கங்களின் அராஜகச் செயற்பாடுகளினால் வெறுப்புற்று இருந்த இளைஞர்களின் கூட்டாக உருவாகிய கலாச்சாரக் குழு, இனவிடுதலை மற்றும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க அரசியல் பற்றிய விமர்சனத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றியது. இயக்க மோதல் பற்றிய விமர்சனத்தினையும் முன்வைத்தது.

புலிகள் தமிழர்களின் தனியொரு சக்தியாக தங்களை மாற்றிக் கொண்ட பின்னாளில் மாற்றுக் கருத்துக்களுக்கான சுதந்திரம், துப்பாக்கி முனையில் மறுக்கப்பட்ட வேளையில் கொழும்பிலிருந்த செயற்பட்ட ‘சரிநிகர்” குழுவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

முற்போக்குவாதச் சிந்தனைகளை முன்வைத்த தனிநபர்களில், விசுவானந்ததேவா முக்கியமானதொரு இடத்தினை வகிக்க வேண்டியவராக இருந்தார். ஆனால் தீவிரமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க இருந்த வேளை அவரின் மறைவு ஏற்பட்டது.

இரண்டாவது விடயம் கட்டுரையில் 1985 களில் தழிம் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முற்போக்குவாதம் ஒரு வலுவான இடத்தினைப் பெற்றிருந்தது எனக்குறிப்பிட்டிருந்தேன்.

இளைஞர் இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே முற்போக்குவாதச் சிந்தனைகள் அவ்வியங்கங்களில் வலுப்பெற்றிருந்ததனை அவதானிக்கலாம். அதே வேளை தொடர்ந்தும் முற்போக்குவாதச் சிந்தனைகளை வலியுறுத்திய செயற்பாடுகள் இடம்பெற்றன. இயக்கங்களிற்குள்ளும், இயங்கங்களிற்கு வெளியேயும் பிற்போக்கு வாதத்திற்கெதிராக முற்போக்குச் சிந்தனை தொடர்ச்சியாக ஒரு போராட்டத்தினை மேற்கொண்டது. முற்போக்குச் சிந்தனையை முன்னிலைப்படுத்துவதற்காக பல இழப்புக்களும், உயிர்த்தியாகங்களும் இடம்பெற்றது. புதிய பாதை சுந்தரம் முதல் இது தெடர்ந்து சென்றது.

அந்த வகையில் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் 1980 களிலிருந்து தமிழ்த் தேசிய முற்போக்குவாதச் சிந்தனை ஒரு வலுவான இடத்தினைப் பெற்று வந்தது என்பதனை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. இன்று அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வரும் பலர், புலிகளின் அழிவின் பின் எற்பட்டுள்ள அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை கையகப்படுத்தும் ஒரு கபட நோக்கத்துடன் தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் செயற்பட்டு வருவதாக தெரிவித்து வரும் கருத்துக்கள் தப்பனாவை என்பதனை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள், தமது சுயநலத்திற்காக அன்றி மக்களின் விடுதலைக்காக 1980 களிலிருந்து அச்சுறுத்தலான சூழலிலும் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். மக்கள் விடுதலைக்கான சிந்தனையை வலியுறத்திய பணியில் உயிர்த்தியாகங்களும் நிகழ்ந்துள்ளன.

இக்கட்டுரையில் குறிப்பிட விரும்புகிற முக்கியமான விடயம், தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் 1980 களிலிருந்து ஒரு வலுவான இடத்தினைப் பெற்றிருந்த போதிலும் ஒரு பெரும் முன்னணிச் சக்தியாக அணிதிரள வில்லை: தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தலைமைத்துவப் பாத்திரத்தினையும் பெற்றிருக்கவில்லை என்பதே.

தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் பல்வேறு இயங்கங்களிலும் இருந்து தமது கருத்தியல் போராட்டத்தினை தீரத்துடன் மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பல்வேறு இயக்கங்களிலிருந்த தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் தங்களை ஒரே அணியினராக காணத்தவறியதுடன், தங்களை இணைத்துக் கொண்டு ஒர் பலமான அணியாக மாற்றிக் கொள்ளவும் முற்படவில்லை.

அதற்கான ஒரு பொது வேலைத்திட்டத்தினை குறைந்த பட்சம் பொதுக் கருத்துக்களில் உடன்பாடு கண்டுகொள்வதற்குக் கூட இணைந்து செயற்படவில்லை.

பல்வேறு இயக்கங்களிலும் இருந்து முற்போக்குச் சிந்தனைகளை முன்னிலைப்படுத்தி பிற்போக்குவாதிகளுடன் முரண்பட்டுக் கொண்டு செயற்பட்டு வந்த முற்போக்கு வாதிகள் தங்கள் சார்ந்த இயக்கத்திற்கு அப்பால் இருந்த முற்போக்குவாதிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான விரிவான சிந்தனையை வெளிக்காட்டவில்லை. முரண்பட்டுக் கொண்டு இயங்களிற்குள்ளேயே தங்கள் வாழ்வைக் கழித்தனர். சகிக்க முடியாத போது விரக்தியுற்று வெளியேறிச் சென்றனர்.

இன்றும் இத்தகையதொரு போக்கு நிலவவில்லை என உறுதியாக கூறமுடியாது.

இதற்கான காரணம் ஆராயந்தறியப்பட வேண்டும்.

