தமிழறிஞர் பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் உலகத் தமிழ் மொழி மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுங்கள்: கருணாநிதி வேண்டுகோள்!

karuna7 கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க 47 தமிழறிஞர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்னும் தமிழறிஞர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் புலத்தின் தலைவர். அவரது தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு உலகத் தமிழ் அறிஞர்கள் எல்லாம் முன்கூட்டியே வருகை தந்து இந்த மாநாட்டினைச் சிறப்பாக நடத்திக்கொடுக்க வேண்டுமென்றும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஜூன் திங்கள் இறுதியில்; 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்கப்படவுள்ளதாக ஏற்கனவே மாநாடு நடைபெறுவதற்கும் கருத்தரங்குகள் தனித்தனியாக நடத்தப் பெறுவதற்கும் பேரணி நடைபெறுவதற்கும் பொருத்தமான இடங்களாக அமையப்பெற்றுள்ளன. குறிப்பாக, மாநாடு நடைபெறவுள்ள கோவை “கொடிசியா’ அரங்கு மிகப் பிரமாண்டமாகவுள்ளது. உலக நாடுகளிலிருந்தும் இந்தியாவின் வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் குவியவிருக்கின்ற விருந்தினர்களைத் தங்க வைப்பதற்கான முயற்சிகளிலே மாவட்ட ஆட்சியர் தலைமையிலே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினையொட்டி ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள பேராசிரியர் கா.சிவத்தம்பி தலைமையில் அவ்வை நடராஜன், பொற்கோ எனப்படும் பொன்.கோதண்டராமன் ஆகியோரை இணைத் தலைவர்களாகவும் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழியை செயலாளராகவும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம.இராஜேந்திரனை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு ஆய்வரங்க அமைப்புக்குழு உருவாக்க ஆணையிடப்பட்டுவிட்டது.

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்னும் தமிழறிஞர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் புலத்தின் தலைவர். அவரது தலைமையில் இந்தக் குழு சிறப்பாகச் செயல்பட்டு உலகத் தமிழ் அறிஞர்கள் எல்லாம் முன்கூட்டியே வருகைதந்து இந்த மாநாட்டினைச் சிறப்பாக நடத்திக்கொடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்று தமிழகச் சட்டமன்றத்திலே இடம்பெற்றுள்ள அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கும் நானே கடிதம் எழுதியதும் அதற்கு அந்தக் கட்சித் தலைவர்கள் வருவதற்கு ஒப்புக்கொண்டும் ஒரு சிலர் ஒப்புக்கொள்ள மறுத்தும் எழுதிய கடிதங்கள் எல்லாம் ஏடுகளிலே ஏற்கனவே வந்துள்ளன.

1995 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 14 ஆண்டுகளாக உலகின் எந்தப் பகுதியிலும் தமிழுக்கென்று ஒரு மாநாடு நடத்தப் பெறவில்லையே என்ற ஏக்கம் இந்த மாநாட்டின் மூலமாகத் தீர்க்கப்படவுள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கென சிறப்பானதோர் இலச்சினை உருவாக்கப்பட்டு அது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர் பெருமக்கள் எல்லாம் இலச்சினை அழகாகவும் அர்த்தம் பொதிந்துள்ளதாகவும் அமைந்துள்ளதாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

இலச்சினையின் பிரதான உருவமாக அய்யன் வள்ளுவரின் சிலை இடம்பெற்றிருப்பதைப் போலவே இந்த மாநாட்டின் எடுத்துரைக்குறிப்பாக “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அய்யன் வள்ளுவரின் வாசகங்களே தெரிவு செய்யப்பட்டு அதுவும் இலச்சினையிலே இடம்பெற்றுள்ளது. மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி இசைவு தெரிவித்து அதற்குள்ளாகவே 47 அறிஞர்களிடமிருந்து நமக்குக் கடிதம் வந்துள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாகத் தமிழ் இணைய மாநாட்டினை உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்துடன் இணைந்து நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் “தமிழ்நெட் 1999’ என்ற தலைப்பில் உலகத் தமிழ் இணையக் கருத்தரங்க மாநாட்டினை 1999 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் முரசொலி மாறன் முயற்சியோடு சென்னையில் நடைபெற்றதற்குப் பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு இந்த மாநாட்டினையொட்டி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடைபெறும் கருத்தரங்குகள் , ஆய்வரங்குகள் ஆகியவற்றில் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழ்த் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்களும் கணினித் தமிழ் அறிஞர்களும் பங்கு பெறுவார்கள். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தவும் அவற்றைக் கண்காணிக்கவும் பல்வேறு துறைகளின் பணிகளை ஒருங்கிணைக்கவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தலைமையில் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டமும் நடைபெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக மாநாட்டுப் பணிகளையெல்லாம் ஒருங்கிணைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கா.அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாநாட்டின் நீங்காத நினைவாக கோவை மாநகரத்தின் மையப் பகுதியில் உலகத் தரம் வாய்ந்த பிரமாண்டமான ஒரு தாவரவியல் பூங்கா ஒன்றினை அமைக்கவும் முடிவுசெய்து அங்கே தாவரங்கள், பூச்செடிகள், செடிகொடிகள் மற்றும் மரங்கள் போன்றவற்றைக் கொண்டு அழகுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டினையொட்டி இன்னும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்படுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்றைய தினம் மேலும் மூன்று குழுக்களுக்கான அறிவிப்புகள் ஏடுகளிலே வெளிவந்துள்ளன. அதுபற்றியெல்லாம் தொடர்ந்து அவ்வப்போது எழுதுகின்றேன்.

எல்லா வகையிலும் ஒல்காப் புகழ்கொண்டு விளங்கிட இருக்கும் கோவை மாநாடு, உலகத் தமிழ் ஆர்வலர், அறிஞர் அனைவருக்கும் குளிர் தருவென தரு நிழலென அமையப்போகிறதே என்பது மட்டும் உறுதி என்று கூறியுள்ளார் கருணாநிதி. அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முறைப்படி நடைபெற்று வருகின்றன.

One thought on “தமிழறிஞர் பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் உலகத் தமிழ் மொழி மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுங்கள்: கருணாநிதி வேண்டுகோள்!”

  1. “பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்னும் தமிழறிஞர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் புலத்தின் தலைவர்”.
    இது தான் கருணாநிதிக்குத் தெரிந்தது.
    சிவத்தம்பி ஓய்வு பெற்று 10 வருடம்.

    ஆயிரம் பொய்யைச் சொல்லியும் ஒரு கலியாணத்தை … இல்லை இல்லை… ஒரு மாநாட்டை நடத்தலாம்

Comments are closed.