தன்னை விடுவிக்கக் கோரி நளினி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனு

14 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தன்னை முன் கூட்டியே விடுவிக்குமாறு நளினி விடுத்த கோரிக்கையையும் மனுக்களையும் தமிழக அரசும் நீதிமன்றமும் நிராகரித்திருக்கிறது. நளினி விஷயத்தில் நேரடியாக அவர் விடுதலையை மறுத்திருக்கும் கருணாநிதி அதற்கான ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து அக்குழுவின் மூலம் நளினி விடுதலையை மறுத்தார். அதையே நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் நளினி சிறை ஆய்வுக்குழுவின் மனுவைத் தள்ளுபடி செய்து தன்னை விடுவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இம்மனு இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு வர இருக்கிறது.