1980 களில் இலங்கையில் மத்திய தரவர்க்கத்தின் பெரு வளர்ச்சி முக்கியமானதொரு விடயமாக அமைகிறது. தேசிய மொழிகளில் கல்வி கற்ற மத்திய தரவர்க்கத்திலிருந்து வந்த இளைஞர்களால் தெற்கில் “அரசுக்கெதிரான சிங்கள இளைஞர் கிளர்ச்சி” மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாறாக வட கிழக்கில் பெருந்தேசிய இன ஒடுக்குமுறைக்கெதிரான ஆயுதப் போராட்டம் மேற்கிளம்பியது.

மத்திய தரவர்க்கத்திலிருந்து வந்த இளைஞர்களே தமிழ்த் தேசிய முற்போக்குவாதத்தினை முன்வைத்துச் செயற்பட்டவர்கள்.

மாக்சிச – லெனினச அரசியல் கட்சிகளிலிருந்து அச் சிந்தனைகளின் வழிவந்து இனவிடுதலைப் போராட்டத்தினை முதன்மைப்படுத்தியவர்களாலும், இன ஒடுக்குமுறைக்கெதிரான ஆயுதப் போராட்டத்தில் இணைந்து பின் மாக்சிச – லெனினச சிந்தனையை அடையப்பெற்றோராலும் தமிழ்த் தேசிய முற்போக்குவாதம் முன்வைக்கப்பட்டது.

பிரதானமாக யாழ்ப்பாணப் பிரதேசத்தினை மையமாகக் கொண்ட மத்தியதர வர்க்க இளைஞர்களே பெரும் பங்காற்றியவர்கள். யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயும் விவசாயிகள், மீனவர்கள், உதிரித்தொழிலாளர்கள் மற்றும் அரச சேவையாளர்கள் குடும்பத்தினை – சமூகத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் இளைஞர் இயக்கத்திலும், தமிழ்த் தேசிய முற்போக்குவாத அணியிலும் பங்கு கொண்டிருந்தனர்.

இவர்களுடைய அரசியல் குணாம்சம்தான் ஐக்கியப்படாமை ! இவர்களுடைய அரசியல் குணாம்சம் பிற்போக்குவாதத்திற்கெதிராக ஐக்கியப் படுவதன் அவசர அவசியத் தேவையை உணர்ந்து கொள்ள முடியாமல் போன அரசியல் வரட்டுத்தனம்.

ஐக்கிய முன்னணி குறித்த அடிப்படைத் தந்திரோபாயங்கள் குறித்த குறைந்தபட்சத் தெளிவின்மை என்பது புலிகளிடம் மட்டுமல்ல ஏனைய அமைப்புக்களிடமும் காணப்படாமை என்பது இதன் காரணங்களில் முக்கியமான ஒன்றாகும்.

புலிகள் ரெலோ இயக்கத்தினை அழித்த பின்பு, ஏனைய இயக்கங்களையும் அழிப்பார்கள் என உறுதியாக தெரிந்து கொண்ட பின்பு, எஞ்சி நின்ற இயக்கங்கள் அதற்கெதிராக ஒன்றுபட்டுச் செயற்பட முடியாமல் போன அரசியல் வரட்டுத்தனத்தினைக் கண்டிருக்கிறோம். அவ்வியக்கங்களிலிருந்த முற்போக்கு வாதிகள் கூட இதற்கு விதிவிலக்காகவில்லை.

கருணா – பிரபா முறிவிற்கும் கருணா கூறியதும் பிரபாகரனின் அரசியல் வரட்டுத்தனத்தினைத்தான். பிரபாகரன் மற்றம் பாலசிங்கம் இருவரினதும் போக்குகள் இத்தகையனவாகவே இருந்தது என்பதை அடேல் பாலசிங்கமும் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் போக்கினை தமிழ் மத்தியதர வர்க்க இளைஞர்களின் அரசியல் வரட்டுத்தனம் என நான் குறிப்பிட்ட முனைந்தாலும் அது முழுமையான விஞ்ஞான பூர்வமான கருத்தல்ல என்பதை உணர்கிறேன்.

ஒவ்வொருவரும் தாம் வரையறுக்கும் எல்லைக்குள் தம்மைப் புனிதர்களாகக் கட்டமைத்துக் கொண்டு ஏனையோர் மீதான வெறுப்புணர்வை உமிழும் போக்கே காணப்பட்டது. நிலப்பிரபுத்துவ சிந்தனையின் தொடர்ச்சியான புனிதத்துவம் குறித்த இந்தச் சிந்தனை முறை இன்றும் எமது சமூகத்தில் புரையோடிப் போய்க் கிடக்கின்றது என்பது இன்னொரு விடயம்.

ஒவ்வொரு வர்க்கங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைப்புக்களின் பொதுவான ஐக்கிய முன்னணியை உருவாக்க தத்துவார்த்தத் தெளிவின்மையை காரணமாகக் கூறும் அதே வேளை பொதுவான அரசியல் தளத்தில் ஒன்றிணைவதற்கான அனைத்து அடிப்படைகளையும் நிராகரிகும் போக்கை நிலப்பிரபுத்துவத் தூய்மைவாதத்துடன் தொடர்பு படுத்தலாம். புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் அழிக்கப்பட்ட பின்னாலும் அரசியலை நோக்கிய ஒன்றிணைவிற்குப் பதிலாக குழு சார்ந்ததும், நபர்கள் சார்ந்ததுமான ஒன்றிணைவே பிரதானப்படுத்தப்பட்டது.

