தமிழ்த் தேசியத்தின் தோல்வி – மாற்று அரசியலின் ஆரம்பப் புள்ளி : சபா நாவலன்

இலங்கைத் தீவின் இன்றைய பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு என்பது வெளிப்படையான, அரசியல் சர்ச்சைகளுக்கு உட்படாத கூற்று. தேசிய இனப் பிரச்சனைக்கான சமூக அடித்தளம் என்பதே அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பிற்கான பிரதான காரணமாகவும் அமைக்கிறது.

ஆனல் முதலாளித்துவம் ஏற்றுமதி செய்யப்பட்டு அது தனது இயல்பான வளர்ச்சியைக் கண்டிராத இலங்கை போன்ற நாடுகளின் தேசிய இனங்கள் ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து வளர்ச்சியடைந்த தேசிய இனங்களுடன் ஒப்பிட முடியாத வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன என்பதையும் மறக்க முடியாது.

ஐரோப்பிய தேசிய இனங்கள் உறுதியான தேசிய முதலாத்துவ வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்டது. வளர்ச்சி நிலையிலிருந்த போல்கன் நாடுகளின் தேசிய இனங்கள் மத்தியில் கூட தமது தேசியப் பொருளாதார வளர்ச்சியில் அக்கறை கொண்ட தேசிய முதலாளித்துவ வர்க்கம் உறுதியானதாகக் காணப்பட்டது.

ஐரோப்பியத் தேசிய இனங்களதும் தேசங்களினதும் வளர்ச்சிப் போக்குக் குறித்த ஆய்வுகள் நூற்றுக்கணக்கில் எம் முன்னால் பரந்து கிடக்கின்றது. லெனின், ஸ்டாலின், கெல்னர் போன்ற பல அறிஞர்களின் முதலாளித்துவப் பொருளாதார காலத்திற்குரிய குறிப்பான மக்கள் கூட்டமான தேசிய இனங்கள் குறித்த ஆய்வுகள் நீண்ட கற்கைகளை எம் முன்னால் விட்டுச் சென்றுள்ளனர். பெனடிக்ட் அன்டர்சன் போன்ற ஆய்வாளர்கள் தேசிய இனங்களின் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிப் போக்குக் குறித்தும் அதற்கான புறநிலை குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.

ஐரோப்பிய மூலதனம் விரிவடைந்தது ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த காலத்தில் ஐரோப்பிய தேசங்களும் அவற்றின் தேசிய இனங்களும் தமது தேசியப் பண்பை இழந்து போயின. மறுபுறத்தில் ஏகாதிபத்தியங்களால் ஏற்றுமதி செய்யப்பட்டு அவற்றால் தமது நலன்களுக்காகப் பாதுகாக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் தேசிய இனங்களும் குறைநிலை வளர்ச்சியடைந்த தேசிய இனங்களாகவே காணப்பட்டன.

இவ்வளர்ச்சியற்ற தன்மையின் மிகப்பிரதான சமூகக் கூறாக தரகு முதலாளித்துவ வர்க்கம் காணப்பட்டது. முரண்பட்ட இரண்டு பிரதான வர்க்கங்களாக உற்பத்தியின் அடிநிலையிலிருக்கும் வறிய விவசாய வர்க்கமும் இதனோடு கூட சிறு தொகையான தொழிலாளர்களும் மறு புறத்தில் தரகு முதலாளிய வர்க்கமும் என்ற வகையில் சமூகம் பிளவுண்டிருந்தது.

இதன் பிரதியாக்கம் ஒவ்வொரு தேசங்களிலும் வளர்ச்சி நிலையிலிருந்த தேசிய இனங்களிலும் காணப்பட்டன. இதன் இடையே மத்திய தரவர்க்கத்தின் கீழணிகள், மத்தியதர வர்க்கம், மத்தியதர வர்க்கத்தின் மேலணிகள் என்று ஒரு வகையான புதிய கலவையாக சமூகம் மாற்றமடைந்தது. மூன்றாமுலக நாடுகள் பல வளர்ச்சி நிலையிலுள்ள தேசங்களின் கூட்டமைப்பாகின.

வளர்ச்சி இடை நிறுத்தப்பட்ட தேசங்களாக நாடுகளுள் புதைந்திருந்த தேசங்கள் உருவாகின. இத்தேசங்கள் இரண்டு வகையான ஒடுக்கு முறைகளை எதிர் நோக்கின. ஒரு புறத்தில் ஏகாதிபத்திய பொருளாதார ஆக்கிரமிப்ப்பும் மறு புறத்தில் பெருந்தேசிய அரசுகளின் ஒடுக்கு முறையும் என்ற இருவழித் தாக்குதல்களை ஒடுக்கப்பட்ட வளர்ச்சி நிலையிலுள்ள தேசங்கள் எதிர்கொண்டன.

ஒடுக்கப்படும் தேசங்கள் தனியரசு அமைத்துக் கொள்வதற்கான போராட்டம் தேவையானதும் முற்போக்கனதுமாகும். எது எவ்வாறாயினும் தேசியத்திற்கான போராட்டத்தில் இந்த இரண்டு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டங்கள் சமாந்தரமாக முன்னெடுக்கப்படாவிட்டால் அது தேசிய அரசை அமைப்பதற்கான போராட்டமாக அமைய முடியாது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்ற வகையில் தரகு

முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகவும், தேசிய அரசுகளின் உள்ளமைந்த தரகு முதலாளியச் சிந்தனைக்கு எதிரான போராட்டமாகவும் அமைந்திருக்கும்.

மத்தியதர வர்க்கம் எப்போதும் பலமடைந்த தரகு முதலாளிகளை ஆதரிக்கும் அல்லது அவர்களை நோக்கி நகரும் சிந்தனைப் போக்கினையே கொண்டிருக்கும் என்பது வெளிப்படையான ஒன்று. ஆக மத்தியதர வர்க்கமும் அதன் மேலணிகளையும் தளமாமக முன்வைத்து தேசிய விடுதலைக்கானதும் தேசங்களின் விடுதலைக்கானதுமான போராட்டங்கள் உருவாக முடியாது. அவ்வாறு உருவாகுமானால் அதன் வளர்ச்சி என்பது தேசங்களின் தன்னாட்சிக்கு எதிரான போராட்டத்தைத் தேசிய முழக்கங்களூடாகத் தலைமை போரட்டமாகவே மாற்றாமடையும்.
இந்த அடிப்படையில் தோல்வியில் முடிவடைந்த போராத்திற்கான முன்னுதாரணத்தை முள்ளிவாய்க்காலில் புலிகள் விட்டுச் சென்றுள்ளனர்.

இவர்கள் தமது வர்க்க நலனின் அடிப்படையில் உறவு கொண்டிருந்த ஏகாதிபத்திய அதிகாரங்கள், இந்திய அரசு, அவற்றின் லொபிகள் அனைத்துமே வீரம் செறிந்த மக்களின் உணர்வுகளைச் சிதறடித்து சின்னாபின்னமாக்கியுள்ளன.

