டக்ளஸ் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டி : வீணை கைவிடப்பட்டது

ஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ் மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இன்று யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மூன்று பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

3 thoughts on “டக்ளஸ் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டி : வீணை கைவிடப்பட்டது”

 1. வெற்றிலை மெல்கிறவர்கள், வாயைக்கழுவித் துப்ப முடியுமா? அல்லது அதன் சுவை அறிந்தவர்கள் மெல்லாமலும் இருக்க முடியுமா?

  சித்தரும் தொண்டை கிழியக் கிழிய ஒற்றுமை, விட்டுக்கொடுப்பென்று கத்தினதுதான். ……இப்போ, சங்கரி ஐயாவிற்கு ஒரு காலத்தில் காவலாக இருந்தவர்களும் (ஒரு star) வன்னிக் களத்தில், மற்ற கழுத்தில் செல்லிடை தொலைபேசி தொங்கவிட்டு ஐ.நா. மட்டும் உலக வலம்வந்த மாஜி star இம் வன்னிக்களத்தில், கிழக்கின் உதயமும் வன்னிக்களத்தில்……

  இவர்கள் ஏன் வன்னியின் கழகத்தாருடன் ஓர் போது இணக்காப்பாட்டிற்கு வந்து மக்கள் மத்தியில் வாக்கு கேட்கப்படாது?
  இனியும் காலம் தாழவில்லை…….

  இதே நேரத்தில், யாழ்ப்பாணத் தேர்தல் களத்தில் 15 கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளன.

  ஒருகட்சியினதும், 3 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிக்கபட்டுள்ளது.

  ஈ.பி.டி.பி கட்சி வெற்றிலைச் சின்னத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயரிலும் வேட்புமனுத் தாக்கல் செய்தது.

  யாழ்ப்பாணத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்த கட்சிகளாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (வள்ளம்), இலங்கை தமிழரசுக் கட்சி (வீடு), சோ~லிச சமத்துவக் கட்சி (கத்தரிக்கோல்), ஜக்கி தேசியக் கட்சி (யானை), ஜனநாயக தேசயக் கூட்டணி, ஜனசென பெரமுன(உலக்கை), ஜக்கிய சோசனச கட்சி, எல்லோரும் மக்கள் எல்லோரும் மன்னர் கட்சி (உண்டியல்), ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி(வெற்றிலை), பத்மநாபாஃ ஈழமக்கள் புரட்சிகர முன்னணி(மெழுகுதிரி), தமிழர் விடுதலைக் கூட்டணி(உதயசூரியன்), ஜனநாயக ஜக்கிய முன்னணி( இரட்டை இலை), அகில இலங்கைஃதமிழ் காங்கிரஸ்(மிதிவண்டி), இடதுசாரி விடுதலை முன்னணி(குடை), ஈழவர் ஜனநாயக முன்னணி(கலப்பை), ஸ்ரீலங்கா தேசிய முன்னணி ஆகியன வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன.

  இவற்றில் ஸ்ரீலங்கா தேசிய முன்னணி கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. 16 சுயேட்சை; குழுக்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தன. இவற்றில் 4 சுயேட்சை; குழுக்களுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

  வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததும் நடத்தப்பட்ட பரீசிலனையில் தமிழரசுக்கட்சியினால் 4 ஆட்சேபனைகளும், ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் 6 ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டன.

  இவற்றில் தமிழரசுக் கட்சியின் 4 ஆட்சேபனைகளும் நிராகரிக்கப்பட்டது. ஜக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் 4 ஆட்சேபனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 2 நிராகரிக்கப்பட்டன. ஆவற்றின் மூலமே 1 கட்சியும், 4 சுயேட்சைக் குழுக்களும் நிராகரிக்கப்பட்டன

  வடக்கே வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜேவிபி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இந்தக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றுள்ள சிவாஜிலிங்கத்தின் புதிய கட்சி, ஈபிடிபி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), TMVP, ENDLF (A Star from the Three Star) கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் சார்பில் 252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