தமிழ் மத்தியதர வர்க்க இளைஞர்கள் மத்தியிலிருந்து தோற்றம் பெற்ற தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பற்றியெல்லாம் பேசினாலும், மாக்சிச – லெனினிய சிந்தனைகளைப் பேசினாலும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து செயற்படத் தயங்கினர். ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனிநாடு பெற்றுக்கொள்வதனால் சமூகப் பிரச்சினைகைளத் தீர்க்கலாம் என்ற கருத்தின் ஆழமான செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர். பேரினவாத அரசினதும் மற்றும் இராணுவத்தினதும் ஒடுக்குமுறைகளுக் கெதிராக மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்க முயலவில்லை. சாதி மற்றும் சமூக ஒடுக்குமுறைகள் நிகழ்ந்த போதெல்லாம், “அனைத்து தமிழர்களையும் இணைத்து போரட்டத்தினை முன்னெடுக்கிறோம்” என்ற வாதத்தினை முன்வைத்து இப்போராட்டங்களுடன் இணைந்து கொள்ள முயலவில்லை.

இதே சமயம் சர்வதேச ரீதியிலும் ஒடுக்குமுறைக்கெதிராக நடைபெற்ற மக்கள் போரட்டங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளவும் முயலவில்லை. அத்தகைய போரட்டங்களின் பால் அக்கறை செலுத்தி, அவர்களுடன் இணைந்து செயற்பட முயலவில்லை. பாலஸ்தீனத்தவர்களின் போராட்டத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாது அவர்களிடமிருந்து ஆயுதப்பயிற்சிகளை மட்டும் பெற்றுக்கொண்டமை கவனத்தில் கொள்ள வேண்டியது. இந்தியப் புரட்சிகர சக்திகளுடன் – மக்கள் விடுதலைப் பேராளிகளுடன் இணைவை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒரு சிலர் முயற்சித்தாலும் அது ஒரு கனதியானதல்ல.

இந்த நிலைமைகளால், தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் ஒரு பெரும் போராட்டச் சக்தியாக முன்னெழ முடியாமல் போனது. தமிழ்த் தேசிய முற்போக்குவாதம் ஒரு போரட்டக் கருத்தியலாக வளராமல் மழங்கடிக்கப்பட்டது.

இன்னும் வரும்..

முன்னயவை:

முற்போக்குத் தமிழ்த் தேசியம் – ஆற்றலும் ஆற்றலின்மையும் : விஜய்

25 thoughts on “தமிழ்த் தேசிய முற்போக்கு வாதம்(2) – ஆற்றலின் வரையறை : விஜய்”

 1. தமிழ்த் தேசிய முற்போக்கு வாதம், புலிகள், புலிகளிற்கு எதிரான மாற்று குழுக்கள் இவர்களுக்கிடையிலான ஆரோக்கியமற்ற இடைவெளி அற்பத்தனமான போட்டிகள் தமிழீழ விடுதலை போராட்டத்தை ஆரோக்கியமற்ற இடைவெளியில் தள்ளி விட்டுள்ளது

 2. காந்தியம் பேசிப்பேசி எப்படி இந்தியாவை முதலாளித்துவம் சுரண்டுகிறதோ அதேபோல் முற்போக்குவாதம் பிற்போக்குவாதம் ஜனநாயகம் பன்மைத்துவம் இன்னும் பல பேசி எம்மையும் எம் மக்களையும் முதலாளித்துவத்தின் ஏவல் அடிமைகள் ஆக்காதீர்கள்….. தமிழனும் தமிழும் வாழ வழி செய்வோம்

 3. the information given are realy great. i found my way out with the resaon for the problems. keep it up. expecting the next one

 4. விஜய்,
  அருமையான ஆய்வு எமது நிலப்பிரபுத்துவ சிந்தனை எப்படி எம்மை ஆக்கிரமிக்கிறது என்பதை நாசூக்காகச் சொல்கிறீர்கள். இதற்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வையும் சொன்னால் மேலும் சிறந்தது.

 5. “தமிழ்த் தேசிய முற்போக்குவாதச் சிந்தனைகளை முன்வைத்த குழுக்களில் ‘புதிய பாதை” குழு பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.”

  .விடுதலை இயக்கத்தை உடைத்து,
  தனிநபர் கொலை,தபால் கந்தோர் கொள்ளை,ஆனைக்கோட்டை போலிஷ் நிலையத் தாக்குதல் எல்லாம் முற்போக்கா அல்லது புறம்போக்கா? எல்லாம் வயித்துப் போக்கு.

  ஆக்கிரமிப்பாளர் பைபிளைக் கொடுத்து தேசங்களைக் கவர்ந்தது போல, சிங்களப் பேரினவாதிகள் மாக்சிசத்தைக் காட்டி தமிழ்த் தேசியத்தையே பறித்து விட்டார்கள்

  1. தமிழர்கள் சுதந்திரமான விமர்சனச் சூழலுக்கான வலிமையைப் பெற்றிருந்தால் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட எத்தனையோ அநியாய அழிவுகளை குறைத்திருக்கலாம். புலிகளையும் போராட்டத்தினையும் ‘பயங்கராவதத் தன்மை கொண்டதாக” ஆக்காமல் இருந்திருக்கலாம். கிழக்கு மாகாணத்தில் பெரும் இயக்கப்படுகொலைகளை தடுத்திருக்கலாம். வன்னியில் பெருமளவு மக்கள் அழிவுகளை தடுத்திருக்கலாம். யுத்தத்தின் பின்னரான கொடுமை மிகு வாழ்வில் பல உரிமைகளையும் புணர்வாழ்வையும் பெற்றிருக்கலாம்.

   1. ‘கருத்துச் சுதந்திரம்’ என்று முதல் முப்பது ஆண்டுகள் என்ன நடந்தது?

    ‘கருத்து சுதந்திரமற்ற’ அடுத்த முப்பது ஆண்டுகள் என்ன நடந்தது?

    விளைவு தமிழ்த் தேசியத்தின் வீழ்ச்சிதான்.

