தண்டவாளம் தகர்ப்பு அறிக்கை தேவை- உயர்நீதிமன்றம் உத்தரவு.

விழுப்புரம் சித்தணி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தண்டவாளம் தகர்க்கபப்ட்டது. இத்தகர்ப்பில் ஈழ ஆதர்வாளர்களைச் சந்தேகப்பட்டது தமிழக போலீஸ் சுமார் 33 பேரை சட்டவிரோதமாகக் கடத்திச் சென்ற பொலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பிடித்துச் செல்லபப்ட்ட ஒன்பது பேரை ஆஜர் படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனுவை அடுத்து 9 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டனர்.

இதனை தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டவர்களின் விபரங்கள் தொடர்பான அறிக்கையை நாளைக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

One thought on “தண்டவாளம் தகர்ப்பு அறிக்கை தேவை- உயர்நீதிமன்றம் உத்தரவு.”

Comments are closed.