தமிழர் பிரச்சினை இனப்பிரச்சினை மட்டுமல்ல ! : காமினி வித்தியால ஆசிரியர்

யுத்தம் முடிவடைந்த பின் தமிழ் மக்களின் வாழ்விற்கு சிறந்த வாய்ப்பக்கள் வழங்கப்படும் என அரசும், அவர்களின் கூட்டாளிகளும் கூறி வருகின்ற போதிலும் வடகிழக்கில் நடைபெறும் நிகழ்வுகள் தமிழ் மக்களிடம் பெரும் அச்சத்தினைத் தோற்றுவிப்பதாகவே இருந்து வருகிறது. தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறை மேலும் திவிரமாகியே வருகிறது.

எல்லா வழிகளிலும் தமிழ் மக்களின் வாழ்வு இன அச்சுறுத்தலுக்கள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை வட கிழக்கு தமிழர்களிடம் இன ஒடுக்குமுறைக்கெதிராகப் போரடுவதன் மூலம் மட்டுமே வாழலாம் என்ற போராட்ட உணர்வைத் தோற்றுவித்து வருகிறது.

இந்த யாதார்த்த நிலைக்கு அப்பால் தமிழர்களின் பிரச்சினை இனப்பிரச்சினை சார்ந்த ஒன்று மட்டுமல்ல என்றவாறான நிகழ்வுகளும் நடந்தே வருகின்றன. இந்த யதார்த்தத்தினை நெருடலுன் தெரிவிக்கும் வகையில் கடிதமொன்;றினை வவுனியா காமினி வித்தியால ஆசிரியர் வ.கருணாகரன் பத்திரிகைக்கு எழுதியிருக்கிறார். அக்கடிதம் சொல்லும் செய்தினை நாம் புதிந்து கொள்ள முயலவேண்டும். அக்கடிதத்தின் முக்கியமான பகுதி…
“… நோவின்றி என்றும் பிரசவம் இல்லை. வேதனைகளின்றி வெற்றிகள் இல்லை என்பதற்கு ஏனைய மாணவர்களை விட வவுனியா காமினி ம.வி.தமிழ்ப்பிரிவு (இடம் பெயர்ந்த) மாணவர்கள் மிகவும் பொருத்தமானவர்கள் என்பேன்.

யுத்தத்தின் கோரப்பசிக்கு தீனியானவர்கள் போக, அது சப்பித்துப்பிய சக்கைகளாக பல்வேறு அகதி முகாம்களுக்கு வந்து அங்கிருந்து விடுதலையாகி வவுனியாவிற்குள் வந்வர்களே இவர்கள். வயிற்றுப் பசியை மறந்து கல்விப் பசியைப் போக்க வவுனியாப் பாடசாலைகளுக்கு இவர்கள் கொடுத்த விலைகள் அதிகம்.

ஆயினும் இவர்களை உள்வாங்கிக் கொண்ட இப்பாடசாலைகளும் பெறுவதைப் பெற்றுக் கொண்டு 01.02.2010 இல் இவர்களை மாத்திரம் வெளியே துரத்திவிட கமினி ம.வி.மைதானத்தில் ஒன்று கூடினோம். காண்பவர்களுக்கு காட்சிகள் ஆனோம். தேடுபவர்களுக்கு செய்திகளானோம். இலாபம் பெறுபவர்களுக்கு விளம்பரமானோம்.

கண்ணீர்க் கோடு கன்னம் நனைக்க, நாதியற்று நின்ற வேளை எம்மினத்தவர் கரம் நீளவில்லை. நீண்டது சகோதர இனத்தவர் கரம். ஆமாம் காமினி ம.வி. அதிபர் முன்வந்து முகம் மலர்ந்து இடம் தந்தார். 08.02.2010 இல் ஒன்று கூடி பாடசாலை என்றானோம். இழந்தவரும் இழந்தவரும் கூடினோம். எம்மாலும் முடியுமெனக் கரம் கோர்த்தோம். அதன் வெகுமதியே இன்றைய தரம் 5 பெறுபேறு.

இம் மாணவர்கள் தரம் 3இன் பின்பகுதியையும் தரம் 4இன் பெரும் பகுதியையும் கற்காதவர்கள். துன்ப துயரங்களின் வடிவங்கள். ஆனால் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், பிள்ளைகளின் தன்னம்பிக்கையும் இன்று நிறைவான ஒரு பெறுபேற்றினைப் பெற்றுத் தந்திருக்கிறது.

எனக்கு இத்தனை மாணவர்கள் சித்தியென மார்தட்டிக் கொள்பவர்கள் மத்தியில் எமக்கு எப்பெறுபேறும் சொந்தமில்லை எனத் தெரிந்தும் தம்மை அற்பணித்தவர்கள் எங்கள் ஆசிரியர்கள்.”
இப்பாடசாலை மாணவர்கள் நடந்து முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இரண்டாம் இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். 175 மற்றும் 173 பள்ளிகளைப் பெற்றிருக்கிறார்கள். பலர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறார்கள். இம்மாணவர்கள் இங்கு கல்வி கற்றபோதிலும் அவர்கள் முன்னர் கற்ற பாடசாலைகளில் சார்பிலேயே இப்பரீட்சைக்குத் தோற்றியிருக்கறார்கள். எனவே இவ்வாசிரியர்களுக்கு தங்களிடம் கற்ற மாணவர்களின் அனைவிரினதும் பெறுபேறுகளை அறியக்கூடிய வாய்ப்பும் இல்லை.

இக்கடிதம் 1980 களில் காணப்பட்ட புத்தூர் சொக்கதிடல் போன்ற கிராமங்களை எமக்கு நினைவூட்டுகின்றன. எமது பிரச்சினை இனப்பிரச்சினை மட்டுமல்ல