இதே சிந்தனை முறையின் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது. தவிர, தேசிய விடுதலைக்கான சமூக இயங்கு தளத்தின் முன்னணி சக்திகளாக இலங்கையில் தம்மைக் கட்டமைத்துக் கொள்ள முனைகின்றவர்கள் கூட இந்த யதார்த்ததைப் புரிந்துகொண்டு மாற்று அரசியலை முன்வைக்கத் தயாரற்ற நிலையிலேயே தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றனர்.

நமது தோல்வியிலிருந்து கற்றுக்கொள்கின்ற பாடத்தின் முதல் அத்தியாயம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்படலாம். தன்னுரிமைக்கான போராட்டத்தில் முன்வைக்கப்படுகின்ற வேலைத்திட்டத்தின் மூலோபாயத்தின் முக்கிய பகுதி இந்த வர்க்கமுரணைப் புரிந்துகொள்வதிலிருந்து தான் ஆரம்பிக்கப்பட முடியும்.

47 thoughts on “தமிழ்த் தேசியத்தின் தோல்வி – மாற்று அரசியலின் ஆரம்பப் புள்ளி : சபா நாவலன்”

 1. இது தமிழ் தேசியத்தின் தோல்வியா? தமிழ் தரகு முதலாளித்துவத் தலைமை தேசிய விடுதலைப்போராட்டத்தை தலைமையேற்றதால் ஏற்பட்ட தோல்வியா? கொஞ:;சம் விளக்குவீர்களா?

  1. இனிஒரு,
   தேசம் நெற் இணையங்களில் நாடோடி என்ற பெயரில் பின்னூட்டமிடுவது நான் என்ற புரிதலில் பல நண்பர்கள் தொலபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்கள். 1988இலிருந்து புலம்பெயர் சிறு பத்திரிகைகள், சஞ்சிகைகளில் நாடோடி என்ற பெயராலும் பரவலாக நான் அறியப் பட்டதன் விளைவே இந்த தடுமாற்றம் என நினைக்கிறேன். இங்கே பின்னூட்டமிடும் நாடோடி நானில்லை நண்பர்களே. இதே போன்றே குலன், தீவான் என்ற பெயர்களில் எழுதுவதும் நான் என்ற கருத்து சிலரிடம் நிலவி வருகின்றது. அவையும் நான் அல்ல என்பதை நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் இதனூடாக தெரியப்படுத்த விரும்புகிறேன். இனிஒரு நிர்வாகமாவது எனது இந்த அறிவித்தலை தணிக்கை செய்யாது வெளியுடுமென்ற எதிர்பார்ப்புடன்….
   தமயந்தி, நோர்வே-
   uyirmei.norway@gmail.com

  2. தேவையானதும் முற்போக்கானதுமான போராட்டம் தரகு முதலாளித்துவத்தை நோக்கிச் செல்லும் தலைமையினால் சீரழிந்து சிதைந்து போனது என்பதே எனது கருத்து.

 2. வெளிப்படையான விசாரணைக்குத் தயார்! தவறு செய்திருந்தால் எவ்வித தண்டனையையும் ஏற்றுக் கொள்வேன்!! TRO றெஜி அறிக்கை!
  [ புதன்கிழமை, 15 செப்ரெம்பர் 2010, 08:05.10 AM GMT +05:30 ]
  என்மீது சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற மக்கள் அமைப்புக்கள், ஊடகங்கள், பொதுமக்கள் ஆகியோரைக் கொண்டு அமைக்கப்படும் எவ்வித வெளிப்படையான விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக உள்ளேன்.

  விசாரணைகளின் முடிவில் தவறுகள் இருந்தால் நான் பகிரங்கமாகப் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்பேன். அல்லது அதற்கான தண்டனைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அது எத்தகைய தண்டனையாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன். இவ்வாறு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்த திரு பிரேம் றெஜி இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  ‘நான் எந்தவொரு கட்டத்திலும் சிங்கள அரசின் அல்லது அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படவில்லை. அவ்வாறான தேவை எனக்கு இல்லை. அமைக்கப்படும் விசாரணைக்குழு எம் சமுதாயத்தில் பொது வேலைகளில் ஈடுபடுவோர்க்கு ஓர் முன்னுதாரணமாகவும் இருக்கும். தயவு செய்து இதனை செய்யுங்கள்’ என இவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  திரு பிரேம்றெஜி அவர்களின் அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகிறோம்

  அன்பிற்குரிய தமிழ் பேசும் மக்களே,

  வணக்கம்

  முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் போராட்டத்துடன் சேர்ந்து வேலை செய்தவர்கள், போராட்ட கட்டமைப்புக்கள், இன்னும் பல்வேறு தமிழர் அமைப்புக்கள், தனி நபர்கள் தம் பாட்டில் தமக்குத் தெரிந்த வகையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

  இது ஒருபுறம் இருக்க ஜனநாயகம், கருத்து சுதந்திரம் என்ற பேரில் பிரச்சினைகளை ஆராயாமல் சில அமைப்புக்கள், ஊடகங்கள்,தனி நபர்கள் தம்பாட்டில் விளக்கம் கொடுத்து, அதனை சமூகத்தில் திணித்தும் வருகின்றனர்.

  கூடுதலாக பக்கச்சார்புகள், தன்நிலை வாதப் பிரதிவாதங்கள், குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகள் முகம் தெரியாதவர்களினால், அனாமதேயமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் என் சார்ந்த விடயங்களும் அப்படியே.

  நான் எந்தவொரு கட்டத்திலும் சிங்கள அரசின் அல்லது அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படவில்லை அவ்வாறான தேவை எனக்கு இல்லை. அதே நேரம் பொது மக்களின் தேவை கருதி பல நாடுகளுடன் பல உதவி அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேண வேண்டிய சூழல் என்னைப் பொறுத்தவரை உள்ளது.

  எமது போராட்டம், மாவீரர்களின் தியாகங்கள் எமக்கான பாதையினை, கடமையினை தெளிவாகக் காட்டியுள்ளன. வரலாறு நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்து வருகின்றது.

  அந்த வகையில் நான் தமிழர் தலைமைக்குப் பதில் கூறும் வகையிலும், தமிழ் பேசும் பொது மக்களினால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஏன் பொதுமக்களுக்கும் கூட பதில் கூறும் வகையிலேயே என் செயற்பாடுகள் இருக்கும்.

  என் சார்ந்த கருத்துக்களை ஒரு தலைப்பட்சமாக எழுதுவோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நான் கூறுவது என்னவெனில் இணையத் தளங்களில் என் சார்ந்த செய்திகளை வெளியிட்டும் பின்னர் அதற்கு நான் பதில் அளிப்பதும் போதுமானதல்ல. பிரச்சினகளை நியாயபூர்வமாகவும் வெளிப்படையாகவும் அணுகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

  ஆகவே பொதுமக்களால் அல்லது தற்போது புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற மக்கள் கட்டமைப்புக்களான மக்கள் பேரவை, நாடுகடந்த அரசாங்கம், புத்திஜீவிகள், உலகத் தமிழர் பேரவை, அமைப்பு செயற்பாட்டாளர்கள், புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள், ஊடக அமைப்புக்கள் மற்றும் மாற்றுக் கருத்துக்கள், கொள்கைகள் கொண்ட அமைப்புக்கள் எல்லோரும் சேர்ந்து ஓர் விசாரணைக்குழுவை அமையுங்கள்.

