இனவாதக் கட்சியான ஜேவீபீ இன் புதிய சந்தர்ப்பவாதம்

jvp-300ஒரு புறத்தில் மகிந்த ராஜபக்சவும் மறுபுறத்தில் சரத் பொன்சேகாவும் என்று இரு பெரும் சோவனிஸ்டுக்களையும் போர்க் குற்றவாளிகளையும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கைப் பேரினவாதிகள் ஆதரிக்கின்றனர். மற்றுமொரு இனவாத சோவனிசக் கட்சியான ஜே.வீ.பீ சரத் போன்சேகாவை நாட்டை நேசிப்பவராக ஆதாரிப்பதாகக் கூறுகிறது.

எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத ஒரு பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு புறத்தில் மகிந்த ராஜபக்சவும் மறுபுறத்தில் சரத் பொன்சேகாவும் என்று இரு பெரும் சோவனிஸ்டுக்களையும் போர்க் குற்றவாளிகளையும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கைப் பேரினவாதிகள் ஆதரிக்கின்றனர். மற்றுமொரு இனவாத சோவனிசக் கட்சியான ஜே.வீ.பீ சரத் போன்சேகாவை நாட்டை நேசிப்பவராக ஆதாரிப்பதாகக் கூறுகிறது.

“சரத் பொன்சேகா மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர் இல்லை. எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்த பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதை விட கட்சி சாராத ஒரு பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க நாம் தீர்மானித்துள்ளோம். அதற்காகப் பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

நாட்டு மக்கள் நேசிக்கக் கூடிய, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கக் கூடிய வேட்பாளராக சரத் பொன்சேகா விளங்குகின்றார்.

அதனால்தான் நாம் அவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். நாம் அவருடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.இறுதியாக நேற்றிரவு கூட பேசினோம்.

அவர் எமது கொள்கைகளுடன் ஒத்துப்போகிறார்” எனத் தெரிவித்தார்.