  இவர்களில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்துள்ள சிவநாதன் கிஷோர் மற்றும் சதாசிவம் கனகரட்ணம் ஆகியோர் அரசுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் தொடர்பான செய்தியின் கருத்திற்கு:

  http://inioru.com/?p=10858#comments

  Posted on 02/26/2010 at 6:30 am

 2. மேலும் இன்று சிதறு தேங்காய் உடைத்து, செல்லிடக்க தொலைபேசியில் பேசியபடி http://www.epdpnews.com/news.php?id=5983&ln=tamil சென்று எதிர்வரும் சித்திரை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதர்க்கான வேட்புமனு தாக்கல் செய்ததை தங்கள் இணையதளத்தில் போடும்போது,
  “எதிர்வரும் சித்திரை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன்; இணைந்து யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன” என்றும், “இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இணக்க அரசியலின் மூலம் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே தான் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்” என்றுமே போட்டுள்ளார்கள்.

  தாங்கள் வீணை சின்னத்திலோ அல்லது வெற்றிலையிலோ கேட்கிறார்கள் என்று குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  http://www.epdpnews.com/news.php?id=5981&ln=tamil

  ஆனால், வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதர்க்கான வேட்புமனு தாக்கல் செய்ததை தங்கள் இணையதளத்தில் போடும்போது, “இம்முறை ஏப்ரல் 8ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் 9 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது” என்று போட்டுள்ளார்கள். http://www.epdpnews.com/news.php?id=5982&ln=tamil

  இது மக்களையே குழப்பும் செய்தியாக உள்ளது. ஆனால் வீடியோவிலும் அழகாக புன்முறுவலுடன் உள்ளனர்.

 3. ஈபிடிபியின் குழப்பம்!

  யாழ்பாணத்தில் வெற்றிலை, வன்னியில் வீணை என ஈபிடிபி போட்டி
  (சாகரன்)

  மிக நீண்ட இழுபறியின் பின்பு ஈபிடிபி வன்னியில் தமது சின்னமான
  வீணையிலும், யாழ்பாணத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து
  வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிட நியமனப் பத்திரங்களைத் தாக்கல்
  செய்துள்ளது. இச்செய்தியை அவர்களின் இணையத்தளம் உறுதி செய்துள்ளது. இரு
  மாவட்டங்களிலும் வேறு வேறு சின்னத்தில் போட்டியிட அரசு எப்படி
  அனுமதித்தது என்று ஆச்சரியமாக இருக்கின்றது. ஈபிடிபி யின் அரசியல் பீடம்
  இது பற்றி உறுதியான முடிவுகளை ஏன் மேற்கொள்ள முடியவில்லை என்பதுவும்
  ஆச்சரியத்திலும் ஆச்சரியம். பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன்
  தனித்து போட்டியிடுவதாக அறிவித்த ஈபிடிபி தற்போது யாழ்பாணத்தில்
  வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தத்திற்கு
  உள்ளாகியுள்ளதாக பார்க்க முடிகின்றது. வன்னியில் தமது ‘சுதந்திரத்தை’
  நிலைநாட்டியுள்ளது.