  இவ்வாறு அமைக்கப்படும் குழு என்னை வெளிப்படையாக கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் விசாரிக்கட்டும். நான் முழு அளவில் இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன். விசாரணைகளின் முடிவில் தவறுகள் இருந்தால் நான் பகிரங்கமாகப் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்பேன். அல்லது அதற்கான தண்டனைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அது எத்தகைய தண்டனையாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன்.

  நான் எந்தவொரு கட்டத்திலும் ஓடி ஒழியப்போவதும் இல்லை. அல்லது தவறுகளை மறைப்பதற்காகவோ என்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவோ எம் இலட்சியத்திற்கு எதிராக செயற்படும் சக்திகளிடம் ஓடிவிடப்போவதும் இல்லை.

  இந்த விசாரணைக்குழு எம் சமுதாயத்தில் பொது வேலைகளில் ஈடுபடுவோர்க்கு ஓர் முன்னுதாரணமாகவும் இருக்கும். தயவு செய்து இதனை செய்யுங்கள். நான் எம் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும், எம் மக்கள் சமூகத்திற்கும் சொந்தமானவனே தவிர என் குடும்பத்தாருக்கு சொந்தமானவன் அல்ல. ஆகவே எம் சமூகத்திற்கு என்னை விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் உரிமையும் கடமையும் உண்டு. இது என் வாக்கு மூலம். இதனைச் சட்ட ரீதியாக எனது சட்டவாளர் ஊடாகவும் மெய்ப்பித்து நான் விரைவில் பொதுமக்களிடம் ஒப்புவிப்பேன்.

  நன்றி
  வணக்கம்

  ஒப்பம்
  கா. பிரேம்ரெஜி (ரெஜி)
  regi.itro@gmail.com

  1. உம் முகம் பார்க்க ஆசைப்படுகிறோம்.

   1. அந்த ஆசை எமக்கும் உண்டு!.

 3. நடந்து முடிந்த தமிழ்மக்கள் போராட்டத்தை விளங்கி கொள்வதற்கு லெனின் ஸ்டாலினிடம் போகத் தேவையை ஒரு “பேட்டைரெளடி” யை ….அவன் என்ன செய்வான்
  எது செய்வான் என்பதை புரிந்து கொண்டாலே போதுமானது.
  கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் புலம்பெயர்தமிழர்கள் இந்த பேட்டைரெளடிக்குபின்னால் அறிந்தும் அறியாமலும் அணிதிரண்டது தான்.இவர்கள் என்னசெய்வார்கள்? ஊரிலை பிரச்சனை நடக்கவேணும்.ஆனாபடியால் தான் விசாவுக்கு
  இங்குஉத்தரவாதம். இல்லாவிட்டால் சுவிஸ்சில் நடந்த மாவீரர் நாளில் மூன்றுதரம் மணமுடித்த
  தமிழ்பெண்மணி ஒரு தாலியை களட்டி உண்டியில் போட்டிருப்பாவா?
  சபாநாவலன் சொல்லுகிற ஒரு விஷயம் மாத்திரம் உண்மை.முதல் அத்தியாயத்தில் இருந்தே! தொடங்கப்படவேண்டும்….ஆனால் அது எப்படி?.

 4. அங்கிங் கெனாதபடி எங்கும் உள்ளவன் இறவன் என உணர்ந்து பற்றூக்கள் துறந்து ஈஸ்வரனுக்கு ஏற்றபடி கடமைகளச் செய்து வாழ்தல் இன்றய நிலையில் தமிழர்க்கு அவசியம்.அனைத்தையும் ஆத்மாவிலும்,ஆத்மாவை அனைத்திலும் காண்பவனுக்கு துன்பம் ஏது?மயக்கம் ஏது?ஓங்கார உள்ளோலியாய் விளங்கும் பரச்சோதியை பணீந்து போற்றீ அதனிடம் ஆதம சமர்ப்பணம் பெற வேண்டும்.

  1. நன்றாக முற்றிவிட்டது. காசிக்கு போவதற்கு பயணமுகவரை அணுகவும்

 5. எங்கள் அறிவுக்கண்ணை திறந்த தெய்வமே தமிழ் மாறா !
  உம்மை போற்றி வணங்குகிறோம் .வாழ்க உன் புகழ் !வளர்க உன் தமிழ்.!
  யாம் உம்மை சோதிக்கவே இந்த வடிவம் எடுத்தோம்.
  ஜெய பவானி !

 6. “ஐரோப்பிய மூலதனம் விரிவடைந்தது ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த காலத்தில் ஐரோப்பிய தேசங்களும் அவற்றின் தேசிய இனங்களும் தமது தேசியப் பண்பை இழந்து போயின. ”
   தேசியப் பண்பை அவை உண்மையில் இழந்தனவா? அவ்வாறாயின் நாசிகளின் தோற்றம் இன்றும் ஐரோப்பாவில் நிலவும் நிறவெறி பிரித்தானியர் எதிர் பிரஞ்சுக்காரர் என்பன என்ன?
   தேசியப் பண்பை இழப்பதானது முற்போக்கானதா?

  “இவ்வளர்ச்சியற்ற தன்மையின் மிகப்பிரதான சமூகக் கூறாக தரகு முதலாளித்துவ வர்க்கம் காணப்பட்டது. முரண்பட்ட இரண்டு பிரதான வர்க்கங்களாக உற்பத்தியின் அடிநிலையிலிருக்கும் வறிய விவசாய வர்க்கமும் இதனோடு கூட சிறு தொகையான தொழிலாளர்களும் மறு புறத்தில் தரகு முதலாளிய வர்க்கமும் என்ற வகையில் சமூகம் பிளவுண்டிருந்தது.”
   வளர்ச்சியடைந்த நாடுகளின் நிலமை எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் விளக்கியிருக்கலாம். தொகை மற்றும் விகிதாசாரத்தில் தவிர வேறு வேறுபாடுகள் உள்ளதா?
  “வளர்ச்சி இடை நிறுத்தப்பட்ட தேசங்களாக நாடுகளுள் புதைந்திருந்த தேசங்கள் உருவாகின. இத்தேசங்கள் இரண்டு வகையான ஒடுக்கு முறைகளை எதிர் நோக்கின…. ஒடுக்கப்படும் தேசங்கள் தனியரசு அமைத்துக் கொள்வதற்கான போராட்டம் தேவையானதும்…”
   வளர்ச்சி குன்றிய தேசங்கள் (தேசிய இனங்கள்) உருவாக என்ன காரணம்? ஒவ்வொரு இனத்திலுமுள்ள குட்டி முதலாளிகளும் தரகு முதலாளிகளும் தமது ஆதிக்கப்போட்டிக்கு குறுந் தேசிய வாதத்தைப் பயன்படுத்தியது அல்லவா? இதில் ஏதோ ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு வருவது இயற்கை.
   இதே நிலமை தான் பெரும்பாலான ஆசிய ஆபிரிக்க நாடுகளில் உள்ளது. இவை அனைத்தும் இன அடிப்படையில் தனிநாடுகளாக வேண்டும் என்கிறீர்களா?

