தமிழர்கள் மறு குடியேற்றம் கருணாநிதி எழுதிய ஐம்பதாவது கடிதம்.

எந்த இழப்புகளுக்கும் முகம் கொடுக்காமல் எதிர்பையும் தெரிவிக்காமல் கடிதம் எழுதுவது ஒன்றுதான் கருணாநிதியின் அரசின். வாரிசுகளுக்கு பதவி கேட்டு வீல் சேரிலேயே டில்லி சென்று சோனியாவின் காலடிகளில் கெஞ்சிக் கிடந்த கருணாந்தி ஈழத் தமிழர்கள் விஷயத்தில் கடிதமாக எழுதித் தள்ளுகிறார். அவர் எழுதிய எல்லாக் கடிதங்களும் பிரதமர் அலுவலகத்தின் குப்பைத் தொட்டிக்கு போய் விடுவது வழக்கம். இந்நிலையில் இனக்கொலை குற்றவாளி போர்  வெறி நாடான இந்தியாவுக்கு நான்கு நாள் பயணமாக வருகிறார். அவருக்கு டில்லியில் சிறப்பான அரசு மரியாதை வரவேற்புக்கு ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது.
அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கம் போல தமிழக, மும்பை தமிழ் அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில் கருணாநிதி ஈழத் தமிழர் தொடர்பான தனது ஐம்பதாவது கடிதத்தை இந்திய பிரதமர் மன்மோகனுக்கு எழுதியுள்ளார்.

”கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இலங்கையில் முகாம்களில் இருந்த அனைத்து தமிழர்களும் மறுகுடி அமர்த்தம் செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்து இருந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள்.இன்னமும் சுமார் 80 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் வசித்து வருகிறார்கள் என்றும், அவர்கள் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றும் என்னுடைய கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் மறுகுடி அமர்த்தம் செய்யப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு பொருளாதார வசதிகள் செய்து தரப்பட வேண்டியுள்ளது. நிரந்தர அரசியல் தீர்வு மூலம் தங்களது மறுவாழ்வுக்கான நீதியை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.எனவே, டெல்லிக்கு வரவிருக்கும் இலங்கை அதிபருடனான தங்களது சந்திப்பின்போது இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் சிறப்பு நிகழ்வாக தாங்கள் எடுத்துரைத்து இலங்கையில் முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்புகளையும், மறுகுடி அமர்த்தம், மறு கட்டுமான பணிகளையும் விரைவில் மேற்கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.. கருணாநிதி எழுதியுள்ளது போல மன்மோகனும் ராஜபட்சேவிடம் தமிழர்கள் மறு குடியேற்றம் பற்றிப் பேசுவார். ராஜபட்சேவும் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டவுடன் தமிழர்கள் முழுமையாக குடியேற்றப்படுவார்கள். என்பார். ஒரு வேளை தனது கடிதத்திற்குக் கிடைத்த வெற்றி என கருணா ஒரு முரசொலியில் ஒரு கவிதை எழுதக் கூடும்…..

One thought on “தமிழர்கள் மறு குடியேற்றம் கருணாநிதி எழுதிய ஐம்பதாவது கடிதம்.”

  1. கைப்புள்ள கருணாநிதி என்று அடிக்கடி நிரூபீக்கிறார் போலும்

Comments are closed.