தமிழர்களை நிரந்தர எதிரிகளாக்கவே யுத்தவெற்றியை அரசாங்கம் பயன்படுத்துகிறது:UTHR

தமிழ் மக்களை நிரந்தரமான எதிரிகளாக்கவே யுத்த வெற்றியை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதாக மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு(UTHR) தெரிவித்துள்ளது.

யுத்த முடிவை, வழமையான நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதனை மைல்கல்லாக புரட்டிப்போடும் எத்தனமாகவே ஆட்சியிலுள்ளோர் நடப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டது. யுத்தமும், அதன் முடிவும் அவர்களின் கொள்கைப்போக்கு நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு வாய்ப்பான சந்தர்ப்பத்தை வழங்கியிருப்பதாகவே அவர்கள் கருதுவதாகக் கூறிய யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு, சிறுபான்மையினத்தவரை பலவீனப்படுத்துதல், அவர்களை நிரந்தர எதிரிகளாகக் கருதுதல், அவர்களின் தாயக பூமியிலிருந்து வெளியேற்றுதல் போன்ற கொள்கைப்போக்கு நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கவே அவர்கள் கருதுவதாகவும் தெரிவித்தது.
 
 இதேவேளை, இலங்கையில் இனரீதியிலான அரசியல் ஆழமாக வேரூன்றுவதைத் தடுப்பதற்கு மூதூர் படுகொலைகள் உட்பட ஏனைய படுகொலைகளுக்கான உண்மைகளைக் கண்டறிவதற்கு உரிய விசாரணைகள் நடத்தப்படுவது அவசியமெனவும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு குறிப்பிட்டது.