  1. தேசங்களின் வளர்ச்சிக்கு தடையாக ஏகாதிபத்தியமும், நிலப்பிரபுத்துவமும், தரகுமுதலாளித்துவமும் இருக்கிறது. இதில் நிலப்பிரபுத்துவ முறை முற்றாக ஒழிக்கப்பட்டு ஒரு புதியஜனநாயக அரசை அமைக்காத வரையில் தேசியம் முற்றுப் அபெறுவதில்லை. ஒடுக்கப்பட்ட நாடுகள் ஏகாதிபத்தியத் தளையின் கீழ் உள்ள நாடுகள் ஆகியவற்றில் பல்தேசங்களை கொண்ட நாடுகள்தான் இருக்கிறது. காரணம் அது தேசத்தின் கூறுகளை முற்றுப்பெறாமல் அதன் வளர்ச்சியை ஏகாதிபத்தியம் தடுக்கிறது. நிலப்பிரபுத்துவம் அதன் அடிப்படையாக இருக்கிறது. இது பெரும்பாலும் அரைநிலவுடைமையாக இருக்கிறது. ஆகையால் அப்படி இருக்கும் எல்லா நாடுகளுக்கும் தனி தேசங்களாக மாறுவது என்பதைப் பொதுப்போக்காக பார்க்கக் கூடாது. தேசிய இன சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். ஆனால் சில நாடுகளில் குறிப்பான நிலைமைகளில் ஆய்வு செய்து அங்கு இரண்டு இனங்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு அரசு, மக்களுக்கிடையிலான இனக்கத்தை தடுத்து ஒரு பாசிச இனவெறி அரசாக இருக்குமானால் அங்கு அந்த சூழ்நிலை நீடிக்கும் வரையில் தனி அரசுக்கான கோரிக்கையை ஆதரிக்கவேண்டும். இது போல் அந்த நாட்டின் குறிப்பான அம்சத்தினை ஆய்ந்து முடிவு செய்யவேண்டும். ஈழத்தில் தனிநாடு ஒன்றே சாத்தியம். அங்கு குறிப்பாக ஒரு இனம் மற்றொரு இனத்தை ஒடுக்குவதை அடிப்படையாக கொண்டே அரசு, அதன் அரசியலமைப்புச்சட்டம் ஆகியவை இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இப்படி குறிப்பாக ஒரு இனம் மற்றொரு இனத்தை ஒடுக்கவில்லை. இங்கு எல்லா இனங்களிலிருக்கும் ஆளும் வர்க்கங்கள் ஒன்று சேர்ந்து அனைத்து இனங்களின் உரிமைகளையும் நசுக்குகிறது. எந்த இனத்திற்கும் உரிமை இல்லை. இங்கு ஒன்று சேர்ந்து சுயநிர்ண்ய உரிமை அடிப்படையில் போராடவேண்டியிருக்கிறது. ஆனால் இதுவே காஷ்மீருக்கு பொருந்தாது. அது இணைத்துக்கொண்டதே பலவந்தமாக நயவஞ்சகமாக இணைத்துக்கொண்டது. அதை அந்த மக்கள் அன்றிலிருந்தே ஏற்கவுமில்லை. ஒருவேளை ஒரு புதிய ஜனநாயக அரசு சுயநிர்ணய உரிமையை அடிப்படையை ஏற்கின்ற அரசு அதை அங்கீகரித்தால் அப்போது அவர்கள் ஒன்று சேர்ந்து இருப்பதற்கு விரும்பலாம். எப்படியிருந்தாலும் அது சோசலிச கட்டத்தில் இருந்தாலும் பலவந்தமாக ஒரு நாட்டை பிடித்து வைத்திருப்பது மார்க்சியத்திற்கு விரோதமானது. 
   இறுதியாக வளர்ச்சி குன்றிய தேசங்கள் உருவாகக் காரணம் நிலப்பிரபுத்துவத்தை தூக்கியெறியாமல் இருப்பதுதான், அதுதான் முதலாளித்துவ வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. அடுத்து அதை பாதுகாத்துக்கொண்டிருக்கிற ஏகாதிபத்தியம், அவர்களுக்கு சேவை செய்கிற தரகு முதலாளித்துவம். ஆகையால் இங்கு பின் தங்கிய உற்பத்தி முறையை தூக்கியெறியாமல் ஒரு இனவளர்ச்சியை முழுமைக்கு கொண்டுவராது. அதுவரையில் இந்த நிலைதான் எல்லா நாடுகளிலும் நீடிக்கும்.

 7. மார்க்ஸ். லெனின், மேசே துங் போன்றோரது வர்க்க முரண்பாட்டுக் கோட்பாடு கல்லறைக்குப் போன பின்னரும் வர்க்க முரண்பாடு பற்றி தத்துவம் பேசுவது நல்ல நகைச்சுவை ஆக இருக்கிறது. இன்று எந்நத நாட்டிலும் முதலாளி – தொழிலாளி பேதம் இல்லை. மேற்கு நாடுகளில் தொழிலாளி மிக எளிதில் முதலாளி ஆகிவிடுகிறான். அது போல முதலாளியும் தொழிலில் முதலை இழக்கும் போது தொழிலாளி ஆகிவிடுகிறான். வேறு மொழியில் கூறுவதானால் வர்க்கங்களுக்கு இடையே தடுப்புச் சுவர் இல்லை. மார்க்சீய கண்ணோட்டத்தோடு சமூக – கொருளாதார வளர்ச்சியை அணுகுவோர் சோவியத் ஒன்றியம் எதனால் அழிந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சீனாவில் கூட இன்று முதலாளித்துவ பொருளாதரமே உள்ளது. அங்கு இன்றும் நீடிக்கின்ற ஒரு கட்சி ஆட்சி மட்டுமெ அது மார்க்சீயத்தைப் பின்பற்றும் நாடு என்பதைக் காட்டுகிறது. இலங்கையில் காணப்பட்ட மார்க்சீய – லெனிச கட்சிகள் என்னவாயின? தொழிலாள வர்க்கம் யாருக்கு வாக்களிக்கிறது? ஆங்கிலத்தில் உள்ள மார்க்சீய நூல்களைப் படித்துவிட்டு அதனைத் தமிழில் வாந்தி எடுப்பதால் எந்தப் பயனுமில்லை. இன்று மக்களை மொழி, கலை. பண்பாடு, சமயம் போன்றவற்றின் அடிப்படையில் தேசியமே ஒன்றிணைக்கிறது. வர்க்கம் அல்ல. தமிழன் ஒழிக என முழக்கம் இடுபவர்கள் சிங்களத் தொழிலாளர்களே! அதே போல் தமிழ்த் தொழிலாளர்களது வீடுகளைக் கொளுத்துவது சிங்கள முதலாளி அல்ல. சிங்களத் தொழிலாளி.

