டெல்லியில் இந்திய அரசின் மாநாடில் கலந்துகொண்டவர்களும் அறிக்கையும்

meeting01

இந்திட அரசு டெல்லியில் நடத்திய மாநாட்டின் முடிவுகள் குறித்த தீர்மானம் இன்று வெளியிடப்பட்டது. இலங்கையில் இனப்படுகொலை நடத்திய இந்திய அரசு தனது ஆதரவாளர்களை அழைத்து தனது குகைக்குள்ளேயே கூட்டம் நடத்தி 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பங்களித்தவர்களின் ஊடாகக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய அதிகாரவர்க்கத்தின் நலன்களுக்காக இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்வதற்காக இந்திட அரசினால் திணிக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுமாறு இந்திய அரசைக் கோரும் தீர்மானம் நிறைவேற்றுவதன் ஊடாக ஈழப் போராட்டத்தின் அடிப்படை நியாயங்களைக் கூடக் குழிதோண்டிப் புதைப்பதற்கு வழிசெய்துள்ளனர் .
மாநாட்டில் தலைமை வகித்த திரு பொன் சத்தியசீலன் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அவமனகரமான அறிக்கை இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களை இந்திய அரசுக்கு மீண்டும் காட்டிக்கொடுக்கிறது. புலம் பெயர் நாடுகளில் இயங்கும் அமைப்புக்கள் அனைத்தும் ஐந்தாம்படைகள் போன்று செயற்படும் நிலையில் இந்திய அரசின் குரலை நேரடியாகவே ஒலிக்கும் கூட்டம் ஒன்று தயாராகிவிட்டதை இந்த நிகழ்வு தெளிவாகக்காட்டுகின்றது.
தெற்காசியாவில் நடைபெறுகின்ற ஒடுக்கப்படும் மக்களின் ஒவ்வொரு போராட்டத்தினதும் எதிரியான இந்திய அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள புதிய முகவர் கும்பலைத் தயார்செய்துள்ளது.
சத்தியசீலனைத் தவிர, பி.ஏ.காதர், சார்ள்ஸ், ராம்ராஜ், ஜென்னி ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்ட அறியப்பட்ட முகங்கள்.

meeting02

meeting03

 

மாநாட்டுத் தீர்மானங்கள் – ஆங்கிலத்தில்

தொடர்புடைய பதிவுகள்:

டெல்லியில் இரத்தச் சோறு உண்கிறார்கள் : சபா நாவலன்

5 thoughts on “டெல்லியில் இந்திய அரசின் மாநாடில் கலந்துகொண்டவர்களும் அறிக்கையும்”

 1. மகேந்தா அரசு எத்தனையோ விசையாங்களிள் இலங்கையின் சட்டப்படிஎன்ற போர்வையிள்  அந்தகுடும்பமே ஆளுமை செழித்திக்கொண்டு செயள்படுவது அனைவரும் அறிந்த உண்மை (தரை வளம்.ஆகாயவளம்.கடல்வளம்)ஆனால் யாருடையா ஆதிக்கம் மகேந்தா குடும்பம் சட்டம் சட்டம் சட்டம் என்பதே கண்துடைப்பு.அதுவே டில்லியிள் நாடாத்திய கூட்டமும் சட்டப்படி கொடுத்ததை கொடு என்பதன் வெளிப்பாடு பொறுத்திருந்து பாருங்கள் நடப்பது என்ன என்பதை

 2. இந்தியா தமிழர்களுக்கு உதவ விரும்புகின்றது என்பது உணமையானால் முதலில் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு நிபந்தனை அற்ற ஆதரவளிக்கட்டும்.
  அல்லது
  வருகின்ற மார்ச் ஜெனிவா கூட்டத்தில் சர்வதேச சுயாதீன விசாரணை தீர்மானத்தை இந்தியாவே முன் வைக்கட்டும் .
  அதன் பின்
  இந்தியாவை நம்பலாமா என்பது பற்றி ஈழத் தமிழர்கள் ஒருமுடிவுக்கு வரலாம் .

  அதுவரை
  இந்தியாவை நம்ப முடியாது .
  இதனை
  இந்தியா செய்யத் தவறினால்

  இந்திய நகர்வுகள் அத்தனையும் சர்வதேச கவனத்தை அழிக்கும் சதி
  நடவடிக்கை தான் .
  துணை போவர்கள்
  யாராய் இருந்தாலும் சதிகார்ர்கள் தான் .
  இவர்கள்
  சர்வதேச சமூக முன்னெடுப்புக்களை உதறிவிட்டு துரோகங்கள் பல இழைத்த இந்தியாவை நம்பி அரசியல் நகர்வுகளைச் செய்வது போல் மடமை எதுவும் இல்லை .

  1. சந்திரமௌலீசன்,
   இது சர்வதேச சுயாதீன விசாரணை தொடர்பான பிரச்சனை அல்ல. தமிழ்ப் பேசும் மக்களுக்கோ அன்றி உலகில் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சக மனிதர்களுக்கோ சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே பிரச்சனை அல்ல. தோற்கடிக்கப்பட்ட தமிழ்ப்பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டம் எந்த வழிகளில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தான் இங்கு தேவையானது. சர்வதேச சுயாதீன விசாரணை என்ற பெயரில் உலக கொலைகாரன் அமரிக்காவை அழைத்துவருவதும், 13 சட்டம் என்ற தலையங்கத்தில் பிராந்தியக் கொலைகாரன் இந்தியாவை அழைத்துவருவதும் ஒன்று தான். வேறுபாடுகள் இல்லை. இனக்கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உண்மை அதற்கான மக்கள் சார்ந்த பொறிமுறை இல்லை. அதற்காக கொலைகாரர்களை அழைத்துவந்து இன்னொரு முள்ளிவாய்க்காலை நிறைவேற்ற முற்படுவது கேலிக்கூத்தானது. 
   தமிழ் மக்களைத் தலைமைதாங்குகிறோம் பேர்வளிகள் என்று மக்கள் விரோத உளவுப்படைகளுக்கு வழிகளைத் திறந்துவிடும் அனைத்து ஐந்தாம் படைகளும் அரசியல் நீக்கம் செய்யப்படவேண்டும்.

 3. எமது போராட்டம், ஏற்கனவே இந்திய – மேற்கு நாடுகளின் அலகுக்குள் அடைவு வைக்கப்பட்டு விட்டது.எமது போராட்டத்தை அழித்தவர்களும்,பழித்தவர்களும் பயன் பெற்றுக் கொண்டிருப்பதும் அதே அலகுக்குள்ளே.அதை மீட்டெடுப்பது என்பது,அடைவு வைத்த இடத்திலிருந்தே என்பதும் வெளிப்படை.ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது.எல்லாவற்றையும் விட முக்கியமானது,எதிரியின் நண்பன் எனக்கு எதிரி.

Comments are closed.