    மாறாக சிங்கள பவுத்த பேரினவாதம் மாக்சிசத்தையும்,மகாவம்சத்தையும் தூக்கியபடி வீறு கொண்டெழுந்தது.

    விஜேய்! நீங்கள் சொல்கிற விடையங்கள் “அஞ்சு சதத்திற்கு கொஞ்ச ‘லாம்’ பெண்ணை” மாதிரி சீரணிக்கக் கூடியதாகவில்லை.

 6. கடந்த முப்பதாண்டு கால வரலாறு கடுமையான கருத்துச் சதந்திர மறுப்பிற்கான காலமாக இருந்திருக்கிறது. அதற்கு முன்னர் இருந்த நிலைமைகளும் மேம்பட்டவையல்ல. இன்று இருக்கின்ற நிலைமைகளும் கருத்துச் சுதந்திரத்திற்கான மறுப்புக்காலமாகவே இருந்து வருகிறது.
  இறுதியில் எதுவுமே இல்லாதவர்களாக இருப்பதான உணர்வே உருவாகியிருக்கிறது.
  நம் மத்தியில் அரசியல் சார்ந்த கட்டரைகள் குறைந்தளவிலான கவனயீர்ப்பினையே பெறுகின்றன. அதிலும் வர்க்கம்இ மாக்சிசம் எனப் பேசினால் விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. புலிகளை விமர்சித்து எழுதினாலும் பெரும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகிறது. அரசை விமர்சித்தால் அரசும் அடியாட்களும் கோபம் கொள்கிறார்கள். கூட்டமைப்பினை விமர்சித்தால் தேசிய வாதிகள் கோபம் கொள்கிறார்கள். இடதுசாரிகளை விமர்சித்தால் கண்டனங்கள் முன்னெழுகின்றன.
  பொதுவாக அரசியல் விமர்சனங்களை விரும்பாதவர்களாக இருந்து வருகிறோம்.
  ரஷ்யாவில் லெனினசத்தின் பின்பான நிலைமைகள்இ முதலாளித்துவ ஜனநாயகத்தில் ஈராக் மீதான யுத்தம் போன்றவை என்பவற்றிலிருந்து இந்தவாரம் சுதந்திரம் பற்றிப் பேசியதற்காக எழுத்தாளர் அருந்ததிராய் மீதான நடவடிக்கைகள் என்பவை வரை சுதந்திரமான அரசியல் வமர்சனத்திற்கான உரிமையை விட்டுக்கொடாது பேண வேண்டியதன் அவசியத்தை வலியதாக்கியிருக்கிறது.
  தமிழர்கள் சுதந்திரமான விமர்சனச் சூழலுக்கான வலிமையைப் பெற்றிருந்தால்இ புலிகளால் மேற்கொள்ளப்பட்ட எத்தனையோ அநியாய அழிவுகளை குறைத்திருக்கலாம். புலிகளையும் போராட்டத்தினையும் ‘பயங்கராவதத் தன்மை கொண்டதாக” ஆக்காமல் இருந்திருக்கலாம். கிழக்கு மாகாணத்தில் பெரும் இயக்கப்படுகொலைகளை தடுத்திருக்கலாம். வன்னியில் பெருமளவு மக்கள் அழிவுகளை தடுத்திருக்கலாம். யுத்தத்தின் பின்னரான கொடுமை மிகு வாழ்வில் பல உரிமைகளையும் புணர்வாழ்வையும் பெற்றிருக்கலாம்.
  வன்னியில் மக்கள் கொல்லப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. பேசினால் உணர்வைத் தூண்டுகிறாய் என்று இலங்கை அரசும் சொன்னது. இந்தியா அரசும் சொன்னது. பேசவே விடவில்லை. முளையிலே கிள்ளி எறிந்தார்கள். வலுவான முறையில் பேசுவதற்கான ஒரு குரல் இருக்கவில்லை. இருக்கவும் விடவில்லை.
  ‘மனிதர்கள் புழுத்துச் செத்ததை வன்னியில் பார்த்தேன்” என ஒரு சிங்கள இராணுவ வீரன் கூறுகிறான். என்ன இருந்தாலும் நிர்வாணமாக்கியிருக்கக் கூடாது என ஒரு சிங்கள இராணுவ வீரன் கூறுகிறான். எல்லாம் பாரதி கூறுவது போல் மூலைப்பொந்தில் நடக்கிறது. ஆனால் எங்களால் உலகத்து சனநாய அரசியல் சக்திகளால் எதனையும் செய்ய முடியவில்லையே.
  அடக்கு முறையாளர்களால் சமூகத்தின் மீதான தவறுகள் இழைக்கப்படுவதலிருந்தும்இ புரட்சியாளர்களால் சமூகத்தின் மீதான தவறுகள் இழைக்கப்படுவதலிருந்தும் தடுப்பதற்கான வழி சுதந்திரமான விமர்சனச் சூழலுக்கான வலிமையைப் பெறல்.
  எதிர்கலத்தில் எல்லா நிலமைகளையம் எதிர் கொள்வதற்கும் இதுவே வழிமுறையாகலாம். எனவேஇ
  சுதந்திரமான அரசியல் விமர்சனச் சூழலை வளர்த்தெடுப்பதற்கும் அதனை விட்டுக்கொடாமல் பேணிக் கொள்வதற்கும் நாம் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது முதலாவதும் முக்கியமானதுமான விடயமாக அமைகிறது.
  கிளிநொச்சி – 10ம் வாய்க்கால் சென்றிருந்தேன். அழிவுகள் மிகப் பெரிது. ஆயினும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
  மட்டக்களப்பில் குடும்பிமலை இராணுவமுகாம் சூழ்ந்த குடியிருப்புகளில் த.தே.கூ. வாக்களி என்ற போஸடர்.
  மூதூர் தமிழ் மக்கள் தமது பாரம்பரியக் கிராமங்களையே இழந்து அகதிகளாக வாழ்கிறார்கள். “தலைவர்கள்” உங்கள் கிராமங்களை மறந்து விடுங்கள் எனக்கூறுகிறார்கள். ஆயினும் அகதிகாளக வாழந்து கொண்டு எங்கள் கிரமத்திற்கு செல்ல விடுங்கள் என வாழ்கிறார்கள். அது ஒரு போராட்டம்தான். கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக கோயிலில் வழிபாட்டுப் போராட்டத்தினை செய்தார்கள்.
  வசந்த புரத்தில் மக்கள் போராடித்தான் – எதிர்ப்பரசியலை மேற்கொண்டுதான் மீள் குடியேறினார்கள். சாந்தபுரத்தில் போராடுகிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் வீடு புகுந்து பாலியல் சேஸ்டை புரியும் காமுகர்களை அடித்து விரட்டவில்லையா?
  கிளிநொச்சியில் சிறிதரன் எம்.பி பேசியது சுட்டிக்காட்டப் பொருத்தமானாயிருக்கும்…
  நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டதாக எல்லோரும் சொன்னார்கள். உண்மையில் நான் கூட சில வேளைகளில் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் எனக்கு அப்படி எந்த உணர்வும் எழுவதில்லை. நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்றால் நாங்கள் எல்லோரும் இறந்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமக்கு வாழ்வதற்கான உரிமைகள்இ நடமாடுவதற்கான உரிமைகள் வேண்டும். நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்பது ஏற்புடையதல்ல. இன்று இத்தனை முன்பள்ளிச சிறுவர்கள் கல்வி கற்ற வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 182 முன்பள்ளிகள் இருந்ததாகவும் தற்போது 161 முன்பள்ளிகள் இயங்கி வருவதாகவும் தெரிகிறது. இதுதூன் எங்கள் மீளெழுக்கைனா அடிப்படை.
  சமூகம் இயக்கம் இன்றியிருப்பதில்லை. அரசியல் இன்றியும் இருப்பதில்லை. ஏனெனில் உணவு நிவாரணம் கூட அரசியலாகவே இருக்கிறது. எனவே உணவு நிவாரத்தினை தா எனக்கோருவதும் அரசியலாகவே அமைகிறது.
  சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிராக நீண்ட காலத்திற்குரிய போராட்டத்தினை மேற்கொண்டு வந்திருக்கிறஇ இன்றும் போராடி வருகிற ஒரு பெரும் மக்கள் சமூகத்தினர் பற்றியும்இ அம்மக்களின் எதிர்கால விடுதலைக்கான அல்லது வாழ்வுக்கான வழிமுறைகள் பற்றியும் ஒரு தனிமனிதனிடம் தீர்வுகளை முன்வைக்கக் கோருவது பொருத்தமானதாக இருக்குமா எனத்தெரியவில்லை.
  அது பெரும் முயற்சி. வாழ்தல்இ போராடுதல்இ அனுபவங்களைப் பெறுதல்இ போராடுதல் என நீண்டு செல்லும் பெரு முயற்சி.
  அரசியல் விடுதலைக்காக மக்கள் தமது வாழ்வியலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதோஇ அபிவிருத்தியை நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்பேதாஇ மீள்குடியேற்றத்தினை நிறுத்த வேண்டும் என்பதோஇ உதவிகளை செய்யக்கூடாது என்பதோ பொருளாக கொள்வதிலிருந்து தவறுகள் நேர்கின்றன.
  சுதந்திரமான விமர்சனச் சூழலை மறுப்பதிலிருந்து தவறுகள் நேர்கின்றன.
  சுதந்திரமான விமர்சனச் சூழலுக்கான வலிமையைப் பெற்றுஇ அடக்குமுறையாளர்களுக்கெதிராக வாழும் – வாழ்வதற்காக போராடும் – உரிமைகளுக்காகப போராடும் மக்களுடன் நாமிருப்போம்.