  1. // மேற்கு நாடுகளில் தொழிலாளி மிக எளிதில் முதலாளி ஆகிவிடுகிறான். அது போல முதலாளியும் தொழிலில் முதலை இழக்கும் போது தொழிலாளி ஆகிவிடுகிறான். //

   வர்க்க வேறுபாட்டையும் சாதி முறைமையையும் போட்டுக் குழப்புவதால் வரும் கருத்து இப்படித் தான் இருக்கும்.

 8. voter//தேசியப் பண்பை அவை உண்மையில் இழந்தனவா? அவ்வாறாயின் நாசிகளின் தோற்றம் இன்றும் ஐரோப்பாவில் நிலவும் நிறவெறி பிரித்தானியர் எதிர் பிரஞ்சுக்காரர் என்பன என்ன?// தேசியம் என்பது அதனுடைய பண்பை இழந்த நிலையிலேயே நிறவெறி, பாசிசம் என்ற நிலைக்கு சீர்குலைந்தது. தேசியம் உருவான காலப்ப்குதியில் ஏனைய இனக் குழுக்கள் இணைந்து ஒரு தேசியம் ஆகின. உதாரணமாக தென் இத்தாலியில் வாழ்ந்த இந்தியர்கள், பிரான்ஸ் மார்சைல் போன்ற மாகாணங்களில் செறிவாக வாழ்ந்த மக்ரேபின் இந்ததவர்கள் ஆகியோரைக் குறிப்பிடலாம்.ஆனால்,
  இன்றைய ஏகாதிபத்தியப் பொருளாதார சூழலில் இவ்வாறு நடைபெறுவதில்லை. சமூக உற்பத்தின் இயக்கம் மந்தமடைந்த ஏகதிபத்தியப் பொருளாதாரத்தின் சந்தை மக்களை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக துண்டாடுகிறது. ஆக, நாசிகளின் உருவாக்கம் என்பதும் கூட இதன் அடிப்படையில் தான் புரிந்துகொள்ளப்பட முடியும்.

 9. voter // தேசியப் பண்பை இழப்பதானது முற்போக்கானதா?//

  ஏகதிபத்திய நாடுகள் தேசியப் பண்பை இழந்தது என்பது அதன் பண்பு ஏகாதிபத்திய உற்பத்தி முறையின் தவிர்க்கவியலாத மேர்கட்டுமானப் பண்பு. ஏகாதிபத்தியம் என்பதே பிற்போக்கானது என்ற அடிப்படையில் இது பிற்போக்கானதே. அதே வேளை தேசியப் பண்பை இழத்தல் என்பது தொழிலாளர் ஆட்சியில் முற்போக்கானதே. இதனைப் பொதுமைப்படுத்த முடியாது. இலங்கை போன்ற நாடுகளில் தேசியத்திற்கு முற்போக்கான பாத்திரம் உண்டு எனப்தே எனது கருத்து.

 10. Voter//வளர்ச்சியடைந்த நாடுகளின் நிலமை எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் விளக்கியிருக்கலாம். தொகை மற்றும் விகிதாசாரத்தில் தவிர வேறு வேறுபாடுகள் உள்ளதா?//தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஜனநாயகமும் தேசியமும் நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களைத் துடைத்தெறிவதற்காகப் அதன் இறுதிக்கட்டங்களில் பயன்பட்டது. ஏகாதிபத்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்த போது அதனைப் பாதுகாப்பதற்கான முதலாளிகளையும், முகாமைத்துவ வர்க்கத்தையும், மத்தியத்ர வர்க்கத்தையும் உருவாக்கியது. ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தொழிலாளர்கள் கார்மார்க்ஸ் காலத்தய தொழிலாளர்கள் அல்ல. மத்தியதர வர்க்கம் ஒன்றை அது உருவாக்கியுள்ளது.

 11. voter //வளர்ச்சி குன்றிய தேசங்கள் (தேசிய இனங்கள்) உருவாக என்ன காரணம்? ஒவ்வொரு இனத்திலுமுள்ள குட்டி முதலாளிகளும் தரகு முதலாளிகளும் தமது ஆதிக்கப்போட்டிக்கு குறுந் தேசிய வாதத்தைப் பயன்படுத்தியது அல்லவா? இதில் ஏதோ ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு வருவது இயற்கை.//

  1. குறை நிலை வளர்ச்சியடைந்த நாடுகளின் சந்தை ஒரு குறித்த மையத்தை நோக்கி மத்தியத்துவப் படுதப்படவில்லை. வெவ்வேறான இடங்களை நோக்கிக் குவியப்படுத்தப்பட்டது. மொழிவாரியான பிரதேசங்களை ஒன்றிணைத்து சந்தைகள் உருவாகின. ஆக பல்தேசிய நாடுகளாகின. மூன்றாம் உலக நாடுகளில் இது இன்னமும் வேறுபட்டதாக அமைகிறது. ஒருபகுதியில் சந்தையை நோக்கி அணிதிரழும் மத்தியதர வர்க்கத்தையும், மறுபுறத்தில் அதனைச் சீர்குலைக்கும் தரகு முதலாளிகளையும் அதனோடு இணையும் நிலப்பிரபுக்களையும் உருவாக்கியிருந்தது.
  2.2. ஒவ்வொரு இனத்திலுமுள்ள சிறு முதலாளிகள் தமது நலனுக்காக தேசியத்தைப் பயன்படுத்தினர் என்பது உண்மை. தரகு முதலாளிகள் எல்லைகடந்தவர்கள். அதனால் தான் தேசியப் போராட்டம் வளர்ச்சியடையும் போது தரகுமுதலாளிகள் அதனை அழிப்பதில் ஆர்வம்காட்டுகின்றனர். ஏதோ ஒரு இனத்தைச் சேர்ந்தவர் முன்னணிக்கு வருவது என்பதைவிட பெரிய சந்தையை ஆதிக்கத்தில் வைத்திருக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு வருவது இயற்கை.

 12. Voter//இதே நிலமை தான் பெரும்பாலான ஆசிய ஆபிரிக்க நாடுகளில் உள்ளது. இவை அனைத்தும் இன அடிப்படையில் தனிநாடுகளாக வேண்டும் என்கிறீர்களா?//
  தேசிய இன ஒடுக்குமுறை நிலவும் வேளையிலும் தேசிய இன முரண்பாடு பிரதன முரண்பாடு பிரதான முரண்பாடாக அமையும் வேளையிலும் பிரிவினைக்கான போராட்டம் அவசியமானது,
  புற நிலை யதார்த்தத்தின் அடிப்படையில் தான் அதனைத் தீர்மானிக்க முடியும்.

