ஜெர்மனியின் நாஜி ஆட்சிக்கால குற்றங்கள்: 89 வயதான டெம் ஜான் ஜுக் விசாரணை!

nagiஜெர்மனியின் நாஜி ஆட்சிக்கால குற்றங்கள் குறித்த மிகப்பெரிய கடைசி விசாரணையாகக் கருதப்படும், மியூனிச்சில் நடக்கின்ற விசாரணை ஒன்றில், ஜோண் டெம் ஞான் ஜுக் என்னும் உக்கிரேனிய- அமெரிக்க வயோதிபர் ஒருவர் விசாரிக்கப்படுகிறார்.

ஐரோப்பிய யூதர்களை ஒழிப்பதற்கான நாஜிகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக சொபிபர் மரண முகாமில் சுமார் முப்பதினாயிரம் பேரை கொலை செய்வதற்கு உதவும் நடவடிக்கையில் ஒரு காவலராக இவர் பணியாற்றினார் என்று இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர் அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.

மிகவும் நோய்வாய்ப்பட்டவராக இருந்த, 89 வயதான டெம் ஜான் ஜுக் அவர்கள், முதலில் நீதிமன்றத்துக்கு சக்கர நாற்காலியிலேயே வந்தார்.