தமிழக மீனவர்களை ஏமாற்றும் சக்திகள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள்-நாம் தமிழர்.

இலங்கையில் இருந்து இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு சூர்யகுமாரன் என்பவர் 21 பேர் கொண்ட குழுவினருடன் வந்து இராமேஸ்வரம் மீனவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.இதற்கு மத்திய,மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.தமிழக மீனவர்கள் சிங்களக்கடற்படையினால் கொல்லப்படுவதைத் தடுக்கத் தவறிய அரசுகள்,தமிழர்கள் எல்லை தாண்டுவதே இதற்கு காரணம் என்று பிரச்சனையைத் திசை திருப்புகின்றன.இது குறித்துப் பேச்சு வார்த்தை என்று மக்களை ஏமாற்றுகின்றன.ஆனால் உண்மையில் நம் நாட்டு எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களையே பெரும்பாலும் சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்றிருக்கின்றது.இதற்கு முக்கிய காரணம் த்மிழர்கள் எங்கிருந்தாலும் தனக்கு எதிரியாக சிங்களன் கருதுவது தான்.ஆகவே இந்த பேச்சுவார்த்தை தமிழர்களை ஏமாற்றும் ஒன்றாகும்.மேலும் ஊடகங்களில் எல்லாம் சூர்யகுமாரன் என்பவர் எமது சகோதர சொந்தங்களான தமிழக மீனவர்கள் இரட்டை மடியைப் பயன்படுத்துவதாகவும். விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து இலங்கை மீனவர்களின் தொழிலுக்கு பங்கம் ஏற்படுத்துவதாகவும் கூறி வருகிறார். ஆனால் நமது மீனவச் சொந்தங்களின் சார்பில் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர்கள் யார்? அதில் எத்தனை பேர் உண்மையான பாரம்பரிய மீனவர்களின் தலைவர்கள் என்பதெல்லாம் குறித்து தகவலே இல்லை. மேலும் இப்பேச்சுவார்த்தைக்கு சூர்யகுமாரன் குழுவினர் வருவதற்கு முன்னர் வடமாராச்சி மீனவர் சங்கம் என்கிற பெயரில் இந்திய டோலர் படகுகள் அத்து மீறி மீன்பிடிப்பதால் எங்கள் கடல் வளம் பாதிக்கப்படுகிறது என்று இலங்கை அரசிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.இந்தப்புகாரை அளித்தவர் இப்பொழுது பேச்சு வார்த்தைக்கு வந்துள்ள சூர்யகுமாரன் என்று சந்தேகம் உள்ளது.இதனை அவர் தெளிவு படுத்த வேண்டும்.இக்குழு தமிழகம் வந்துள்ள நிலையில் இலங்கை அரசிடம் என்ன புகார் அளித்தார்களோ அதே புகார்களை இங்கே குற்றச்சாட்டுகளாக வைக்கிறார்கள். ஆக வருவதற்கு முன்பே , ஏற்கனவே முடிவு செய்து விட்டு குற்றச்சாட்டுகளை எமது மீனவ மக்கள் சுமத்துவதற்காகவே இக்குழு வந்துள்ளாதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணா எல்லை தாண்டும் மீனவர்களைக் காப்பாற்ற முடியாது என்று சொன்னதையே இக்குழுவினர் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள்.மேலும் கச்சத்தீவு குறித்து உண்மைக்குப்புறம்பாக அது இலங்கைக்கு சொந்தமான ஒன்று என்பதைப்போல அறிக்கை அளித்திருக்கின்றார்கள். இது இலங்கை,இந்திய அரசுகளின் மிகத் தந்திரமான சதி என்று தெரிகிறது. அரசுக் குழுவாக வந்துள்ள இக்குழுவினரை இங்கு கலந்துரையாட ஏற்பாடு செய்ததன் பின்னணியில் உள்ள சக்திகள் யார் என்பதை விரைவில் நாம் தமிழர் அமைப்பு அம்பலப்படுத்தும் என்கிற நிலையில் தமிழக ரத்த மீனவ சொந்தங்கள் இச்சூழ்சிக்கு பலியாகாமல் தங்களின் தொழில் உரிமையை நிலைநாட்ட எவ்வித விட்டுக் கொடுப்புகளுக்கும் ஆளாகாமல் போராட வேண்டும்.விரைவில் எம் தமி மீனவச்சொந்தங்களைத் திரட்டி இந்த மோசடி நாடகத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

7 thoughts on “தமிழக மீனவர்களை ஏமாற்றும் சக்திகள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள்-நாம் தமிழர்.”

 1. Hello naamtamilar movement,
  U r cheating not only the eel am Diaspora Tamils u r cheating ur own Tamil Nadu Tamils.
  For how long u r going to cheat all these people.
  Srilankam fishermen (tamils) cant’s go to fising (becaz of high security zone/ un-prohibited area & all)
  U people (fishermen) take that advantage & fish in these srilankan waters with large trawlers’.
  U have a vast fishing area in the Indian ocean, y r u crossing this sea boarder?
  Ur smuggling fishermen don’t know the border?
  Don’t tell me how the people (chamaadiyars) from mandapam to nagapattinam came rich in these areas.
  See ur website http://www.naamtamilar.org/
  U r living on us. Without our eel am struggle u people r no more.
  Read KP’s interview http://www.athirady.info/2010/08/21/106220
  I’m not against for any fishermen or innocent people. Burs don’t make all these for ur cheap politics.
  Enough it’s enough see the truth & reality.

