தண்டவாளம் தகப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ தொடர்பு?

விழுப்புரம் அருகே சித்தணி அருகே சேலம் ரயில் கடந்து சென்ற போது தண்டவாளம் தகர்க்கப்பட்டதாகவும் அதைப் பார்த்த ரயில்வே கார்டு தகவல் சொல்லி பின்னால் வந்த ரயிலை நிறுத்தியதாகவும் தண்டவாளத் தகர்ப்பு பற்றி போலீஸ் ஒரு கதை சொன்னது. ஆனால் சமபவ இடத்தில் நிறுத்தப்பட்ட மலைக்கோட்டை ரயில் ஓட்டியோ பெரிய பள்ளத்தைப் பார்த்ததும் தான் ரயிலை நிறுத்தி விட்டதாக ஏதோ சைக்கிளை நிறுத்தியது போல கூறியிருக்கிறார். இந்நிலையில் தண்டவாளத் தகர்ப்பும் அதை ஓட்டி ஈழ ஆதர்வாளர்கள் மீதான் கருணாநிதி அரசின் போலீசின் பிரச்சாரங்களும் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதிரடித் திருப்பமாக இந்த தகர்ப்பையே இலங்கை அரசே செய்து விட்டு ஈழ ஆதரவாளர்களையும் புலி ஆதரவாளர்களையும் திட்டமிட்டிருக்குமோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவும், ராஜபட்சேவின் மிக நெருங்கிய கூட்டாளியுமான ஹசன் அலி எம்.எல்.ஏ பெயர் இதில் அடிப்பட்டது இந்நிலையில்தான் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி மாசானமுத்துவிடம் தண்டவாளத் தகர்ப்பில் ஹசன் அலிக்குத் தொடர்பு உண்டு. அதனால் அவரை விசாரிக்க வேண்டும். குண்டு வெடிப்பில் ஹசன் அலிக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது ஆனால் இப்போது அதை வெளியிட முடியாது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யும் பட்சத்தில் எம்மிடம் இருக்கும் ஆதாரங்களைக் கொடுக்கத் தயார் என்று மனுக்கொடுத்துள்ளனர். இந்த மனுக் கொடுக்கப்பட்ட அதே நேரத்தில் சென்னை உயர் நீதி மன்றத்தில் பிடித்துச் செல்லபப்ட்ட பத்து பேரின் குடும்பத்தினரும் ஆள் கொணர்வு மனுவைக் தாக்கல் செய்தனர். சமபவம் நடந்த அன்றே போலீசால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இன்னமும் வீடு திரும்பவில்லை என்றும் அவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் உடனடியாக அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்யபப்ட்ட இந்த மனு மீதான விசாரணை நாளை வருகிறது.

5 thoughts on “தண்டவாளம் தகப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ தொடர்பு?”

  1.  விசாரணை வெளிப்படையான முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை , வீடு கொளுத்தியவனே நாட்டாமையாக இருக்கையில் …

  2. பிடித்துச் செல்லப்பட்ட பத்து பேருக்கும் விடுதலைப்புலி ஆதரவாளர் என்ற மிகப்பெரும் பட்டமளிப்புவிழா நடைபெற்றிருக்கும். அதனை இந்து, பார்ப்பன ஏடுகள், இந்திய, ஈழ அரசுகளின் ஏடுகள் மகிழ்வுடன் பிரசுரித்து கவுரவப்படுத்தும்.

  3. இதிலே காங்கிரஸ் அல்லவா அகப்பட்டுள்ளது. அது பற்றி மத்திய அரசுக்கு மகிழ்ச்சிக்கு இடமுண்டா?
    மேலும் உண்மைகள் வெளி வரட்டும்.

  4. இந்தியா அழிவுக்கு, பார்பனர்கள் காரணமாகப்போகின்றனர்.

  5. ஹசன் அலி என்பவன் பச்சை தமிழின துரோகி.இவன் ராஜ பக்சேயின் கைகூலி.இவன் எப்படி குறுக்கு வழியில் காங்கிரசுக்குள் நுழைந்தான் என்று திருச்சி வேல்சாமி தனது குமுதம் பேட்டியில் விலாவாரியாக சொல்லி இருக்கிறார்.இவன் இதிலே கண்டிப்பாக சம்பந்தப்பட்டிருப்பான்.இலங்கையில் தமிழர்களை மட்டுமல்ல முழு நாட்டையும் அழிக்க போகிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.சிங்களவரும் தமிழரும் இணைந்து ஒரு தேச பட்ருள்ள ஒரு போராட்டத்தை ஆரம்பிப்பதை தவிர வேறு வழி இனி கிடையாது. இதற்கு சிங்கள – தமிழ் இடது சாரிகள் ஒரு முன்னணியை உருவாகுவது காலத்தின் கட்டாயமாகும்.

Comments are closed.