 13. Voter – எனது கருத்துக்களை மட்டும் தான் மேலே கூறியுள்ளேன். உங்கள் முரண்களிலிருந்து இன்னும் தொடரலாம்.

 14. மனிதன் – எழுதிய மக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

 15. கடந்த முப்பதாண்டு மேலாக சிதறுண்டு கிடக்கிற முற்போக்குவாதிகளை – நாடு மற்றும் சிந்தனை ரீதியில் சிதறுண்டு கிடக்கிற வர்களை ஒண்றிணைத்து ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ள முனைகிற போது சகலர் மத்தியிலும் அது குறித்து ஒரு உயர்மட்ட விழிப்புணர்வு அவசியம் எனக்கருதுகின்றேன்.
  இதில் இணைந்து கொள்ளாத அவசியம் இணைய வேண்டியவர்களை இணைக்கும் வகை பற்றியும் சிந்திக்க வேண்டும்.
  மாற்றுக்ககருத்துக்களுக்கான களம் அமைப்பவர்கள்> மாற்றுக்கருத்துக்களை உடையோர்> என்ற நிலையிலிருந்து முன்னேறிச் செ;.ல்லுதல் என்பது தமிழ் மக்களின் தேசிய இன மற்றம் சமூக விடுதலைக்கான சிந்தாத்தினை முன்வைத்தல் என்பதாக அமையலாம்.

 16. இலங்கையின் இந்த வரா தமிழ் தினசரிகளின் பல கட்டுரைகள் இவ்விடயம் குறித்து அலசியிருக்கின்றன. அரசியல் வெறுமை குறித்து கட்டுரைகள் விமர்சித்திருந்தன.

 17. இங்கு நாவலன் சுட்டிக்காட்டும் அண்டர்சனும் கீழே தரப்படும் அண்டர்சனும் ஒன்றா என்பதை தயவு செய்து தெளிவுபடுத்தும்படி நாவலனிடம் கேட்டுக்கொள்கிறேன்.
  தொழிலாளர் கட்சிக்குள் இருந்த மிகக் குறிப்பிடத்தக்க குட்டி முதலாளித்துவ குழுவிற்கு சிட்னி பல்கலைக் கழகத்தின் தத்துவப் பேராசிரியரான ஜோன் ஆண்டர்சன் தலைவராய் இருந்தார். ஆண்டர்சன் சிட்னி ஹூக்கின் ஒரு ஆதரவாளர்இ அமெரிக்காவில் ஹூக் மற்றும் பேர்ன்ஹாம் போலவேஇ இவரும் இயங்கியல் சடவாதத்தின் எதிர்ப்பாளராய் அறிவித்துக் கொண்டவர். ஆயினும்இ தொழிலாளர் கட்சியில் இவர் ஒரு ஸ்தாபக உறுப்பினராக இருந்ததோடு பிரதானமான பொதுக்கூட்ட பேச்சாளராகவும் இருந்தார்இ மாஸ்கோ விசாரணைகளின் புனைவுகள் மற்றும் ஸ்பானிய புரட்சி ஸ்ராலினிஸ்டுகளால் கழுத்து நெரிக்கப்பட்டதையெல்லாம் அம்பலப்படுத்தி போராளி பத்திரிகையிலும் மற்ற இடங்களிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதினார். 1937ம் ஆண்டில்இ ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குற்றங்கள் சோவியத் ஒன்றியம் இனியும் ஒரு சீரழிந்த தொழிலாளர் அரசாகக் கூட கருதப்பட முடியாது என்பதைக் காட்டுவதாக வாதிடத் தொடங்கினார்இ இந்த நிலைப்பாடு கட்சியில் கணிசமான ஆதரவை பெற்றுத் தந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வலதுபக்கம் நோக்கி நகரும் மத்தியவாதப் போக்குகள் போலவேஇ சோவியத் ஒன்றியத்தின் வர்க்க தன்மை குறித்த ஒரு மார்க்சிச – அதாவது விஞ்ஞான மற்றும் வரலாற்றுரீதியான – பகுப்பாய்வை அதன்மூலம் சோவியத் ஒன்றியத்தை ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராய் பாதுகாக்கும் எந்த அடிப்படையையும் கைவிட ஆண்டர்சன் விரைந்ததற்கு பின்னால் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர திறன்கள் குறித்த ஒரு ஆழ்ந்த ஐயுறவு அமைந்திருந்தது. ஏப்ரல் 1937 தொழிலாளர் கட்சியின் நான்காவது மாநாட்டிற்கு முன்னதாக அளிக்கப்பட்ட ‘திருத்தல்வாதத்தைப் பாதுகாத்து’ என்கிற தலைப்பிலான சுற்றறிக்கை ஒன்றில் ஸ்ராலினிசத்திற்கான வேர்கள் மார்க்சிசத்துக்கு உள்ளேயே இருப்பதாய் வாதிட்டார். ஆண்டர்சன் எழுதினார்:”ஸ்ராலினிஸ்டுகளின் மொத்த கையிருப்பு அம்சமாய் இருக்கும் சுத்திகரிக்கப்படா அரைகுறை விஷயங்கள் அனைத்தும் தங்களது அடிப்படையை மார்க்சின் தத்துவங்களில் கொண்டிருக்கின்றன. அவரது ‘பிரதிபலிப்பு தத்துவம்’ (‘சநகடநஉவழைn வாநழசல’)இ சமூக இயக்கங்களின் சுயாதீனத்தை அவர் மறுத்தது எல்லாம் அவரது ஒரு பொருண்மைவாதத்தை (அழளெைஅ)இ மற்றும் வெறிபிடித்த குறுங்குழுவாதிக்குத்தான் மிகப் பொருத்தமான நிலைப்பாடான யதார்த்தம் ஒரு தனிப்பாதையில் அபிவிருத்தியுறுவது போன்றவைஇ சோசலிசத்தின் தவிர்க்கவியலா தன்மை ’பொருட்களின் இயல்பிலேயே’ வேரூன்றியிருப்பதாகக் கூறும் இறையியல் கருத்தாக்கம் இயைந்துவருகிறது.”ஜ40ஸ
  ஆண்டர்சன் கண்ணோட்டத்தின் இந்த அம்சம் தான் 1950களில் தோன்றியிருந்த தனிநபர்வாத, மார்க்சிச-விரோத “தாராளவாத” இயக்கத்தில் அவரை ஒரு முக்கியபுள்ளியாக ஆக்கியது. 1937 மாநாட்டில் அவரது நிலைப்பாடுகள் ஓரிக்ளாஸால் எதிர்க்கப்பட்ட பின்னர், கட்சியை நோக்கிய ஆண்டர்சனின் குரோதம் இன்னும் பகிரங்கமாய் வெளிப்பட்டது. கட்சியின் பலவீனம் எல்லாம், போல்ஷிவிசத்துடன் ட்ரொட்ஸ்கியின் பிணைப்பால் விளைந்த “ட்ரொட்ஸ்கிசத்தின் திவால் நிலையால்” வந்தது என்று அவர் வலியுறுத்தினார். அவரது கூற்றின்படி, “நாம் இன்று கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் போல்ஷ்விசம் இறந்து விட்டது…..”[41] அதன்படி, இன்னொரு தொழிலாளர் கட்சி உறுப்பினர் கட்சியின் ‘அடித்தளத்தை’ விரிவாக்குவதற்கு விடுத்த அழைப்பை வழிமொழிந்த ஆண்டர்சன், “போர்க்குணமிக்க போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட, ஆஸ்திரேலிய புரட்சிக்கான நிலைமைகளை உருவாக்கும் விருப்பம் கொண்ட” எவரொருவருக்கும் கட்சியில் கதவு திறந்திருக்க வேண்டும் என்று அவர் அறிவித்தார். போல்ஷிவிச விரோதம் ஆஸ்திரேலிய தேசியவாதத்துடன் கைகளை கோர்த்துக்கொண்டது இது கடைசி தடவையல்ல. அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக, ஆண்டர்சன் குழு கட்சியுடன் முறித்துக் கொண்டிருந்தது அத்துடன் இரண்டு வருடங்களுக்காக அவர் “தாராளவாத ஜனநாயகவாதத்தின்” பாதுகாவலனாக கோலோச்சிக் கொண்டிருந்தார். போருக்குப் பிந்தைய வருடங்களில் வெளிப்படையாக ஒரு கம்யூனிச விரோதியான அவர் கம்யூனிசத்தை “நவீன காலத்தின் நோய்” என்று தாக்கினார்