  PB: without Tamil Nadu fishermen’s support there was no eelam struggle. This is not now, it’d from before u born Seeman
  ….but now….?????

 2. ஜானி குமுதத்தில் இருந்து இப்போது கல்கிக்கு மாறீவிட்டார்.ஒவ்வொரு கோயிலையும் அசுத்தப்படுத்துவது என்ற அவரது பத்திரிகையாளர் முகமூடி தொடர்கிறது.இப்போதும் அதே புலம்பலும் பூச் சூடலும்தான் ஆனால் சமூக அவலங்கள அவர் கணீப்பது என்பது அரசியல்வாதிகள மிரட்டுவதும் அவர்கள் பணீந்ததும் பூச்சூடுவதும் என்ற அவரது நாடகம் தொடர்கிறது.

 3. கலியுலக காமடியன்கள்தான் இந்த நாம் தமிழர் இயக்கம்……………………

 4. ஈழத் தமிழர்ள இன்று எத்தனை பேர் இந்த புதிய கட்சி நாம் தமிழர் இயக்கத்தை ஆதரிக்கான்னா அது பெரிய கேள்விக் குறி. இவன்கட்கு நம்ம நாட்டில அரசியல் செய்ய, மக்களுக்காக போராட எத்தனையோ இருக்கு. இங்கு பின்கதவால வந்த ஹிந்தி திணிப்பு இப்ப முன் கதவால வருது. விவசாயிகள் நிலம் பறி போகிறது. கலாசார சீரழிவு நகரங்களில் இருந்து கிராமங்களிற்கு சட்டலைட் டிவி ஊடாக போகிறது.

  ஏனையா நம்ம ஆட்கள் அவங்க கடல் எல்லை தாண்டுறாங்க? நம்ம தமிழ் நாட்டில தொழில் வாய்ப்புகள் மற்ற மாநிலத்தில இருந்து வாரவங்க நிரப்புரான்களே அதை சிந்திக்கிறாங்களா?
  சென்னையில வியாபாரங்கள் கூடுதலாக வட இந்தியக்காரங்கலிட பொய் விட்டது. இதை கவனிக்கிறாங்களா?
  மத்திய இலாகாகளில ஆங்கிலம் தெரியாத தமிழர் ஒரு விண்ணப்பம் (form) நிரப்பமுடியாத நிலை.
  உதாரணத்திற்கு: முக்கியமான புகையிரத இட ஒதுக்கீடு படிவம் (Southern Railway reservation form only in english and hindi), தபால் இலாகா பொதி படிவம் (forms in postal department )இப்படி பல நாளாந்த வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட படிவங்கள்.

  முக்கியமாக தமிழ் நாட்டில் ஓடும் இரயிலில் ஏறினால் தமிழில் ஓர் அறிவுப்பும் இராது. முக்கியமாக ஹிந்தியிலும் அடுத்ததாக ஆங்கிலத்திலும் உள்ளது.

  விடுதலை புலி பிரபாகரனின் அன்புத் தம்பி சீமான் சார், தங்கள் அன்புத் தம்பிகளுடன் சேர்ந்து ஹிந்தி ஒழிப்பு என்று தொடக்கி சகல பொது இடங்களிலும் உள்ள ஹிந்தி எழுத்துக்களுக்கு தார் பூசலாமே. அதுதான் சார் உங்க கட்சியின் பெயருக்கு மரியாதை. மற்றும்படி “நாம் தமிழர்” என்று பெயர் வைத்ததில ஒரு பிரஜோசனமும் இல்லை சார்.

  சீமான் சார் நிங்க சார்ந்த வகுப்புகாரங்களுக்காக நிங்க பேசலாமே?

  உறையூர் ரஞ்சன்

  1. ஈழத்தமிழர் எனும் லேபிள் பலரது பொருளாதார புகலிடத்திற்கு அய்ரோப்பாவில் உதவுகிறது இன்னும் தென்னிந்திய சினிமாவின் வேராக இருக்கிறது இதுவெல்லாம் நாம் தமிழர் என்பதால்தானே.தமிழரைத் தமிழரே வெறூப்பதால்தானே தமிழனால் தன் மானிலத்திலேயே தலை எடுக்க முடியவில்லை.அகதியாய் வந்த மலையகத் தமிழனையே அன்னியனாக பார்த்த தமிழ்நாட்டவரெல்லாம் ஈழத்தமிழர் ஆக அகதியாக அய்ரோப்பாவிற்கு வருவது தமிழராய் இருப்பதால் தானே.

   1. Good point, Mr. Tamilmaran,

    The real Eelam Tamil refugees are here in the camps.

    And we know after the 1983 riots so many Indian origin Tamils who worked in the Ceylon eastaes came back here as refugees & put them in Kottapattu camp & Mandapam camp, And we know how our people treated them. That time here we know Eelam JaffnaTamil students who were studied here helped them.

    1. குடியிரிமை மறூக்கப்பட்டு இந்தியா திரும்பிய தமிழரில் அனேகர் இன்னும் தமிழ்நாட்டில் அகதிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்,நீலகிரி மாவட்டத்தில் குடியேற்றப்பட்ட அவர்கள் வாழ்க்கை இன்னும் தள்ளாட்டமாகவே இருக்கிறது,இத்தனை வருடம் கடந்தும் இன்னும் அவர்கள யாரும் ஏறேடுத்தும் பார்க்கவில்லை.நீங்களாவது எட்டிப்பார்க்கலாமே.

Comments are closed.