 7. விசுவை எதற்கு இங்கே இழுக்கிறாய்?..

  1985 யாழ் பல்கலைக்கழக நிகழ்வுகள் தெடர்பாக விசு எழுதிய கட்டுரைகளை ஏன் இருட்டிடுப்புச் செய்கிறீர்கள்?

  இயக்கமுரண்பாடுகள் படுகொலையை எட்டியபோது… ( சராசரி எல்லா இயக்கங்களிலும்) 1985 மாந்தோட்டத்துக்குப் பின்னர்… (இவ்வரலாறு தெரியாதவர்கள்) தமிழ் தேசியத்தின் எதிரிகள் என்றால் மிகையாகாது!

  விசுவின் ‘ஐக்கியமுன்னணி’ திட்டத்தை விசாரிக்காமல், அதை விமர்சனம் செய்யாமல் யாரும், அதற்கு முந்திய காலத்தை எடுத்த எடுப்பில் விமர்சனம் செய்வது, வரலாற்றுப் பிறலலும், துரோகமும் ஆகும் என்பதே எனது கருத்து!.

  ரூபன்
  291010

  1. ரூபன், ஐக்கிய முன்னணியும் ஒற்றுமையும் உருவாகவில்லை என்பதற்கான நல்ல குறியீடு நீங்கள். தொடருங்கள் ……. இன்னும் தெரிந்து கொள்ள நிறையவே இருக்கிறது.

