தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் மற்றும் சிறைக்கைதிகளின் நிலை

புலிகளின் முக்கிய போராளிகள் என படைத்ரப்பினரால் அடையாளம் காணப்பட்டு ஓமந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 900 பேரின் விடுதலை தாமதாகவே சாத்தியமாகுமென பிரிகேடியர் சுனந்த ரணசிங்க ஓமந்தை தடுப்பு முகாமிற்குச் சென்ற வேளை தெரிவித்திருக்கிறார். ஓமந்தை முகாமிலுள்ளவர்கள் குறித்துப் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதனால் அவர்களை விடுதலை செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என பிரிகேடியர் சுனந்த ரணசிங்க தெரிவிதத்pருக்கிறார்.

அதே நேரம்> ஓமந்தை தடுப்பு முகாமிற்குச் சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர, போரின் முடிவில் 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்தனர். இதுவரை 4,000 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரம் பேர் மாத இறுதியில் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஏனையோர்களில் போதிய ஆதரங்கள் உள்ளவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். போதிய ஆதாரங்கள் இல்லாதவர்கள் விடுதலை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தான் செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

புணர்வாழ்வு பெற்று விடுதலையானவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக அமைச்சரிடம் தெரியப்படுத்தப்பட்ட போது, புணர்வாழ்வு பெற்று விடுதலையானவர்கள் கைது செய்யப்பட்டமை தொடாபாகவோ தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பாகவே தனக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் டியூ குணசேகர அவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தால் புணர்வாழ்வு அமைச்சுக்கு அறிவிக்குமாறும் தெரிவித்திருக்கிறார்.

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டள்ள சிறைக்கைதிகள் “இயக்கத்தில் எந்த தொடர்புகளையும் கொண்டிராத தங்களைத் தடுத்து வைத்திருப்பது நியாயமா? எங்களை விடுவிக்க உதவுங்கள்” என அங்கு சென்ற தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநரேந்திரனிடம் தெரிவித்திருக்கிறார்கள்
கைதிகளின் எண்ணிக்கை ஆரம்பத்தில் 15 ஆயிரம் எனத் அரச தரப்பு தெரிவித்த போதும் இப்போது 12 ஆயிரம் என்கிறனர், ஏனைய கைதிகளின் நிலை பயம் கலந்த அதிர்சி நிலவுகிறது. ஈரோஸ் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலரும் பின்னாளில் புலிகளில் இணைந்துகொண்டவருமான பால குமார் கொலைசெய்யப்பட்டதற்கான ஆதரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் இலங்கை அரசு இது குறித்துத் தெளிவான பதில் எதையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.