தமிழர் குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன : சிங்கள் மக்கள் குடியேற்றம்?

தீடிரென இலங்கையின் பல பாகங்களிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட சிங்கள மக்கள், மணியந்தோட்டம் போன்ற இடங்களில்  காணிகள் இருந்தன எனவும், ஆனால் தற்போது தமிழ் மக்கள் அங்கு தங்கியிருப்பதால், யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றம் மட்டும் செய்தால் போதும் எனவும்  கோரினர்.

இதே வேளை புலம்பெயர் தமிழர்கள் சிலரின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்ட தமிழ் அமைப்பு ஒன்று சிங்கள மக்கள் அங்கு நீண்ட காலமாக வாழந்தவர்கள் என்றும் அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் மணியம் தோட்டம் பகுதியிலிருந்து தமிழ்க் குடும்பங்கள் இலங்கை அரச படையினரால் இரவோடிரவாக விரட்டியட்டிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

4 thoughts on “தமிழர் குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன : சிங்கள் மக்கள் குடியேற்றம்?”

  1. யாழ்ப்பாணம் உங்கள வரவேற்கிறது.பழய நினைவுகளூடன் யாழ்ப்பாணத்தில்தான் வாழ வேணூம் எனும் ஆசையோடு வந்திருக்கும் உங்களூக்காய் கலைக்கப்பட்ட் மக்களூம் உங்களப் போன்றோரே.மொழியை வைத்து அதற்கு இனவாதம் பூசி வியாபாரம் செய்யும் மகிந்தாவும் அவரைச் சார்ந்தோரும் காக்காமாரும் மனிதம் நேசிக்கும் காலம் வர அல்லாகுத் தாலா துண செய்வாராக. இன்சா அல்லா இலங்கையில் சமாதானம் மலரட்டும்.

  2. எது நடந்தாலும் பிரபாகரனே என்று வசைபாடி கருத்தெழுதும் தூய தமிழ் மாந்தர்களை இன்னமும் காணவில்லையே?. மெளனித்து விட்டார்களா? அல்லது மகிந்தா கொடுப்பனவை நிறுத்திவிட்டாரா?…

    1. வந்திருகிறவைக்கு புலி எண்டால் கோக்கும்,பன்ராவும் கொடுத்து வரவேற்றூ தமிழரை பழங்கஞி குடிக்க வற்புறூத்தி இருக்கும்,நல்ல காலத்துக்கு புலி இல்ல.

  3. ஒரு நேர்மையான எழுத்தாளன் எதையுமே பக்கசார்பு இல்லாமல் ஆராய்ந்து, நடுநிலையில் சிந்தித்து, உணமையான செய்திகளை, நியாயத்தின்படி எழுதுவான். ஆனால், அதற்குமாறாக ஒருபக்கம் சார்ந்து, அதற்காக கை கால்கள் வைத்து சோடித்து எழுதுபவன் நோக்கமே வேறு.

Comments are closed.