தடுப்புமுகாம் : எதிர்க்கட்சிகளை அனுமதிக்க முடியாது!

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல. அது மக்கள் தற்காலிகமாக தங்கியுள்ள இடங்களாகும்.

எதிர்க்கட்சியினருக்கு கண்டுகளிப்பதற்கு இடம் தேவைப்படின் நாட்டில் உள்ள மிருகக்காட்சிச்சாலை மற்றும் உடவளவை போன்ற இடங்களுக்கு செல்லலாம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன தெரிவித்தார்.

முறையாக கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு முகாம்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினருக்கு அங்குசெல்ல ஆர்வம் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்.