  ஈபிடிபியும் வடக்குக்கு அப்பால் பார்க்காது கிழக்கு மாகாணத்தை
  இம்முறையும் கைவிட்டு விட்டனர். புலிகளிடம் இருந்து கருணாவின்
  வெளியேற்றத்தைத் தொடர்ந்து இலங்கை அரசின் வசம் கிழக்கு வீழ்ந்தது. இதன்
  பின்பு புலிகளின் தனிநாட்டு ‘வரைபடம்’ தில் கிழக்கு இல்லாமல் போனது. இதே
  போல் இன்று டக்ளஸ் இன் ‘மாநிலதில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ யிலும்
  கிழக்கு விடுபட்டு பலகாலம் ஆகிவிட்டது. கடந்த 20 வருடங்களாக இலங்கை
  அரசில் மாறி மாறி அமைச்சராக சேவை செய்து வரும் டக்ளஸ், இத் தேர்தலில்
  வெற்றி பெற்று மீண்டும் அமைச்சர் ஆகி தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல்
  தீர்வை ஈட்டுவதில் காத்திரமான பங்களிப்பைச் செய்வாரா? என்பது
  கேள்விக்குறியே என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
  கடந்த காலங்களிலும் ‘ழுநெ ஆயn ளூழற’ என்ற இவரின் செயற்பாடுகள் பேரம்
  பேசும் இவரின் பலவீனங்களையே மேலெழச் செய்துள்ளது. தமது அமைப்புக்குள்ளேயே
  ஒரு பன்முகப்படுத்தப்பட்ட தலைமையை உருவாக்கி பலம் பொருந்திய அமைப்பை
  உருவாக்க முடியாத தனிமனித அணுகுமுறையையே டக்ளஸ் ஈபிஆர்எல்எவ் இன்
  இராணுவத்தளபதியாக இருந்த காலத்தில் இருந்து இன்றுவரை மாறாமல் தனது
  செயற்பாட்டாக கொண்டிருக்கின்றார். புலிகளின் பிரசன்ன காலகட்டத்து ஆயுத
  அரசியலில் இருந்து புலிகளின் பிரசன்னம் அற்ற காலகட்டத்து ஆயுதம் அற்ற
  அரசியல் நிலையில் இவரின் ‘சுயாதீன’ ஜனநாக செயற்பாடுகள் எந்தளவிற்கு
  வெற்றியளிக்கப் போகின்றது என்பதை இப்போதே ஆரூடம் கூறலாம். ஆனாலும்
  பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

  இதேவேளை பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இம்முறை கிழக்கைத்
  தாண்டி வடக்கிலும் போட்டியிட முன் வந்துள்ளது. இவர்களின் தாண்டும்
  நிகழ்வு யாராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றல்ல. வடக்கு கிழக்கு மக்களின்
  ஐக்கியத்திறகான முன்னெடுப்பாக இது அமையுமானால் வரவேற்கப்பட
  வேண்டியதொன்றாகும். மாறாக தங்களது முன்னாள் சகாக்களின் ‘அனுதாப’
  வாக்குக்கள் பெறுதல் என்ற ‘பொரிமாத் தோண்டி’ கதையாக அமையுமானால் இதனை
  வேறுவிதமாகத்தான் பார்க்க வேண்டும். ஜனநாக விழுமியங்களை சுவாசிக்க
  விரும்பும் ஆரோக்கிமான நகர்வுகளை நாம் வரவேற்று ஆதரிக்க வேண்டும்.
  எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், மக்கள் என்ற பார்வை ஆயுதம் அற்ற
  நிலையிலும், ஆயுதம் உள்ள நிலையிலும் ஏற்பட வேண்டும்.

  பத்தமநாபா ஈபிஆர்எல்எவ் என்ற ஈழ விடுதலை அமைப்பொன்றுதான் இன்றும் வடக்கு
  கிழக்கு என்று அனைத்துப் பகுதிகளிலும் தமது அரசியல் வேலைகளை கடந்த 30
  வருடங்களாக முன்னெடுத்து வருகின்றது. ஏனைய விடுதலை அமைப்புக்கள் ஆயுதப்
  போராட்டம் தவிர்ந்த பாராளுமன்ற அரசியலில் தமது தேர்தல் வெற்றிகளை
  மையப்படுத்தி வடக்கு (அல்லது கிழக்கு) என்று தமது செயற்பாடுகளை
  குறுக்கிக் கொண்டுள்ளன. இந்த வகையில் வடக்கு கிழக்கு மக்களை
  ஐக்கியப்படுத்தி அவர்களுக்கு இருக்கும் பொதுவான அரசியல் பிரச்சனைக்கான
  வேலைத்திட்டங்களில் இணைந்து வடக்கு கிழக்கு மக்கள் போராடும் நிலைமைகளை
  ஏற்படுத்தல் ஆரோக்கியமான, பலமான நிலைமைகளை ஏற்படுத்தும். நிர்வாக
  ரீதியாக இரு வேறு மாகாணங்களாக இருந்தாலும் அரசியல் போராட்டத்தில்;
  இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வடக்கும் கிழக்கும் இணைந்து செயற்படுவது
  இலங்கையில் நிரந்தர சமாதானத்திற்கும் எல்லா மக்களினதும் சம, சக
  வாழ்விற்கு வழி வகுக்கும்.

