ஜெயலலிதா கும்பலின் பணச் சூறையாடலும் சிறையும் : பயன்படுத்தப்படும் ஈழத்தமிழர்கள்

jeyalalitha-posterதமிழகத்தைச் சூறையாடிய ஜெயலலிதா கும்பல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாவின் இந்து பாசிஸ்டுக்கள் தமிழகத்தில் மற்றொரு பாசிஸ்ட் பலமடைவதை விரும்பாத நிலையில் ஜெயலலிதாவிற்கு வரையறுக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 18 வருடங்களுக்கு முற்பட்ட சொத்துக் கணக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தண்டனை மேலதிக 18 வருடங்களாகக் கொள்ளையடித்த சொத்துக்களைச் சட்டபூர்வமாக்கியுள்ளது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது காங்கிரஸ், கருணாநிதி சுப்பிரமணிய சுவாமியின் சதி என்ற வதந்தியைப் பரப்பி பாரதீய ஜனதா பாசிசக் கும்பல் வாக்குப் பொறுக்க முனைகிறது.

இந்து பாசிஸ்டுக்களுக்கு இடையிலான உள்முரண்பாட்டில் சிறை சென்ற ஜெயலலிதா என்ற சமூகவிரோதியைப் பயன்படுத்தி பாரதீய ஜனதா ஈழப் போரட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம், சோனியா காந்தி மற்றும் கருணாநிதி ஆகியோரின் கூட்டுச் சதியே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்களவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் என்ற தலைப்பிலான குறித்த சுவரொட்டியில் சுப்பிரமணிய சுவாமி, ராஜபக்ச, சோனியா மற்றும் கருணாநிதி ஆகியோர் திட்டமிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பழிவாங்கியுள்ளனர் எனவும், துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் அவலங்கள் தமிழ் இனவாதிகளுக்கு வெறும் முதலீடு மட்டுமே. செலவற்ற இந்த முதலீட்டால் சுவைகண்ட இனவாதிகளும் ஜெயலலிதா குழப்பிய தமிழ்க் குட்டைக்குள் மீன்பிடிக்கின்றனர்.

தமிழ்ப் பேசும் சிறுபான்மை சிங்கள பௌத்த பேரினவாதிகளால் அழிக்கப்படுகின்றது. இலங்கை ஏகபோக அரசுகளின் இராணுவ மையமாக மாற்றப்படுகின்றது. ஏழைகளின் நிலங்கள் பேரினவாதத்தின் பேராலும் அபிவிருத்தியின் பேராலும் சூறையாடப்படுகின்றது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களின் அவலம் தமிழ் நாட்டின் மில்லியன் கணக்கில் பணம்புரளும் அரசியல் வியாபாரத்திற்குப் பயன்படுகிறது. திருச்சியில் சிறப்பு முகாமில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அரசுகளால் தொடர்ச்சியாகச் சிறைவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ அகதிகளைப் பயன்படுத்தி ஜெயலலிதாவை விடுதலை செய்யுமாறு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

4 thoughts on “ஜெயலலிதா கும்பலின் பணச் சூறையாடலும் சிறையும் : பயன்படுத்தப்படும் ஈழத்தமிழர்கள்”

 1. WHat is said in the articleis not true.The SL Govt has nothiong to do with her case.She should be given a lifelong imprisonment

  1. // WHat is said in the articleis not true

   Please get a dictionary and try reading the article again for its meaning!
   தயவு செய்து ஒரு அகராதி சகிதம் மீண்டும் வாசித்து அர்த்தத்தை அறியவும்!

   எனினும் சொல்லவந்த விடயம் விளக்கப் படுத்தப் பட்ட முறைமையில் தவறுகள் உண்டெனத் தோன்றுகிறது. அம்மா அம்மா என்று இன்னொரு தலைமையில் முழு நம்பிக்கையையும் வைக்கும் தமிழரின் மோட்டுப் புத்தியும் இங்கு சுட்டிக்காட்டப் படவேண்டியது அல்லவா?

 2. திடீர் ஈழத்தாய் 2011 இல் இருந்துதான் உதயம்.2011 வாக்குகளுக்காக பொடப்பட்டதுதானே இந்த வேடம்.அதை அவருக்கு பொருத்தமாக போட்டவர்கள் பழ.நெடுமாறன்,சீமான் பொன்றோர்தான்.அதற்கு முன் வரை ஈழத்தமிழர்கள் என்றாலே ஆகாது.இப்போதும் மனதளவில் அவ்வாறுதான்.ஆனால் வெளி வெடம் ஈழத்தாய்.மூன்று பேர்கள் விடுதலையில் இவரின் வீரமான பேச்சுத்தானே முட்டுக்கட்டையாக நின்றது.18 ஆண்டுகளுக்கு முன்னரே பக்சே,சுவாமி,கருணாநிதி கூட்டு சதியில் இறங்கி விட்டார்களா?அப்போது பக்சே இலங்கை அரசியலில் கைப்புள்ள ஆகத்தானெ இருந்தார்.ஜெயா சொத்துகலை முறைகேடுகளாக குவித்து,அதற்கு சரியான வருமான கணக்கை காண்பித்தாலே விடுதலை நிச்சயம்தானே.கணக்கில்லாததால்தானே 18 ஆண்டுகள் சவ்வு மிட்டாயாக இழுத்தார் ஜெயா.2011 இல் வாக்குகளுக்காக போடப்பட்ட ஈழத்தாய் வேடத்தை இந்த வழக்கிலும் போடப்பார்க்கிறார்.ஆனால் ஜெயாவுக்கே இப்படி சுவரொட்டிகள் அடிப்பது மனதளவில் வெட்கத்தை தந்திருக்கும்.உண்மை ,தரப்பட்ட தண்டனையின் நியாயம் அவருக்கு புரிந்திருக்கும்.தமிழ் படம் ஒன்றில் உள்ள வசனம்தான் நினைவிலாடுகிறது.”சிரித்து,சிரித்து செய்த தவறுக்கெல்லாம்,அழுது,அழுது தீர்க்கிறேன்.”

 3. தமிழகத்தை  சூறையாடிய  ஜெயலலிதாவைக்  காப்பதற்கு  வீதியிலிறங்கும்
  அ.மு.தி.க  ஆதர்வாளர்களிற்கும்     இலங்கையில் தமிழர் கொல்லப்படுவதை
  பெரிது படுத்தாமல்  புலம்பெயர்  நாடுகளில்  தமிழீழ  கோசம் போடும்
  புலம் பெயர்  தமிழர்கழுமே    உண்மையான   தொப்புள்கொடி  உறவுகள்.

Comments are closed.