தமிழக கடலோர கிராமங்களில் புலிகள் மீதான ஆதரவு மீண்டும் ஆரம்பம்!

 

புலிகளின் நடமாட்டம் அற்றுப்போயுள்ள நிலையிலும் தமிழக மீனவர்கள் மீது படையினர் நடத்திவரும் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதையடுத்து, புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் தமக்கு பாதுகாப்பு அரண்களாக செயற்பட்டனர் என்ற அபிப்பிராயம் தமிழக மீனவர்கள் மத்தியில் தற்போது தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு, பெரும்பாலான தமிழக கடலோர மீனவ கிராமங்களில், விடுதலைப் புலிகள் ஆதரவு குறைந்து சென்றது. ஆனால் தற்போது, இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்து வந்த மோதல் தமிழக மீனவர்கள் மீது திசை திருப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழக மீனவர்கள், விடுதலைப்புலிகள் தங்களுக்கு அரணாக இருந்து வந்ததாக நினைத்து, மீண்டும் புலிகள் மீது இரக்கமும், பாசமும், பரிவும் காட்ட ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக, தமிழக கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் அதைச் சார்ந்த நகரங்களில் புலி ஆதரவு அரசியல்வாதிகள் உரமேற்றி வருவதும், மறைமுகமாக ஆரம்பித்துள்ளது.

படையினரின் தாக்குதல்கள் நிலைமையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராவிட்டால், மீண்டும், தமிழக கடலோரங்களில் இருந்து விடுதலைப் புலிகள் ஆதரவு எழும் அபாயம் உள்ளது என  அவ்வூடக வட்டாரங்கள் கருத்துவெளியிட்டுள்ளன.

4 thoughts on “தமிழக கடலோர கிராமங்களில் புலிகள் மீதான ஆதரவு மீண்டும் ஆரம்பம்!”

  1. புலி ஆதரெவு கிலி ஆதரெவு என்று நீ செய்தி வெளியெவிட்டு நீயும்,உன்னைச்சுற்றி உள்ளவர்கள் மட்டும் தான் இங்கு இந்தியர்கள் என்பது போல் நீ காட்டவேண்டாம் கருணா அணியுடன் சேர்ந்த இந்திய ;ரா;வின் வீரெர்கள் தமிழக மீனவர்களை புலிகளுடெனான போருக்கு முன்பு சுட்டுக் கொல்லவில்லையா? மீனவர்கள் இங்கு உள்ள நாட்டுமக்கள். அவர்கள் கடலில் சுட்டுக்கொல்லப்படுவதை தவிர்க்க நீ இன்னும் என்ன திட்டம் வைத்துள்ளாய் என்று இறையாண்மையுள்ள இந்தியாவிடம் கேட்டு செய்தி வெளியிடு நன்றி: மீன் பரவன் நாலுபேராவது உன் செய்திய மதிப்பான் த்தூ…கேடு கெட்டநாயெ /புலியும்,புலிகும்பலும் தான் செத்துவிட்டதே;….அடா ப் பெரும் பொய்யனெ.

  2. கவுதமன்,உங்கள் கருத்தை கொஞ்சம் நாகரிகமாக சொல்லலாமே!நான் தமிழக கடலோர மீனவந்தான்.புலிகளிருந்தவரைநமக்கு பயமேதுமில்லை.நாங்கள் இந்தியன் என்று சொல்வதைவிட புலிகள் என்றூ சொல்லப் பெருமைப்படுகிரோம்.

Comments are closed.