தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்.

 

இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் இந்திய மீனவர்கள் தாங்கள் பல சிக்கல்களை எதிர் கொள்வதாக கூறுகிறார்கள்.

நடுக் கடலில் இலங்கை கடற்படையின் பிரசன்னம் அதிகரித்துள்ளதாகவும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் போஸ் கூறுகிறார்.

மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இலங்கை கடற்படையினர் தங்களை தாக்குவதாலும், மிரட்டுவதாலும் தங்களால் மீன்பிடி தொழிலை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் 1 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பல குடும்பங்கள் இந்தியாவின் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த சம்பவங்கள் இடம்பெற்று இருப்பதாகவும் போஸ் குறிப்பிடுகின்றார்.

மேலும் சனிக்கிழமையன்று மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கியதோடு, தங்களுடைய கட்டுப்பாடு மண்டபம் பகுதி வரையில் செல்லுபடியாகும் என குறிப்பிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

BBC