  ஈழ விடுதலை அமைப்புக்களில் இன்றும் பொருளாதார வறுமையில் வாடும் அமைப்பு
  பத்தமநாபா ஈபிஆர்எல்எவ். தமது பிள்ளைகளுக்கு திரிபோஷா மா உணவூட்டி வாழும்
  ‘செல்வந்தர்கள்’ இவர்கள். கடந்த காலத்தில் இவர்களால் உருவாக்கப்பட்ட சில
  பொருளாதார வழங்களையும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சகுனி வேடமிட்டு
  தனதாக்கிக் கொண்டார். களவாடிச் சென்றார். கணக்கு கேட்டவர்கள் சிலர்
  இவரால் பொட்டனுக்கு காட்டிக் கொடுகப்பட்டு கொல்லப்பட்டும் விட்டனர்.
  இவ்வாறான வளங்கள் அற்ற நிலையிலும்; அமைப்பு, கொள்கை, கோட்பாடு,
  வேலைத்திட்டம் ஐக்கியப்பட்டுச் செயற்படுதல் என்பவற்றில் இவர்கள்தான்
  செல்வந்தர்கள். தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் இவர்கள் தொடர்ந்தும்
  சரியானவற்றையே செய்வார்கள் என்று நம்புகின்றோம்.

  (சாகரன்) (மாசி 27, 2010)

  நன்றி! சூத்திரம் இணையம்.

  பிற்குறிப்பு:
  மேலும் பத்தமநாபா ஈபிஆர்எல்எவ் அமைப்பினரின் வவுனியா அலுவலகமும் வெற்றிலை மென்றுகொண்டு வீணை வாசிப்பவர்களால் அபகரிக்கப்பட்டதோடு, பொருளாதார நெருக்கடியில் இருந்த தோழர்களையும் உள்வாங்கியதாக ஓர் செய்தி முன்பு கசிந்தது.

  இன்று மற்றவர்களைப் போல் ஓர் புலம்பெயர் நாட்டில் தஞ்சம் அடைந்து வாழும் பாக்கியம் இருந்தும், மக்களுடன் மக்களாக இருந்து தோழர் ரஞ்சன் (பத்மநாபா) வழியில் வந்த தோழர் ராபர்ட் காப்பாற்றி மக்கள் மத்தியில் பல சேவைகள் செய்து பலரின் இடர்களின் மத்தியிலும் கட்சியை நிலைநிறுத்தி வைத்திருந்த நிலையில், இன்றும் பலரின் வஞ்சக அச்சுறத்தல்களுக்கு மத்தியிலும் கட்சியை தக்க வைத்துக்கொண்டு நிற்பது மட்டுமல்லாமல் இன்று யாழ் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக பதிவு செய்திருக்கும் தோழர் ஸ்ரீதரன் அவர்களை வாழ்த்துவது மட்டுமல்லாமல், எமது ஈழம் வாழ் மக்கள் கடந்த தவறுகளை உணர்ந்து தமது வாக்குகளையும் வீணடிக்காமல் நல்ல விதமாக பிரயோகிப்பார்கள் என நம்புகிறோம்; எதிர்பார்க்கிறோம்!

  இவரைபோல் தோழர் துரைரத்தினம் அவர்களும் கிழக்கில் தனியாக நின்று ஈபிஆர்எல்எவ் அமைப்பை நிலைநிறுத்தி கடந்த மாகானசபை தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  நன்றி!
  – அலெக்ஸ் இரவி.

Comments are closed.