  1. நான் குறிப்பிடது பெனடிக்ட் அன்டர்சனை.
   ப.வி.ஸ்ரீரங்கன்
   எழுதியுள்ள எதிர்வினையும் இங்கு கவனிக்கத்தக்கது.
   http://srirangan62.wordpress.com/2010/09/17/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE/

 18. நட்புடன் நாவலனுக்கு
  தங்கள் பதிலுக்கு நன்றி.
  கட்டுரையிலும் பின்னூட்டங்களிலும் நீங்கள் கூறிய பல கருத்துக்கள் ஆழ்ந்து விவாதிக்கப்பட வேண்டியவை.
  சில சிறுகுறிப்புக்கள் மட்டும்:
  தேசியம் முற்போக்குத் தனத்துடன் செல்லாவிட்டால் தேசிய வெறியாக நிறவெறி பாசிசம் இனவெறி ஆகிய நிலைகளை நோக்கி நகர்வது தவிர்க்கமுடியாதது.
  ஆக நிறவெறி என்பது தேசியத்தன்மையின் இன்னொரு கட்டமே.(எவ்வாறு முதலாளித்துவத்திலிருந்து ஏகாதிபத்தியம் வந்ததோ அதே போல). வளங்கள் வாய்ப்புக்கள் சரிவரப் பகிரப்படாமையே இதற்கான அடிப்படைக் காரணம்.
  சகல சமுகங்களும் சம வாய்ப்புப் பெறும் போது தேசிய அடிப்படையிலான அழுத்தம் குறைவடையும். அதனையே நீங்கள் தேசியத் தன்மை குறைவடைகிறது என மதிப்பிடுகிறீர்களோ தெரியவில்லை. அவ்வாறாயின் அது எச்சமுக அமைப்பிலும் முற்போக்கானதே. மாறாக ஒரு சமுகம் அடக்குமுறையூடாகத் தனது தேசிய அடையாளத்தை இழக்குமாயின் அது முற்றிலும் பிற்போக்கானதே

  கைத்தொழிற் புரட்சியானது (இன்று கணணிப் புரட்சி) தொழில் தெரிந்த () தொழிலாளர்களை உருவாக்கியுள்ளது. இவர்கள் அதிகளவில் பயிற்சி உடலுழைப்பை விட மூளையை அதிகம் பயன் படுத்துவது என்பதில் சாதாரண தொழிலாளர்களை விட வேறுபடுகிறார்கள். இத்தகைய தொழிலாளர்களிற்குள்ள கேள்வி காரணமாக அவர்கள் அதிக சம்பளம் வசதிகள் என்பவற்றைப் பெறுகிறார்கள். எனினும் இவர்களும் செய்வது தமது உழைப்பை விற்பது தான். இவர்களையா மத்திய வர்க்கம் என்று கருதுகிறீர்கள்?

  1. //தேசியம் முற்போக்குத் தனத்துடன் செல்லாவிட்டால் தேசிய வெறியாக நிறவெறி பாசிசம் இனவெறி ஆகிய நிலைகளை நோக்கி நகர்வது தவிர்க்கமுடியாதது.
   ஆக நிறவெறி என்பது தேசியத்தன்மையின் இன்னொரு கட்டமே//
   தேசியம் தேசம் ஆகியன வரலாற்றின் ஒரு குறித்த காலகட்டத்திற்குரிய மக்கள் கூட்டமாகும். அது முதலாளித்துவக் காலத்திற்குரியது. ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தில் தேசியம் என்பது அதன் உள்ளார்ந்த வடிவத்திலிருந்து விலகிச்சென்று விடுகிறது. அதே வேளை மனிதன் எழுதியுள்ளது போல் எமது நாடுகளில் அது வளர்நிலையிலேயே உள்ளது. அதனை ஒருங்கிணைக்கும் இன்னொரு காரணியாக தேசிய இன அடக்குமுறை காணப்படுகிறது.
   கணனித் தொழிலில் எனும் போது அதன் உயர்வடிவத்தில் காணக்கூடிய மென் பொருள் தொழிலாளர்கள், தொழில்நுட்ப வியலாலாளர்கள் தவிர, உடல் உழைப்பில் ஈடுபடும் உற்பத்தியாளர்களும் கணிசமான அளவு காணப்படுகின்றனர். கணனி என்பது மூலதனத்தின் பண்பை மூன்று வகைகளில் மாற்றுகிறது. 1.உபரியை அதிகரிக்கிறது 2. தொழிலாளர் படையின் இருப்பை அதிகரித்துள்ளது. 3. சேவைத் துறையின் தேவையை அதிகரித்துள்ளது. இதனால் முன்னைய முதலாளித்துவப் பண்புகளை இழந்துள்ள பொருளாதாரம் புதிய சமுக சமரசத்தை அறிமுகம் செய்கிறது(new compromise). இந்தச் சமரசம் உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னர் செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது முற்றாகச் செயலிழக்கும் நிலையில் ஐரோப்பிய நாடுகளில் புரட்சிக்கான சூழல் உருவாகும். இன்றுவரை ஐரோப்பாவில் விடைகாணப்பட முடியாத நிலையிலிருக்கும் புதிய சமூகச் சமரசம் தொடருமானால் எதிர்வரும் பத்தாண்டுகளில் இங்கு புரட்சிக்கான இயக்கங்களின் வரவு தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும். இது இன்னுமொரு நீண்ட விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய கருத்தாக்கம்.

   1. இதனால் முன்னைய முதலாளித்துவப் பண்புகளை இழந்துள்ள பொருளாதாரம் புதிய சமுக சமரசத்தை அறிமுகம் செய்கிறது. இந்தச் சமரசம் உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னர் செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    இதனை மேலும் விளக்குவீர்களா?

    1. வர்க்கங்களிடையேயான போராட்டத்தைத் தணிப்பதற்காக அவற்றிடையேயான சமூகச் சமரசத் திட்டம் ஒன்று முன்வைக்கப்படும். இன்று 1940களில் கீனேஸ் இனால் முன்வைக்கப்பட்ட திட்டங்களே நடைமுறையிலுள்ளன. இவரது நவ-தாராளவாதமும், ஐரோப்பிய நாடுகளில் வங்கிப் பொறிமுறையும் இவரது முன்மொழிவுகளே. ரீகன், தட்சரின் தலைமையில் நடைமுறைக்கு வந்த இந்த ஒழுங்கு இன்று செயலிழந்து போயுள்ளது.