 8. விஸ்வானந்ததேவனைப் புலிகளுக்கு ஆட்காட்டிக் கொன்றவர்களே இப்போது அவருக்காகக் குரல் கொடுகினம்.???? அவரோடு சுத்தப்பட்ட அரசியலும் விசுவின்ர கொலைக்கு எப்படி உடந்தையானதென வரலாறு பேசாது போனாலும் உண்மைகள் ஒரு நாள் வெளிவரும். விசுவைக் கொன்றவர்களே விசுவுக்கு…

  1. ஓகே! விசுவின் கொலை ‘புலிக்கு’ ஆட்காட்டி நடந்த கொலையாகச் சொல்கிறீர்…

   உம்மால் புலிகளால்தான் விசு கொல்லப்பட்டார் என்பதை, வெளியில் கொண்டுவர முடியுமா?

   முடியாவிட்டால் உண்மைக்காக நீயும் வாய்மூடித்தான் இருக்கவேண்டும். 25 வருடத்துக்குப் பிறகு இந்த ‘கீச்சுமாச்சுத் தம்பள’ விளையாட்டு வேண்டாம்!

   விசு எப்படி கொல்லப்பட்டார் என்பதை நாம், நாம் இந்த மக்கள் முன் நிரூபித்தே தீருவோம். இதில் எமது ஆயுட்காலம் கழிந்து போனாலும் , அடுத்த சந்ததிக்கு இக்கடமையை கையளித்தே நாம் செல்வோம்…

   ரூபன்
   291010

   1. ரூபன் உங்களுக்கு எல்லாம் ஏக வசனத்தில் தான் வருமோ?

    அதென்ன “நீ”-“இழுக்கிறாய்”? உமக்குப் பொதுமேடையில் உரையாடத் தெரியாது போனால் அதைக் கற்றுக் கொள்ளும் முதலில்.

    விசுவைக் கொன்றவர்கள் நீங்களா?உடனே கொதிக்குது… குற்றுமுள்ளவர்கள் அதிரத்தான் செய்வினம்.

    உங்கட வேலையே ஊரை நாசமாக்கிறதுதானே-இதில புதிதாய் எதை விட்டுத் துலைக்கப் போறீர்கள்?

    1. விசுவின் கொலை அவரின், அவர்சார்ந்த அமைப்பின் சொந்த ‘வள்ளத்தில்’ நடந்ததல்ல. இதில் பல பொதுமக்கள் இறந்தும், அல்லது காணமல் போயுமுள்ளனர். இம்மக்களிடமும் நிறையச் செய்தியுள்ளது. இது விசுவின் மரணம் மட்டுமல்ல…இதில் இழப்புக்களால் பதிக்கப்பட்ட மக்கள் இலட்சக்காண காசை இழந்து ‘அங்கொடை’ வரைக்கும் தேடிய, தேடும் வரலாறும் இன்றும் தொடர்ந்தபடிதான் இருக்கிறது…

     பி.கு

     எனது பின்னூட்டம் கட்டுரையாளருக்கும் சேர்த்துத்தான். இதில் பின்னூட்டக்காரரின் கருத்துக்களும் அடங்கும்!

     ரூபன்
     301010

 9. இன்று அரசியல் பற்றிச் சிந்திக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை இது. இலங்கை சூழலில் இருந்து விஜய் எழுதுகிறார் என்று நினைக்கிறேன். அதனால் தான் தெளிவான வேறுபாடு தெரிகிறது. கட்டுரையும் விஜயின் பின்னூட்டமும் அனைவரும் விவாதிக்க வேண்டிய கருத்துக்கள்.

 10. //கிளிநொச்சி – 10ம் வாய்க்கால் சென்றிருந்தேன். அழிவுகள் மிகப் பெரிது. ஆயினும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்./
  // விஜய். பிரித்தானியா சென்றிருந்தேன் அபிவிருத்தி மிகப் பெரிது ஆயினும் தமிழ் மக்கள் சோரம் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். பிரான்ஸ் போயிருந்தேன் சுதந்திரம் மிகப் பெரிதாக இருந்தது ஆயினும் தமிழ் மக்கள் உரிமைகளை மறுத்துக்கொண்டிருக்கிறார்கள். ………………

 11. தமிழ் தேசியத்தை முள்ளி வாய்க்காலில் நிலை நிறுத்தி விட்டு ஒருவர் போய்விட்டார்.இப்போ முற்போக்கு வாதிகள் தொடங்கி விட்டார்கள்.உங்கள் பங்குக்கு நீங்களும் மக்களைக் கொலை செய்யத் திட்டமிட்டு வருவது தெரிகிறது.
  கிறுக்கன் ,S.G.ராகவன், kantha ,பாரதி, நெருஞ்சி , ரூபன் , சிவா .இனி மயிர் பிளக்கும் வாதங்கள் தொடங்கபப் போகிறது.

  ரூபன் உண்மைகளை எல்லாம் சந்தியில் போட்டு உடைக்கப்போகிறார்.பாப்போம் !!!

  1. உண்மை! இது ஒரு சோத்துப் பருக்கைக்கும் உதவாது ஒரு பருக்கை!

   நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள் என்பதை புரியாத ‘யதார்த்தவாதி’கள் அல்ல நாம்.
   -கம்பியூட்டர் நமக்கும் அத்துபடி – இதற்காக வீண்சண்டை வேண்டாம்!!
   ‘உண்மைக்கு’ ஒரு விளக்கம்! , உங்களின் ‘சந்நிதியில்

   ‘ எதையும் போட்டுடைக்க நான் தயாரில்லை!,

   அன்பரே இனி ‘மயிர் பிளக்க’ ஒன்றுமில்லை’ , அப்படி இருப்பதானால் அது – இனவாதம் – என்ற சொற்பதற்க்குக்கும் , தேசியம் என்ற (தமிழ் தேசிய வெறியுக்கும் ) இடையான – தமது நிழ்கழுக்கு இடையிலான மல்யுத்தம்!

