தனித் தெலுங்கானா விவகாரம் வன்முறை-பதட்டம்-ராஜினாமா!

தனித் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக வன் முறை ஏற்படாமல் தடுக்க பாதுகாப்புக்கு மேலும் 1,150 துணை நிலை ராணுவத்தை ஆந்திராவுக்கு மத்திய அரசு அனுப்பியது.

ஆந்திர மாநிலத்தில் தனித் தெலுங்கானா பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ளது. தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என தெலுங் கானா பிராந்தியத்தின் அனைத்து எம்.பி., எம். எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மாநிலத்தை பிரிக்கக்கூடாது, ஒன்று பட்ட ஆந்திராவையே விரும்புகிறோம் என ராயல சீமா, கடலோர ஆந்திரப் பகுதியின் அனைத்து அரசி யல் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். இதனால் ஆந்திராவில் கடந்த 3 வார மாக இயல்புநிலை பாதிக் கப்பட்டுள்ளது. தனித் தெலுங்கானா குறித்து உட னடி முடிவு எடுக்க முடி யாது. இதுபற்றி தீர்மானம் செய்ய நீண்டகாலமாகும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் புதனன்று அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தெலுங்கானா வில் உள்ள காங்கிரஸ் உள் பட அனைத்து கட்சி எம் எல்ஏ, எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். காங் கிரஸ் கட்சியின் 11 மக்க ளவை உறுப்பினர்கள் வியா ழனன்று தில்லியில் கூடி, கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் தங்களது பதவி யை ராஜினாமா செய்து கடிதம் தர முடிவெடுத்தனர்.

ஐதராபாத்தில் 8 தெலுங் கானா ராஷ்ட்ரிய சமிதி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். அவர்களது கட்சி தலைவர் சந்திர சேகர ராவ், மகபூப் நகர் மக்க ளவை உறுப்பினர் ஆவார். அவர், புதனன்று இரவு தனது ராஜினாமாவை அனுப்பினார். 39 தெலுங்கு தேச எம்எல்ஏக்களும் ராஜி னாமா செய்ய முடிவு செய் தனர்.

இந்நிலையில் தெலுங் கானா விவகாரம் குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக எம்பிக்கள் உடனடி முடிவு எடுக்க தேவை இல்லை. விரிவான ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பின ரும் ஏற்கக்கூடிய முடிவுக்கு மத்திய அரசு கட்டுப்படும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். தெலுங் கானா பிராந்திய காங்கிரஸ் எம்.பி.க்களின் முடிவை தொடர்ந்து சிங்வி இவ் வாறு தெரிவித்தார்.

கூடுதல் படை

மத்திய அரசின் அறிவிப் பை தொடர்ந்து, தெலுங் கானா பிராந்தியத்தில் 48 மணி நேர பந்த்துக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அழைப்பு விடுத் தது. இதனைத் தொடர்ந்து அங்கு வன்முறைச் சம்பவம் ஏதும் நிகழாமல் இருக்க 1,150 கூடுதல் துணை நிலை ராணுவ துருப்புகளை ஆந்தி ராவுக்கு மத்திய அரசு அனுப்பியது.

தில்லி, ஜலந்தர், சண் டிகர் நகரங்களில் உள்ள மத் திய தனி காவல்படையின் 10 பிரிவுகள் இந்த பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் குவிக்கப்பட் டுள்ள மத்திய படைப்பிரிவு எண்ணிக்கை 38 கம்பெனி களாக உயர்ந்தது. மொத்தம் 4 ஆயிரம் துருப்புகள் அங் குள்ளன.

தெலுங்கானா விவகாரத் தில் எதிர்ப்பு காட்டிய ராயலசீமா, கடலோர ஆந்திர பகுதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை திரும்பப்பெற்றனர்.

இந்த நிலையில் தனித் தெலுங்கானாவுக்கு ஆதர வாக ஐதராபாத்தில் உஸ் மானியா பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர்.