டக்ளஸ் தேவானந்தா கைது? – மத்திய மாநில அரசுக்கு நோட்டீஸ்

இனக்கொலை குற்றவாளியும் பேரினவாத இலங்கை அரசின் அதிபருமான ராஜபட்சேவுடன் இந்தியா வந்த ஈ.டி.பி.டி கட்சியின் தலைவர் டக்ள்ஸ் தேவானந்தாவைக் கைது செய்யக் கோரும் மனுவை இன்று விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் விளக்கம் கேட்டு மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டிஸ் அனுப்பியது. தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலாளரும், வழக்கறிஞருமான புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்த மனுவில் 1986ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார்.இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார். வெளியே வந்த பிறகு, 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.1989 ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்.

இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த வழக்கு கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் பொறுப்பேற்ற புதிய தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், பொதுநலன் கருதி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம். இந்தியா வந்துள்ள டக்ளஸ் தேவானந்தா மீது கொலை, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் ஆகிய 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர். 16 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. எனவே அவரை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும் என்று வாதிட்டார்.அப்போது தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த வழக்கை வரும் ஜூன் 14ஆம் தேதி தள்ளி வைப்பதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டக்ளஸ் தேவானந்தா தனது இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய ராஜபக்சேவுடன் வெள்ளிக்கிழமை சென்று விட்டார்.இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.

3 thoughts on “டக்ளஸ் தேவானந்தா கைது? – மத்திய மாநில அரசுக்கு நோட்டீஸ்”

  1. நல்ல கூத்துத்தான்.  16 வருடங்களில் இந்த டக்ள         இந்தியாவுக்கு சென்று வந்தது 100 தடவைகளுக்கு மேல் இருக்கும் என்|றே நினைக்கி|றேன்.   உசுப|பேத்தி வயிறு வளர்த்த ஊடகவியலாளர்களுக்கும்  அரசியல்வாதிகளுக்கும்  மீண்டும் ஒருவர் கிடைத்துவிட்டார்.  நாங்கள் நினைத்தால் இந்தியா என்றலெெhன்ன அமெரிக்கா என்றாலென்ன எங்களை ஒன்றும் செய்ய |முடியாது. என்கிறார் டக்ள்     ஆனால் இணக்க அரசியல் மூல|மே எம்முடைய கோரிக்கைகளை வென்றெடுக்க|வேண்|டும் |போதிக்கிறார். பிரபாகரனிடம் அடிமையாகிக் கிடந்த மக்கள் ராஜபக்சவிடம் அடிமையாகாமல்  இணங்கிப் |போய் வெல்லுங்கள் என்கிறாரே. இது சாதாரண அரசியல்.  எதிர்த்துநின்று கொளகைவழி நிற்கும் |தோழர்கள் மக்களின் நாளாந்த துன்பத்தை அருகிருந்த பாரத்து தீர்க்கும் அவசியமில்லாதவர்கள்.  அது புரட்சி அரசியல். புரட்சியா?  புண்ணாக்கா?  வேண்டும் .

  2. எது எப்படியோ,இவர் ஒரு கொலைகாரர்!தேடப்படும் குற்றவாளி என்று உலகுக்குப் பற சாற்றியாகி விட்டது!இது போதும் வாழ் நாள் பூராவும் புழுங்கிச் சாவதற்கு!குற்றவாளிகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தம் கூட மகிந்தரின் விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டதாக சொல்கிறார்கள்!புகழேந்தி”புகழ்”பெறுவாரா?பார்க்கலாம்!!!!!!!!!!

  3. If douglas devananda is a wanted acused in India why the Indian Judiciary didnot issue a international arrest warrant and arrest Devananda with the help of Interpol.So now why they are demanding for his arrest.

Comments are closed.