ஜே.வி.பி காரியாலயம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு!?

பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயம் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இன்று முற்பகல் பொலிஸார் காரியாலயத்தைச் சுற்றி வளைத்தனர்.

எனினும் நீதிமன்ற அனுமதியின்றி சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் நீதிமன்ற அனுமதியைப் பெற பொலிஸார் திரும்பிச் சென்றுள்ளனர்.

எனினும் அங்கு பெருந்தொகையான பொலிஸார் இருப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 thoughts on “ஜே.வி.பி காரியாலயம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு!?”

 1. மக்கள் விடுதலை முன்னணியினர் (JVP) பயப்படத்தேவையில்லை, இவர்களுடன் தோளோடு தோள் கைபோட்டு “கொமரேட்” “கொமரேட்”என்று புலன்பெயர் சர்வதேசங்களில் கூட்டிதிதிரிந்த, தண்ணியடித்த சர்வதேச தோழர்கள் அவர்களுக்கு இடர் வராமல் இணக்க அரசியலில் உதவி செய்வார்கள்.

 2. மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைவர் சோமவன்ச அமரசிங்க நேற்று ஜேவிபி ஒரு போதும் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாகவே ஜென. சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு அளித்தனர் என்றும் விளக்கம் அளித்தார்.
  “நாங்கள் UNP உடன் ஒருநாளும் கூட்டு சேரவில்லை; நாம் ஜென போன்செகவை ஆதரித்தோம்; UNP யும் ஜென போன்செகவை ஆதரித்தது; அதுபோல் அனைய கட்சிகளும் போன்செகவை ஆதரித்தன,” என்றும் “எம்மிடையே இருந்த ஒரே ஒரு உடன்பாடு ஜென சரத் போன்செகவை வெல்ல வைக்க வேண்டும்; நல்லாட்சி, நல்ல ஜனநாயகம் என்பவற்றை கொணர வேண்டும் என்பதுதான்,” என்று அவர் கூறினார்.
  ஜனாதிபதி தேர்தலின் பின் கட்சி பலவீனமடைந்திருக்கின்றது என்னும் கருத்தை அமரசிங்க முற்றாக மறுத்தார்.
  “ஜென. போன்செகவை ஆதரித்ததற்காக எமது தொண்டர்கள் எவரும் கட்சியை விட்டு விலகவில்லை,” என்று அவர் கூறினார்.

  தற்போது பாராளுமன்ற தேர்தலுக்காக ஜேவிபி யினர் சரத் பொன்சேகாவை தலைவராகக் கொண்டு ஒரு புதிய ஜனநாயக முன்னை என்னும் ஒரு முன்னணியை அமைத்திருக்கின்றார்கள்.

  புதிய ஜனநாயக முன்னணியை பற்றி வினவிய போது “அவர் ( ஜென. பொன்சேகா) தனது உடன்பாடை எமக்கு தந்துள்ளார்; நான் தடுமாறவில்லை: அவர் தடுமாறவில்லை, JVP தடுமாறவில்லை, முன்னணியில் சேர உடன்பட்டிருக்கும் ஏனைய கட்சிகள் தடுமாறவில்லை ,” என்று அமரசிங்க கூறினார்.

  மேலும் கடைசியாக கிடைக்கும் தேர்தல் சம்பந்தமான செய்தியில்,
  ஜனநாயக சூழ்நிலையில் வாக்குகளை பிரிப்பதற்கு ஆரம்பமாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் முகமாக, இருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். கிளிநொச்சியைச் சேர்ந்த சங்கரலிங்கம் சத்தியசீலன் இன்று கட்டுப்பணம் செலுத்தியிருக்கும் அதேவேளை, சாவகச்சேரியில் சண்முகநாதன் மகேந்திரன் நேற்று கட்டுப்பணம் செலுத்தியதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

  • புத்தளம் மாவட்டத்தில் இரண்டு சுயேட்சைக் கட்சிகள் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.
  புத்தளம் மாவட்டத்தில் 4 லட்சத்து 95ஆயிரத்து 575 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

  • பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் மண்வெட்டி சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் மலையக மக்கள் முன்னணி கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  கொழும்பு மாவட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் போட்டியிடவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

  • ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது.

  இச் சந்திப்பு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரின் கேம்பிறிஜ் இடத்திலுள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

  எனினும், இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரியாதெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

  .

  அத்துடன் தமிழர் விடுதலைக் கூத்த்மைப்பில் (TNA ) இரா சம்பந்தன் (திருகோணமலை,) மாவை சேனாதிராஜா (யாழ்ப்பாணம்),
  ஈபிஆர்எல்எப் (சுரேஸ் அணி): சுரேஸ் பிரேமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), ஆனந்தன் நடேசு சிவசக்தி (வன்னி), ரெலோ: செல்வம் அடைக்கலநாதன் (மன்னார்), நோகராதரலிங்கம் சுப்பிரமணியம் (வன்னி), தமிழ் கொங்கிரஸ்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்)
  இவர்கள் எழு பேரையும் தவிர தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்ற ஏனைய 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் நடக்கப்போகும் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூத்தமைப்பின் (TNA ):வேட்பாளர் பட்டியலிருந்து விலக்கபடுவார்கலேன எதிர்பார்க்கலாம்.

  சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிர்காமன் (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல), கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்) இவர்களுடன் சேர்த்து ரெலோ எம் கெ சிவாஜிலிங்கம் (யாழ்ப்பாணம்), நல்லதம்பி சிறிகாந்தா (யாழ்ப்பாணம்) ஆகியோரும் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

Comments are closed.