 19. இக் கட்டுரை குறித்து நிறையப் பேசப்பட வேண்டும்.எனினும்-எவரும்-பேசமுற்படவில்லை!லோகனது கட்டுரைக்கும் இதுவே…

  தனிப்பட்ட நபர்கள் குறித்த -நடத்தை குறித்துப் பேச ஆர்வமுள்ள வாசகர்கள்>முக்கியமான வர்க்க அரசியல்-போராட்டம் குறித்துப் பேசும் அறிதிறனின்றி இருக்கிறார்கள்.நாம் கடக்க வேண்டிய பாதை மிக நீண்டது.ஒரு சரியான விவாதத்தைத் தொடக்கும் புள்ளியைச் சுட்ட முடியாது இருக்கும் வாசக நிலை மாற்றமடையவேண்டும்.

  🙁

  1. தேசியவாதிகள் பலர் அரசியல் பேசுதலில் வெறுப்புற்று இருப்பதாக கூறிக்கொள்கிறார்கள.!

  2. “தனிப்பட்ட நபர்கள் குறித்த -நடத்தை குறித்துப் பேச ஆர்வமுள்ள வாசகர்கள்” — பி.வி.சி.
   இது மேற்படி குறிப்பை எழுதியவருக்கு மிகவும் பொருந்தாதா?

   “இக் கட்டுரை குறித்து நிறையப் பேசப்பட வேண்டும்.எனினும்-எவரும்-பேசமுற்படவில்லை!” — பி.வி.சி.
   இக் கட்டுரை மீதான பல இடுகைகள் என்ன செய்தன?
   பி.வி.சி. ஏன் உரிய நேரத்தில் குறுக்கிடவில்லை?

  3. எவரும்-பேசமுற்படவில்லை என்று கூறுவதை விடுத்து நீங்கள் பேசத் தொடங்கலாமே.

   1. எல்லா விவாதங்களையும் நாங்கள் ஆற்றில் போட்டுக் குளத்தில் தான் தொடர வேன்டுமா?

    இங்கே நடப்பன பற்றிப் பேச முனையும் எவரும், யாருமே பர்க்காத ஒரு வெட்டை வெளியில் போய் நின்று தான் பேசுவார்களா?

 20. //“தனிப்பட்ட நபர்கள் குறித்த -நடத்தை குறித்துப் பேச ஆர்வமுள்ள வாசகர்கள்” — பி.வி.சி.
  இது மேற்படி குறிப்பை எழுதியவருக்கு மிகவும் பொருந்தாதா//
  சிறீரங்கன் இது குறித்து சுய விமர்சனம் ஒன்றைச் சிறிய அளவில் முன்வைத்துள்ளார். தமிழர்களுக்கு மத்தியிலிருந்த்து இவ்வாறான பெருந்தன்மையுடைய நிகழ்வுகளை நாம் கண்டதில்லை. இனிமேல் இது குறித்துப் பேசுவது அழகல்ல. மற்றப்படி அவரது இணையத்தில் கட்டுரைக்கு முழுமையான எதிர்வினை ஒன்றை முன்வைத்துள்ளார்.

  1. kannan,
   வைக்கிறதை எல்லாம் தெளிவாக உரிய முறையில் அல்லவா வைக்க வேண்டும்.
   பி.வி.சி. ஒரு பொய்க் குற்றச் சாட்டை ஒப்புக் கொண்டுள்ளாரா?
   ரயாகரனின் அவதூறுகளைக் கண்டித்துள்ளாரா?
   மழுப்பல் எல்லாம் சுயவிமர்சனமாகாது.

   “வைத்து விட்டுப்”, “பழைய குருடி க்தவைத் திறடி” என்ற பழமொழிப் பாவனையில் வலிந்து நொட்டை சொல்லுகிற கொமிசார்த்தனம் தானே தொடருகிறது.

   அவருடைய “பெருந்தன்மையை” நீங்கள் தான் மெச்சிக் கொள்ள வேன்டும்.

 21. புலிகள் முழுக்கமுழுக்க ஒரு அழிவுயுத்தத்தை இவர்களிடம் வலுகட்டாயமாகத் திணித்த அந்நியத் தேசத்து அடியாள் இயக்கம்.இந்த இயக்கமானது தமிழ்தேசியக் கட்சிகளது மேற்குலகச் சார்பிலிருந்து ஆயுதரீதியாக அந்நியச் சக்திகளால் கையகப்படுத்தி உருவாக்கப்பட்டவொரு மாப்பியாக்குழு.இ

  தை எழுதுவதற்கான ஆதராங்கள் என்ன?

  1. விஜேய் இதை எழுதுவதற்கு ஆதாரம் என்பது சமூக விஞ்ஞானத்தைக் கற்பதிலிருந்து நிரூபணமாவது.அதை முதலில் செய்யுங்கோ>பிறகு எல்லாம் புரிந்தமாதிரித்தாம்…

   1. இயக்கங்கள் 1980களில் இந்தியப் பின்னணியில் இயங்கின என்பதை அறிவோம். புளொட்டிற்கு சீன உதவிகளும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. புலிகள் பின்னர் இந்தியாவுடன்(இராணுவம்-ஆளுந்தரப்பு)முரண்பட்டு நின்றதையும்> வேறு எந்த சர்வதேச ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கிவில்லை எனவும் அறிகிறாம். புலிகள் ஒரு தேசியவாதச் சிந்தனைகள் நின்று செயற்பட்ட இயக்கமாகவே சித்தரிக்கப்பட்டது. அதனால் இது குறித்தறியும் வகையில் மீண்டும் அதே வினாவினை முன்வைக்கிறேன்.

 22. புலிகள் செய்த பல வேலைகள் மாபியா கும்பல் செய்த வேலையே .அதை அவர்கள் தேசிய போராட்டம் என்ற போர்வையால் மறைத்தார்கள்.

 23. எதையும் எழுதுவதற்கு ஆதாரம் என்பது சமூக விஞ்ஞானத்தைக் கற்பதிலிருந்து எப்படி நிரூபணமகலாம் என்று பேராசிரியர் பி.வி.சி. தவிர்ந்த, அளவையியல் (logic) தெரிந்த யாராவது எனக்குப் போதித்து அருளுவார்களா?

 24. xxx

  ஆதாரம் என்பது சமூக விஞ்ஞானத்தைக் கற்பதிலிருந்து நிரூபணமாவது…
  That is this.This is that. I think You got it now.

 25. அந்நியத் தேசத்து அடியாள் இயக்கம் புலிகள் என்பது குறித்து சிறி ரங்கன் விரிவாக எழுதுவார் என எதிர்டபார்க்கிறேன்.
  விஜய்

  1. எல்லோராலும் பாலகுமாரன் ஆக முடிந்ததில்லை கண்ணதாசன் தன் வாழ்க்கையை தத்துவமாக்கியதால் அவர் எதைப் பேசினாலும் ஏற்றூக் கொள்ள முடிந்தது.சீறீ ரங்கன் அரிச்சந்திரன்.

Comments are closed.