தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுமாம் மீண்டும் சொல்கிறார்- வைகோ.

பரமக்குடியில் முல்லை அணை உரிமை மீட்பு மாநாடு நடந்தது,

. இக்கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நல்லக்கண்ணு. வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய வைகோ, ” கேரள அரசு அணையை இடிக்க பல சூழ்ச்சிகளை செய்து வருகிறது. புதிய அணை கட்டி, அதில் படகு சவாரி விடவும், சுற்றுலாத் தலமாக மாற்றி, வருமானம் ஈட்ட கேரள அரசு முயற்சி செய்கின்றது.சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அணையை உடைப்பது மட்டும் தான் கேரள அரசின் நோக்கமாக உள்ளது. அணையை உடைத்தால் அவர்களுக்கும் கேடு, நமக்கும் கேடு தான்.அதன் பிறகு நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும் என நினைக்க வேண்டாம். இது மத்திய அரசுக்கு எச்சரிக்கை.கேரளாவில் உள்ள பெரியாறு அணை அவர்களுக்கு சொந்தமென்றால், தமிழகத்தில் உள்ள நெய்வேலி, கூடங்குளம் அணு மின் நிலையங்கள், ஆவடி டாங்க், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு சொந்தமாகும் நிலை வரலாம்.தமிழகத்தை சார்ந்து தான் கேரள மக்கள் உள்ளனர். அனைத்து பொருட்களும் இங்கிருந்து தான் அனுப்பப்படுகிறது. எனவே, மே 28 ம் தேதி கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து செல்லும் 13 சாலைகளிலும் நடைபெறும் மறியல் போராட்டத்தில், கட்சி பாகுபாடின்றி ஒரு குடும்பத்தில் ஒருவர் வந்து பங்கு கொண்டு போராட முன்வர வேண்டும் . கேரள அரசால் அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்றார் வைகோ.