தங்களது படையினர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என இத்தாலி அரசு, தலிபான்கள்களுக்கு லஞ்சம்!

talaban1ஆப்கானிஸ்தானில் உள்ள இத்தாலிய துருப்புக் களை தாக்காமல் இருப்பதற்கு தலிபான்களுக்கு இத் தாலி நிர்வாகம் லஞ்சம் கொடுத்ததாக தலிபான் தளபதியும் மூத்த ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இருவரும் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை அகற்றிய அமெரிக்க தலைமை யிலான கூட்டுப்படை, அங்கு தொடர்ந்து தாக்கு தலை மேற்கொண்டு வருகிறது. தலிபான்களும் எதிர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறார்கள். கூட்டுப் படையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி துருப்புகள் உள்ளனர். இதில் இத்தாலி வீரர்கள், ஆப்கானிஸ்தானின் சரோபி பகுதியில் பாதுகாப்பு பணிகளில் உள்ளனர். தலைநகர் காபூலுக்கு கிழக்கே இந்த நகரம் அமைந்துள்ளது.

தங்களது படையினர் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தக்கூடாது என இத்தாலி அரசு, தீவிரவாதிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது. முகமது இஸ்மாயில் என்ற தலிபான் தளபதி கூறுகையில், கடந்த ஆண்டு எங்களிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. இதனால் உள்ளூர் தீவிரவாதிகள் இத்தாலி படைகள் மீது தாக்குதல் நடத்துவது கிடையாது என்றார்.

கடந்த 2008-ம் ஆண்டு சரோபியில் 10 பிரான்ஸ் வீரர்களை தலிபான்கள் கொன்றனர். அப்போது இத்தாலிய துருப்புகளிடம் இருந்து பாதுகாப்பு பொறுப்பை பிரான்ஸ் படை ஏற்றபோது இந்தத் தாக்குதல் நடந்தது. அப் போது இத்தாலி நிர்வாகம் தலிபான்களுக்கு லஞ்சம் தந்துள்ளது தெரிய வந்தது.

இந்தக் குற்றச்சாட்டை ரோம் நகரத்தில் இத்தாலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இக்னோசியா லா ரசா, முற்றிலும் நிராகரித்தார். லஞ்சப் புகாரை இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியும் மறுத்தார். இத்தாலியில் உள்ள அமெ ரிக்க தூதரகம் இவ் விவகாரம் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க வில்லை. கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் தலிபான்களுக்கு லஞ்சம் தரப்பட்ட புகார் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் ஒரு புகார் தரப்பட்டிருந்தது. தீவிரவாதிகளுக்கு பணம் தரப்பட்ட விவகாரம் ‘டைம்ஸ்’ இதழில் வெளி யாகியுள்ளது.