   இதை சந்தியில் நடத்த நான் ‘இனியொருவல்ல’ …..

   புரிந்தால் சரி!!!…

   ரூபன்
   301010

   1. வீட்டில சாய்மனைக் கட்டில்ல இருந்து நாங்கள் கன் க்க கதைக்கிறோம் ஆனால் காம்பில இருக்கிற சனம் பாயும் தலயணயும் இல்லாமல் படுத்து உறங்குது.ஆன சாப்பாடில்ல, வாழ்க்கைக்கு நம்பிக்கையும் இல்ல இத நினைச்சுப் பாருங்கோ.

 12. ரூபன்

  இப்படிச் சொன்னால் எப்படி ? நீங்கள் இருந்த இயக்கம் நடாத்திய கொள்ளை பற்றியாவது சொல்லுங்கள்.

 13. கருத்துக்களால் மோதுங்கள் வழி பிறக்கும். ஆனால் மோதலின் போது அடம் பிடித்தல், வக்கிரம் கொள்ளல், உதாசீனம் கொள்ளல், பகைமை உணர்வை வெளிப்படுத்தல் என்பவற்றை கை விடுவோம்.

  மாக்சிச லெனினிசம் பேசிய பலர் சிங்கள பெருந்தேசிய வாதத்திர்த்க்கு சோரம் போனதுண்டு. ஆனால் மாக்சிச லெனினிச கருத்துக்களை உள்வாங்கி சமூக விடுதலையும் இன விடுதலையும் பெற்று கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் வேலைத் திட்டங்களில் தீவிரமாக இறங்கி பல்வேறு அக புற காரணிகளால் முனை மழுங்கி போனவர்களும் உண்டு. தமிழ் மக்களின் அரசியல் தொடர்ச்சியாக தவறான பக்கங்களின் ஊடாக நகரக் கூடாது என்பதே எல்லோரினதும் அவா.

  சார் பொன் ராமநாதன், பொன்னம்பலம், செல்வநாயகம், மற்றும் தமிழ் கம்னிஸ்ட்கள் ஆக இருக்கட்டும் பத்மநாபா, பாலகுமார், பிரபாகரன், ஸ்ரீசபாரத்தினம், நாகராஜன், உமாமகேசுவரனாக இருக்கட்டும் எல்லோரினது பாதைகளின் வலுவற்ற தன்மையே இன்றைய எமது நிலைமைக்கு காரணம் என்பதை உணரவேண்டும். இதனையும் தாண்டி விடுதலை புலிகளின் ஏக பிரதிநிதித்துவக் கொள்கை தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்தியது. இக்கொள்கையால் தமிழ் மக்கள் கூட பல துருவப் படவேண்டியிருந்தது. இதற்குரிய சர்வதேச ஆதரவும் புலிகளிற்கு கிடைக்கவில்லை.
  கிளிநொச்சியில் ஸ்ரீதரனும் கோப்பாயில் சுரேஷ்பிரேமச்சந்திரனும் இளையர் அணிகளை கட்டி எழுப்ப முற்படுவதாக அறியக் கிடைக்கிறது இது வெறும் வாக்கு வங்கிக்காக இருக்காமல் ஒரு புரட்சிகர கட்டுமானமாக இருக்க நாம் அனைவரும் உறுதுணையாக நின்று தேவையான ஆலோசனைகளையும் வழங்கவேண்டும்.

  தமிழர்கள் தமது அடுத்த கட்ட நகர்வை முன்னெடுக்கும் போது புலிகளின் சரியான பக்கத்தையும், தவறான பக்கத்தையும் பார்வைக்கு உட்படுத்த வேண்டும். இங்கு புலிகளை ஆதரித்தல் எதிர்த்தல் அல்ல என்பது பிரச்சனை, எதிர்காலத்தில் எங்கள் ஆற்றல் அனைத்தும் முரண்பாடுகளால் சிதைந்து போகாமல் புதிய சிந்தனைகளோடு பயணிக்க வேண்டும்.
  சிலர் NLFT போன்ற அமைப்புகளை முற்போக்கு வட்டகைகளுக்குள் அடக்குகின்றனர் அந்த அமைப்பில் இருந்து வந்த மனோ ரஞ்சன் என்ற மாயாவியும் இன்றுவரை உலாவுகின்றார். புலிகாளால்தான் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இலங்கை ராணுவத்தாலோ அரசாலோ அல்ல என வாதம் புரிந்த மனோரஞ்சன் போன்றோரிடம் சென்று கேளுங்கள் பிரபாகரனும் இறந்தாச்சு புலியும் போயாச்சு தமிழ் மக்களின் இன்றைய நிலை என்ன வென்று? புரட்டு வாதிகளிடம் பதில் இருக்கப் போவதில்லை.
  ஈழப் போராட்டத்தில் முற்போக்கு வாதம் பேசுவோரும் புலிவாதம் பேசுவோரும் அடிப்படையில் பிற்போக்குவாதிகளாக இருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றதது. தாம் சொல்வதுதான் சரி மற்றையவை எல்லாம் குப்பைகள் எனக்க கூறி நிராகரிக்கும் பண்புகள் பலரிடம் விரவியே காணப்பட்டது.
  1990 களின் ஆரம்பம் என நினைக்கிறேன் வெரித்தாஸ் வானொலியை கிரகிக்கும் ஒரு முன்னாள் போராளி என்னிடம் கருத்து பகிரும் போது கேட்டார் நீர் வெரித்தாஸ் கஸ்பார் பற்றி என்ன நினைக்கிறீர் என்று? நான் சொன்னேன் எமது விடுதலை போராட்டத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்ட சிறப்பான ஒரு மனிதர் அவரிடம் நாமே பலவற்றை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று. அதற்கு அவர் அமைதியாகச் சொன்னார் உவங்கள் எல்லாம் CIA, RAW போன்ற அமைப்புகளின் புலனாய்வுத் துறையாக இருக்கும் என்று. அப்போது நான் அதனை ஏற்று கொள்ளும் மன நிலையில் இல்லை. (பின்னாளில் அவர் புலிகளால் ஏதோ ஒரு காரணமாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக அறியக் கிடைத்தது) ஒரு காலத்தில் புலிகளால் எந்த பகுப்பாய்வு இன்றியும் புரட்சிகர சக்திகளாக முற்போக்கு வாதிகளாக இனங்காணப்பட்ட அல்லது இனங்காட்டப்பட்ட சக்திகள் குறித்த தற்போதைய நிலைமை எமக்கு தகுந்த பாடமாக அமையவேண்டும். எனவேதான் ஆரோக்கியமான விவாதங்கங்களும் கருத்தாடல்களும் பலமுனையில் இருந்து பக்குவமாக வரவேண்டும், அதனை பகுப்பாய்ந்து செயல் படுவதன் மூலம் நாம் எமது இலக்கினை எட்ட முடியும். பகுப்பாய்வு அற்ற முறையில் எடுக்கப் படும் தனி மனித முடிவுகள் நன்மையை தரப் போவதில்லை என்பதை நாம் காலத்தால் உணர்ந்து உள்ளோம்.

