தமிழகம் இடைத்தேர்தல்- 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி!

கடந்த 18-ஆம் தியதி தமிழகத்தின் திருவைகுண்டம், கம்பம், தொண்டாமுத்தூர், ப்ர்கூர், இளையான்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலை மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாமக, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் புறக்கணித்த நிலையில் திமுக மூன்று தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டது. போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேசீயக் கட்சிகளான கம்யூனிஸ்டுகள், பாஜாகாவுக்கு இத்தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு விஜயகாந்தின் தேமுதிகவிற்கு வாக்குவங்கி அதிகரித்திருக்கிறது.