டில்லியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் மிகவும் குழப்பமான அரசியல் நிலவரம் அங்கு நீடித்து வருகிறது.சிறுபான்மை இனங்கள் மிகப்பெரும் அச்சுறுத்தலுக்குள் வாழ்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் இனக்கொலை குற்றவாளியான ராஜபட்சேவுக்கு இந்தியா சிகப்புக் கம்பள வரவேற்பும் விருந்தும் அளித்தது. அதையொட்டி தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய மத்திய அரசு தமிழர் தரப்புடனும் பேசுவோம் என்றது. இந்நிலையில் இந்தியாவே ஒரு அரசியல் தீர்வை தயாரித்து வைத்திருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ( இப்படி பல அரசியல் தீர்வுகளை இந்தியா ஈழத் தமிழர்கள் மீது ஏற்கனவே திணித்துள்ளது. சண்டித்தனம் செய்யும் பெரியண்ணன் மனப்போகிலேயே இவைகள் அமைந்தது சோகமாக ரத்த வரலாறு) இதைத்தொடர்ந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது.இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்திருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களூக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.அந்த அழைப்பை ஏற்று அவர்கள் இன்று மாலை இந்தியா வந்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஷ், பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை, விநாயகமூர்த்தி, சுமந்திரன் ஆகிய 6 எம்.பிக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.இவர்கள் 5,6,7 ஆகிய தேதிகளில் டில்லியில் தங்கியிருப்பார்கள். ‘’ தமிழர்களின் மறுவாழ்வு, இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஆகியவை குறித்தும் பேசுவோம் ’’என்று கூறியுள்ளார்கள்.

6 thoughts on “டில்லியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.”

 1. முள்ளீலே விழுந்த சீலைபோல இருக்கும் தமிழர் அரசியல் உரிமையானது சம்பந்தர் அய்யாவின் தலமையில் பெறப்படும் எனும் நம்பிக்கை இருக்கிறது.இந்தியாவின் கடமையும் இல்ங்கையில் சமாதான வாழ்வுக்கான ஒன்றூ.இந்தப் பயணம் நல்ல செய்திகள் தரும் பயணமாக அமைய லண்டன் முருகன் வழிகாட்டுவாராக.

 2. லண்டன் முருகன் தன் கோவில் நிர்வாகச் சண்டைகளிலேயே ஒன்றும் செய்ய முடியாமல் அந்தரித்துக் கிடக்கிறார்.

  அவர் கூட்டமைப்பின் புடுங்குப்பாடுகளைச் சமாளிப்பாரா?
  இல்லை தமிழரின் தலை விதியை முள்ளிலே போட்ட டில்லி ராஜபக்சவை மீறி என்ன செய்யும் என்று தலையைப் போட்டு உடைப்பாரா?
  இல்லை தமிழக மக்களையும் இலங்கைத் தமிழரையும் சிங்களப் பேரினவாதிகளையும் எப்படி ஒன்றாக ஏய்த்து இலங்கையைத் தன் காலடிக்கீழ் கொண்டு வருவது என்று தன் அப்பனுக்குக் காதில் மந்திரப் பொருள் சொன்ன மாதிரி ஏதாவது இரகசியம் சொல்லிக் கொடுப்பாரா?

  பாவம் ரண்டு பெண்டாட்டிக்காரப் பிள்ளை — ஆறுதலாக இருக்கட்டும். வழக்கமாக டில்லிக்கு ஆலோசனை சொல்லுகிற துட்டதேவதைகளிடமே விட்டு விடுவோம். அவர்களை மீறி முருகனாலோ அப்பன் சிவனாலோ அம்மை உமையாலோ அண்ணன் பிள்ளையானாலோ மாமன் நாராயணனாலோ கூட, எதுவும் முடியாது.

  1. ps.
   எல்லார் விதியையும் எழுதுவதாகச் சொல்லப்படுகிற (முருகனிடம் குட்டுப்பட்ட) பிரமனாலும் முடியாது.

   1. முருகன் என்பது நம் உள்ளீருக்கும் ந்ம்பிக்கை.நம்மை உற்சாகமாய் இருக்கப் பண்னுவதால் நாம் வழிபடும் கடவுள்.காலங்காலமாய் எம் உணர்வோடு கலந்திருக்கும் தமிழ்க் கடவுள்.ஆறூ படை வீடு கொண்டு அடியாருக்கு அருளூம் தெய்வம். தெய்வம் அன்றீ நமக்கு வேறூ துணயில்லை என்பதால் தெய்வ் அருள் சம்பந்தர் அய்யாவுடன் இருக்க் வேண்டுவது நம் ப்ண்பாட்டு மரபு.

   2. கடைசியாக நீங்களும் செல்வநாயகத்தின் லைனில் வந்து “கடவுள் தான் தமிழரைக்க் காப்பாற்ற வேண்டும்” என்று நிற்கிறீர்கள். உங்களையும் “கடவுள்” தான் காப்பாற்ற வேண்டும்.

 3. முள்ளீலே விழுந்த சீலைபோல இருக்கும் தமிழர் அரசியல் உரிமையானது சம்பந்தர் அய்யாவின் தலமையில் பெறப்படும் எனும் நம்பிக்கை இருக்கிறது.

  Mr Sampanthar is one of the very experienced politician …..He has a very heavy task to fulfill .
  He has to deal with many political giants in order to find a possible solution. It is like Walking on a knife’s edge.He is the best option what we have at the movement….

  verbal radicalism or sarcastic comments wont help us.. I can understand Tamilmaran’s anxiety

Comments are closed.