 14.  //கிளிநொச்சியில் ஸ்ரீதரனும் கோப்பாயில் சுரேஷ்பிரேமச்சந்திரனும் இளையர் அணிகளை கட்டி எழுப்ப முற்படுவதாக அறியக் கிடைக்கிறது இது வெறும் வாக்கு வங்கிக்காக இருக்காமல் ஒரு புரட்சிகர கட்டுமானமாக இருக்க நாம் அனைவரும் உறுதுணையாக நின்று தேவையான ஆலோசனைகளையும் வழங்கவேண்டும்.//இத்தனை பெரிய தமிழ் மானிட அவலம் நடந்த பிறகு சர்வதேச நாடுகள் அனைத்தும் எம்மைக் கைவிட்ட பிறகு கிளிநொச்சியில் ஸ்ரீதரனும் கோப்பாயில் சுரேஷ்பிரேமச்சந்திரனும் இளைஞரைக் கூட்டி இராணுவத்திடம் கொடுக்கப் போகிறார்களா. இதைத்தானே முன்பிருந்த வலியவர்களும் செய்து எல்லாவற்றிற்கும் வாய்க்கரிசி போட்டுச் சென்றார்கள்.
  //சிலர் NLFT போன்ற அமைப்புகளை முற்போக்கு வட்டகைகளுக்குள் அடக்குகின்றனர் அந்த அமைப்பில் இருந்து வந்த மனோ ரஞ்சன் என்ற மாயாவியும் இன்றுவரை உலாவுகின்றார். புலிகாளால்தான் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இலங்கை ராணுவத்தாலோ அரசாலோ அல்ல என வாதம் புரிந்த மனோரஞ்சன் போன்றோரிடம் சென்று கேளுங்கள் பிரபாகரனும் இறந்தாச்சு புலியும் போயாச்சு தமிழ் மக்களின் இன்றைய நிலை என்ன வென்று? // NLFT என்பது ஒரேயொரு மனோரஞ்சனின் அமைப்புத்தானென்றால் நீங்கள் எழுப்புகிற கேள்வி சரி.ஆனால் அது மானிட நேயவாதி விசு போன்றவர்களால் கட்டப்பட்டது. அது கூட உங்களுக்கு தெரிந்திருக்க நியாமில்லை

 15. /// அதற்கு அவர் அமைதியாகச் சொன்னார் உவங்கள் எல்லாம் CIA, RAW போன்ற அமைப்புகளின் புலனாய்வுத் துறையாக இருக்கும் என்று. அப்போது நான் அதனை ஏற்று கொள்ளும் மன நிலையில் இல்லை. (பின்னாளில் அவர் புலிகளால் ஏதோ ஒரு காரணமாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக அறியக் கிடைத்தது) ஒரு காலத்தில் புலிகளால் எந்த பகுப்பாய்வு இன்றியும் புரட்சிகர சக்திகளாக முற்போக்கு வாதிகளாக இனங்காணப்பட்ட அல்லது இனங்காட்டப்பட்ட சக்திகள் குறித்த தற்போதைய நிலைமை எமக்கு தகுந்த பாடமாக அமையவேண்டும். ///

  ராகவன் சொல்கின்ற மனம் திறந்த கருத்துக்களே இன்றைய தேவை.அதை விடுத்து தாங்கள் பெரிய மேதாவி ( ரூபன் ) என்ற நினைப்பில் பின்னோட்டம் இடுவதல்ல.

 16. நீங்கள் எழுதிக் கொண்டே இருங்கள் தமிழன் அழிந்து கொண்டு இருக்கிறான். அழிந்த பிறகும் நீங்கள் எழுதிக்கொண்டிருங்கள். வாசிப்பதற்
  கு யாருமே இருக்க மாட்டார்கள்.

  1. எழுதுகிறவர்களை எழுத வேண்டாம் என்று எழுதி விட்டீர்கள்.
   சரி.
   இனி என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

Comments are closed.